உன்னதமானவரின் உயர் மறைவில் - Unnathamanavarin Uyar maraivil | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Unnathamanavarin Uyar Maraivil
    உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே (2)
    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார் (2)
    1. தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே (2) - அவர்
    2. ஆயிரம் பதினாயிரம்
    பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
    அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே (2)
    3. சிங்கத்தின் மேல் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2) - அவர்

КОМЕНТАРІ • 17