absolutely bang-on! such limpid lyrics composed and sung by Swami in 'noṇdi sindhu' style 🙏🙏🙏 sounds insipid to hear in any other tune... verse1 அண்ணா மலைரம ணாண்டி - அரு ணாசல னாற்பிறப் பாழியைத் தாண்டி கண்ணாலென் உள்ளத்தைத் தூண்டி- அருட் காதலாற் கண்ணீரைக் கக்கவைத் தாண்டி Aṇṇāmalai Ramaṇāndi - Arunāchalanāl piRap āzhiyai thāṇdi kaṇṇāl en uḷḷathai thūṇdi - arut kādhalāl kaṇṇīrai kakka vaithāṇdi Annamalai Ramanāṇdi, by [the grace of] Arunachala crossed the deep sea of births, by His benevolent gaze spurred my heart, by His love made my tears overflow. (note: "āṇdi" means religious mendicant) verse2 தாய்தந்தை சாமியு மானான் - குரு தாரக நாமமும் தன்பெய ரானான் வாய்வந்து வாழ்த்திட வைத்தான் - வேறு வாழ்வறு மாறென் மனத்தைச் சுவைத்தான் thāy thandhai sāmiyum ānān - Guru thāraga nāmamum than peyarānān vāy vandhu vāzhthida vaithān - vēru vāzhvaRu maRen manathaic chuvaithān [He] became my Father, Mother, Lord; He, my Guru, made His name to be my vehicle to cross over [the ocean of samsara]; He made my mouth sing praises of Him; He made my mind taste Him alone snapping other happinesses. verse3 மொட்டைத் தலையழ காலே - மன மோஹன மோன முறுவலி னாலே, கட்டழன் மேனியி னாலே- என் கண்ணும் மனமுங் கவர்ந்தத னாலே, mottai thalai azhagālē - mana mōhana mōna muRuvalinālē kattazhan mēniyinālē - en kaṇṇum manamum kavarndha dhanālē by His shaven head, by His adorable charming silent smile, by His handsome form, by the captivation of my mind and body, verse4 “ரமண” னெனும்பெய ராலே- அநு ராக மெழுங்குரல் நாதத்தி னாலே, அமல வருட்கணை யாலே - என்னை அடியோடு கொள்ளை யடித்தத னாலே Ramaṇan enum peyarālē - anurāgam ezhum kural nādha thinālē amala arut kaṇaiyālē - ennai adiyōdu koḷḷai adittha dhanālē by the name ‘Ramanan’, by the intense love/devotion arising from His voice tone, by the complete robbery/enthrallment of me with the arrow of His pure grace, verse5 சிவவடி வானதி னாலே- எல்லா தெய்வமும் “நான்”என்று செப்பின தாலே, தவவொளி தன்முகத் தாலே - கண்ணாற் சங்கை யறவென்னைச் சந்தித்த தாலே Siva vadiv ānadhinālē - ellā dheivamum "nān" endRu seppinadhālē, thava oḷi than mugatthāle - kaṇṇāl saṅgai aRa ennai sandhitha dhālē by being the form of Shiva, by His word that all Gods are “I”, by His supremely shining face, by His gaze that removed my fear/ doubt, verse6 சோண மலைப்பெய ராலே- அதிற் சொக்கிக் கிடக்குஞ் சுகமயத் தாலே, காண வரும்பல ராலே- “இவன் கண்ணன்!”என் றேயாசை காட்டின தாலே, Shōṇamalai peyarālē - adhil sokkik kidakkum suga mayatthālē, kāṇa varum palarālē - "ivan kaṇṇan!" endRē āsai kāttina dhālē, by the name ‘Sōṇa malai’ (Aruṇāchalā mountain), by His blissfulness captivated in that (Aruṇāchalā), by the desire created by the many who come to see Him as verily 'He is Kannan’ (lord Krishna), verse7 பார்வை மயக்கத்தி னாலே - திரு பாத மலர்மது பானத்தினாலே, தேர்களிற் றின்னடை யாலே - கண்டென் சிந்தை கலங்கித் தெளிந்தத னாலே (தேர்கள் இற்ற இன் நடை : தேர் is chariot இற்ற frayed - the chariot for the human body - legs, tattered legs) pārvai mayakkat thinālē - thiru pādha malar madhu pānat thinālē, thērgaḷ itRa innadai yālē - kaṇden sindhai kalaṅgit theḷindha dhanālē by the stupor caused by the intake through sight of His intoxicating Holy flower Feet, by my troubled and then assuaged mind that saw the sweet walk with tattered legs, verse8 கோவணத் தாடையி னாலே- அருள் கொண்டசொற் கூறிதழ்க் கோவையி னாலே, பூவணப் பொற்கையி னாலே - அவன் போதித்த பேரின்பப் போதையி னாலே, kovaṇath ādayinālē - aruḷ koṇda soR kūR idhazh kōvai yinālē, pūvaṇa poRkai yinālē - avan bōdhitha pērinba bodhai yinālē, by His loin clothed dress, by poems filled with words of grace from His lips, by the flower like beauty of His golden hands, by His teachings of highest knowledge of eternal bliss, verse9 மும்மடி தன்வயி றாலே - அவன் மூப்புலு மிளமையே நான்கண்ட தாலே, சிம்மகம் பீரத்தி னாலே - குரு தஷிணா மூர்த்தித் திருவடி வாலே mum madi than vayiRālē - avan mūppilum iḷamaiyē nān kaṇdadhālē, simma gambīrat thinālē - Guru Dakshiṇāmurthi thiru vadivālē, by His three creased stomach, by my seeing only youth even in His old age, by His dignified bearing like a lion, by His Guru Dakshiṇāmurthi form verse10 இத்தனைப் பேரழ காலே! - மன மெல்லாம் பறிபோயி னேன்அவ னாலே! “சத்திய மாம்பொருள் நானே” - என்றான் தன்னை மறந்தவன் தன்வய மானேன். itthanai pēr azhagālē! - manam ellām paRi pōyinēn avanālē! "satthiyamām poruḷ nānē" - endRān thannai maRandh avanthan vayamānēn by this much beauty of His! my heart fully plundered by Him! ‘I alone am the Reality’ He said, forgetting me I became subjugated to Him verse11 ஆசையைக் காட்டி யழைத்தே - புவி யாசைப் பிசாசை யடியோ டழித்தே, பாச மளித்தவன் பாலே - மனம் பற்றிய தாசைப் பயித்தியத் தாலே! āsaiyai kātti azhaithē - bhuvi āsai pisāsai adiyōd azhithē, pāsam aḷitthavan pālē - manam patRiyadh āsai payithi yathālē! alluring me He called - completely destroying the demon of wordly desires gave me His love - my mind madly in love, held on to Him verse12 மோஹன மோனச் சிரிப்பே - அவன் முகத்தினில் கண்டபின் எனக்கே திருப்பே? சாகவும் நான்துணி வுற்றேன் - இனித் தாழ்வுவாழ் வெல்லாமென் தன்பொறுப் பற்றேன் mōhana mōnac chirippē - avan mugathinil kaṇda pin enak ēdh iruppē? sāgavum nān thuṇi vutRēn - ini thāzhvu vāzhv ellām endhan poRup atrēn after seeing the bewitching silent smile on His face where is my existence anymore? I have dared to even die, I have given up my responibility for highs and lows in life
verse13 எல்லா மெனக்கென் றிருந்தேன் - உடல் என்னுரு வென்றிட வேகற்றி ருந்தேன்; சொல்லாமற் சொல்லி ஏமாற்றி - எல்லாச் சொத்தும் பறித்தென்னைச் சோம்பேறி யாக்கி, ellām enak endR irundhēn - udal en uru endRidavē katRirundhēn; sollāmal solli ēmātRi - ellā sotthum paRit thennai sōmbēRi yākki, ‘all for me’ is how I was - ‘body is my form’ is what I had learnt; saying without saying, tricking me, He seized my property and making me lazy, verse14 தன்னைப்போ லாண்டியாய்ச் செய்தான் - என் தாய்போல வந்து தனிப்படச் செய்தான்! “உன்னைக் கொடு”வென்று கேட்டான் - நான் ஓடி ஒளிந்தாலு மேவிட மாட்டான்! thannai pōl āṇdiyāy seydhān - en thāi pōla vandhu thanippada seydhān! "unnaik kodu" endRu kēttān - nān ōdi oḷindhālumē vida māttān! made me a mendicant like Him - came like my mother and separated me! He asked, “give me your self” - even if I run and hide, He will not leave me. verse15 தன்னையே நம்பிடச் சொல்வான் - யாரும் தானென் றெழுந்தால்தன் சக்தியால் வெல்வான்; என்னை விடாதவ னென்றே - யானும் எல்லோரை யும்விட் டவன்பின்னே சென்றேன். thannaiye nambida solvān - yārum thān endR ezhundhāl than sakthiyāl velvān; ennai vidādhavan endRē - yānum ellōraiyum vitt avan pinne sendRēn He would say ‘trust self alone’; whoever rises as ‘I’, He will conquer by His strength; as He never forsakes me, I left everyone and went behind Him verse16 நானெங்கும் போகச் சகியான் - தானே நானென் றணைந்திடும் ஞானச் சுகியான்; மானமும் போகச் சிரித்தான் - என்னை வாழவைப் பான்போல வந்து வரித்தான் nān eṅgum pōga sagiyān - thānē nān endR aṇaindhidum ñyāna sugiyān; mānamum pōga siritthān - ennai vāzha vaippān pōla vandhu varitthān He would not bear me go anywhere; He, the ñyāna bliss filled, embraced me as ‘He indeed is I’; He laughed at losing my honour, He bound me as if He is going to make me live verse17 “என்னிட மேயிரு” என்பான் - “வே றெதையும் பாராதே,நீ என்னைப்பார்” என்பான்! அன்னிய மில்லாத அன்பால் - இன்( று) அவனினும் அன்புளார் யாருளர் என்பால்? 'ennidamē iru' enbān - 'vēRedhaiyum pārādhē, nī ennai pār' enbān! anniyam illādha anbāl - indRu avaninum anbuḷār yāruḷar enpāl? ‘be with me only’, He would say; ‘see nothing else, you see me’, He would say; with His love that knows ‘no other’, who has more love for me than Him today? verse18 யாரிட மும்விட மாட்டான்! - “உனக்(கு) யார்வேண்டும்? நானல்ல வோ?என்று கேட்டான் வேறிடம் வேண்டுவ தற்றேன் - என்னை வேட்ட ரமணன் சொல் மேன்மையைக் கற்றேன் yāridamum vida māttān! - "unakk yār vēṇdum? nān allavō?" endRu kēttān vēRidam vēṇduva dhatRēn - ennai vētta Ramaṇan sol mēnmaiyai katRēn He would not leave me with anyone; ‘whom do you want? is it not me?’ He asked; I became free of seeking another person/place/situation; I learnt the great sayings of Ramaṇan who loved me verse19 யாருங் கேளாமலே பேசி - சொல்வான் “அனன்னிய மாகவே நீஎன்னை நேசி”; பாருங் ககனமும் ஏசி, - தானே பயனென்றா னேபர தேசிசந் யாசி! yārum kēḷāmalē pēsi - solvān "ananniyam āgavē nī ennai nēsi" ; pārum gaganamum ēsi, - thānē payan endRānē paradhēsi sanyāsi! without anybody’s asking He would speak; He would say, “love me as 'not other' only". Have contempt for the earth and the sky - 'I alone’ is the wealth, said the mendicant ascetic. verse 20 கோவண மொன்றே யுடுத்தான் - என்னைக் கொண்டுவாழ் வெல்லாமுங் கொள்ளை யடித்தான்; ஜீவன மெல்லாங் கெடுத்தான் - “நமோ ஶ்ரீரம ணாய”வே சொல்லிக் கொடுத்தான்! kōvaṇam ondRē udutthān - ennai koṇdu vāzh vellāmum koḷḷai yadithān; jīvanam ellām keduthān - "Namō Sri Ramaṇāya" vē sollik koduthān! He wore only a loin cloth; taking possession of me, He plundered all my prosperity, wiped out all my sustenances, “Namo Sri Ramanaya” alone He taught me [in return]. verse 21 கண்ணும் மனமும் களிக்க - புவிக் காதலும் வாழ்வும் கசந்து புளிக்க, உண்ணமு தாகவி ருந்தான் - வே றொருவ ரெனைப்பற்ற வுள்ளம் பொருந்தான்! kaṇṇum manamum kaḷikka - bhuvi kādhalum vāzhvum kasandhu puḷikka, uṇṇ amudhāga irundhān - vēRoruvar enai patRa uḷḷam porundhān ! with eyes and mind revelling, with attachment for the world and life getting bitter and sour, He was my sweet food; He would not agree to any other close in on me! verse22 எல்லாம் அவனென்ற போதோ - எனக் கேதுங் குறைவில்லை என்றான்;இப் போதோ, சொல்லாம லெங்கோ மறைந்தான்!- என் துக்கத்தைச் சொல்லிக்கொள் வேன்யாரி டந்தான்? ellām avan endRa pōdhō - enakkēdhum kuRai villai endRān ; ippōdhō, sollāmal eṅgō maRaindhān ! - en dhukkathai sollik koḷvēn yāridam dhān? “when you say, ‘everything is You/All is He’, nothing is limiting you”, said He; but now, without saying, He disappeared somewhere! to whom indeed shall I say my woes? verse23 “என்னப்பன் என்னப்பன்” என்றே - அழு தேங்கித் துயரமு மெய்தின னின்றே; பொன்னைப் புவனத்தைக் கொண்டோ - வாழ புத்தி யெனக்கினி போவது முண்டோ? " ennappan ennappan" endRē - azhu dhēṅgi thuyaramum eydhinan indRē; ponnai bhuvanathai koṇdō vāzha buddhi enakkini pōvadhum uṇdō? wailing lamenting pining “alas! Oh my father my father”, I have brought about this agonising plight today; will my mind/ intellect hereafter go clasping gold and world for living? verse24 பித்துப் பிடித்தவ னானேன் அந்தப் பேயாண்டி யென்னைப் பிரிந்ததுந் தானே! செத்து மடிந்தாலு(ம்) நன்றே - அருள் தேசிக னென்முன் தெரிந்திடா வின்றே! pitthu pidithavan ānēn andha pēyāṇdi ennai pirindhadhum dhānē! setthu madindhālum nandRē - aruḷ dhēsikan en mun therindhidā vindRē! I have become mad with delirium after that canonized mendicant has left me ; it is better to perish and die if my benevolent Guru does not appear before me!
verse25 எப்போது முள்ளவ னென்றான் - என்னை யேமாற்றித் தன்னுரு வோடெங்கு சென்றான்? தப்பேதுஞ் செய்துவிட் டேனோ? - அதைத் தானெண்ணி யென்னையுந் தள்ளிவிட் டானோ? eppōdhum uḷḷavan endRān - ennai yēmātRi than uruvōd eṅgu sendRān? thappēdhum seidhu vittēnō ? - adhai thān eṇṇi ennaiyum thaḷḷi vittānō? "I am eternal" said He - deceiving me where did He go with His form? Have I commited any misdeed/ mistake? thinking of that only, has He rejected me? verse26 தொட்டதைத் “தூ”வென்று தள்ளான் - தொட்டுச் சொந்த மளித்தவன், ஏனென்னைக் கொள்ளான்? விட்டக லாததி றத்தான் - அருள் வெண்கதிர் வீசும்பொன் மேனி நிறத்தான்; thottadhai "thū" vendRu thaḷḷān ; thottu sondham aḷitthavan ēn ennai koḷḷān? vittaga lādha thiRatthān - aruḷ veṇ kadhir vīsum pon mēni niRatthān that which is touched, He would not reject as “ugh”; having touched and made me as His own, why will He not take me now? His nature is not to forsake; His golden hued body emits white ray of grace. verse27 நஞ்சமுங் கள்வருங்கூட - பொறுத் தான்;குரு நாதன் எனைப்பிரிந் தோட வஞ்சம் நினைத்தது மேனோ? - மண வாளனில் லாததோர் வாழ்வெனக் கேனோ? nañjamum kaḷvarum kūda poRutthān ; Guru Nādhan enai pirin dhōda vañjam ninaithadhum ēnō? maṇavāḷan illādha dhōr vāzhvenak kēnō? even poison and thief He bore with patience; why did the Guru - Master then think of deceiving me and run away estranged? why a life for me without the Master / bridegroom? verse28 ஆண்டவன் பின்விட லாமோ? அரு ணாசலன் பிள்ளையீ தாற்றிட லாமோ? “ஆண்டியை நம்பிட லாமோ?” - என்றிவ் வவனியர் ஏச அவன்கேட்க லாமோ? āṇdavan pin vidalāmō? Aruṇāchalan piḷḷai īdhātRi dalāmō? "āṇdiyai nambi dalāmō?" - endRiv avaniyar ēsa avan kētkalāmō? can the One who took charge (accepted as a protege) later abandon? can Arunachala’s son do like this? can He be subject to the abuse of the world asking 'should a mendicant be trusted?’ verse29 ஒன்றுமில் லாதானை யெண்ணி - நான் உருகுதல் கண்டுல கேளனம் பண்ணி நன்று நகைத்திட வைத்தான் - உள்ள நாணமும் போகட்டும் மென்றோ நினைத்தான்? ondRum illādhānai eṇṇi nān urugudhal kaṇd ulag ēḷanam paṇṇi nandRu nagait thida vaitthān - uḷḷa nāṇamum pōgattum endRō ninaitthān? He has subjected me to the taunts and merriment of the world that sees me longing and mourning for the one who has nothing; did He at all think, ‘let the existing shyness/modesty too go?’ verse30 இப்படி யாருஞ்செய் வானோ? - தன்னை இச்சித்த வென்னையும் ஏமாற்று வானோ? அப்படிச் செய்திடான்! ஐயே!! - அவன் ஆசை எழுந்துநான் அழிவது மெய்யே!! ippadi yārum seivānō? - thannai icchittha ennaiyum ēmātRu vānō? appadi seydhidān! aiyē !! - avan āsai ezhundhu nān azhivadhu meyyē !! Will someone do like this? will He deceive me who loved Him? No ! He will not do like that! oops! it is true that the surging desire for Him is annihilating my ‘I’ !! verse31 “ நானிதோ! நானிதோ!!’ என்றே - குரு நாத னிருப்ப துணர்ந்தாலு மின்றே மானிட னாகவா ரானோ? - பாத மாமலர் சூட மகிழ்ந்துதா ரானோ? 'nān idhō ! nān idhō !!' endRē Guru nādhan iruppadh uṇarndhālum indRē mānida nāga vārānō? - pādha mā malar sūda magizhndhu thārānō? ‘I am here! I am here!!’ , thus the presence of Guru is experienced! even so, will He not come today in His human form? will He not happily bestow the Grace of worshipping His most sacred Feet? verse32 உள்ள முடைந்தழும் போது - அவன் ஓங்காரக் கிண்கிணி கேட்குமென் காது! மெள்ள வவன்குரல் கேட்கும் - ஆனால் மேனியைக் காணா துளமங்க லாய்க்கும்! uḷḷam udain dhazhum pōdhu - avan ōṅgāra kiṇkiṇi kētkum en kādhu! meḷḷa avan kural kētkum - ānāl mēniyai kāṇādh uḷam aṅga lāykkum! when I cry heart broken, my ears hear His tinkling ‘Om’; slowly softly His voice is audible - but alas! not seeing His form my mind/heart agitates/grieves verse33 ஆவ லடங்கிடு முன்னே - மறைந் தான்எனக் கார்துணை யாவது மின்னே? யாவையும் வல்லவன் றானே - உரு வாகவென் கண்முன்னர் ஏன்வந்தி டானே? āval adaṅgidu munnē maRaindhān enak ār thuṇai yāvadhum innē? yāvaiyum vallavan thānē ? uruvāga en kaṇ munnar ēn vandhi dānē ? by the time my longing / craving abated, He disappeared; who will be my support now? isn’t He all powerful? why would He not appear in front of me in His human form? verse34 எக்குற்ற மும்மன்னிப் பானே! - பின்னர் என்குற்றங் கண்(டு)ஏன் பிரிந்திருப் பானே? திக்கற்ற வென்னைப்பா ரானோ? - குரு தேவ னுருவிற் றிரும்பிவா ரானோ? ek kutRamum mannip pānē ! pinnar en kutram kaṇd ēn pirindh irup pānē? dhikkatRa ennai pārānō ? Guru Dēvan uruvil thirumbi vārānō? He will forgive any fault! why then does He see my fault and stay away? will He not see this destitute/forsaken one? will Guru Lord not come back in [physical] form? verse35 இன்றேனு மென்றேனும் மீண்டும் - ரம ணேச னுருக்கொண்டிங் கேவர வேண்டும்! அன்றேல் அகதி நான் பாராய்! - அரு ணசலா, நின்பிள்ளை, என்முன்னந் தாராய்! indRēnum endrēnum mīṇdum Ramaṇēsan uruk koṇd iṅgē vara vēṅdum! andrēl agadhi nān pārāy! Aruṅāchalā, nin piḷḷai en munnam thārāy! today or anyday Lord Ramaṇā must come here again taking His form! else, I am a destitute - see! Aruṇāchala! Give Your son in front of me (bestow Your son to me)! 🙏🙏🙏
🙏🙏🙏
Tamil font is fine. Easy to read. Bold are made in red. nice!
photo insert is good!
absolutely bang-on! such limpid lyrics composed and sung by Swami in 'noṇdi sindhu' style 🙏🙏🙏
sounds insipid to hear in any other tune...
verse1
அண்ணா மலைரம ணாண்டி - அரு
ணாசல னாற்பிறப் பாழியைத் தாண்டி
கண்ணாலென் உள்ளத்தைத் தூண்டி- அருட்
காதலாற் கண்ணீரைக் கக்கவைத் தாண்டி
Aṇṇāmalai Ramaṇāndi - Arunāchalanāl piRap āzhiyai thāṇdi
kaṇṇāl en uḷḷathai thūṇdi - arut kādhalāl kaṇṇīrai kakka vaithāṇdi
Annamalai Ramanāṇdi, by [the grace of] Arunachala crossed the deep sea of births, by His benevolent gaze spurred my heart, by His love made my tears overflow.
(note: "āṇdi" means religious mendicant)
verse2
தாய்தந்தை சாமியு மானான் - குரு
தாரக நாமமும் தன்பெய ரானான்
வாய்வந்து வாழ்த்திட வைத்தான் - வேறு
வாழ்வறு மாறென் மனத்தைச் சுவைத்தான்
thāy thandhai sāmiyum ānān - Guru thāraga nāmamum than peyarānān
vāy vandhu vāzhthida vaithān - vēru vāzhvaRu maRen manathaic chuvaithān
[He] became my Father, Mother, Lord; He, my Guru, made His name to be my vehicle to cross over [the ocean of samsara]; He made my mouth sing praises of Him; He made my mind taste Him alone snapping other happinesses.
verse3
மொட்டைத் தலையழ காலே - மன
மோஹன மோன முறுவலி னாலே,
கட்டழன் மேனியி னாலே- என்
கண்ணும் மனமுங் கவர்ந்தத னாலே,
mottai thalai azhagālē - mana mōhana mōna muRuvalinālē
kattazhan mēniyinālē - en kaṇṇum manamum kavarndha dhanālē
by His shaven head, by His adorable charming silent smile, by His handsome form, by the captivation of my mind and body,
verse4
“ரமண” னெனும்பெய ராலே- அநு
ராக மெழுங்குரல் நாதத்தி னாலே,
அமல வருட்கணை யாலே - என்னை
அடியோடு கொள்ளை யடித்தத னாலே
Ramaṇan enum peyarālē - anurāgam ezhum kural nādha thinālē
amala arut kaṇaiyālē - ennai adiyōdu koḷḷai adittha dhanālē
by the name ‘Ramanan’, by the intense love/devotion arising from His voice tone, by the complete robbery/enthrallment of me with the arrow of His pure grace,
verse5
சிவவடி வானதி னாலே- எல்லா
தெய்வமும் “நான்”என்று செப்பின தாலே,
தவவொளி தன்முகத் தாலே - கண்ணாற்
சங்கை யறவென்னைச் சந்தித்த தாலே
Siva vadiv ānadhinālē - ellā dheivamum "nān" endRu seppinadhālē,
thava oḷi than mugatthāle - kaṇṇāl saṅgai aRa ennai sandhitha dhālē
by being the form of Shiva, by His word that all Gods are “I”, by His supremely shining face, by His gaze that removed my fear/ doubt,
verse6
சோண மலைப்பெய ராலே- அதிற்
சொக்கிக் கிடக்குஞ் சுகமயத் தாலே,
காண வரும்பல ராலே- “இவன்
கண்ணன்!”என் றேயாசை காட்டின தாலே,
Shōṇamalai peyarālē - adhil sokkik kidakkum suga mayatthālē,
kāṇa varum palarālē - "ivan kaṇṇan!" endRē āsai kāttina dhālē,
by the name ‘Sōṇa malai’ (Aruṇāchalā mountain), by His blissfulness captivated in that (Aruṇāchalā), by the desire created by the many who come to see Him as verily 'He is Kannan’ (lord Krishna),
verse7
பார்வை மயக்கத்தி னாலே - திரு
பாத மலர்மது பானத்தினாலே,
தேர்களிற் றின்னடை யாலே - கண்டென்
சிந்தை கலங்கித் தெளிந்தத னாலே
(தேர்கள் இற்ற இன் நடை : தேர் is chariot இற்ற frayed - the chariot for the human body - legs, tattered legs)
pārvai mayakkat thinālē - thiru pādha malar madhu pānat thinālē,
thērgaḷ itRa innadai yālē - kaṇden sindhai kalaṅgit theḷindha dhanālē
by the stupor caused by the intake through sight of His intoxicating Holy flower Feet, by my troubled and then assuaged mind that saw the sweet walk with tattered legs,
verse8
கோவணத் தாடையி னாலே- அருள்
கொண்டசொற் கூறிதழ்க் கோவையி னாலே,
பூவணப் பொற்கையி னாலே - அவன்
போதித்த பேரின்பப் போதையி னாலே,
kovaṇath ādayinālē - aruḷ koṇda soR kūR idhazh kōvai yinālē,
pūvaṇa poRkai yinālē - avan bōdhitha pērinba bodhai yinālē,
by His loin clothed dress, by poems filled with words of grace from His lips, by the flower like beauty of His golden hands, by His teachings of highest knowledge of eternal bliss,
verse9
மும்மடி தன்வயி றாலே - அவன்
மூப்புலு மிளமையே நான்கண்ட தாலே,
சிம்மகம் பீரத்தி னாலே - குரு
தஷிணா மூர்த்தித் திருவடி வாலே
mum madi than vayiRālē - avan mūppilum iḷamaiyē nān kaṇdadhālē,
simma gambīrat thinālē - Guru Dakshiṇāmurthi thiru vadivālē,
by His three creased stomach, by my seeing only youth even in His old age, by His dignified bearing like a lion, by His Guru Dakshiṇāmurthi form
verse10
இத்தனைப் பேரழ காலே! - மன
மெல்லாம் பறிபோயி னேன்அவ னாலே!
“சத்திய மாம்பொருள் நானே” - என்றான்
தன்னை மறந்தவன் தன்வய மானேன்.
itthanai pēr azhagālē! - manam ellām paRi pōyinēn avanālē!
"satthiyamām poruḷ nānē" - endRān thannai maRandh avanthan vayamānēn
by this much beauty of His! my heart fully plundered by Him! ‘I alone am the Reality’ He said, forgetting me I became subjugated to Him
verse11
ஆசையைக் காட்டி யழைத்தே - புவி
யாசைப் பிசாசை யடியோ டழித்தே,
பாச மளித்தவன் பாலே - மனம்
பற்றிய தாசைப் பயித்தியத் தாலே!
āsaiyai kātti azhaithē - bhuvi āsai pisāsai adiyōd azhithē,
pāsam aḷitthavan pālē - manam patRiyadh āsai payithi yathālē!
alluring me He called - completely destroying the demon of wordly desires gave me His love - my mind madly in love, held on to Him
verse12
மோஹன மோனச் சிரிப்பே - அவன்
முகத்தினில் கண்டபின் எனக்கே திருப்பே?
சாகவும் நான்துணி வுற்றேன் - இனித்
தாழ்வுவாழ் வெல்லாமென் தன்பொறுப் பற்றேன்
mōhana mōnac chirippē - avan mugathinil kaṇda pin enak ēdh iruppē?
sāgavum nān thuṇi vutRēn - ini thāzhvu vāzhv ellām endhan poRup atrēn
after seeing the bewitching silent smile on His face where is my existence anymore? I have dared to even die, I have given up my responibility for highs and lows in life
verse13
எல்லா மெனக்கென் றிருந்தேன் - உடல்
என்னுரு வென்றிட வேகற்றி ருந்தேன்;
சொல்லாமற் சொல்லி ஏமாற்றி - எல்லாச்
சொத்தும் பறித்தென்னைச் சோம்பேறி யாக்கி,
ellām enak endR irundhēn - udal en uru endRidavē katRirundhēn;
sollāmal solli ēmātRi - ellā sotthum paRit thennai sōmbēRi yākki,
‘all for me’ is how I was - ‘body is my form’ is what I had learnt; saying without saying, tricking me, He seized my property and making me lazy,
verse14
தன்னைப்போ லாண்டியாய்ச் செய்தான் - என்
தாய்போல வந்து தனிப்படச் செய்தான்!
“உன்னைக் கொடு”வென்று கேட்டான் - நான்
ஓடி ஒளிந்தாலு மேவிட மாட்டான்!
thannai pōl āṇdiyāy seydhān - en thāi pōla vandhu thanippada seydhān!
"unnaik kodu" endRu kēttān - nān ōdi oḷindhālumē vida māttān!
made me a mendicant like Him - came like my mother and separated me! He asked, “give me your self” - even if I run and hide, He will not leave me.
verse15
தன்னையே நம்பிடச் சொல்வான் - யாரும்
தானென் றெழுந்தால்தன் சக்தியால் வெல்வான்;
என்னை விடாதவ னென்றே - யானும்
எல்லோரை யும்விட் டவன்பின்னே சென்றேன்.
thannaiye nambida solvān - yārum thān endR ezhundhāl than sakthiyāl velvān;
ennai vidādhavan endRē - yānum ellōraiyum vitt avan pinne sendRēn
He would say ‘trust self alone’; whoever rises as ‘I’, He will conquer by His strength; as He never forsakes me, I left everyone and went behind Him
verse16
நானெங்கும் போகச் சகியான் - தானே
நானென் றணைந்திடும் ஞானச் சுகியான்;
மானமும் போகச் சிரித்தான் - என்னை
வாழவைப் பான்போல வந்து வரித்தான்
nān eṅgum pōga sagiyān - thānē nān endR aṇaindhidum ñyāna sugiyān;
mānamum pōga siritthān - ennai vāzha vaippān pōla vandhu varitthān
He would not bear me go anywhere; He, the ñyāna bliss filled, embraced me as ‘He indeed is I’; He laughed at losing my honour, He bound me as if He is going to make me live
verse17
“என்னிட மேயிரு” என்பான் - “வே
றெதையும் பாராதே,நீ என்னைப்பார்” என்பான்!
அன்னிய மில்லாத அன்பால் - இன்( று)
அவனினும் அன்புளார் யாருளர் என்பால்?
'ennidamē iru' enbān - 'vēRedhaiyum pārādhē, nī ennai pār' enbān!
anniyam illādha anbāl - indRu avaninum anbuḷār yāruḷar enpāl?
‘be with me only’, He would say; ‘see nothing else, you see me’, He would say; with His love that knows ‘no other’, who has more love for me than Him today?
verse18
யாரிட மும்விட மாட்டான்! - “உனக்(கு)
யார்வேண்டும்? நானல்ல வோ?என்று கேட்டான்
வேறிடம் வேண்டுவ தற்றேன் - என்னை
வேட்ட ரமணன் சொல் மேன்மையைக் கற்றேன்
yāridamum vida māttān! - "unakk yār vēṇdum? nān allavō?" endRu kēttān
vēRidam vēṇduva dhatRēn - ennai vētta Ramaṇan sol mēnmaiyai katRēn
He would not leave me with anyone; ‘whom do you want? is it not me?’ He asked; I became free of seeking another person/place/situation; I learnt the great sayings of Ramaṇan who loved me
verse19
யாருங் கேளாமலே பேசி - சொல்வான்
“அனன்னிய மாகவே நீஎன்னை நேசி”;
பாருங் ககனமும் ஏசி, - தானே
பயனென்றா னேபர தேசிசந் யாசி!
yārum kēḷāmalē pēsi - solvān "ananniyam āgavē nī ennai nēsi" ;
pārum gaganamum ēsi, - thānē payan endRānē paradhēsi sanyāsi!
without anybody’s asking He would speak; He would say, “love me as 'not other' only". Have contempt for the earth and the sky - 'I alone’ is the wealth, said the mendicant ascetic.
verse 20
கோவண மொன்றே யுடுத்தான் - என்னைக்
கொண்டுவாழ் வெல்லாமுங் கொள்ளை யடித்தான்;
ஜீவன மெல்லாங் கெடுத்தான் - “நமோ
ஶ்ரீரம ணாய”வே சொல்லிக் கொடுத்தான்!
kōvaṇam ondRē udutthān - ennai koṇdu vāzh vellāmum koḷḷai yadithān;
jīvanam ellām keduthān - "Namō Sri Ramaṇāya" vē sollik koduthān!
He wore only a loin cloth; taking possession of me, He plundered all my prosperity, wiped out all my sustenances, “Namo Sri Ramanaya” alone He taught me [in return].
verse 21
கண்ணும் மனமும் களிக்க - புவிக்
காதலும் வாழ்வும் கசந்து புளிக்க,
உண்ணமு தாகவி ருந்தான் - வே
றொருவ ரெனைப்பற்ற வுள்ளம் பொருந்தான்!
kaṇṇum manamum kaḷikka - bhuvi kādhalum vāzhvum kasandhu puḷikka,
uṇṇ amudhāga irundhān - vēRoruvar enai patRa uḷḷam porundhān !
with eyes and mind revelling, with attachment for the world and life getting bitter and sour, He was my sweet food; He would not agree to any other close in on me!
verse22
எல்லாம் அவனென்ற போதோ - எனக்
கேதுங் குறைவில்லை என்றான்;இப் போதோ,
சொல்லாம லெங்கோ மறைந்தான்!- என்
துக்கத்தைச் சொல்லிக்கொள் வேன்யாரி டந்தான்?
ellām avan endRa pōdhō - enakkēdhum kuRai villai endRān ; ippōdhō,
sollāmal eṅgō maRaindhān ! - en dhukkathai sollik koḷvēn yāridam dhān?
“when you say, ‘everything is You/All is He’, nothing is limiting you”, said He; but now, without saying, He disappeared somewhere! to whom indeed shall I say my woes?
verse23
“என்னப்பன் என்னப்பன்” என்றே - அழு
தேங்கித் துயரமு மெய்தின னின்றே;
பொன்னைப் புவனத்தைக் கொண்டோ - வாழ
புத்தி யெனக்கினி போவது முண்டோ?
" ennappan ennappan" endRē - azhu dhēṅgi thuyaramum eydhinan indRē;
ponnai bhuvanathai koṇdō vāzha buddhi enakkini pōvadhum uṇdō?
wailing lamenting pining “alas! Oh my father my father”, I have brought about this agonising plight today; will my mind/ intellect hereafter go clasping gold and world for living?
verse24
பித்துப் பிடித்தவ னானேன் அந்தப்
பேயாண்டி யென்னைப் பிரிந்ததுந் தானே!
செத்து மடிந்தாலு(ம்) நன்றே - அருள்
தேசிக னென்முன் தெரிந்திடா வின்றே!
pitthu pidithavan ānēn andha pēyāṇdi ennai pirindhadhum dhānē!
setthu madindhālum nandRē - aruḷ dhēsikan en mun therindhidā vindRē!
I have become mad with delirium after that canonized mendicant has left me ; it is better to perish and die if my benevolent Guru does not appear before me!
verse25
எப்போது முள்ளவ னென்றான் - என்னை
யேமாற்றித் தன்னுரு வோடெங்கு சென்றான்?
தப்பேதுஞ் செய்துவிட் டேனோ? - அதைத்
தானெண்ணி யென்னையுந் தள்ளிவிட் டானோ?
eppōdhum uḷḷavan endRān - ennai yēmātRi than uruvōd eṅgu sendRān?
thappēdhum seidhu vittēnō ? - adhai thān eṇṇi ennaiyum thaḷḷi vittānō?
"I am eternal" said He - deceiving me where did He go with His form? Have I commited any misdeed/ mistake? thinking of that only, has He rejected me?
verse26
தொட்டதைத் “தூ”வென்று தள்ளான் - தொட்டுச்
சொந்த மளித்தவன், ஏனென்னைக் கொள்ளான்?
விட்டக லாததி றத்தான் - அருள்
வெண்கதிர் வீசும்பொன் மேனி நிறத்தான்;
thottadhai "thū" vendRu thaḷḷān ; thottu sondham aḷitthavan ēn ennai koḷḷān?
vittaga lādha thiRatthān - aruḷ veṇ kadhir vīsum pon mēni niRatthān
that which is touched, He would not reject as “ugh”; having touched and made me as His own, why will He not take me now? His nature is not to forsake; His golden hued body emits white ray of grace.
verse27
நஞ்சமுங் கள்வருங்கூட - பொறுத்
தான்;குரு நாதன் எனைப்பிரிந் தோட
வஞ்சம் நினைத்தது மேனோ? - மண
வாளனில் லாததோர் வாழ்வெனக் கேனோ?
nañjamum kaḷvarum kūda poRutthān ; Guru Nādhan enai pirin dhōda
vañjam ninaithadhum ēnō? maṇavāḷan illādha dhōr vāzhvenak kēnō?
even poison and thief He bore with patience; why did the Guru - Master then think of deceiving me and run away estranged? why a life for me without the Master / bridegroom?
verse28
ஆண்டவன் பின்விட லாமோ? அரு
ணாசலன் பிள்ளையீ தாற்றிட லாமோ?
“ஆண்டியை நம்பிட லாமோ?” - என்றிவ்
வவனியர் ஏச அவன்கேட்க லாமோ?
āṇdavan pin vidalāmō? Aruṇāchalan piḷḷai īdhātRi dalāmō?
"āṇdiyai nambi dalāmō?" - endRiv avaniyar ēsa avan kētkalāmō?
can the One who took charge (accepted as a protege) later abandon? can Arunachala’s son do like this? can He be subject to the abuse of the world asking 'should a mendicant be trusted?’
verse29
ஒன்றுமில் லாதானை யெண்ணி - நான்
உருகுதல் கண்டுல கேளனம் பண்ணி
நன்று நகைத்திட வைத்தான் - உள்ள
நாணமும் போகட்டும் மென்றோ நினைத்தான்?
ondRum illādhānai eṇṇi nān urugudhal kaṇd ulag ēḷanam paṇṇi
nandRu nagait thida vaitthān - uḷḷa nāṇamum pōgattum endRō ninaitthān?
He has subjected me to the taunts and merriment of the world that sees me longing and mourning for the one who has nothing; did He at all think, ‘let the existing shyness/modesty too go?’
verse30
இப்படி யாருஞ்செய் வானோ? - தன்னை
இச்சித்த வென்னையும் ஏமாற்று வானோ?
அப்படிச் செய்திடான்! ஐயே!! - அவன்
ஆசை எழுந்துநான் அழிவது மெய்யே!!
ippadi yārum seivānō? - thannai icchittha ennaiyum ēmātRu vānō?
appadi seydhidān! aiyē !! - avan āsai ezhundhu nān azhivadhu meyyē !!
Will someone do like this? will He deceive me who loved Him? No ! He will not do like that! oops! it is true that the surging desire for Him is annihilating my ‘I’ !!
verse31
“ நானிதோ! நானிதோ!!’ என்றே - குரு
நாத னிருப்ப துணர்ந்தாலு மின்றே
மானிட னாகவா ரானோ? - பாத
மாமலர் சூட மகிழ்ந்துதா ரானோ?
'nān idhō ! nān idhō !!' endRē Guru nādhan iruppadh uṇarndhālum indRē
mānida nāga vārānō? - pādha mā malar sūda magizhndhu thārānō?
‘I am here! I am here!!’ , thus the presence of Guru is experienced! even so, will He not come today in His human form? will He not happily bestow the Grace of worshipping His most sacred Feet?
verse32
உள்ள முடைந்தழும் போது - அவன்
ஓங்காரக் கிண்கிணி கேட்குமென் காது!
மெள்ள வவன்குரல் கேட்கும் - ஆனால்
மேனியைக் காணா துளமங்க லாய்க்கும்!
uḷḷam udain dhazhum pōdhu - avan ōṅgāra kiṇkiṇi kētkum en kādhu!
meḷḷa avan kural kētkum - ānāl mēniyai kāṇādh uḷam aṅga lāykkum!
when I cry heart broken, my ears hear His tinkling ‘Om’; slowly softly His voice is audible - but alas! not seeing His form my mind/heart agitates/grieves
verse33
ஆவ லடங்கிடு முன்னே - மறைந்
தான்எனக் கார்துணை யாவது மின்னே?
யாவையும் வல்லவன் றானே - உரு
வாகவென் கண்முன்னர் ஏன்வந்தி டானே?
āval adaṅgidu munnē maRaindhān enak ār thuṇai yāvadhum innē?
yāvaiyum vallavan thānē ? uruvāga en kaṇ munnar ēn vandhi dānē ?
by the time my longing / craving abated, He disappeared; who will be my support now? isn’t He all powerful? why would He not appear in front of me in His human form?
verse34
எக்குற்ற மும்மன்னிப் பானே! - பின்னர்
என்குற்றங் கண்(டு)ஏன் பிரிந்திருப் பானே?
திக்கற்ற வென்னைப்பா ரானோ? - குரு
தேவ னுருவிற் றிரும்பிவா ரானோ?
ek kutRamum mannip pānē ! pinnar en kutram kaṇd ēn pirindh irup pānē?
dhikkatRa ennai pārānō ? Guru Dēvan uruvil thirumbi vārānō?
He will forgive any fault! why then does He see my fault and stay away? will He not see this destitute/forsaken one? will Guru Lord not come back in [physical] form?
verse35
இன்றேனு மென்றேனும் மீண்டும் - ரம
ணேச னுருக்கொண்டிங் கேவர வேண்டும்!
அன்றேல் அகதி நான் பாராய்! - அரு
ணசலா, நின்பிள்ளை, என்முன்னந் தாராய்!
indRēnum endrēnum mīṇdum Ramaṇēsan uruk koṇd iṅgē vara vēṅdum!
andrēl agadhi nān pārāy! Aruṅāchalā, nin piḷḷai en munnam thārāy!
today or anyday Lord Ramaṇā must come here again taking His form! else, I am a destitute - see! Aruṇāchala! Give Your son in front of me (bestow Your son to me)!
🙏🙏🙏
@@savithrivenkataraman8121 🙏🙏🙏