TAMIL OLD--Purusan veettil vazha pogum penne(vMv)--PAANAI PIDITHAVAL PAKKIYASALI

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2015
  • Vembar Manivannan facebook Page ...
    இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
    FOLLOW US ON FACEBOOK ...
    profile.php?...
    காலத்தால் அழியாத
    அபூர்வமான ஒரு தெய்வீகப் பாடல்...
    பாடல் : புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே...
    திரைப்படம் : பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958)
    பாடலாசிரியர் : டி.கே. சுந்தர வாத்தியார்
    இசை : எஸ்.வி. வெங்கட் ராமன், ராஜேஸ்வரராவ்
    பாடியவர் : திருச்சி லோகநாதன்
    பாடலுக்கான நடிப்பு :TS துரைராஜ் & சாவித்திரி
    ~Research of very rare old tamil songs
    --பழமை காப்போம்
    e mail : vembarmanivannan37@gmail.com

КОМЕНТАРІ • 278

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 5 років тому +295

    இன்று வரை எங்கள் பகுதி பெண் கல்யான வீடுகளில் பெண் புகுந்த வீட்டுக்கு செல்வதற்காக புறப்படும் போது ஒலிக்கும் பாடல்

  • @carsamya2262
    @carsamya2262 11 місяців тому +9

    2023 இலும் இந்தப் பாடலை கேட்கும் பொழுது மிகவும் அழகாகவும் அர்த்தமாகவும் உள்ளது 😂❤❤❤🎉

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 роки тому +16

    ஆஸ்தி கணக்கு கேட்டா கற்பு ஒன்னு தா........... ன் ஆ ஆ ஆ....
    அற்புதமான வரிகள்

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 3 роки тому +51

    55/60. வருடங்களுக்கு முன், திருமண வீடுகளிலும், ரேடியோவிலும் கேட்ட அருமையான பாடல்.

  • @alkrishnan9996
    @alkrishnan9996 3 роки тому +39

    இந்த பாடல் இல்லாமல் கல்யாணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

  • @manipk55
    @manipk55 3 дні тому

    இது போன்ற பாடல்களை கேட்கும்போது பார்க்கும் போது ஆழமான கருத்துகள் புரிவதுடன் அவுட்டோரில் அந்தக் காலத்தில் சிதைக்கப்படாத இயற்கையான தேசத்தை பார்க்க முடிகிறது

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 2 роки тому +36

    கடைசியில் மூச்சை தம் கட்டி உச்சஸ்தாயில் பாடி அசத்தி யுள்ளார் திருச்சி லோகநாதன் ஐயா அவர்கள், எனக்கு தெரிந்து இது தான் முதல் மூச்சுவிடாமல் பாடிய பாடலாக இருக்கும் என நினைகின்றேன்👍

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 2 роки тому +21

    மணப்பெண்ணுக்கு மிக அழகான அறிவுரை கூறும் பாடல். அழகு தமிழில் இனிய காலத்தால் அழியாத பாடல்.

    • @sarojinisubrahmanyam9476
      @sarojinisubrahmanyam9476 Рік тому

      Man is man It is god's creation Woman is not lower than men To run a family we need both

  • @nkrishnan8452
    @nkrishnan8452 5 років тому +57

    பாடலுக்கு ஏற்றால்போல் நடந்துவரும் சாவித்திரியின் நடிப்பு பிரமாதம்.

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 5 років тому +54

    அருமையான பாடல் TSதுரைராஜ் பன்பட்ட அற்புதமான நடிகர் லோகநாதன் ஐயா குரல்வளம் அருமை

  • @srk8360
    @srk8360 Рік тому +5

    அந்நாட்களில் இந்த பாடல்
    ஒலிக்காத திருமண வீடுகளேஇல்லை..... மறக்க முடியாத காலங்கள்.

  • @sagunthaladevi4258
    @sagunthaladevi4258 4 місяці тому +3

    இந்த பாடல் கேக்கும் போது அழுகை வரும் அழுது கொண்டே அம்மாவை விட்டுட்டு பிரிந்தது

  • @rajagopals1092
    @rajagopals1092 3 роки тому +22

    திருமணமாகிச் செல்லும் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாடல் முழுதும் கூறும் விதம் அருமை. உலகம் அழியும்வரை இப்பாடல் ஒலிக்கும்.
    இப்போது வரும் பாடல்கள் பெரும்பாலானவற்றில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. இசையும் தாளமும் இரசிக்க முடியவுமில்லை. பாடுபவர்கள் ஏதோ ஒப்பாரி வைப்பதுபோல் தான் பாடுகிறார்கள்.

  • @brightjose209
    @brightjose209 5 років тому +86

    இதெல்லாம் மதிப்புக்குரியது அப்போது இன்று?

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 роки тому +15

    புகுந்த வீடு செல்லும் பெண்களுக்கு பெரியவர்கள் பழைய காலத்தில் கூறும் ௮றிவுரை ௮ன்று குடும்பங்கள் சந்தோஷமாக😄😆😂 பாதுகாப்பாக இ௫ந்தது ௮ந்தப் பாரம்பரியத்தை இழந்தோம் மறந்தோம் ௭ல்லாம் நம்மை விட்டு போய் விட்டது இப்போது இந்த ௮றிவுரை கூறு யாருமில்லை நம் வாழ்க்கை நம் கையிலும் இல்லைஇல்லை வாழ்க்கையை நல்ல முறையில் வாழக்கற்று கொடுக்கும் பாடல்

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 роки тому +26

    அற்புதமான பாடல். இன்றும் எளிய வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்குப் பொறுத்தமான பாடல். இக்காலத்திய பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @thillaipalam7829
    @thillaipalam7829 3 роки тому +98

    இன்றும் திருமண வீட்டில் ஒலிக்கும் புனிதமான பாடல்.

    • @user-br4kl7wg1b
      @user-br4kl7wg1b 2 роки тому +3

      புனித பாடல்.... தகும் இந்த வார்த்தை..

    • @loneranger334
      @loneranger334 Рік тому +1

      பழமைவாதப் பாடல்

  • @RavikumarRavikumar-me5zk
    @RavikumarRavikumar-me5zk 5 років тому +91

    இவர் சொல்லும் அறிவுரைகளை பின்பற்றி அதன் வழி நடந்தாலே போதும். வாழ்க்கை இனிக்கும்.

  • @manikandanrakshankudal1466
    @manikandanrakshankudal1466 3 роки тому +20

    இன்றும் எல்லா திருமணவிட்டில் ஒழிக்கும் அருமையான இந்து பாடல் .

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 років тому +17

    டிஎஸ்துரைராஜ் நடிப்பு அபாரம் எந்தவொரு அண்ணணும் இதுபோன்ற அறிவுரையை தற்போது வழங்குவதில்லை

  • @mathivanan5578
    @mathivanan5578 5 років тому +111

    பெண்னென்பவள்
    புகுந்த வீட்டில்
    எப்படி நடந்துகொள்ளனும்
    என்பதை இதைவிட சிறப்பாக
    எவராலும் கூற இயலாது!
    இதுபோன்ற சிந்தனை
    இன்றைய கவிஞர்களிடம்
    ஒருபோதும் வராது
    என்பது மறுக்க முடியாத
    உண்மை!?

  • @zahidajaleel
    @zahidajaleel 3 роки тому +16

    மனமும் நினைவும் உருகி ஓடுகிறது அந்த காலத்தை நோக்கி இந்த பாடலை கேட்கும்போது. இத்தனை அறிவுரையுடன் இது போல் பாடலை இப்போது கேட்க முடியவில்லை தாய் வீட்டிலிருந்து இந்த அறிவுறை சீதனத்துடன் புகுந்த வீடு செல்லும் பெண்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது திண்ணம்.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 роки тому +5

    ஒரு குடும்பப்பெண் பின்பற்றவேண்டிய அவசியமான அறிவுரை .எக்காலமும் மாறாத உண்மையான வார்த்தைகள் .அக்கால பாடல்கள் வேதங்கள் போன்றவை .பண்பாட்டை பறைசாற்றும் பாடல் வரிகள் ,அருமையோ அருமை!

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 5 років тому +30

    அழகான பாடல் நல்ல கருத்து சமத்து உள்ள பெண் ஏற்ற பாடல் இந்த காலத்து ஏற்ற அந்த காலத்து அழியாத பாடல் மனதில்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому +8

    எக்காலத்திற்கும் மிகவும் சிறப்பான பொருத்தமான பாடல்

  • @karikari1802k
    @karikari1802k 11 місяців тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த பாடலை கேட்டஉடன்...உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...பாரதியாரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது...என் வயது 72... 3:25 .

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 4 роки тому +6

    திருச்சி லோகநாதன் குரலில் எஸ் ராஜேஸ்வர ராவ் இசையில் கேட்க அருமை நன்றி மணிவண்ணன்

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 5 років тому +20

    பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரிகள். ஆனால் இன்றைய பெண்களுக்கு கிண்டலாகத் தெரியும்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +112

    அமைதியான இல்லறநெறி சொல்லும்
    பாடல் ..... பாடலின் உணர்வை மென்மையாக்கி அதை பாசத்துடன் தந்தவர்
    திருச்சி லோகநாதன் ....
    இது மாதிரி நல்லறம் சொல்லும் பாடலை பதிவேற்றம் செய்த VMV அவர்களுக்கு நன்றி ....

  • @sivasankaransiva
    @sivasankaransiva 3 роки тому +9

    புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
    சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
    தங்கச்சி கண்ணே.. சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
    அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும் ..அம்மா
    அகந்தை கொள்ள கூடாது என்னாளும்
    புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
    சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
    மாமனாரை மாமியாரை மதிக்கணும்.. உன்னை
    மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
    சாமக்கோழி கூவையிலே முழிக்கணும்
    குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு
    சமையல் வேலை துவக்கணும்.
    புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
    சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
    கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
    நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
    இந்த அண்ணே சொல்லும் அமுத வார்த்தை தள்ளாதே
    நம்ம அப்பேன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
    புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
    சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
    புருசன் உயிரை மீட்டு தந்தவ பொண்ணுதான்
    ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணு தான்
    அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
    அவங்க ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒண்ணு தான்
    புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
    சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
    புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
    கூரச்சேலையும் தாலியும் மஞ்சளும் குங்கும பொட்டும்
    நகையும் நட்டும் குறைஞ்சிடாம நிறைஞ்சிகிட்டு
    ஆ....ஆ....ஆ....
    மக்களை பெத்து மனைய பெத்து
    மக்கள் வயத்துல பேரனை பெத்து
    பேரன் வயத்துல புள்ளையை பெத்து
    நோயில்லாம நொடியில்லாம
    நூறு வயசு வாழ போற தங்கச்சி
    நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி
    நமக்கு சாமி துணையிருக்கு ... சாமி துணையிருக்கு தங்கச்சி....
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 2 роки тому +4

    தங்கச்சிக்கு அண்ணன் சொல்லும் அமுத மொழிகள் எத்தனை அனுபவங்கள் அடங்கியது அந்தக் காலத்துப்பால்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது பாலசுப்பிரமணியம்

  • @cvijayakumar6912
    @cvijayakumar6912 3 роки тому +7

    தமிழ்நாட்டில் எந்த ஒரு திருமண வீட்டில் ஒலிக்கும் நல்ல அறிவுரை உள்ள பாடல்.. குறிப்பாக மணமகளுக்காக.. திருமணமாகல் இருக்கும் பெண்களும் கூட இந்த பாடல் கருத்துகளை கேட்டு உணர்ந்து நடக்க வேண்டும்..

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 3 роки тому +5

    என்ன ஆழமான அவசியமான கருத்து. Old is always gold

  • @sundarams.sundaram8300
    @sundarams.sundaram8300 5 років тому +14

    Intha song kekum pothellam en sister nabakam vanthu azhukai vanthitum enna en sister kalyanathu ponnu porannaiku intha song potanka appa en sister semaya azhuthuchu

  • @farithasulthan8749
    @farithasulthan8749 7 років тому +25

    enga paatiku romba pidicha song

  • @thirumurugan5762
    @thirumurugan5762 4 роки тому +5

    புருஷன் உயிரை, மீட்டுத் தந்தவ பொண்ணுதான்.., ஓடும், பொழுதை அங்கே.., நில்லுன்னு.., சொன்னவ பொண்ணுதான்.., அரசன் நடுங்க.., நீதி சொன்னவ பொண்ணுதான்.., அவுங்க.., ஆஸ்திக் கணக்கு, சொன்னாக் கற்பு, ஒண்ணுதான்.., ஆஸ்திக் கணக்கு, சொன்னாக் கற்பு, ஒண்ணுதான்

  • @jamesrehin3898
    @jamesrehin3898 4 роки тому +24

    In kanayakumari still we using this song for marriage girl going husband house....

    • @vijayaamanulla3906
      @vijayaamanulla3906 3 роки тому +1

      Enga edathil eppothum entha song poaduvaanga. (Kanyakumari nagercoil)

    • @jamesrehin3898
      @jamesrehin3898 3 роки тому

      @@vijayaamanulla3906 neenka kanyakumari district a?

    • @sahayabeno
      @sahayabeno 2 роки тому

      Kanyakumari 🥰

  • @johnsundar568
    @johnsundar568 3 роки тому +2

    அவுக ஆஸ்திகணக்கும் கற்பும் ஒண்ணுதான்..
    எவ்வளவு ஆழமான வார்தை....

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 5 років тому +8

    காலம் கடந்து பேசும் காவியம்

  • @drchandru4529
    @drchandru4529 2 роки тому +1

    ஒரு பெண் புகுந்த வீட்டுக்கு செல்லும் போது எடுத்து போக வேண்டிய சீதனம் இந்த அண்ணனின் அறிவுரைகள் மட்டுமே. இது பாட்டு இல்லை இது ஒரு "ஆத்திசூடி, திருக்குறள், இது போன்ற பாடலை திருமண வீட்டில் போடனும், ,காரைகால் FM, ரேடியாவில் அடிக்கடி இந்த பாடலை போடனும். அக்கால மக்கள் எப்படி சுகமாக வாழ்ந்தாா்கள் என்பதற்க்கு இந்த ஒரு பாடலே எடுத்துக்காட்டு. பெண்களின் பெருமையை நிலை நாட்டும்"பாடல். வாழ்க தமிழ் , வளர்க பாரதம், சிறக்க வைய்யகம்.
    நன்றி

  • @sundarsundaram8541
    @sundarsundaram8541 4 місяці тому

    இப்போதுள்ள காலங்களில் இந்த மாதிரி பெண்களுக்கு அறிவுரை சொல்வது பிடிக்கவே இல்லை அருமையான பாடல் வரிகள் அவ்வளவும் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்துள்ளது என்றும் இனிமை ஓல்ட் இஸ் கோல்ட் ....

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +2

    அழகான பாடல்.அருமையான வரிகள்.இனிமையான இசை.பாராட்டுக்கள்.

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 2 роки тому +3

    Enga oorula ponnu veetila irunthu purusan veetuku porapa intha song than poduvanga😍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +7

    நல்லப் பாடல்!இன்றும் இனிக்கும் பாடல்!!

  • @antojoylin6533
    @antojoylin6533 Рік тому +1

    திருமணம் ஆகிவிட்டால் கணவன் வீட்டில் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் பாடல்.அருமையான சமூக பாடல் இனி இதுபோல் கவிஞன் தோன்ற வாய்ப்பில்லை

  • @angureshu2076
    @angureshu2076 2 роки тому +2

    1 வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
    2 சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்
    3 கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்

    • @user-eg8rw7zy7c
      @user-eg8rw7zy7c 5 місяців тому

      ஆட்டுக்குட்டி,ஆட்க்குட்டி மாமாவ பாரு அவர் ஆம்பளயா பொம்பளயா என்னானு கேளு ...பாடல்

  • @manoptk1989
    @manoptk1989 4 роки тому +10

    அற்புதமான பாடல்
    கருத்துள்ளது

  • @narayananponnaih4895
    @narayananponnaih4895 5 років тому +2

    அற்புதப்பாடல்
    படம் பானைபிடித்தவள்பக்கியசாலி
    பாலாஜி சாவித்திரி பாடும் சோலைக்குள்ளே குயிலுகுஞ்சு சும்மாசும்மா கூவுது பாட்டும்இப்படத்தில்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +30

    மறக்க முடியாத காவிய பாடல் 👌👌👌👌

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 роки тому +2

    அறிவார்ந்த அருமையான பாடல் ஆனால் கேட்டு நடக்க இன்றைய காலத்தின் இளைய சமூகத்தை சரிப்படுத்த வேண்டும் சூப்பர்

  • @spmgscrap4973
    @spmgscrap4973 3 роки тому +4

    அருமையான தத்துவ பாடல்

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Рік тому +1

    தமிழன். உலகுக்கு. சொன்ன. அன்பு. Kaviyam

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Рік тому +2

    Now days it is totally reversed styles of life, now days bride grooms are getting mad because of the worst characters of ladies except few ladies, I thanks for such good ladies, best wishes for such olden ladies, God bless them

  • @gnarayanaraolotus2684
    @gnarayanaraolotus2684 6 років тому +17

    What a beautiful advice by a brother to his sister an unforgettable song throughout our life

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 4 роки тому +3

    Super song my age is 53 but enga appa enda patta than padi en kanavar veetukku anupinar .Netru nadandadhu pole erukku 32 years ayiduthu Anyway iam happy to hear this song Thank s a lot

  • @thangamthangamvel2198
    @thangamthangamvel2198 3 роки тому +5

    காலத்தால் அழியாத பாடல்

  • @sanmukapriyakanagasundaram7674
    @sanmukapriyakanagasundaram7674 4 місяці тому

    Super song and voice

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 5 років тому +12

    அருமையான பாடல்.

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 роки тому +1

    சார்..வணக்கம். நிலவுக்கு போனாலும்..கம்யூட்டர் காலத்திலும் இந்த அறிவுரைகளை மறந்ததினால்..ஏற்படும் கஷ்டங்கள் கண்கூடு.அருமையான பதிவு...!

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 Рік тому +2

    Arumayaana Karuthulla Paattu 👌👌🎼🎤

  • @malarkody4895
    @malarkody4895 Рік тому

    இந்த பாடலை பாராட்டியவர்கள் பெரும்பாலும் ஆண்களே இருக்கிறார்களே? !

  • @gaayathrinallakumargaayath9065
    @gaayathrinallakumargaayath9065 7 років тому +18

    i miss my grandfather

  • @anushyajeyakumar714
    @anushyajeyakumar714 2 роки тому +1

    Entha padala kettaley yenakku alugaiya varuthu

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 роки тому +8

    This is like a treasure .Superb !

  • @valliammalrp9712
    @valliammalrp9712 9 місяців тому

    நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +1

    21.11.2021....இந்த பாடல் கேட்கிறேன்.

  • @meenusakthi3647
    @meenusakthi3647 2 роки тому +2

    Wow......... ❤ennaku next month marriage 😍 intha song semmaya irukku

  • @selvarajraj1876
    @selvarajraj1876 Рік тому +1

    Fantastic song containing valuable advisory lyrics. This is the first time I saw this song and artists during my 65 years age. Though the audio cassette available with me for the last 45 years, I could not get an opportunity to see this picture even name of this film remains unknown!!!

  • @harivgharan8671
    @harivgharan8671 Рік тому +1

    இப்போதெல்லாம் இதுபோல பண்பாட்டினை எடுத்துச் சொல்லும் படங்களோ பாடல்களோ வருவதில்லை என்பது வருத்தமே. பெண்கள் தலையை விரித்துப் போட்டுக்கொண்டும் பொட்டு கூட இல்லாமலும் நாகரீகம் என்ற பெயரில் களையிழந்து பொலிவிழந்து காலத்தின் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்தால் சபிக்கப்பட்ட வர்கள் போல் காண்கிறது. இறைவன் அருள் கூடுக.
    நமக்கு சாமி துணையிருக்கு!

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Рік тому +1

    Ever green song. Superb song ❤

  • @rioarav8651
    @rioarav8651 5 років тому +4

    அருமையான பாடல் 💏

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 3 роки тому +1

    Enne oru arputhamana songs , arumaiyana varigal , kalathal aliyatha super hit songs.

  • @dineshpkarayi8316
    @dineshpkarayi8316 7 років тому +49

    Thank you Les Raj Sir,
    I Just alligned your work...எதோ என்னால் முடிந்தது...
    புருஷன் வீட்டில் வாழப்போகும், பொண்ணே..,
    தங்கச்சி கண்ணே..,
    சில புத்திமதிகள்.., சொல்லுறன் கேளு, முன்னே..,
    தங்கச்சி கண்ணே..,
    சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு, முன்னே..,
    அரசன் வீட்டுப், பொண்ணாக இருந்தாலும்..,
    அம்..மா.., அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்..,
    புருஷன் வீட்டில் வாழப்போகும், பொண்ணே..,
    தங்கச்சி கண்ணே..,
    சில புத்திமதிகள்.., சொல்லுறன் கேளு, முன்னே..,
    மாமனாரை.., மாமியாளை.., மதிக்கணும்..,
    உன்னை.., மாலையிட்ட கணவனையே.., துதிக்கணும்..,
    சாமக்கோழி கூவையி..லே, முழிக்கணும்..,
    குளிச்சு, சாணம் தெளிச்சு, கோலம் போட்டு, ச..மையல் வேலை துவக்கணும்..,
    புருஷன் வீட்டில் வாழப்போகும், பொண்ணே..,
    தங்கச்சி கண்ணே..,
    சில புத்திமதிகள்.., சொல்லுறன் கேளு, முன்னே..,
    கண்ணால் பேசும் பயகம் முன்னே, நில்லாதே..,
    நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே..,
    கண்ணால் பேசும் பயகம் முன்னே, நில்லாதே..,
    நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே..,
    இந்த அண்ணே.., சொல்லும் அமுதவாத்தை தள்ளாதே..,
    நம்ம அப்பன், பாட்டன், பேரைக் கெடுத்துக் கொள்ளாதே..,
    புருஷன் வீட்டில் வாழப்போகும், பொண்ணே..,
    தங்கச்சி கண்ணே..,
    சில புத்திமதிகள், சொல்லுறன் கேளு, முன்னே..,
    புருஷன் உயிரை, மீட்டுத் தந்தவ பொண்ணுதான்..,
    ஓடும், பொழுதை அங்கே.., நில்லுன்னு.., சொன்னவ பொண்ணுதான்..,
    அரசன் நடுங்க.., நீதி சொன்னவ பொண்ணுதான்..,
    அவுங்க.., ஆஸ்திக் கணக்கு, சொன்னாக் கற்பு, ஒண்ணுதான்..,
    ஆஸ்திக் கணக்கு, சொன்னாக் கற்பு, ஒண்ணுதான்..,
    புருஷன் வீட்டில் வாழப்போகும், பொண்ணே..,
    தங்கச்சி கண்ணே..,
    சில புத்திமதிகள்.., சொல்லுறன் கேளு, முன்னே..,
    புருஷன் கூட நீ இருந்து.., பூவும் மணமும், போல மகிழ்ந்து, கூரைச் சேலையும், தாலியும், மஞ்சளும், குங்குமப் பொட்டும், நகையும் நட்டும், கொறைஞ்சிடாம, நெறைஞ்சுகிட்டு..,
    ஆஆ.., ஆஆ..,ஆஆஆஆ..,
    மக்களைப் பெத்து.., மனையப் பெத்து.., மக்க வயத்திலே.., பேரனைப் பெத்து.., பேரன் வயத்திலே.., புள்ளையப் பெத்து..,
    நோயில்லாம.., நொடியில்லாம.., நூறுவயசு வாழப்போற.., தங்கச்சி..,
    நமக்கு.., சாமி துணை இருக்கு.., தங்கச்சி..,
    நமக்கு.., சாமி துணை இருக்கு..,
    சாமி துணை இருக்கு..,
    தங்கச்சி..,
    - Purusan veeddil vaazpokum - Movie:- PAANAI PIDITHAVAL BAKYASAALI (பானை பிடித்தவள் பாக்கியசாலி)

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 6 років тому +1

      Dinesh P Karayi பைந்தமிழ்ப் பண்பாட்டை புகுத்தி இந்தப் படலை எழுதிய கவிஞர் யார் ?
      உடுமலை நாராயண கவியா ? மருதகாசியா ? பட்டுக்ககோட்டை கல்யாணசுந்தரமா ? கண்ணதாசனா ?
      தெரிவித்தால் மிகவு மகிழ்ச்சியும் நன்றியும்
      உள்ளவனாய் இருப்பேன் .

    • @soundsystem3443
      @soundsystem3443 5 років тому +2

      எவ்வளவு நீளமான பாட்ட 3.25 நிமிஷத்துல பாடிருக்காங்க பாட்டுனா பழையபாட்டு தான் இப்போலாம் 3 வரிய ஆ... ஓ.... ன்னு இழுத்து 3 நிமிஷம் பாடுராங்க அதுல ஒரு எழுத்து கூட தமிழ்ல இல்லை

    • @rjayabarathyviswanathan8510
      @rjayabarathyviswanathan8510 4 роки тому

      Q

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 3 роки тому +2

      Giridharan R
      படம், வருடம், நடிகர்கள், பாடியவர்களின் பெயர்களைப் போடும்போது பாடல் எழுதியவர் பெயரையும் போடவேண்டும். இது எவ்வளவு விபரமான அழகான கருத்துள்ள பாடல்!

    • @jerojeromeiwill8108
      @jerojeromeiwill8108 3 роки тому

      Wfuahqbdh🥰

  • @lalithac8215
    @lalithac8215 4 роки тому +4

    This was our tradition in olden days. I pray God we should get back those system. Not to fall prey to Western culture.

  • @meetan-
    @meetan- 5 років тому +6

    I still remember this song word by word since I heard first when I was doing 6th std...I keep wondering how... really enjoyed now more than then...

  • @saba6601
    @saba6601 2 роки тому +1

    A lovely rare advice to a sister by T Loganathan. Regards Dr Sabapathy.

  • @JayanthiRamesh-w3l
    @JayanthiRamesh-w3l 6 днів тому

    ❤super❤

  • @marisamy8432
    @marisamy8432 6 років тому +6

    Super,meaningful song.THANK YOU SIR

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 роки тому

    இந்தகாலத்தில் எத்தனை பேர் எளியவாழ்க்கை வாழ்கிறார்கள். எத்தணை அன்ணன்கள் தங்கைகளுக்கு அறிவுரை சொல்கிரார்கள் அதை அன்போடு எத்தனை தங்கைகள் கேட்கிறார்கள். அது அந்தகாலம். இன்று எல்லாம் எனக்கு தெரியும். நான் என்ன படிக்காதமுட்டாளா என்று கேட்க்கும் காலம். பலருக்கு பண்பு என்றால் என்ன பணிவு என்றால்.என்ன என்று. கேட்பதனாயே பல கும்பங்களில் பிரிவு ஏற்ப்பட்டு தனித்தனி தீவுகளாக நிற்க்கிறார்கள். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை..என்ற உண்மையை அறிந்தாலே வீடும் நாடும் நலம்பெரும்.....

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 Рік тому +1

    One of the greatest song sung by Lokanathansir. An object-lesson for women getting into married life.

  • @hajirabee763
    @hajirabee763 2 роки тому +2

    காலங்கள் மாறிவிட்டன.

    • @user-px2vx6fi1i
      @user-px2vx6fi1i Рік тому

      கமலஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் குடும்ப குத்துவிளக்குகள் பார்த்து திருந்துங்கள்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 років тому +5

    Giramathu azhagaikkana kodikkangal podhadhu.
    Enna oru padappidippu.!
    Enna oru elimaiyana nadippu.
    T.s.Durairaj matrum Savithri
    Avargalin nadippu..
    Ippadam naan parkkavillai.
    Padal katchiyai indrudhan kangiren.
    Great song.
    Thank you VMV.

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 2 роки тому +1

    Kannal pesum payaga munne sellathe ne kanathatha kandenunu sellathe super line

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 роки тому +4

    அருமையான பாடல்

  • @umasharmila9683
    @umasharmila9683 5 років тому +5

    Beautiful lyrics 👌👌👌🌺

  • @kumaresanp808
    @kumaresanp808 Рік тому

    தமிழ் பெண்ணுக்குரிய கடமைகளைச் சொல்லும் பாடல்.

  • @bhoopalan51
    @bhoopalan51 7 років тому +6

    அட்டகாசமான திருச்சி லோகநாதன் அவர்களின் அருமையான குரலில் வரும் தேனமுதம் இது ! படம் வந்த புதிதில் இந்தப்பாடலுக்கு இருந்த புகழ் என்னவென்று சொல்வது ! அருமையான பாடலே ! வேம்பாரின் இந்த பாடல் பதிவுக்கு எமது பாராட்டுக்கள் !

    • @Narayanan-lh4pd
      @Narayanan-lh4pd 4 роки тому

      அருமையான பாடல் நடிப்பு காட்சி அமைப்பு துரைராஜ் சாவித்ரி மனம் மகிழ்ச்சி கொள்ளுகிறது !

  • @thilaharmanoharan6605
    @thilaharmanoharan6605 6 років тому +6

    Such a meaningful song advising the ladies when they begin to start their life at her husband"s home......

  • @viddu16
    @viddu16 5 років тому +11

    Purushan should come and live in pondatti veedu

  • @seetharamanichellapandian483
    @seetharamanichellapandian483 Рік тому +4

    இவர் ஆண்களுக்கு புத்தி சொல்லி ஒரு பாட்டு பாடி இருக்கலாம்

  • @kulothungans1433
    @kulothungans1433 2 роки тому +1

    இதையே தற்போது மாப்பிள்ளை வீட்டார் பாட வேண்டிய சூழ்நிலை!
    புகுந்த வீட்டில் மாப்பிள்ளை பையன் நடப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!😆😃😁

  • @sambavichannel9715
    @sambavichannel9715 8 місяців тому

    😂😂😂😂😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉nan ovvoru kalyanaveetilum padum song it's one of my favorite song🎵🎵🎵🎵🎵🎵

  • @swaminathan7887
    @swaminathan7887 5 місяців тому

    What a song

  • @goldenking1955
    @goldenking1955 5 років тому +28

    படத்தில் பாடல் இன்னும் சில பத்திகள் அதிகமாக கருத்துகளுடன் உள்ளன முழுப் பாடலையும் பதிவேற்றவும்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      இல்லையே. பாடல் முழுமையாகத்தான் உள்ளது. விடுபட்டுள்ளது என்றால் தாங்கள் எவை என்று கூறினால் மகிழ்வேன். இவ்வளவு அருமையான பாடலில் விடுபட்டவை இன்னும் எவ்வளவு அருமையாக இருக்கும் என்ற ஆவல் மிகுந்துள்ளது. தயவு செய்து சொல்லுங்கள் அன்பரே

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Рік тому +1

    Excellent song

  • @sakthigurueswaran4407
    @sakthigurueswaran4407 5 років тому +3

    அருமை..

  • @arumugamshunmugam2645
    @arumugamshunmugam2645 5 років тому +2

    காலம் மாறிப்போச்சி!

  • @jesmarjoearul
    @jesmarjoearul 9 років тому +24

    Thank you for posting this meaningful song of T.K.Sundaravathiyar. Music for this song is not S.V.Venkataraman but S.Rajeswara Rao.

  • @venkatesaperumal7655
    @venkatesaperumal7655 Рік тому

    Idhu padal illai paadam
    Excellent

  • @dafinijustin6306
    @dafinijustin6306 Рік тому

    12/04/'23 ல் என் மகள் திருமணம் நடைபெற்றது.மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் போது இப்பாடல் ஒலித்தது..என்க்கு கண்ணீர் தான் வந்து