Це відео не доступне.
Перепрошуємо.

Varayu Enn Thozhi HD Song

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2012
  • Pasamalar is a 1961 film starring Sivaji Ganesan and Gemini Ganesan. The film was cast in 1961 and directed by A. Bhimsingh. This film is considered to be one of the greatest Tamil movies ever made. Stellar performances from Sivaji Ganesan and Savitri make this movie a pleasure to watch. This movie was a great hit of its time and the melodious songs are a delight to hear to this day. One of the song, Vaarayen Thozhi Vaarayo, is still played in all Tamil weddings.

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @josephp8780
    @josephp8780 Рік тому +215

    பத்து வயதில் கேட்ட பாடல்
    72 வயதான பின்பும் கேட்டு ரசிக்கின்றேன். காலங்களை கடந்து
    காவியங்களாக பரிணமிக்கம்
    இந்த பாடல் திரைப்படங்களில் இருந்து வேறுபட்டது என்பதே
    நிதர்சனம்.!!

  • @venkatesanvenkat.9487
    @venkatesanvenkat.9487 2 роки тому +318

    காலம் இருக்கும் வரை எல்லா கல்யாண வீடுகளிலும் இந்தப் பாடல் ஒலிக்கும் இந்தப் பெருமையெல்லாம் தமிழ் மக்களுக்கு சொந்தம்

    • @usalpaurvi
      @usalpaurvi Рік тому +1

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @barathbabu2709
      @barathbabu2709 Рік тому +2

      ​@@usalpaurvi Hi How are U Buddy...how was the your family

    • @suganyadharshan4654
      @suganyadharshan4654 10 місяців тому +2

      @@usalpaurvi D. You can get

    • @usalpaurvi
      @usalpaurvi 10 місяців тому

      @@suganyadharshan4654 your sentence is incomplete

    • @user-bd2mp6ju4b
      @user-bd2mp6ju4b 3 місяці тому

      ​@@usalpaurvisupperrrrrrrsonglyricesgood,

  • @s.r.chandiran8564
    @s.r.chandiran8564 2 роки тому +92

    5000 ஆண்டுகள் ஆனாலும் திருமண இல்லங்களில் இந்த பாடல்🎤🎵🎶 ஒலிக்கும்...

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Рік тому +88

    எந்த மொழியிலும் இந்த மாதிரி பாடல் எழுதவும் முடியாது. பாடவும் முடியாது. இசை அமைக்கவும் முடியாது. நாம், நம் தமிழ் உலகின் முதல் 🌹🌹

  • @RajigopiRajigopi
    @RajigopiRajigopi Рік тому +155

    என் தங்கையை பெண் அழைத்து போகையில் மாப்பிள்ளை வீட்டார் இந்த பாடலை போட்ட போது நான் மிகவும மகிழ்ச்சி கொண்டேன்...

  • @sivamgarments6464
    @sivamgarments6464 2 роки тому +13

    இருபது அறுபது என்பது வயதை கடப்பவரயும் வெட்கம் வரவைக்கும் வலிமைமிக்க காவியப்பாடல்!!!!!!!!!!

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 2 роки тому +101

    இது போல பாடல் வருவதும் இல்லை இனி வர போவதும் இல்லை
    காலத்தால் அழியாத காவியம்❤️❤️

  • @TamilChristianMedia.
    @TamilChristianMedia. 3 роки тому +86

    எந்த கமெண்ட்டும் எதிர்மறையாக இல்லை என்பதே இந்த பாடல் மக்கள் மனதை எவ்வளவு ஆள்கின்றது என்பதை புரியமுடிகிறது..

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +1017

    கல்யாண வீட்டிற்குள் இருப்பதை போலவே ஒரு மங்கலமான உணர்வு இந்த பாடலை கேட்கும் பொழுது கிடைக்கிறது

  • @APM-SONGS
    @APM-SONGS 2 роки тому +289

    இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்று வளராதோ இந்த வரிக்கு நடிகர் திலகத்தின் முகபாவனை பாக்க அவளவு அழகாக இருக்கும்

  • @RBANU
    @RBANU 3 роки тому +1026

    அன்றும், இன்றும், என்றும் கிராமத்தில் நடக்கும் திருமணங்களில் ஒலிக்கும் அருமையான பாடல்

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz 3 роки тому +335

    ஓவ்வொரு முறையும் கேட்க்கும்போதும் மனதை நெகிழ வைக்கிறது.அருமையான வரிகள் 💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌾🌾🌾🌾🌾

  • @user-bd2lw9vh3t
    @user-bd2lw9vh3t 3 роки тому +258

    மணப்பெண் வரும்போது இன்றும் எங்கள் ஊரில் இந்த பாடல் ஒலிக்கும்

  • @SELVANSARAM
    @SELVANSARAM Рік тому +252

    2023 இந்த பாடல் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது😍

  • @rekharaj7061
    @rekharaj7061 3 роки тому +122

    மலராத பெண்மை மலரும்
    முன்பு தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்கள் மயக்கும்
    முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
    இரவுவோடு நெஞ்சம் உருக்கதோ
    இரண்டோடு மூன்றும் வளரதோ இரவுவோடு நெஞ்சம் உருக்கதோ
    இரண்டோடு மூன்றும் வளரதோ

    • @devi5311
      @devi5311 Рік тому +6

      sivaji ganesan sir gentle smile 😃

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому

      😆😆😆👍

    • @aestheticvibe05
      @aestheticvibe05 10 місяців тому +3

      ஆனால் இக்காலத்தில் எல்லாமே திருமணத்திற்கு முன்பு வளர்ந்து விட்டது....

    • @user-iq6kp4uk3s
      @user-iq6kp4uk3s 9 місяців тому

      Super

  • @padmanathanpadhu4165
    @padmanathanpadhu4165 Рік тому +15

    என்றென்றும் தமிழர்கள் வீட்டு திருமண விழாவில் ஒலிக்கும் மணப்பெண் அழைப்பு பாடல்...❤❤❤❤❤

  • @chinnachamyg5199
    @chinnachamyg5199 2 роки тому +45

    ஒவ்வொரு திருமணவிழாவிலும் நடிகர்திலகத்தின் ஆசிர்வாதம் ஒலிக்கும்

  • @harivananthamramu0575
    @harivananthamramu0575 2 роки тому +94

    நான் கிழவனாகிவிட்டேன் என் திருமணத்திற்கு கேட்ட பாடல் என்றும் 16 வயதாக உள்ளது

  • @salempyramydsalmira7858
    @salempyramydsalmira7858 3 роки тому +252

    60 வருடங்களாக இந்த திருமண பாடல் தமிழகத்தில் ஒலிக்காத இடமே இல்லை பல திருமணங்களில் இந்த பாடல் தான் அதிகம் ஒலித்தது Salem Jilla boys

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 3 роки тому

      வணக்கம் வாழ்த்துக்கள்.

    • @rukmanipalani9339
      @rukmanipalani9339 3 роки тому +3

      ஒலிக்காத இடமே இல்லை

  • @anandm9996
    @anandm9996 Рік тому +62

    என் தாய் தந்தை திருமணத்தில் ஒலித்தது..என் திருமணத்திலும் ஒலித்தது.. இன்னும் எத்தனை தலைமுறை காணும் என்று தெரியவில்லை....❤

  • @selvamrajasekar8365
    @selvamrajasekar8365 3 роки тому +162

    அருமையான. பாடல். 1000. முறை. கேட்டிருப்பேன். சலிப்பில்லை

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 роки тому +388

    எனது உயிர் உள்ள வரை கேட்பேன் என்ன ஒரு அழகான பாடல்கள் வரிகள் மிகவும் அற்புதம்

  • @kutty7817
    @kutty7817 3 роки тому +281

    1961ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை கடந்த 60 ஆண்டு காலமாக அனைத்து பெண் அழைப்பு மற்றும் திருமணங்களில் ஒலிக்கும் பாடல்

    • @srinivasann3374
      @srinivasann3374 2 роки тому +1

      🙏🙏🙏

    • @usalpaurvi
      @usalpaurvi Рік тому

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @venkatrajk2917
      @venkatrajk2917 Рік тому

      @@usalpaurvi .

  • @Venkat.266
    @Venkat.266 3 роки тому +157

    காலங்கடந்து நிற்கும்...... எல்.ஆர்...அம்மாவின்..... இசை பொக்கிஷம்.........இந்த உலகத்தில் தமிழர்கள் உள்ள வரை அனைத்து திருமண வீடுகளிலும் இப்பாடல் ஒலித்து கொண்டே இருக்கும்......🤗🤗💗💗🐣🐣💖💖

    • @shunmugavel4315
      @shunmugavel4315 3 роки тому

      Shunmuga vel kalakkdu m
      .b.m bricks

    • @SaravananSaravanan-fk9ie
      @SaravananSaravanan-fk9ie 2 роки тому +1

      Very nice

    • @gopalansubramanian11
      @gopalansubramanian11 2 роки тому +1

      Kalakadu when I was 15years old we were there my father was a Forest Range Officer I was studying 11th STD.I never forget that place very good place Sathyavageeswarar temple bhagyalakshmi theater there we have seen mgrs naan aaniyettal movie 4times
      Lovely place Now I am 73years old

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip 3 роки тому +531

    தமிழ் இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும்
    இறவா புகழ் கொண்ட கவிஞன் கண்ணதாசன்

    • @pandhicurrentcurrentpandhi6412
      @pandhicurrentcurrentpandhi6412 3 роки тому +1

      7810

    • @AshokKumar-bw6mq
      @AshokKumar-bw6mq 2 роки тому +1

      ❤️

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 2 роки тому +2

      பஞ்சு அருணாசலம் தான். சரிதான்.

    • @tamilmkr1
      @tamilmkr1 2 роки тому +1

      @@KGSMANIKGSMANI அது மணமகளே மருமகளே வா பாடல்

    • @rsrbavlogs
      @rsrbavlogs 2 роки тому +1

      @@KGSMANIKGSMANI கண்ணதாசன் பாடல்

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 3 роки тому +23

    இரவேடு நெஞ்சம் உருகதோ
    இரண்டோடு மூன்று வளரதோ.
    என்ன கற்பனை அறிவியல் கலந்து உள்ளது இந்த மாதிரி கவிஞர் இனி பிறக்க மாட்டார்கள்

  • @rathi.v
    @rathi.v 10 місяців тому +14

    இரவோடு நெஞ்சம் உருக்காதா, இரண்டோடு மூன்றும் வளராதா என்னே இலக்கியம்!!! சொல்லியது அந்தக் காலம்🙏🏻🙏🏻🙏🏻
    ஒன்+ஒன் டூ மாமா, யூ+மீ த்ரீ மாமா இந்தக் காலம் என்ன கொடுமை இது.😢

  • @lotuscooking1970
    @lotuscooking1970 3 роки тому +1946

    மணப்பெண் அழைப்பிற்கு இந்த பாடலை தவிர வேறெந்த பாடலையும் இன்றுவரை எழுத‌ எந்த கவிஞராலும் முடியவில்லையே

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 роки тому +44

      Correct

    • @NATRAJ2004
      @NATRAJ2004 3 роки тому +28

      True 😁

    • @r.ganesan.r.ganesan.7849
      @r.ganesan.r.ganesan.7849 3 роки тому +5

      @@NATRAJ2004 inBYOB

    • @kailasagirikalarikkal2759
      @kailasagirikalarikkal2759 3 роки тому +115

      எழுதினாலும் பாட முடியாது கஷ்டப்பட்டு பாடினாலும் கண்டிப்பாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது அதுதான் உண்மை

    • @chiyanvelvel9621
      @chiyanvelvel9621 3 роки тому +1

      @@vladimirputin3845 hslkhlbdslddaldllkkdkhslashhhhkkdkhlhhkkkhdskkdkkddkkkkkkkskkhkkkldkdkhsksshkkkkz

  • @priyaangel1179
    @priyaangel1179 4 роки тому +541

    காலத்தால் அழியாத நினைவு பாடல் நூறாண்டு ஜெனமம் அணைத்து கல்யாணம் வீட்டில் ஒளித்து கொண்டு இருக்கின்ற பாடல் அருமை...........

  • @mottaiyasamy1016
    @mottaiyasamy1016 3 роки тому +306

    இந்த பாடல் 🤔என் கல்யாணத்தில் 👌பாட வேண்டும் 🤔என ஆசை 👍படுகிறேன் 🤔என்ன ஒரு அருமையான வரிகள் 🤔என்ன ஒரு அர்த்தமான பாட்டு 🌹🌹🌹👌

  • @muruganm7674
    @muruganm7674 3 роки тому +507

    சின்ன வயசா இருக்கும்போது இந்தப் பாடலை கேட்ட பிறகுதான் மணப்பெண் வந்துவிட்டது என்று தெரிந்து கொள்வேன்

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 3 роки тому +315

    தாம்பத்திய உறவின் ரகசிய முடிச்சை இதற்கு மேல் யாராலும் இவ்வளவு நாசுக்காக அவிழ்க முடியாது

    • @rselvammalsraveendran5968
      @rselvammalsraveendran5968 3 роки тому +7

      Naan solla vathathai neangall sollivitirgal super friends

    • @RadhikaRadhika-ew7cq
      @RadhikaRadhika-ew7cq 3 роки тому +1

      Super

    • @dddsir8215
      @dddsir8215 3 роки тому +27

      உள் அர்த்தம் புரிந்து சிவாஜி நகர்வது நச் காட்சி

    • @ramalingamchinnatambi2005
      @ramalingamchinnatambi2005 3 роки тому

      @@RadhikaRadhika-ew7cq jmoo0l

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 3 роки тому +3

      அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @chinnadurai2549
    @chinnadurai2549 2 роки тому +29

    எத்தனை வருடங்கள் ஆனாலும் திருமண வீட்டில் ஒலிக்கும் பாடல்.காலத்தால் அழியாத பாடல்.

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 7 років тому +728

    இன்றும் கிராமங்களில் கல்யாணவீடுகளில் ஒலிக்கும் முக்கியமான பாடல் அம்மா எல். ஆர்.ஈஸ்வரியின் கணீர் குரலில்

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee 3 роки тому +472

    *இந்தப் பாடல் என் திருமணத்தின்(18.11.2020) போது ஒலிக்கப்பட்டது* 🌺😍😍😍😍🎉💕🎉

  • @chefkamarajvishwa8598
    @chefkamarajvishwa8598 2 роки тому +13

    என்னுடைய திருமணத்திற்கு இந்த பாடலை கேட்டு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. அற்புதமான பாடல் L.R. ஈஷ்வரி அம்மாவின் முதல் தனி குரல் பாடல்...

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 роки тому

      வணக்கம் அண்ணா ❤💞

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 роки тому

      வாழ்த்துக்கள் உங்களுக்கு 🌹🌹💞💞❤❤❤💞

  • @avramakrishnamaraji6756
    @avramakrishnamaraji6756 3 роки тому +91

    எல் ஆர் ஈஸ்வரியின் அற்புதமான குரல் இந்த அம்மையாருக்கு தலைவனின் பிரிவு அற்புதம் அற்புதம்

  • @sivagnanam4055
    @sivagnanam4055 3 роки тому +366

    இந்த பாடல் ஒலி பரப்பாமல் எந்த கல்யாணமும் பட்டி தொட்டிகளில் நடப்பதில்லை.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +33

    பாசமலர் திரைப்படத்தில் வரும் இப்பாடலில் அனைத்துமே சிறப்பு தான் L .R.ஈஸ்வரி அம்மா மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் திருமண மேடைகளில் ஒலிக்கும் மணப்பெண்ணுக்கான பாடல்

    • @rajaramb6513
      @rajaramb6513 3 роки тому

      Migavum sari. Ella padalgalume arumai than.

  • @user-ks4ls3zb8e
    @user-ks4ls3zb8e 2 роки тому +9

    உலகமே வியக்கத்தக்க பாடல்.திருமணத்திற்கு மணப்பெண் அழைப்பு தமிழ் பாடல்.மிக மிக அருமை.

  • @subranithish3598
    @subranithish3598 3 роки тому +89

    அற்புதமான தமிழ் பாடல். மணப்பெண்ணை வரவேற்பதில் கூடவே அறிவுரை - ஆக, அழகான அற்புதமான பாடல். பாடகியின் குரல் அழகு.

  • @BGayu127b
    @BGayu127b 3 роки тому +39

    அருமையான பாடல் மற்றும் பாடலுக்கு ஒத்த மணப்பெண் எழிலான வெக்கம் அதை விட மணப்பெண் தோழியின் நடனம் மற்றும் நடிப்பு அதை காட்டிலும் நடிகர் திலகம் சிரிப்புடன் சேர்ந்த நடை அனைத்தும் அருமை....

  • @mageswaris209
    @mageswaris209 3 роки тому +703

    2021 ஆனாலும் இந்த பாடல் ஒலிக்காத திருமணம் இருக்க முடியாது... கிராம....

  • @manimuthug9425
    @manimuthug9425 2 роки тому +15

    என் திருமணத்திலும் இந்தப்பாடல் கண்டிப்பாக ஒலிக்கும் திருமணத்திற்கென்றே கவியரசு கண்ணதாசன் எழுதப்பட்ட காவியம்

  • @dhandapanipani5595
    @dhandapanipani5595 3 роки тому +72

    இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் ஹிட் டாக்டர் ஒலிக்கும்.

  • @user-mb2pb8lr6o
    @user-mb2pb8lr6o 2 роки тому +6

    Mr ஜானகிராமன் எங்கள் எதிர் வீட்டில் இருக்கும் ஒருவரின் முகம் எங்கோ பார்த்த ஞாபகம் இருக்கிறது சாய்பாபா காட்டு கொடுத்ததற்கு நன்றி

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +22

    Complete lesson to bride, symbolic explainations without vulgar words. Kaviarasu Kannadhasan 👌🙏
    L.R.Eswari madam pronounsation itself teaches a lot 👌

  • @s.prakash2474
    @s.prakash2474 2 роки тому +32

    இன்னும் 100 ஆண்டு காலம் சென்றாலும் காலத்தால் அழியாத சிறந்த பாடலலில் ஒன்று இது
    வழக்கை துணைவியை வரும் வேளையில் புகுந்த வீ்டுக்கு அலைகும் சிறந்த வரிகள் ❤️👫

  • @Himanidatcha
    @Himanidatcha 2 роки тому +15

    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    மணமேடை தன்னில்
    மணமே காணும்
    திருநாளைக் காண வாராயோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    மணக்கோலம் கொண்ட மகளே
    புது மாக்கோலம் போடு மயிலே
    குணக்கோலம் கொண்ட கனியே
    நம் குலம் வாழப் பாடு குயிலே
    சிரிக்காத வாயும் சிரிக்காதோ
    திருநாளைக் கண்டு மகிழாதோ
    சிரிக்காத வாயும் சிரிக்காதோ
    திருநாளைக் கண்டு மகிழாதோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    தனியாகக் காண வருவார்
    இவள் தளிர்போல தாவி அணைவாள்
    கண்போல சேர்ந்து மகிழ்வாள்
    இரு கண் மூடி மார்பில் துயில்வாள்
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    மலராத பெண்மை மலரும்
    முன்பு தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்கள் மயங்கும்
    முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    மணமேடை தன்னில்
    மணமே காணும்
    திருநாளைக் காண வாராயோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ

    • @rathi.v
      @rathi.v 10 місяців тому

      வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🎧🎧🎧

  • @karthickraja7984
    @karthickraja7984 3 роки тому +140

    ஏன் l r ஈஸ்வரி பெயரை யாரும் சொல்ல வில்லை i love you அம்மா

  • @looser4433
    @looser4433 Рік тому +5

    அந்த நாட்களில் இருந்த தமிழ் பாடலாசிரியர் அனைவரும் மிகவும் சிறந்த பாடல்களை எழுதியுள்ளார் மாறக்க முடியாது என்றும் ☺️☺️☺️

  • @RameshRamesh-ff3rb
    @RameshRamesh-ff3rb 3 роки тому +17

    எங்கள் ஊர் மதுரை மாவட்டம் உசிலையி என்றும் ஒலிக்கம் அருமையான திருமன பாடல்

  • @saravanansaran3670
    @saravanansaran3670 2 роки тому +17

    என்னா..... வரிகள் ....ராகம்..... இசை.....குரல்..... ஆடை......நடனம்....இன்னும் நெறயா இருக்கு.
    அவ்ளோ அழகு இந்த song கேட்கும் போது.....

  • @sudharsan617
    @sudharsan617 2 роки тому +23

    பழைய பாடல்கள் கேட்பதே ஒரு சுகம்

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 роки тому +7

    நினைவில் நீங்காத பாடல் .
    ஒவ்வொருவரையும் கடந்த
    காலத்திற்கு அழைத்துச் செல்லும்
    பாடல் . 💖💖💖

  • @Nimmi_0807
    @Nimmi_0807 2 роки тому +16

    அனைத்து திருமண விழாக்களிலும் இந்த பாடல் மணமகள் வரும்போது கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும் அருமை

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +18

    என் கல்யாண நாள் அன்று 24.4.1996 இந்த பாடல் கேசட்டில் ஒலிபரப்பப்பட்டது அந்த நாள் நினைவு வருது அருமையான பாடல் அவரவர்களின் திருமண நாளை நினைவூட்டும் பாடல்

  • @rajsekar5299
    @rajsekar5299 3 роки тому +54

    எத்தனை தலைமுறை வந்தாலும் L. R. ஈஸ்வரி அம்மாவுடைய இந்த பாடல் இல்லாமல் எந்த கல்யாணமும் இல்லை

  • @balaguru6910
    @balaguru6910 11 місяців тому +6

    வரலாற்று சிறப்பு வாய்ந்த பாடல்..❤️

  • @moorthirangasamy218
    @moorthirangasamy218 Рік тому +2

    கலைஞரும் தமிழும் போல் இந்த பாடலும் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து இருக்கும்

  • @lovelyraj...4712
    @lovelyraj...4712 3 роки тому +61

    2021 இல்ல 5000 வருடம் வந்தாலும் மணப்பெண் அழைப்பதுக்கு இந்த song தான் பொருந்தும் 👌

  • @jaganathan.t0616
    @jaganathan.t0616 3 роки тому +22

    மணபெண் அழைப்பிற்க்கு இந்த மாறி பாடல் இன்று இந்த பாடல் பிறகு ஒரு கவிஞனின் எழுத முடியால

  • @seenuvasan8070
    @seenuvasan8070 11 місяців тому +2

    என்றும் பல ஆண்டு காலம் மாறினாலும் வாழ்கையின் பெண்மையின் தத்துவம் உவமை நயமாக எடுத்துரைக்கப்பட்ட பாடல்
    ஒவ்வொரு வரிகளிலும் வாழ்கையின் பெண் தத்துவம் அனைத்தும் அடங்கிய ஒரு பாடல்

  • @ehussain6040
    @ehussain6040 2 місяці тому

    ❤❤❤
    அருமை..அருமை...
    இன்று வரை இந்தப் பாடலை மிஞ்ச ஒரு பாடல் உருவாகவில்லை...
    வாழ்த்துகள் கவிஞரே

  • @vsrn3434
    @vsrn3434 3 роки тому +40

    கட்டாயம் இந்த பாடல் திருமணம்..இடங்களில் ஒலித்துக் கொண்டு இருக்கம் . ... .அப்பொழது..கிராமங்களில்

  • @murugesanmurugesan9238
    @murugesanmurugesan9238 3 роки тому +21

    நான் சிறு வயதில் இருக்கும்பொழுது கல்யாணவீடுகளில் இந்த பாடல் பிரபலம்.இந்த பாடலை கேட்கும் பொழுது மனது சந்தோசமாக இருக்கிறது

  • @kpm6388
    @kpm6388 10 місяців тому +2

    காலங்கள் கடந்தாலும் நினைவுகள் (ஞாபகம்) மறையும்,ஆனால் இந்த பாடல் என் வாழ்நாள் முழுக்க மறையாது.

  • @Manimaran-gv5db
    @Manimaran-gv5db 3 роки тому +303

    இதுக்கு டிஸ்லைக் பண்ணுன 250 பேரும் இன்னும் கல்யாணமாகாத 90ஸ் கிட்ஸ்தான்.. சந்தேகமே இல்ல

  • @vinothvijay7325
    @vinothvijay7325 3 роки тому +8

    கவிஞர் கண்ணதாசன் ஐயா எழுதிய வரிகளும், எம் எஸ் விஸ்வநாதன் ஐயா அவர்களின் இசையும் எல் ஆர் ஈஸ்வரி அந்த அம்மாவின் குரலும் அமைந்த இந்த பாடல் தமிழ் வாழும் வரை ஒலித்து கொண்டே இருக்கும் 🙏🙏🙏

  • @Inpanaatham
    @Inpanaatham Рік тому +1

    என்ன ஒரு இசை ,நெஞ்சை நெகிழவைக்கும் வரிகள்,பாடல் பாடிய விதம் ,இந்தப்பாடல் தமிழர்களின் ஒரு பொக்‌ஷம்.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 11 місяців тому +1

    7 வயதில் கேட்ட பாடல் 58 வயதிலும் கேட்கிறேன்.

  • @mohanovea
    @mohanovea 3 роки тому +60

    அன்றிலிருந்து இன்றுவரை நிலைத்து இருக்கும் ஒரே பாடல்

    • @shazanasha
      @shazanasha 3 роки тому

      Hbjjk🍰🥳🥳🎁🥳🎁🎈🍰🥳🎉🕯️🧁🎂

    • @ramasamya2391
      @ramasamya2391 3 роки тому

      கருத்து தவறானது மறக்க முடியாத பாட்டுகளில் இதுவும் ஒன்று

    • @mohanovea
      @mohanovea 3 роки тому

      @@ramasamya2391 அப்படியா ? இருக்கட்டும் கொழுக்கட்டை நீரில் வெந்தால் என்ன நீராவியில் வெந்தால் என்ன சரியனபடி வேகவேண்டும் அவளவுதான் நீங்கள் கூறிய கருந்தே சரியானதாக இருகட்டும் வாழ்த்துகள் குறையை கண்டு பிடித்ததற்க்கு

  • @balanthurai9548
    @balanthurai9548 3 роки тому +135

    இந்தப் பாடலின் எழுத்து, இசை, பாடியவிதம், நடிப்பு, இயக்கம் ஆகியவைகளை கண்டபின்னரும், கேட்டபின்னரும், தம்மையும் கவிஞர்கள் என்றும், இசையமைப்பாளர்கள் என்றும், பாடகர்கள் என்றும், நடிகர்கள் என்றும், இயக்குனர்கள் என்றும் சொல்லித்திரிபவர்கள், கொஞ்சமும் மானம், ரோஷம் இல்லாதவர்கள்.

    • @elangovanilangovan2576
      @elangovanilangovan2576 3 роки тому +1

      Super

    • @dddsir8215
      @dddsir8215 3 роки тому +7

      ஹா ஆம். நெத்தி அடி. பாடல் வரிகள் இனி கிடைக்காது. உள் அர்த்தம் புரிந்து சிவாஜி நகர்வது. உம் . நன்றி

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 3 роки тому +1

      சரியான சாட்டையடி வாழ்த்துக்கள் நண்பரே

    • @ramasamyponnaiah258
      @ramasamyponnaiah258 2 роки тому

      அருமையாய் சொன்னீர்கள் bro

    • @mahjabeenbysadakathullah4841
      @mahjabeenbysadakathullah4841 2 роки тому

      @@ramasamyponnaiah258 b9

  • @tamilarivu6531
    @tamilarivu6531 2 роки тому +8

    அன்று முதல் இன்று வரை கல்யாண வீட்டில் மணப்பெண் வரும் பொழுது ஒலிக்கும் இந்த பாட்டு. இன்றும் உண்டு.

  • @kamatchiramasamy7756
    @kamatchiramasamy7756 2 роки тому +12

    அருமையான பாடல்.... என்றும் திருமணத்திற்கு ... உகந்த பாடல்.....

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 4 роки тому +17

    A song which is permanent for all houses celebratng Female marriages. No song has to replace till today and even in future also.

  • @nivasrangasamy9323
    @nivasrangasamy9323 3 роки тому +43

    மணமேடை தன்னை மணமே காணும் திருநாளை காண வாராயோ

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 роки тому +1

      Nivas Rangasamy.... மணமேடை தன்னை அல்ல மணமேடைதன்னை.

    • @marikannadasan500
      @marikannadasan500 3 роки тому

      My favourite song

    • @ramlakshman2916
      @ramlakshman2916 3 роки тому

      மணமேடை தன்னில் மணமே kaanum

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +2

    நம் பண்பாட்டில் சடங்குகள் நாம் வாழ்க்கையை எப்படி கொண்டாடுகிறோம் என்பதற்கான சாட்சி..
    திருமண சடங்கின் நிகழ்வுகள்.. அதை தொடர்ந்து நடைபெறப்போகும் நிகழ்வுகளை கேலியாக.. மணப்பெண்ணிடம் பாடி அந்த பெண்மையின் எண்ணத்திலும் வண்ணத்திலும் மலரும் அழகையும் நாணத்தையும் பார்க்கும் தோழியர் ...
    திருமண வாழ்வின் இன்பங்களை எண்ணி நமுட்டு சிரிப்பை அடக்கி மகிழ்வு கொள்ளும் நடிகையர் திலகம் சாவித்திரி.. எளிமையான நாதஸ்வரம் மற்றும் குழலோசை ஒலிக்க
    மெல்லிசை மன்னர்களின் இசையோசைகள் சூழ குழுவினருடன் வரவேற்பு மடல் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி..
    தோழியர் புடை சூழ மணப்பெண்ணை கேலிசெய்து மானாக ஆடி வரும் சுகுமாரி அழகோ அழகு..
    திரையில் அண்ணன் தங்கை பாசம் சொன்ன "பாசமலர்"..

  • @mmeganathanastrologer
    @mmeganathanastrologer Рік тому +1

    கவிஞரே என்ன பாடல் வரிகள்
    வார்த்தையே இல்லை

  • @maha05raja
    @maha05raja 3 роки тому +27

    எவ்வளவு ரசித்து எழுதப்பட்ட பாடல் சிறுவயதில் திருமண வரவேற்பு பாடல் என்றளவிலே கேட்டிருக்கிறேன் ஆனால் கவித்துவமான அர்த்தம் கொண்ட வரிகளை இப்போதுதான் கவனிக்கிறேன். வியக்கிறேன்

    • @peermohamed7812
      @peermohamed7812 3 роки тому +1

      கண்ணதாசன் அவர்களால் மணப்
      பந்தல் என்ற படத்திற்காக எழுதப்பட்
      டது.பாசமலரில் பயன்படுத்தப்பட்டது.

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 роки тому +11

    அருமை அருமை இதுமாதிரி
    எத்தனை பாடல் வந்தாலும் இதுதான் நெ 1

  • @parameswarank9008
    @parameswarank9008 10 місяців тому +1

    என் திருமணத்தின்போது 29/6/2015 இந்தப் பாடல் என் என் தந்தையின் 21/8/1985 இந்தப் திருமணத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.....

  • @karunanithivadivelu1247
    @karunanithivadivelu1247 Рік тому +1

    அன்றும் இன்றும் அனைத்து திருமணங்களிலும் இசைக்கும் பேரினிய பாடலாக இப்பாடல் விளங்குகிறது, தமிழ் மொழியின் இனிக்கும் சிறப்புகளில் இதுவும் ஒன்று.

  • @Dmanoharan
    @Dmanoharan 3 роки тому +18

    பாச மலர்....இப்படம் வாழ்க்கை மலர்

  • @mohanakannan6454
    @mohanakannan6454 4 роки тому +37

    Intha song kekkum pothu oru Nalla feel.. ennaiye ariyama niraya karpanaikal Kan munne vanthu poguthu.. future

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 роки тому +1

    ஒரு கல்யாணம் பார்த்த மன நிறைவு சாவித்திரி முகத்தில் என்ன ஒரு நடிப்பு

  • @thanislausm4288
    @thanislausm4288 2 роки тому +24

    L.R.ISWSRI METTALIC VOICE AND HER YOUTHFUL MODELLATION ARE CLASSIC. MSV. POET K.DASAN AND SINGER HAD LIFTED THIS EVERGREEN SONG TO THE SKY HEIGHT OF IMMORTALITY. ONLY OLD CAN BE GOLD.

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 роки тому +20

    A beautiful song which will be remembered throughout all generations in all marriage functions. No Directors could even imagine to replace this song, that is why it is called old is gold. Thanks to the singers.

  • @user-nw7gc3wn8o
    @user-nw7gc3wn8o Рік тому +3

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் .ஒவ்வொரு வரிகளும் பொருத்தமாக அமைக்கப்பட்டு இருக்கிறது,

  • @dhanasekar1521
    @dhanasekar1521 Рік тому

    காலத்தால் அழியாத பாடல் கிட்டத்தட்ட 60 வருடங்கள் கடந்து வந்த திருமண வரவேற்பு பாடல் அருமை

  • @honeyleom
    @honeyleom 3 роки тому +13

    very youthful fantastic song....nice singing LR Easwari amma...great comp[osition..nice dancing by Sugumari amma.....marvellous acting by Sivaji Ganesan Sir..

  • @user-nn3gq5ci6h
    @user-nn3gq5ci6h 3 роки тому +355

    மணப்பெண் வரும் போது இன்றும் எங்கள் ஊரில்

    • @snehachandran9864
      @snehachandran9864 3 роки тому +7

      Correct bro

    • @praveenkumarm4145
      @praveenkumarm4145 3 роки тому +10

      எல்லா ஊரிலும் இதே song தான்

    • @RajkumarRajuP
      @RajkumarRajuP 3 роки тому +4

      இன்னும் 2000 ஆண்டுகளுக்கு இந்த பாடல் தான்

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 3 роки тому +2

      Enga oorilum dhan

    • @aranr4787
      @aranr4787 3 роки тому

      Aran

  • @mukilragavan1912
    @mukilragavan1912 3 роки тому +178

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் காலத்தால் அழியா பாடல்

    • @rajappas4938
      @rajappas4938 3 роки тому +3

      Unmai

    • @niyasmohamed2074
      @niyasmohamed2074 3 роки тому +3

      අනිවාර්යයෙන් (නිච්චයමාහ )

    • @AshokKumar-bw6mq
      @AshokKumar-bw6mq 2 роки тому +2

      ❤️

    • @jeyakumarrajakani273
      @jeyakumarrajakani273 2 роки тому +3

      Intha padathil ellaa paadalkalum Kannadasan ezhuthiyathuthan.... Anaal, intha padal mattum ezhuthiyathu Panju Arunachalam

    • @AshokKumar-bw6mq
      @AshokKumar-bw6mq 2 роки тому +2

      @@jeyakumarrajakani273 nooo bro, indha paattukkum lyrics kannadasan dhaan bro

  • @vichupayyan
    @vichupayyan 2 роки тому +5

    வாராயென் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    வாராயென் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    பெ)மணமேடை தன்னில் மணமே காணும்
    திருநாளை காண வாராயோ
    குழு)வாராயென் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    பெ)மணக்கோலம் கொண்ட மகளே
    புதுமாக்கோலம் போடு மயிலே
    குணக்கோலம் கொண்ட கனியே
    நம் குலம் வாழ பாடு குயிலே
    சிரிக்காத வாயும் சிரிக்காதோ
    திருநாளைக் கண்டு மகிழாதோ
    குழு)சிரிக்காத வாயும் சிரிக்காதோ
    திருநாளைக் கண்டு மகிழாதோ
    வாராயென் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    பெ)தனியாகக் காண வருவார்
    இவள் தளிர்ப்பாலே தாவி அணைவாள்
    கனி போலே சேர்ந்து மகிழ்வாள்
    இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    குழு)எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    வாராயென் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    பெ)மலராத பெண்மை மலரும்
    முன்பு தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்கள் மயங்கும்
    முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ
    குழு)வாராயென் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    வாராயென் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    பெ)மணமேடை தன்னில் மணமே காணும்
    திருநாளை காண வாராயோ
    குழு)வாராயென் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ

    • @pvvasu6192
      @pvvasu6192 Рік тому

      அருமையானா வரிகள்

  • @NERNIS
    @NERNIS 3 роки тому +17

    அந்த ஒரு புன்னகைக்கு கோடி நமஸ்காரம் சிம்மம் நடிகர் திலகம்

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama6226 4 роки тому +53

    நல்ல பாடல் கருத்துகள் பலவகை உள்ளது .என்றும் இனியவை

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Рік тому +1

    எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பாடலை தந்தவர் கவியரசர் மட்டுமே கலைத்துறையினர் பொக்கிசம் கண்ணதாசன் குன்றை அப்பா ரவி

  • @Rosaiah247
    @Rosaiah247 Рік тому +4

    சிரிக்காத வாயும் சிரிக்காதோ ❤❤❤❤

  • @user-xs3wu2jd5m
    @user-xs3wu2jd5m 2 роки тому +9

    Excellent dance performance by actress Sukumari,melodious music and beautiful lyrics sung by L R Eashwari.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Рік тому +7

    I enjoyed this song during my childhood days.... Particularly during my relatives marriage in many occasions....wow.... No words...🙏🙏🙏🙏🙏