அம்மா அப்பா சண்டையிலே பாடல் | Amma Appa Sandaiyile song | M.R.Vijaya, Jayaraman | Kattila Thottila .

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #geminiganesan #bhanumathi #sivakumar #tamilsongs #lovesongs #romantic #4koldsongs
    அம்மா அப்பா சண்டையிலே பாடல் | Amma Appa Sandaiyile song | M.R.Vijaya, Jayaraman | Kattila Thottila . Tamil Lyrics in Description .
    Movie : Kattila Thottila
    Music : V. Kumar
    Starring : Gemini Ganesan, P. Bhanumathi, Sivakumar, Kalpana
    Song : Amma Appa Sandaiyile
    Singers : Saibaba, M. R. Vijaya, Jayaraman
    Lyrics : Vaali
    பாடகர்கள் : சாய்பாபா, எம். ஆர். விஜயா மற்றும் ஜெயராமன்
    இசையமைப்பாளர் : வி. குமார்
    பாடலாசிரியர் : வாலி
    பெண் : அம்மா அப்பா சண்டையிலே
    அனாதை ஆனோம் பிள்ளைகளே
    அம்மா அப்பா சண்டையிலே
    அனாதை ஆனோம் பிள்ளைகளே
    ஆண் : சும்மாயிருக்க முடியல்லே
    ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே
    ஆண் : சும்மாயிருக்கவும் முடியல்லே
    ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே
    பெண் : அம்மா….
    ஆண் : அப்பா
    பெண் : அம்மா அப்பா சண்டையிலே
    அனாதை ஆனோம் பிள்ளைகளே
    ஆண் : சும்மாயிருக்க முடியல்லே
    ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே
    பெண் : வழியில்லே
    ஆண் : வழியில்லே
    பெண் : வழியில்லே…..
    குழு : அம்மா….பசி அப்பா….பசி பசியோ பசி….
    பெண் : பொழுது விடிஞ்சா காபி கொடுக்க
    அம்மா வேண்டாமா
    நாம அழுது வடிஞ்சா காசு கொடுக்க
    அப்பா வேண்டாமா
    ஆண் : அப்பா சுட்ட இட்லிதனிலே
    உப்பே இருக்காது
    அப்பா சுட்ட இட்லிதனிலே
    உப்பே இருக்காது
    ஆண் : அட அம்மா நமக்கு மருந்து தராட்டி
    உடம்பே இருக்காது
    குழு : உடம்பே இருக்காது
    அம்மா….பசி அப்பா….பசி பசியோ பசி..
    பெண் : ஊருக்குள்ளே சண்டை
    நடந்தா அப்பா வக்கீலு
    ஆண் : உடம்புக்குள்ளே சண்டை
    நடந்தா அம்மா வக்கீலு
    ஆண் : அம்மா அப்பா சண்டை பிடித்தா
    யார் தான் வக்கீலு
    பெண் : அதை தீர்த்து வைக்கவும்
    சேர்த்து வைக்கவும் நாம்தான் வக்கீலு
    குழு : நாம்தான் வக்கீலு
    அம்மா….பசி அப்பா….பசி பசியோ பசி…..
    பெண் : மூக்கு நுனியிலே கோபம்
    முளைச்சு மூக்கே ரெண்டாச்சு
    நாக்கு நுனியில் வார்த்தை
    தடிச்சு பேச்சே நின்னாச்சு
    ஆண் : பேட்டுக்கும் பந்துக்கும் விரோதம்
    வந்தா பந்தயம் என்னாகும்
    வேட்டிக்கும் பொடவைக்கும்
    போட்டி இருந்தா வீடே காடாகும்
    பெண் : பேருக்கு முன்னே இனிஷியல் போட
    அப்பா வேண்டாமோ
    பேருக்கு முன்னே இனிஷியல் போட
    அப்பா வேண்டாமோ
    பெண் : நம்ம பெத்தவ யாருன்னு
    மத்தவ கேட்டா அம்மா வேண்டாமோ
    குழு : சொல்ல அம்மா வேண்டாமோ
    அம்மா….பசி அப்பா….பசி பசியோ பசி……

КОМЕНТАРІ • 4

  • @chitrachitra2238
    @chitrachitra2238 3 місяці тому +2

    இந்த காலத்தில் இப்படி ஒரு பாடலை கேட்க முடியாது. அருமை.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 3 місяці тому +2

    குழந்தைகளின் நல்ல பாடல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +3

    நல்ல காமெடிப்பாடல் ❤❤❤

  • @kalaselvi77
    @kalaselvi77 3 місяці тому +1

    ❤❤❤