ஒரு வித மயக்கம் உன்னிடம் பாடல் | Oru Vidha Mayakkam Song | P. Susheela | Kattila Thottila .

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #geminiganesan #bhanumathi #sivakumar #tamilsongs #lovesongs #romantic #4koldsongs
    ஒரு வித மயக்கம் உன்னிடம் பாடல் | Oru Vidha Mayakkam Song | P. Susheela | Kattila Thottila . Tamil Lyrics in Description .
    Movie : Kattila Thottila
    Music : V. Kumar
    Starring : Gemini Ganesan, P. Bhanumathi, Sivakumar, Kalpana
    Song : Oru Vidha Mayakkam
    Singers : P. Susheela
    Lyrics : Vaali
    பாடகி : பி. சுஷீலா
    இசையமைப்பாளர் : வி. குமார்
    பாடலாசிரியர் : வாலி
    பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
    ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
    இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
    பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
    இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
    வாய் கொஞ்சம் வெளுக்கும்
    இதழ் கொஞ்சம் சிவக்கும்
    நோய் ஒன்று இருக்கும் நீ வரும் வரைக்கும்
    பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
    இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
    பெண் : ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க
    எழுதும் மன்னவா
    எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ
    முழுதும் சொல்லவா
    பெண் : ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க
    எழுதும் மன்னவா
    எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ
    முழுதும் சொல்லவா
    பெண் : மடிதான் மஞ்சம் மலர் மஞ்சம்
    இதழ்தான் கிண்ணம் மது கிண்ணம்
    இடைதான் மேடை மணி மேடை
    இன்னும் என்ன சுகம் தேவை
    பருவங்கள் நமக்காக பருவங்கள் நமக்காக
    பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
    இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
    பெண் : நாடி நரம்பினில் ஆயிரம் மின்னல்
    ஓடும் காரணம்
    நால் விழி சேர்ந்திங்கு நாளொரு விதமாய்
    ஆடும் நாடகம்
    பெண் : தேகம் தழுவ வரும்போது
    தென்றல் நுழைய இடமேது
    காவல் ஒன்று கிடையாது
    காதல் வளர தடையேது
    தொடரட்டும் இனிதாக
    தொடரட்டும் இனிதாக
    பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
    இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
    பெண் : ஒரு வித மயக்கம்…….

КОМЕНТАРІ • 6

  • @kalaselvi77
    @kalaselvi77 3 місяці тому +3

    இவங்க பேர் கல்பனா ன்னு நினைக்கிறேன் தலையில் எவ்வளவு பெரிய விக்🤔🤔

    • @pramekumar1173
      @pramekumar1173 3 місяці тому +1

      ஆமாம் கன்னட நடிகை கல்பனா தான். நல்ல திறமையான நடிகை . மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி இன்னும் சில தமிழ் படங்களில் நடித்தார். நல்ல நிலையில் இருக்கும் போதே சில சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டார். பாவம். ☹😢😭😭

  • @padmavenkat1154
    @padmavenkat1154 3 місяці тому +2

    nalla song idhu

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +1

    நல்லப்பாடல் ❤❤❤❤

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 3 місяці тому +1

    போதை ஏற்றும் பாடலா..?

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 3 місяці тому

    Old is gold Ennrum.