அவிநாசி பத்து - வற்றாத பொய்கை | Avinaasi Pathu - Vatraatha Poigai

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @chennaihomeappliancesservi4311
    @chennaihomeappliancesservi4311 16 днів тому +1

    Oooooooom Saravana bava

  • @vetriselvi2879
    @vetriselvi2879 2 місяці тому +7

    முன்னுரை ... ... முனைவர் கி. ஆ. பெ. விசுவநாதம்.
    சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையார் இப்பாடல்களை அடிக்கடி பாடுவார்கள். துன்பமும் துயரமும் வந்தபோது மட்டுமல்ல, இன்பமும் மகிழ்ச்சியும் ஏற்படும் போதும் பாடுவார்கள். நானும் உடன்பாடித் தெரிந்து கொண்டேன். இப்பாடல்கள் எந்த நூலில் உள்ளதோ? .. இதன் ஆசிரியர் யாரோ? .. தெரியவில்லை. முருகன் தமிழன். தமிழரின், தமிழகத்தின் தெய்வம். அவன் அழகன், வேலன், அன்பன். தன்னை அழைத்தவர்க்கு ஓடோடி வந்து அருள் புரிவான் என்று கீழே உள்ள ஓலைச்சுவடி பழம் பாடல் கூறுகிறது.
    இப்பாடல்களை உளமுருகிப் பாடுங்கள். கந்தனை, கடம்பனை, முருகனை, வேலனை, பழனிக் குமரனை, பாலகனை, அய்யனை நினைந்து பாடுங்கள். திரும்பத் திரும்பப் பாடுங்கள். உள்ளத் தூய்மையுடன் பாடுங்கள். அழையுங்கள் .. வருவான், கேளுங்கள் கொடுப்பான்.
    துன்பம் மங்கி ஒளியும், இன்பம் பொங்கி வழியும்.
    அவிநாசி பத்து
    பாடல்
    வற்றாத பொய்கை வளநாடு கண்டு மலை மேலிருந்த குமரா
    உற்றார் எனக்கு ஒருபேருமில்லை உமையாள் தனக்குமகனே
    முத்தாடை தந்து அடியேனை யாளும் முருகேசன் என்றனரசே !
    வித்தார மாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! ...... 1
    ஆலால முண்டோன் மகனாகி வந்து அடியார் தமக்கும்உதவி
    பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து பயனஞ் செழுத்தை மறவேன்
    மாலான வள்ளி தனைநாடி வந்து வடிவாகி நின்றகுமரா!
    மேலான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 2
    திருவாசல் தோறும் அருள்வே தமோத சிவனஞ் செழுத்தைமறவேன்
    முருகேசரென்று அறியார் தமக்கு முதலாகி நின்றகுமரா
    குருநாத சுவாமி குறமாது நாதர் குமரேச(ர்) என்றபொருளே!
    மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 3
    உதிரந் திரண்டு பனியீர லுண்டு உருவாசல் தேடிவருமுன்
    ததிபோ லெழுந்த திருமேனி நாதர் கடைவீடு தந்து மருள்வாய்
    முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை வடிவேல் எடுத்த குமரா!
    யதிராய் நடந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 4
    மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன் மலைவீடுதந்து மருள்வாய்
    வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை வடிவேல் எடுத்தகுமரா!
    நன்றாக வந்து அடியேனை யாண்டு நல்வீடு தந்தகுகனே!
    கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 5
    நீலஞ் சிறந்த குறமாது வள்ளி நின்பாகம் வைத்தகுமரா
    கால னெழுந்து வெகுபூசை செய்து கயிறுமெடுத்து வருமுன்
    வேலும் பிடித்து அடியார் தமக்கு வீராதி வீரருடனே
    சாலப் பரிந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 6
    தலைகட்ட நூலின் நிழல்போல நின்று தடுமாறி நொந்துஅடியேன்
    நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று நெடுமூச் செறிய விதியோ
    அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா அடியேனை ஆளுமுருகா!
    மலையேறி மேவு மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 7
    வண்டு பூவில் மதுவூரில் பாயும் வயலூரில் செங்கைவடிவேல்
    கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல் கடனென்று கேட்கவிதியோ?
    வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி தெய்வானைக் குகந்தவேலா
    நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 8
    விடதூத ரோடி வரும்போது உம்மை வெகுவாக நம்பினேனே
    குறமாது வள்ளி யிடமாக வைத்து மயிலேறி வந்தகுமரா
    திடமாகச் சோலை மலைமீதில் வாழும் திருமால் தமக்குமருகா!
    வடமான பழநி வடிவேல் நாதா வரவேணு மென்றனருகே! ...... 9
    ஓங்கார சக்தி உமைபால் குடித்து உபதேச முரைத்தபரனே!
    பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி புஜமீ திருந்தகுகனே
    ஆங்கார சூரர் படைவீடு சோர வடிவேல் விடுத்தபூபா
    பாங்கான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 10
    ஆறாறு மாறு வயதான போது அடியேன் நினைத்தபடியால்
    வேறேது சிந்தை நினையாம லுந்தன் ஆசாரசங்க மருள்வாய்
    அசுரேசர் போல யமதூத ரென்னைத் தொட்டோட கட்டவருமுன்
    மாறாது தோகை மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 11
    கையார உன்னைத் தொழுதேத்த மனது கபடேது சற்றுமறியேன்
    அய்யா உனக்கு ஆளாகும் போது அடியார் தமக்குஎளியேன்
    பொய்யான காயம் அறவே ஒடுங்க உயிர்கொண்டு போகவருமுன்
    வையாளி யாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 12
    ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி யிந்தப் பிறப்பிலறியேன்
    மாதாபி தாநீ மாயன் தனக்கு மருகா குறத்திகணவா
    காதோடு கண்ணை யிருளாக மூடி உயிர்கொண்டு போகவருமுன்
    வாதாடி நின்று மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே! ...... 13

    • @srk8360
      @srk8360 2 місяці тому

      மிகவும் அருமை.. நன்றி சகோதரி 🙏💐💐💐💐💐 வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐💐

    • @SenthilSenthil-ti1sq
      @SenthilSenthil-ti1sq 2 місяці тому

      🙏🙏🙏🙏

    • @devarajloganathan9443
      @devarajloganathan9443 Місяць тому

      9:55
      Really heart filling

  • @srk8360
    @srk8360 2 місяці тому +2

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐.. இந்த பாடலை
    அருளிச்செய்தது யார்
    என்று அறிய ஆவல்.
    மனதுருக்கும்அருமையானவரிகள்.கண்களில் பனிநீரை சொரிய
    வைக்கிறது.. மிகவும் அருமை.
    நன்றி 🙏

  • @svelu33
    @svelu33 2 місяці тому +1

    இனிய குரல். மெய்மறக்க செய்யும் பாடல். முருகா..... வேறென்ன வேண்டும் எமக்கு?

  • @balamakeshbala92
    @balamakeshbala92 8 місяців тому +3

    தேன் வந்து பாயுது காதினிலே.... அருமை அருமை.... கருணை கடலே கந்தா போற்றி

  • @savilok4950
    @savilok4950 2 місяці тому +1

    Saranam Muruga

  • @kausalyav4801
    @kausalyav4801 10 місяців тому +1

    Thank you so much your rendition brings a clomplete visualisation of song
    Murga coming with a happy smiling face to shower his blessing 😊

  • @chinnusamya7603
    @chinnusamya7603 3 місяці тому +1

    ❤Ullam uruki kanneer malga seiyyum Theyen kalantha ikkuralukkum urukathoor unda Yan appan Muruganai ninaithu. Om muruka. ❤

  • @chennaihomeappliancesservi4311
    @chennaihomeappliancesservi4311 Місяць тому

    Oooooooooooooooooom Saravana bava

  • @jspchemistryclasses
    @jspchemistryclasses 4 місяці тому +4

    அவிநாசி பத்து
    பாடல்
    வற்றாத பொய்கை வளநாடு கண்டு
    மலை மேலிருந்த குமரா
    உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
    உமையாள் தனக்குமகனே
    முத்தாடை தந்து அடியேனை யாளும்
    முருகேசன் என்றனரசே !
    வித்தார மாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 1
    ஆலால முண்டோன் மகனாகி வந்து
    அடியார் தமக்கும்உதவி
    பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
    பயனஞ் செழுத்தை மறவேன்
    மாலான வள்ளி தனைநாடி வந்து
    வடிவாகி நின்றகுமரா !
    மேலான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 2
    திருவாசல் தோறும் அருள்வே தமோத
    சிவனஞ் செழுத்தைமறவேன்
    முருகேசரென்று அறியார் தமக்கு
    முதலாகி நின்றகுமரா
    குருநாத சுவாமி குறமாது நாதர்
    குமரேச(ர்) என்றபொருளே !
    மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 3
    உதிரந் திரண்டு பனியீர லுண்டு
    உருவாசல் தேடிவருமுன்
    ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
    கடைவீடு தந்து மருள்வாய்
    முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
    வடிவேல் எடுத்த குமரா !
    யதிராய் நடந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 4
    மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
    மலைவீடுதந்து மருள்வாய்
    வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
    வடிவேல் எடுத்தகுமரா !
    நன்றாக வந்து அடியேனை யாண்டு
    நல்வீடு தந்தகுகனே !
    கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 5
    நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
    நின்பாகம் வைத்தகுமரா
    கால னெழுந்து வெகுபூசை செய்து
    கயிறுமெடுத்து வருமுன்
    வேலும் பிடித்து அடியார் தமக்கு
    வீராதி வீரருடனே
    சாலப் பரிந்து மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 6
    தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
    தடுமாறி நொந்துஅடியேன்
    நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
    நெடுமூச் செறிய விதியோ
    அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
    அடியேனை ஆளுமுருகா !
    மலையேறி மேவு மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 7
    வண்டு பூவில் மதுவூரில் பாயும்
    வயலூரில் செங்கைவடிவேல்
    கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
    கடனென்று கேட்கவிதியோ?
    வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
    தெய்வானைக் குகந்தவேலா
    நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 8
    விடதூத ரோடி வரும்போது உம்மை
    வெகுவாக நம்பினேனே
    குறமாது வள்ளி யிடமாக வைத்து
    மயிலேறி வந்தகுமரா
    திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
    திருமால் தமக்குமருகா !
    வடமான பழநி வடிவேல் நாதா
    வரவேணு மென்றனருகே ! ...... 9
    ஓங்கார சக்தி உமைபால் குடித்து
    உபதேச முரைத்தபரனே !
    பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
    புஜமீ திருந்தகுகனே
    ஆங்கார சூரர் படைவீடு சோர
    வடிவேல் விடுத்தபூபா
    பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 10
    ஆறாறு மாறு வயதான போது
    அடியேன் நினைத்தபடியால்
    வேறேது சிந்தை நினையாம லுந்தன்
    ஆசாரசங்க மருள்வாய்
    அசுரேசர் போல யமதூத ரென்னைத்
    தொட்டோட கட்டவருமுன்
    மாறாது தோகை மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 11
    கையார உன்னைத் தொழுதேத்த மனது
    கபடேது சற்றுமறியேன்
    அய்யா உனக்கு ஆளாகும் போது
    அடியார் தமக்குஎளியேன்
    பொய்யான காயம் அறவே ஒடுங்க
    உயிர்கொண்டு போகவருமுன்
    வையாளி யாக மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 12
    ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
    யிந்தப் பிறப்பிலறியேன்
    மாதாபி தாநீ மாயன் தனக்கு
    மருகா குறத்திகணவா
    காதோடு கண்ணை யிருளாக மூடி
    உயிர்கொண்டு போகவருமுன்
    வாதாடி நின்று மயில்மீ திலேறி
    வரவேணு மென்றனருகே ! ...... 13

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +2

    சிவாய நம❤🎉🙏🙏🙏🙏🙏

  • @sujithrasenthilnathan3927
    @sujithrasenthilnathan3927 Рік тому +2

    ஓம் சரவணபவ அருமை

  • @shantinnaidoo9749
    @shantinnaidoo9749 Рік тому +2

    HARO HARA ❤️🙏

  • @sivakumari8313
    @sivakumari8313 Рік тому +2

    ஓம் நமசிவாய

  • @radhakrishnanchinnasamy2339
    @radhakrishnanchinnasamy2339 8 місяців тому +1

    om muruga saranam

  • @chandrashekharbhat3855
    @chandrashekharbhat3855 2 місяці тому +1

    👍👌🏽👌🏽🙏🙏❤️

  • @gopalshanmugam610
    @gopalshanmugam610 3 місяці тому +1

    Begin from 01:00 for main song.

  • @srisrilanka7087
    @srisrilanka7087 6 місяців тому +1

    ❤🪷ஓம்🔱முருகா போற்றி🔱🪷❤

  • @velammalveerappan9280
    @velammalveerappan9280 Місяць тому +1

    🎉🎉🎉k.Velammal😂

  • @chennaihomeappliancesservi4311
    @chennaihomeappliancesservi4311 Місяць тому +1

    Oooooooooooooooooom Saravana bava