உடலி னூடு - சிவரூபம் பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 244
Вставка
- Опубліковано 16 січ 2025
- தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான - தனதான
உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு மாயாத
உணர்வினூடு வானூடு - முதுதீயூடு
உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும்
ஒருவரோடு மேவாத - தனிஞானச்
சுடரினூடு நால்வேத முடியினூடும் ஊடாடு
துரிய ஆகுல அதீத - சிவரூபம்
தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை
தொடுமுபாயம் ஏதோசொல் - அருள்வாயே
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான
வரி வரால் குவால் சாய - அமராடி
மதகு தாவி மீதோடி உழவரால் அடாது ஓடி
மடையை மோதி யாறூடு - தடமாக
கடல்புகா மகாமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு - மலர்வாவி
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர
கருணை மேருவே தேவர் - பெருமாளே.