இலங்கையின் அழகான நீர்வீழ்ச்சிக்கு போகலாமா?

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2023
  • துன்கிந்த நீர்வீழ்ச்சி Dunhinda Falls என்பது இலங்கையில் பதுளை நகரிலிருந்து 5 கிலோமீற்றர் (3.1 மைல்) அப்பால் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும்.
    இது இலங்கையிலுள்ள அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 64 மீற்றர் (210 அடி) உயரமான இந்த நீர்வீழ்ச்சியினை புகைமூட்டமான நீர்த்துளிகள் அதன் பெயர் உருவாகுவதற்கு காரணம் (துன் என்பதன் சிங்களமொழி அர்த்தம் புகை அல்லது பனி) இது நீர்வீழ்ச்சியின் அடிப்பாகத்தினால் சூழப்பட்டுள்ளது.இந்த நீர்விழ்ச்சி பதுளை நகரத்தின் ஊடாக செல்லும் பதுளை ஓயா என்று அழைக்கப்படும் ஆற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
    கால் நடையாக நீர்வீழ்ச்சியை அடைய வேண்டுமானால் 1 கிலோமீற்றருக்கு மேலாக (0.62 மைல்) நடக்க வேண்டும். கால்நடையாக செல்லும்போது கூட துன்கிந்த என்று அழைக்கப்படும் சிறிய நீர்வீழ்ச்சியைக் காண முடியும்.
    துன்கிந்த நீர்வீழ்ச்சி மிகவும் அழகானது சேறுகள் நிறைந்த அதன் பாதையின் ஊடாக சென்று பார்ப்பதற்கு பிரயோசனமானது. அந்த வழியில் உடலை புத்துணர்ச்சியாக்கவும் களைப்பாறவும் பல மருத்துவ குடிபான வியாபாரிகள் காணப்படுகின்றனர். பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு வழியின் முடிவிலே பாதுகாப்பான ஓர் மேடை அமைக்கப்பட்டுள்ளதால் துணிச்சல் மிக்கவர்களால் நீர்வீழ்ச்சியின் எதிர்ப்பக்கத்திற்கு சென்று அதன் மிகவும் அழகிய காட்சியினைக் காண முடியும்.
    #srilanka #lka #srilankavlog #DunhindaFalls @DunhindaFalls #badulla #tourism #srilankatourism #travaltosrilanka #travelwithkeerthu

КОМЕНТАРІ • 10