Thiruvilaiyadal - Nakkeerar vs Shiva Scene | Sivaji Ganesan | AP Nagarajan | Xpress Flashback

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2020
  • Through our new endeavour, #XpressFlashback, we now have the rights to share some iconic footage from legendary filmmaker AP Nagarajan's filmography. In this video from AP Nagarajan's #Thiruvilaiyadal, we have Nadigar Thilagam #SivajiGanesan squaring off against AP Nagarajan himself who plays Nakkeerar. In this scene Nadigar Thilagam is livid about his art being questioned. What happens next? Watch and revel in brilliant performances!
    Follow us on
    Facebook: / xpresscinema
    Twitter: / xpresscinema
    Instagram: / xpresscinema
    For more film news, interviews and reviews, go to: www.cinemaexpress.com
    Cinema Express is a wing of The New Indian Express, and gives you the latest in the world of cinema, with special emphasis on South India, and particular distaste for gossip. The New Indian Express is published by Express Publications (Madurai) Limited from 25 centres in Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Kerala and Odisha.
    The company also publishes the Tamil daily, Dinamani, Cinema Express (Tamil), Malayalam Varika (Malayalam), Sakhi (Kannada), and Sunday Standard from New Delhi.
  • Розваги

КОМЕНТАРІ • 641

  • @Shyamchandar123
    @Shyamchandar123 3 роки тому +887

    சமீபத்தில் திருவிளையாடல்
    படம் பார்த்த போது சிவனுக்கும் நக்கீரருக்கும் ( சிவாஜி ஏபிஎன் என்பதே மறந்து விட்டதே இந்த காட்சியில்) இடையே நடக்கும் வாக்கு வாதத்தில் சிவன் '' அங்கம் புழுதி பட அறுவாளி நெய்பூசி'' என்று தொட‌ங்கும் வசனத்தையும் பிற‌கு நக்கீரர் ''சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்'' என்று தொடங்கும் வசனத்தையும் பேசுவர். இந்த வசனங்களின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன அர்த்தம்...?
    எனக்கும் தெரியாது ..தேடுவோமே என தேடியதில் கிடைத்தது...
    கிடைத்து உங்கள் பார்வைக்கு..
    வாங்க பார்ப்போம்....
    இந்த திரைப்படத்தில் வரும் வசனம்.
    சிவன்:
    *******
    அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
    பங்கம் படவிரண்டு கால் பரப்பி - சங்கதனைக்
    கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
    ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
    நக்கீரன்:
    **********
    சங்கறுப்பது எங்கள் குலம்,
    சங்கரனார்க்கு ஏது குலம்? - சங்கை
    அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
    இரந்துண்டு வாழ்வதில்லை!
    பொருள்:
    *********
    நக்கீரனின் குல தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதை தான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி(அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக்கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார்.
    அதற்கு மறுமொழி, "சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப்பாத்திரமாக்கி இரந்துண்டு(பிச்சை எடுத்து) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார்.
    ( ஈசன் நம்ம முன்னாடி வந்தா இப்படியா கேள்வி கேட்போம்..
    மளிகை சாமான் பட்டியல் போல பெருசா தூக்கி நீட்டி இருக்க மாட்டோமா நம்ம குறைகளை... நக்கீரன் கிரேட்)...
    அதற்குப் பிறகு....
    நக்கீரா !..
    நன்றாக என்னைப் பார்’ என்று நெற்றிக்கண் திறந்து காட்டி ஈசன் அச்சுறுத்த, ‘
    நீரே முக்கண் முதல்வனாயினும் ஆகுக! உமது நெற்றியில் ஒரு கண் காட்டிய போதிலும் உமது உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டபோதிலும் குற்றம் குற்றமே!
    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !!’.....
    நக்கீரர் ஆன ஏபி நாகராஜன்,
    ஐயனே.. நீரே முக்கண் முதல்வனும் ஆகுக.. நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே..என உரைக்க கோபத்தில் ஈசன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து வரும் தீயில் நக்கீரன் புஸ் என மறைகிறார்...பிறகு பொற்றாமரைக் குளக்கரையில் ஈசன் அருளால் மீண்டு வருகிறார்...
    என்ன காட்சி என்ன வசனம், என்ன நடிப்பு...எழுதும் போதே புல்லரிக்கிறதேப்பா....
    (இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.
    அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
    பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
    கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
    பாரில் பழுதுஎன் பவன்
    சங்கறுப்பது எங்கள்குலம்,
    சங்கரருக்கு அங்கு ஏதுகுலம்
    பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
    அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
    இரந்துண்டு வாழ்வதில்லை....)
    இது தான் தெய்வத்தமிழ்...
    பகுத்தறிவு அசுர பலம் கொண்டு விளையாடிக்கொண்டிருந்த காலத்தில்
    தமிழகம் முழுவதும் நம் தெய்வத்தமிழை உயிர்ப்போடு வைத்திருந்தது இதைப் போன்ற திரைப்படங்களே..

    • @SaraDeepan
      @SaraDeepan 3 роки тому +15

      நன்றி 🙏

    • @karthikeyan9592
      @karthikeyan9592 3 роки тому +12

      அருமை

    • @vijaykumarsharan
      @vijaykumarsharan 3 роки тому +23

      அருமை அருமை. என் உயிர் தமிழே வாழ்க

    • @arunkannan7960
      @arunkannan7960 3 роки тому +40

      இவ்வாறு, வசனத்தை விளக்கி கூறியதற்கு நன்றிகள் பல🙏🙏🙏🙏

    • @nsvasan
      @nsvasan 3 роки тому +4

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛕🛕🛕🛕

  • @RamA-ju8kg
    @RamA-ju8kg 10 місяців тому +19

    இது ஒரு பொக்கிஷம் . இந்த படம் எப்பொழுது வேன்டுமானாலும் பார்க்கலாம், சிவாஜி அவர்களின் நடிப்பு , எ.பி நாகராஜனின் இயக்கம், மற்ற கலைஞரின் திறமை அருமை !!!

  • @chandramohan7071
    @chandramohan7071 2 роки тому +208

    இதில் நடிப்பதற்கு இவர்களைவிட வேறு ஒருவர் இல்லை வாழ்த்துக்கள்

  • @senthilkumarselvaraj9169
    @senthilkumarselvaraj9169 3 роки тому +260

    🔥🔥🔥🔥நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே🔥🔥🔥🔥🔥

  • @shanmugama9224
    @shanmugama9224 2 роки тому +84

    தமிழ் உள்ளவரை, நடிகர் திலகத்தின் நடிப்பை புகழ்ந்து கொண்டு இருப்போம் 👍🙏

  • @user-ju2oh3ky8w
    @user-ju2oh3ky8w 3 роки тому +51

    சங்கறுப்பது எங்கள் குலம்
    சங்கரனார்க்கு ஏது குலம்

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Рік тому +11

    தமிழ் =
    செம்மைமொழி+ஆன்மீகம்+
    நாகரீகம்+
    விருந்தோம்பல்+ கூட்டு வழிபாடு+
    பிறர் நலன் +வீரம்+ இயல்+இசை+
    ஆரோக்கியம்+
    இயற்கை காப்பு + ஒற்றுமை
    இப்படி பண்முகதன்மை கொண்டது!
    நம் தமிழ்! அவை ஒன்றுடன் ஒன்று சங்கமிக்கும் அழகே அழகு தான்!
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    💚

  • @FitnezzFreakss
    @FitnezzFreakss 3 роки тому +131

    அரிந்துன்டு வாழ்வோம் அரனே உம் போல் இரந்துன்டு வாழ்வதில்லை
    தமிழ் திமிர்😍😍

    • @UncleManohar
      @UncleManohar 2 роки тому

      aahaa

    • @nithishkumar3814
      @nithishkumar3814 2 роки тому

      Enna meaning bro intha dialogue ku ?

    • @veluprabhakaran5980
      @veluprabhakaran5980 2 роки тому

      அதற்கு நக்கீரன் சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு(இங்கு நக்கீரங்கு சொல்லும் பொழுது இவர் சிவன் என்று தெரியும்)ஏது குலம் அதன் பிறகுதான் சங்கருத்து வாழ்கை நடத்துவோமே தவிர அரனே உன்னை (சிவனை) போல் யாசகம் (திருவோடு ஏந்தி)பெற்று வாழ மாட்டோம் என்று கேட்டுஇருப்பர். இந்த மாதிரி கடவுளிடம் தர்க்கம் பண்ண தமிழ் சமயத்தாரால் மட்டுமே முடியும்.

    • @nithishkumar3814
      @nithishkumar3814 2 роки тому

      @முத்தையாத் தேவர் thanks naa

    • @stssts2005
      @stssts2005 Рік тому

      🙏

  • @sanjaym3348
    @sanjaym3348 Рік тому +24

    கலைமகள் என்ன நான் அன்றாட வணங்கும் ஈசனுக்கு இடப்பக்கம் அமர்திருக்கிறாளே அன்னை மலரவள் உமையவள்🙏 ஓம் சக்தி

    • @SaraDeepan
      @SaraDeepan Рік тому

      *மலைமகள்

    • @sanjaym3348
      @sanjaym3348 Рік тому +1

      @@SaraDeepan see the movie

    • @sanjaym3348
      @sanjaym3348 Рік тому

      @@SaraDeepan மலரவள் மலைமகள் அனைத்தும் அன்னை ஆதி சக்தியின் பெயர்கள் தான்
      அவள் கோடி நாமங்களை கொண்டவள் ஓம் சக்தி🙏🙏🙏

  • @prabin277
    @prabin277 3 роки тому +53

    நடிகர் திலகத்தின் திறமைக்கு ஏற்ப, மற்ற நடிகர்களின் நடிகர்களின் நடிப்பும் இருந்திருக்கிறது. அருமை. தூய தமிழ் சொல்லாடல்கள் என்ன ஒரு இனிமை.

  • @veerasing2390
    @veerasing2390 2 роки тому +14

    சிவனார்'பிரபஞ்ச சத்தத்தை தவத்தினால் உணர்ந்து படைத்த
    ஒரே மொழி தமிழ். ஆகையால்
    அதை பரிசோதிக்கவே இத் திருவிளையாடல் ஆடினார். தென்னாருடைய சிவனே போற்றி.

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 роки тому +70

    சிறந்த கதை வசனம் அற்புதமான நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.
    சிவாஜியின் நடிப்பு மிகவும் அற்புதம்

    • @arularul8768
      @arularul8768 2 роки тому +3

      இது கதை அல்ல தமிழர்களின் வரலாறு

    • @jagadheesh1733
      @jagadheesh1733 Рік тому

      நக்கீரனாக நடித்திருக்கும் ஏபி நாகராஜன் சிறந்த இயக்குனர்.எங்கள் சங்ககிரியை சேர்ந்தவர்

  • @l.selvakannan1154
    @l.selvakannan1154 3 роки тому +63

    நக்கீரர் நடிப்பு சூப்பர் ❤️

  • @paramasivanr5973
    @paramasivanr5973 2 роки тому +21

    இந்த மாதிரி ஒரு நல்ல படம் இனிமேல் யாராலும் எடுக்க முடியாது அந்த காலத்தில் எடுத்தது தான் சூப்பர்

    • @user-vj2ks1wg7v
      @user-vj2ks1wg7v 2 роки тому +1

      படம் எடுக்கலாம். ஆனால் சிவாஜி போல நடிக்கறத்துக்கு ஆள் இல்லை.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +210

    நக்கீரனுக்கு பொருத்தமான வேடம் ஏ.பி.நாகராஜன் ஒருவரால் தான்‌ முடியும்

    • @jagadheesh1733
      @jagadheesh1733 Рік тому +1

      சங்ககிரியை சேர்ந்தவர்

    • @mgrmgr1499
      @mgrmgr1499 11 місяців тому +1

      அய்ய எல்லா நடிகரால் முடியும் நக்கீரன் வேடத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும்பொழுது அங்கே இருப்பவர்கள் இயக்குனர் நாகராஜனை பார்த்து கதைக்கும் உடல் அமைப்பும் நீங்களே பொருத்தமானவர் சொல்லசரியென்று இயக்குனர் வேடத்தை ஏற்றுக்கொண்டார்👨‍👩‍👧‍👧👍🙏

  • @goldking8361
    @goldking8361 2 роки тому +48

    அந்த காலத்துலயே புலவர்களின் திறமையை பரிசோதிக்க இறைவன் நடத்திய வாய்மொழித் தேர்வு அருமை.

  • @harishahimas6217
    @harishahimas6217 Рік тому +21

    குற்றத்தை குற்றமாக தாயக்கம் இல்லாமல் சொல்லும் ஒரே குலம் நம் தமிழ் குலம்.

  • @adhangararch8276
    @adhangararch8276 3 роки тому +595

    கடவுளிடமே கேள்வி கேட்கும் ஒரே இனம் இந்தத் தமிழினம் தான்

    • @sarathasellathurai1661
      @sarathasellathurai1661 3 роки тому +19

      நன்றி

    • @gladiatoryt8908
      @gladiatoryt8908 2 роки тому +17

      Enendral sivaneh tamilan daan (thennataiya sivaneh pottri ennatavarukkum iraiva potri)

    • @kirubaharankirubaharan1994
      @kirubaharankirubaharan1994 2 роки тому

      @@sarathasellathurai1661 NAKKEERAN ANAVAM ALITHATHU

    • @sivasiva901
      @sivasiva901 2 роки тому +13

      எங்கள் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் சமுதாயத்தின் ஒப்பற்ற அடையாளமாக விளங்கியவர் நம் பாட்டனார் நக்கீரன் அவர்கள் புகழ் ஓங்குக வளர்க மீனவ சமுதாயம்

    • @kirubaharankirubaharan1994
      @kirubaharankirubaharan1994 2 роки тому +3

      @@sivasiva901 meenakshi chathirakalai

  • @srivelramasamy6916
    @srivelramasamy6916 Рік тому +7

    இந்த ஒரு காடசியை பார்க்கும் போதே، என்னுயிர் இறைவனும் ، என் தந்தை، தாயுமான சிவபெருமான் என் முன்னே தோன்றி மெய் சிலிர்க்க வைக்கிறார்۔۔திருச்சிற்றம்பலம்۔

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 роки тому +7

    இறைவனிடம் கேள்விகேட்கும் ஒரேமொழி தமிழ் சிவபெருமான்தோற்றுவித்ததால் உலகுபூராசிவன்தமிழ்மொழிகல்வெட்டுகள் கிடைத்தவன்னம் இருக்கிறது

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Рік тому +11

    நடிப்பு ஒரு கலை 100 பேர் கேமரா பின்னாடி இருக்கும் போது அதன் முன் நடிப்பது என்பதும் அதனுடன் நீண்ட வசனம் பேசுவது என்பதும் மிகவும் சிரமம் ஆனது. அந்த வகையில் இவர்களை பாராட்டத்தான் வேண்டும்.

    • @mgrmgr1499
      @mgrmgr1499 11 місяців тому

      நீங்கள் முற்றிலும்தவறு சினிமா துறைநடிப்பு பள்ளி கூடம் அங்கே பயிற்சி தேர்ச்சிபெற்றுபிறகுதான் ஒப்பனை முடிந்தபிறகு நடிக்கவருவார்கள் இதில்சிரமம் இல்லை😀😀😀👨‍👩‍👧‍👧

  • @blackking5367
    @blackking5367 Рік тому +12

    🐚நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே🐚

  • @ajitharavindan5827
    @ajitharavindan5827 Рік тому +9

    What an epic drama.... Lucky me to understand tamil....

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 3 роки тому +17

    இனிமேல் இதுபோன்ற படங்கள் காண முடியுமா??????

    • @gladiatoryt8908
      @gladiatoryt8908 2 роки тому +1

      Pa Ranjith pondra director irukum podu vaipilla raja

  • @roughguy2011
    @roughguy2011 2 роки тому +42

    We are blessed to see Lord shiva own lyrics that still exist. God is great

  • @Tamilanban-rr9eb
    @Tamilanban-rr9eb 3 роки тому +14

    Nadigar thilagam and ap nagarajan mass tamil புலமை

  • @tkedits2665
    @tkedits2665 3 роки тому +115

    சிவன் தமிழன் என்பது அனைவரும் அறிந்ததே

    • @aravinda913
      @aravinda913 3 роки тому +20

      சிவன் தமிழன் அல்ல தமிழே சிவன்

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому +13

      சிவனை இழி மனிதன் ஆக்க வேண்டாம்..
      சிவன் என்றும் இறைவனே

    • @sciencelover8557
      @sciencelover8557 2 роки тому +12

      அப்படி இல்ல bro அவன் உலகிற்கே இறைவன் அவன் தான் தமிழை படைத்தான்

    • @outofturn331
      @outofturn331 2 місяці тому

      ​@@sciencelover8557தமிழ் சமஸ்கிருதம் இரண்டையும் படைத்தான் என்பர்

  • @harilalmn
    @harilalmn 3 роки тому +41

    What an excellent reply to lord shiva....!
    Sankaruppathenkar kulam
    Sankaranaarkketh kulam
    Sankai arinthuntu vaazhvom
    aanaal sankaranai pol eranthuntu vaazhvathillai....!!
    Super super super...! I am from Kerala, but I love Tamizh as much as I love Malayalam...!

    • @HsenagNarawseramap
      @HsenagNarawseramap 2 роки тому +4

      I am Tamil, please translate 😭

    • @harilalmn
      @harilalmn 2 роки тому +7

      @@HsenagNarawseramap
      Not fully sure if I am correct. Still let me try to explain what I understood, hoping that someone would correct if I am wrong....
      "Sankaruppathenkar kulam"
      The livelihood of my community is cracking shells (and collecting pearls)
      "Sankaranarkkethu kulam?"
      Which 'kulam' (community) lord Shankara belongs to?
      "Shankai arinthuntu vazhvom"
      I live by seeking clarification on sankai (doubt). Means I live to know the truth behind matters. Philosophically this can have much wider meaning. I believe there are in-depth and hidden meanings for this line. In fact this is the punch line..
      "Anaal, Shankaranaipol eranthuntu vazhvathillai"
      But I am not a begger like lord shankara, who takes offerings from others to survive. He is referring to begging because lord Shiva has another name called "Kapaali", meaning 'one who holds a skull'.
      Here refers to a curse that lord shiva got from Brahma that he would beg for his lifetime holding the skull of the fifth head that Brahma had before, after Shiva plucked it off accusing Brahma of telling a lie...

    • @HsenagNarawseramap
      @HsenagNarawseramap 2 роки тому +3

      @@harilalmn sir, that’s so deep! Thanks for the explanation!

    • @harilalmn
      @harilalmn 2 роки тому +4

      @Sanjay Thanks Sanjay..!! Great insights.
      "Arane um pol"
      I believe "Aran" in Tamil is "Haran" or Lord Shiva. So with "Arane...." he should be addressing the lord, I suppose.
      However, many such the ancient wisdom showcased through poems are amazing...
      Another such example of powerful language skill that cones to my mind is that of the great Kalidasa. The Slokam;
      ka khe charathi, kaa ramya
      kim japyam, Kim cha bhooshaNam
      kO vandyaa, kee dRiSee lanka
      veeramarkaTakampithA
      The more we explore, more we go speechless....! My salute to all those ancient scholars..!

    • @harilalmn
      @harilalmn 2 роки тому +1

      @Sanjay നന്ദി...!!! താങ്കൾക്കും ഓണം ആശംസകൾ...!!

  • @peermohamed7673
    @peermohamed7673 3 роки тому +45

    Legend nadikar Thilagam Sivaji sir

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 роки тому +9

    சங்கறுப்பது எங்கள் குலம். வீர சைவ குல சங்கமர் வம்சத்தில் பிறந்தவன் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @harivelchandrasekaran5907
    @harivelchandrasekaran5907 3 роки тому +32

    Sivaji sir the legend

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 2 роки тому +35

    Really iam proud of shivaji sir he is a legend no one can act like this whatever character he acts its look like real

  • @bdharmichand6503
    @bdharmichand6503 3 роки тому +23

    Wow wow wow unbelievable , not at all feeling boring even after watching any number times

  • @pradeepmallyapradeep806
    @pradeepmallyapradeep806 3 роки тому +20

    "Nadikar Thilaka"thodaya Ucharippai Kettuthaan Naan Tamizh Mozhiye Kattha Virumpinen. Intha Mozhiyin Azhaku Veru Entha Mozhikalkkumillai!!!!
    VAAZHKA TAMIZH 🙏💐🙏

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 Місяць тому +1

    இந்த படைப்பை பார்த்த பின் உண்மையான கடவுள், தருவி, நக்கீரர் நேரில் வந்ததாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.🙏👍

  • @kishorachalanchalan387
    @kishorachalanchalan387 2 роки тому +11

    மதுரை'காரன் தமிழ் காக்க சிவபெருமானை' யே எதிர்தான்
    என்பது கருத்து. மதுரைகாரன்.

  • @ganesku1
    @ganesku1 2 роки тому +11

    #சிவன்
    அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
    பங்கம் படவிரண்டு கால் பரப்பி - சங்கதனைக்
    கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
    ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
    #நக்கீரன்
    சங்கறுப்பது எங்கள் குலம்,
    சங்கரனார்க்கு ஏது குலம்? - சங்கை
    அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
    இரந்துண்டு வாழ்வதில்லை..!!!

  • @TempleClean
    @TempleClean Рік тому +7

    இறை தொண்டு செய்வோம் அனைவரும் 🙏🏻 இறைவன் வாழும் கோவில்களை சுத்தம் செய்யுங்கள் 🙏🏻 அவ்வாறு செய்யும் உங்கள் கைகளை நான் வணங்குகிறேன் 🙏🏻

  • @vinoths436
    @vinoths436 2 роки тому +9

    Voice and delivery so sweet 😍🥰🤩🥰😍🤩

  • @santhoshsivam1017
    @santhoshsivam1017 3 роки тому +17

    Ithu than ithethaan...vera level...

  • @SambandamMTv
    @SambandamMTv 2 роки тому +28

    A P..N Historical writter... sample only .Every words simple and strong thought....Golden year of A.P.N.....

  • @Sivaloga-xc3cj
    @Sivaloga-xc3cj Рік тому +3

    ஆதியை மறைக்க ஆதி ஒன்றால்தான் முடியும்.அது வரை எல்லாம் நடக்கும்.நமசிவாய...

  • @divyaavinodh
    @divyaavinodh 3 роки тому +12

    ம.லெக்ஷ்மி65வயதுஇப்படத்தைஅன்றுதியேட்டரில்பார்த்தேன்.பிறகு டிவி,காணொளிஎனபார்த்துக்கொண்டிருக்கிறேன்அலுக்கவில்லை.இந்தசீனைமட்டும்ஒரு70முறைபார்த்திருப்பேன்இதில்நடிகர்திலகத்தின்நடிப்புஅப்பப்பா!இதைபார்த்தால்அன்றுமுழுவதும் மிகமகிழ்ச்சியாக இருப்பேன்.வாழ்கவளமுடன்

  • @gangadharr3524
    @gangadharr3524 Рік тому +4

    @3:48
    Sangarupadhu engal kulam, Sankaranaar uku Edhu kulam?
    Sangai arindhundu vaazhvom, arane.. un pol erandhundu vaazhvadhillai 👍👍👍
    Semma words...

  • @vijayalakshmir9048
    @vijayalakshmir9048 3 роки тому +52

    Nobody is equal to god shivaji sir acting marvelous wow🙏🙏

  • @srimensundarchitra18
    @srimensundarchitra18 2 роки тому +35

    3:49 vera level dialogue ❤❤

    • @gangadharr3524
      @gangadharr3524 Рік тому +4

      Yes, that rhyming plus meaning in same lines is the beauty of thooya tamizh

  • @veerasing2390
    @veerasing2390 2 роки тому +5

    சிவனே முதல் தமிழ் சங்கத் தலைவன்.

  • @UncleManohar
    @UncleManohar 3 роки тому +9

    கற்ற வார்சடையான் நெற்றிக்கண்ணினை சிறிதே காட்டப்
    பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம்
    முற்றுநீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
    குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்.
    இதுவே பரஞ்சோதி முனிவரின் செய்யுள் திருவிளையாடற் புராணத்தில். அதை உரைநடையில் அழகாக தந்துள்ளார் ஏ .பி . என் சார். நல்ல வசனம். சிறப்பான தமிழ்.

    • @UncleManohar
      @UncleManohar 2 роки тому

      நிலையிற்றிரியாது அடங்கியான் தோற்றம்
      மலையினும் மாணப்பெரிது
      என்ற திருக்குறளின் கருத்துப்படி நின்றதால் தான் நக்கீரனுக்கு பெருமையே தவிர நக்கீரன் கருத்து தவறு என்பதையே தொடரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. "தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்" என்பதே இந்த சம்பவத்தின் பெயர்.

  • @mohamediskhan9257
    @mohamediskhan9257 2 роки тому +13

    What a tremendous acting..

  • @gunashekar5149
    @gunashekar5149 11 місяців тому +4

    God of acting Dr Sivaji ayya🙏

  • @andygopal6305
    @andygopal6305 3 роки тому +41

    I m proud. I m acting as nakkeran in this drama. Sivanaye kelvi keddavan en taatta nakkiiran

  • @anishani7776
    @anishani7776 Рік тому +6

    Shivaji, mohanlal, kamal, best actor of indian cinema

  • @user-cp2iw9er7i
    @user-cp2iw9er7i 2 роки тому +5

    அருமையான நடிப்பு அருமையான கருத்து

  • @Adwick.
    @Adwick. Рік тому +9

    இந்து அல்லாத மற்ற மதத்தினர் இதை பார்க்க வேண்டும்.இந்து மாதத்தில்தான் எத்தனையோ மகான்கள்.கடவுளை பார்த்துள்ளார்கள்.வேறு எந்த மதத்தினரும் கடவுளை நேரில் பார்த்ததாக குறிப்புகள் இல்லை.இந்து மதம் உலகம் உள்ளவரை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஜெய் ஹிந்த்.

    • @alexpandi9972
      @alexpandi9972 2 місяці тому

      hindu illaii saivan....👍👍

  • @gnanasekarang308
    @gnanasekarang308 3 роки тому +42

    உண்மையில் "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சறை தும்பி" என்ற குறுந்தொகை பாடலை இயற்றியவர் நக்கீரர் ஆவார்.

    • @sundarg1760
      @sundarg1760 3 роки тому +9

      இறையனார்

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 2 роки тому +1

      👍👍👍

    • @yogishkumar5697
      @yogishkumar5697 2 роки тому +1

      இயற்றியவர் யார்
      என்பது
      இலக்கியத்தில்
      இல்லை

    • @storytellerkirupa7822
      @storytellerkirupa7822 2 роки тому +3

      இறையனார் அப்பாடலை இயற்றினார்

    • @rajumettur4837
      @rajumettur4837 Рік тому

      ​@@storytellerkirupa7822 yes correct.

  • @phoenixbirdchannel2972
    @phoenixbirdchannel2972 3 роки тому +59

    Wow god of acting Shivaji legend 🙏🙏

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Рік тому +2

    இது போன்ற ஒரு படமோ அதி ல் நடிக்கும் நடிகர்களோ அமர மாட்டார்கள் என்பது தான் வருத்தம் வாழ்த்துக்களுடன்

  • @babusuresh5130
    @babusuresh5130 2 роки тому +5

    புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அனைத்து யாம் அறிவோம்.

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 роки тому +3

    திருச்சிற்றம்பலம் வாழ்க தமிழ் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏

  • @gowreeshwari1235
    @gowreeshwari1235 3 роки тому +9

    இந்த வசனம் எழுதினார் ஆனால் H life in கவிதா நன்றி to திரு பழனிக்குமார் @காலா🔥🔥🔥🖤🖤

  • @user-wv8rh7el4m
    @user-wv8rh7el4m 2 роки тому +5

    அருமை அழகு சிறப்பு

  • @ponnuarasi270
    @ponnuarasi270 Рік тому +5

    Shivji sir no one replaced your place.... great sir

  • @vasundaradevi.v6560
    @vasundaradevi.v6560 2 роки тому +11

    Legend sivaji ganeshan😍

  • @kalidhasanb5554
    @kalidhasanb5554 Рік тому +4

    Yaarupa dialogue ezhuthunathu vera level😍😍😍

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 Рік тому

      Dialogue + story + direction + acting as nakkeerar = A.P.Nagarajan

  • @srikrishna2561
    @srikrishna2561 2 роки тому +5

    இறையனார் (சிவ பெருமான்)(Lord Shiva) திருவள்ளுவ மாலையில் வள்ளுவரைப் பற்றியும் புகழ்ந்து உள்ளார்.

  • @vijayalakshmir9048
    @vijayalakshmir9048 3 роки тому +57

    Legend acting of shivaji sir 👍👍

    • @dksankar86
      @dksankar86 3 роки тому +5

      So only he called as Nadigar Thilagam...

    • @nagaraj2199
      @nagaraj2199 3 роки тому

      Nenga sonnathu super ok

  • @TheAngulimal
    @TheAngulimal 2 роки тому +5

    Who dislike such a wonderful and powerful movie and scene

  • @satheeshkumar3821
    @satheeshkumar3821 3 роки тому +22

    OM NAMA SHIVAYA, JAI MAHA DEVA

    • @ponmaniponnu4541
      @ponmaniponnu4541 3 роки тому +4

      Jai எங்கடா தமிழ் மொழியியல் வந்தது

  • @harivimalesh
    @harivimalesh Рік тому +3

    This is the Moto of my life. I always push for truth. Who ever says it.

  • @CHHOTUKUMAR-mw3nq
    @CHHOTUKUMAR-mw3nq 2 роки тому +7

    தமிழர்கள் சிவன் பிள்ளைகள்.
    எவராலும் தொடமுடியாது.

  • @shanthakumar4598
    @shanthakumar4598 2 роки тому +31

    What a mighty acting by nadigar thilagam and wonderful dialogues and A P Nagarajan sir, who and what can be compared to this excellent scene of the Tamil cinema what a proud Tamilians we R to have Shivaji as our greatest actor of our Times

  • @roguedravidan2746
    @roguedravidan2746 3 роки тому +9

    அருமையான தமிழ், அருமையான உச்சரிப்பு.

  • @LaughingBuddha_PK
    @LaughingBuddha_PK 2 роки тому +5

    Sivaji sir - Enna oru gambeeram 🔥🔥

  • @kaduvettikuppan3712
    @kaduvettikuppan3712 3 роки тому +23

    என்னே ஒரு நடிப்பு!!!அடடா சிவனையே கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.... கணேசன்...
    மற்றுமொரு அதிசயம் : நமது இந்திய சனாதன தர்மத்தில்தான் ஒரு புலவர் கடவுளுடனேயே வாதிட முடிந்தது....இது நம் தர்மத்தின் மிகச்சிறப்பான குணமாகும்...வேற்று மதத்தில் இது போல எதிர்த்து வாதிட முடியாது...

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r Рік тому +2

      இது சனாதனமல்ல தமிழர். பெருமை

    • @karthireo1728
      @karthireo1728 Рік тому

      Ethu sanathanam ellai சைவம்

    • @praveenvijay906
      @praveenvijay906 Рік тому +1

      இதுல எங்கடா சனாதனம் வந்தது சங்கி

    • @karthireo1728
      @karthireo1728 11 місяців тому

      Sanathanam ellz saivam saivam...

  • @PriyasFatafatAdukkala
    @PriyasFatafatAdukkala 3 роки тому +14

    Beautiful scene. Epic movie👍

  • @thamizharvetham1698
    @thamizharvetham1698 3 роки тому +6

    அருமை அருமை

  • @lakshmananchinnasamy8136
    @lakshmananchinnasamy8136 Рік тому +2

    what a speech.... .enne azhagu en painthamizh😍🥰

  • @honest436
    @honest436 2 роки тому +3

    முத்தமிழ் சங்கத்தின் தலைமை சிவம்....

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +5

    Super ariurai vazgha tamil om namasivaya 🙏 🙏 🙏 🙏 🙏 I'm tamil 🇱🇰 🇸🇦

    • @thamizha8094
      @thamizha8094 3 роки тому +5

      இரத்தக்கறை படிந்த சிம்மக்கொடியை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா..!

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому +1

      தயவு செய்து இலங்கை சிங்களத்து இழி கொடியை நீக்கவும்.

  • @SathishSathish-vg7xo
    @SathishSathish-vg7xo 2 роки тому +2

    Arumai🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹miss you nadigar thilagam

  • @rajamurugan6261
    @rajamurugan6261 Рік тому +3

    Explanation Super. Great sir . Great salute to you.

  • @thihibanshan8021
    @thihibanshan8021 3 роки тому +11

    Script writer ...Verithanam

  • @jagathesan2695
    @jagathesan2695 3 роки тому +9

    Sivaji is the greatest

  • @palaniindirasan3832
    @palaniindirasan3832 2 роки тому +5

    கொங்குதயர் வாக்கி அஞ்சலை தும்பி
    காமம் செப்பாது கண்டதும் மொழிவோம்
    பயணியது கெளிய நட்பின்
    மயனிய தெளியத்தறிவு கூந்தலின்
    அரியமும் உனதோ நீ அறியும் பூவே!

    • @Maaran_
      @Maaran_ Рік тому

      கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
      காமம் செப்பாது கண்டது மொழிமோ
      பயிலியது கெழீஇய நட்பின்
      மயிலியற் செறியெயிற்றரிவை கூந்தலின்
      நறியவும் உளவோ நீயறியும் பூவே
      - குறுந்தொகை 02

  • @MR-zc8hi
    @MR-zc8hi 3 роки тому +39

    This is real acting tq sivaji sir

  • @sabarikummayil
    @sabarikummayil 3 місяці тому

    This one is tamil 🙏🙏🙏 kelkkumbothu kathil then oothurathu pole irukkuthu 🙏 iam from kerala trying to lern this god gift ❤️❤️❤️

  • @user-bw9pd8jb2n
    @user-bw9pd8jb2n 3 роки тому +196

    நக்கீரர் கூறியதுவே உண்மை.சொக்கர் என தெரிந்தும் உண்மை பக்கமே நின்றார் நக்கீரர்

    • @manipandi6282
      @manipandi6282 3 роки тому +19

      தீர்ப்பு- மங்கையின் கூந்தலுக்கு மனம் உண்டு என்பதுதான்.

    • @andygopal6305
      @andygopal6305 3 роки тому +5

      @@manipandi6282 illai

    • @sivago9888
      @sivago9888 3 роки тому +14

      Human hair have fragrance. And its smells. ஈசன் கூறியதே உண்மை.

    • @ramalakshman7483
      @ramalakshman7483 3 роки тому +5

      @@sivago9888No way, human hair didn't have fragrance without flowers and scents

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r 3 роки тому +4

      @@andygopal6305 நக்கீரர் பிழையை ஒப்புக்கொண்டார்

  • @heartkadvignesh
    @heartkadvignesh 3 роки тому +9

    3.48-3.56 wow... Sema speech

  • @shankarp.s5923
    @shankarp.s5923 2 роки тому +3

    chance e illai..what a scene..excellent.....

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 роки тому +34

    அந்தத் தமிழ் தங்கத் தமிழ் சொக்கத் தமிழ் மீண்டும் என்று வருமோ ஏக்கத்தில் தமிழர்கள்

    • @rockrock5101
      @rockrock5101 3 роки тому +1

      NLP p pm 0okkm mn L bk nm MNM kumki

  • @zerin.
    @zerin. 2 роки тому +6

    Thamizh mozhi perumai 💕❤️

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +77

    தென்னாடுடைய சிவனே போற்றி

    • @jayachandran3388
      @jayachandran3388 3 роки тому +1

      Il

    • @divyajesus93
      @divyajesus93 3 роки тому

      Poda pesu pidithavan...

    • @jrgamingtamilnewes8421
      @jrgamingtamilnewes8421 3 роки тому +1

      அய்யா சிவாய நம வாழ்க வளமுடன்

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому

      @@divyajesus93 பினம் யேசு

    • @divyajesus93
      @divyajesus93 2 роки тому

      @@visualeffects3965 yaru pinam marithu uyiroda ullavar jesus christ only pithavey ivargalai maniyum

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 3 роки тому +11

    தமிழ் வாழ்க

  • @sanjaym3348
    @sanjaym3348 Рік тому +6

    2:53 goosebumps

  • @veluprabhakaran5980
    @veluprabhakaran5980 2 роки тому +143

    சிவனுக்கு கோவம் வந்து. என் பாடல் மீது நீ யார் குறை கூற என்று நக்கீரனின் குலத்தை விமர்ச்சிப்பர். சங்கை அரித்து வளையல், மோதிரம், தோடு செய்யும் பொற்கொல்லன்னா என்கவியை ஆராய்பவன் என்று சிவன் கேட்டபர். அதற்கு நக்கீரன் சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு(இங்கு நக்கீரங்கு சொல்லும் பொழுது இவர் சிவன் என்று தெரியும்)ஏது குலம் அதன் பிறகுதான் சங்கருத்து வாழ்கை நடத்துவோமே தவிர அரனே உன்னை (சிவனை) போல் யாசகம் (திருவோடு ஏந்தி)பெற்று வாழ மாட்டோம் என்று கேட்டுஇருப்பர். இந்த மாதிரி கடவுளிடம் தர்க்கம் பண்ண தமிழ் சமயத்தாரால் மட்டுமே முடியும்.

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 2 роки тому +7

      One important matter of known this kulam means based upon profession so not caste

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 Рік тому +9

      மிக அற்புதமான விளக்கம் ஐயா.. இறைவன் பக்தர்களின் நன்மைக்காக சோதிப்பதும் சோதிப்பது இறைவன் என்று தெரிந்திருந்தும் தன் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் இறைவனை எதிர்த்துப் பேசும் தன்மையும் தமிழர்களுக்கே உண்டான சிறப்பு ஐயா ஏன் என்றால் இது ஞான பூமி🙏🙏

    • @Skandawin78
      @Skandawin78 Рік тому +1

      Tamizh Hindu samaiyam

    • @thefan8833
      @thefan8833 Рік тому

      ​@@HariHaran-of9uh You are right. Some scholars also say that Nakkeerar was a butcher by profession. He used to cut goats by their throat - sangu.

    • @vijendrankaraiyankadu-qc8wm
      @vijendrankaraiyankadu-qc8wm Рік тому +6

      இதில் சாதி இல்லை
      சங்கருப்பது மனித குலம்...ஆக பொதுவாக மனித குலம் ஏதே ஒரு தொழில் செய்தே பிழைக்க வேண்டும் ..இறைவனுக்கு ஏது குலம் என்ற வசனம் சரியானதே...இறைவன் ஒருவனே அவனே சிவன்..அவனுக்கு ஏது குலம் ? ..

  • @25kasa1
    @25kasa1 2 роки тому +6

    Summa Athuruthuilla !! 🔥

  • @volcanoarrima
    @volcanoarrima Рік тому +6

    Goosebumps 🤩🤩

  • @naturelove285
    @naturelove285 3 роки тому +9

    காலத்தால் அழியாத சொல்லாடல்.

  • @kirushanthanshanthan2243
    @kirushanthanshanthan2243 2 роки тому +2

    வேற லேவல் படம்

  • @moulimathangi9464
    @moulimathangi9464 Рік тому +4

    My favorite God sivaparuman