திருப்புகழ் 693 களபம் மணி ஆரம் (திருமயிலை)

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • தனதனன தான தத்த தனதனன தான தத்த
    தனதனன தான தத்த - தனதான
    களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
    கலகமத வேள்தொ டுத்த - கணையாலுங்
    கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற
    கனலெனவு லாவு வட்ட - மதியாலும்
    வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
    வனிதைமடல் நாடி நித்த - நலியாதே
    வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி
    மலரணையில் நீய ணைக்க - வரவேணும்
    துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப
    துயிலதர னாத ரித்த - மருகோனே
    சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
    துரகதக லாப பச்சை - மயில்வீரா
    அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப
    அருள்பரவு பாடல் சொற்ற - குமரேசா
    அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து
    அமரர்பதி வாழ வைத்த - பெருமாளே.
    பதம் பிரித்தது

КОМЕНТАРІ •