[SMA] ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2024
  • ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக
    இன்று பிறந்த குழந்தை போன்ற இனியவரே வருக
    தீனின் இதயங்களே வருக
    00:00 | SPEECH
    01:20 | TAKBEER
    02:42 | SONG
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல்.
    சங்கநாதச் செம்மல் காயல் A.R.சேக் முகம்மது அவர்கள் பாடிய இறுதிக் கடமையை நிறைவேற்றிய ஹாஜிகளை புகழ்ந்து பாடும் "ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக" என்ற பாடல் அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் குரலில் .
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    LYRICS
    ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக
    இன்று பிறந்த குழந்தை போன்ற இனியவரே வருக
    தீனின் இதயங்களே வருக
    ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக
    இன்று பிறந்த குழந்தை போன்ற இனியவரே வருக
    தீனின் இதயங்களே வருக
    ஒளிமயமான இறைவன் வீட்டை பார்த்தன உங்கள் கண்கள்
    பார்த்தன உங்கள் கண்கள்
    ஒப்பிணை இல்லான் உதவியை நாடி உயர விரிந்தன கைகள்
    உயர விரிந்தன கைகள்
    நபி பெருமானார் நடந்த பாதை நடந்தன உங்கள் கால்கள்
    நடந்தன உங்கள் கால்கள்
    நடுங்கிய நிலையில் அரபாத் திடலில் குலுங்கின திண்ணிய தோள்கள்
    குலுங்கின திண்ணிய தோள்கள்
    ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக
    இன்று பிறந்த குழந்தை போன்ற இனியவரே வருக
    தீனின் இதயங்களே வருக
    மறுமையை சொல்லும் பள்ளிக்குச் சென்று
    மோட்சப் பாடங்கள் படித்தீர்கள்
    மோட்சப் பாடங்கள் படித்தீர்கள்
    மார்க்கம் சொன்ன கடமையை செய்து
    மாண்பின் இடத்தை பிடித்தீர்கள்
    மாண்பின் இடத்தை பிடித்தீர்கள்
    அருமை மதினா நகரில் நபியின்
    ஆசியை பெற்றுக் கொண்டீர்கள்
    ஆசியை பெற்றுக் கொண்டீர்கள்
    அல்லாஹூ புகழ்ந்த அடியாராகி
    ஆத்ம விமோசனம் கண்டீர்கள்
    ஆத்ம விமோசனம் கண்டீர்கள்
    ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக
    இன்று பிறந்த குழந்தை போன்ற இனியவரே வருக
    தீனின் இதயங்களே வருக.
    ______________________________________________________________________

КОМЕНТАРІ • 3

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 8 днів тому +1

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹாஜ் எஸ்.எம்.அபுல்பரகாத் அவர்கள் 🎉🎉🎉

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 7 днів тому +1

    அருமை குரல் அபுல் பரக்கத் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl 3 дні тому

    mic poor