அம்மன் பாமாலை -{மஞ்சள் முகத்தழகும், மீன் கொடிபறக்கவே உட்பட 21 பாடல்கள்} ( lyrics in comments)

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2020
  • To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn
    சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின்
    அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாகக் கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.ஒவ்வொரு
    வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதுண்டு.அவை,
    வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள், ஆஷாட நவராத்திரி - ஆனி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள், சாரதா நவராத்திரி - புரட்டாசி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள், ஷ்யாமளா நவராத்திரி - தை மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள்.
    இதில் மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி ஆகும்.முப்பெரும் தேவியர்களான மலைமகள்,
    அலைமகள், கலைமகள் மூவரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி.அந்த
    வெற்றியைக் குறிக்கும் விதமாக, பத்தாவது நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.
    நவராத்திரியின் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம்,நடுவில் உள்ள மூன்று
    நாட்களும் கிரியாசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம்,இறுதி மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான
    சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.
    ஆன்மீக முன்னேற்றத்தின் வெவ்வேறு கட்டங்கள் நவராத்திரி கொண்டாட்டங்களில் பிரதிபலிக்கின்றன.முதலாவதாக,
    எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்; இரண்டாவதாக, நல்லொழுக்கங்கள் வேரூன்ற வேண்டும், தேவையான
    மன தூய்மையைப் பெற்ற பிறகு, மூன்றாவதாக ஆன்மீக அறிவைப் பெற வேண்டும்.அப்போது ஆன்மீக வெளிச்சத்தை
    அடையலாம். நவராத்திரி என்பது ஆன்மீக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல; இது சதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை
    மேற்கொள்ளுவதற்கான பாடத்தைக் கற்பிக்கிறது.ஒரு மனிதன் வாழ்வின் தடைகளை தாண்டி வெற்றி பெற தைரியத்தின்
    அடையாளமான துர்கையை வழிபட வேண்டும்.அதே போன்று வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் பெற லட்சுமியை
    பிரார்த்தனைச் செய்ய வேண்டும்.மேலும் அறிவைப் பெறுவதற்காக சரஸ்வதியை வணங்க வேண்டும். இந்த மூன்றும் ஒரு
    முழுமையான உலக வாழ்க்கைக்கு அவசியமானவை. உண்மையில், நாம் இவ்வாறு வணங்கும் போது நமக்குள் இருக்கும்
    சக்தி தூண்டப்படுகிறது.
    நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வது சிறப்பானதாகும்.
    இப்படிப் பல சிறப்புகளையுடைய நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, கவிஞர் குரள் இலக்குவன் அவர்களின் அம்மன் பாமாலை என்னும் இப்பாடல் தொகுப்பினை வழங்குகிறோம்.எதிர் வரும் அனைத்து இன்னல்களையும் களைய, 21 சக்தி வடிவங்களை பாடி,பாமாலையாக அருளியுள்ளார் கவிஞர். அவை,
    ஸ்ரீ ராஜராஜேஸ்வரி(பெங்களூரு),
    காமாட்சியம்மன்(காஞ்சிபுரம்),
    விசாலாட்சி அம்மன்(காசி),
    மீனாட்சி அம்மன்(மதுரை),
    அகிலாண்டேஸ்வரி(திருவானைக்காவல்),
    சிவகாமி அம்மன்(சிதம்பரம்),
    கொப்புடையம்மன்(காரைக்குடி),
    காந்திமதி அம்மன்(நெல்லை),
    அபிராமி அம்மன்(திருக்கடவூர்),
    கருமாரி அம்மன்(திருவேற்காடு),
    மாரியம்மன்(சமயபுரம்),
    துர்கையம்மன்(சிவகங்கை),
    கற்பகாம்பாள்(மயிலை),
    அலமேலு மங்கை(திருச்சானூர்),
    தையல் நாயகி(வைத்தீஸ்வரன் கோயில்),
    பகவதி அம்மன்,
    வடியுடையம்மன்(திருவொற்றியூர்),
    பவானியம்மன்(பெரிய பாளையம்),
    முத்துமாரியம்மன்(காரைக்குடி),
    முத்தாளம்மன்(காரைக்குடி),
    திரிபுரசுந்தரி(திருவான்மியூர்).
    நாமும் அவற்றை பாடி/கேட்டு அன்னையின் அருள் பெறுவோம்
    Poet : Kural Ilakuvan
    Singer : Akila Natesan
    Editor : Bharane Chidambaram
    Description : Vishalakshi Meyyappan
    Mani Venkatachalam

КОМЕНТАРІ • 78

  • @aarthishiv3060
    @aarthishiv3060 Рік тому +3

    அருமையான சக்தி வாய்ந்த குரல் சோதனைகள் வரும்போது அம்மன் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  3 роки тому +8

    அருள்மிகு முத்தாலம்மன் - காரைக்குடி
    வித்துக்கு வித்தாக வேதத்தின் சொத்தாக
    விளங்கிடும் முத்து முகமே
    வெற்றிகள் பலகோடி வேண்டுவோர் உனைநாடி
    வினைதீர்க்கும் சக்தி அகமே
    சத்தியப் பொங்கலில் தர்மத்தின் கட்டிலில்
    தவழ்ந்திடும் தங்கநிலவே
    தரணிக்கு திரிசூல சக்திகள் மூன்றையும்
    தருகின்ற தாயின் கரமே
    சித்திரப் பாவையே செவ்வுடைப் பூவையே
    சிங்காரப் புற்று வடிவே
    சிங்கத்தில் ஏறிவரும் தேவியின் திருக்கோலம்
    சிந்தனை ஊற்று வடிவே
    முத்துநகை பூட்டிய மோகன ரதமேறும்
    முக்கனி அமுத மலையே
    முறையாக வணங்குவோர் குறையாவும் தீர்த்திடும்
    முத்தாளம்மையுமையே
    அருள்மிகு திரிபுரசுந்தரி - திருவான்மியூர்
    விரிசடை வேந்தனின் வேல்விழி நாயகி
    வேதத்தின் நாதமானாள்
    விண்ணுக்கும் மண்ணுக்கும் விரிகின்ற புகழாகி
    வெற்றியின் கீதமானாள்
    அரிதிரு மாயோனின் அழகுமிகு தங்கையே
    அகிலத்தின் தாயுமானாள்
    ஆனந்தத் தாண்டவம் ஆடிடும் ஈசனின்
    அபிநயப் பாவையானாள்
    பெரிதினும் பெரிதான பெம்மானின் பாலாவே
    பெருமைமிகு ஸ்ரீ சக்கரம்
    பிள்ளைக்கு ஞானப்பால் பேணியே புகட்டிடும்
    பேரன்புத் தங்கக்கரம்
    திரிபுரசுந்தரி திரிசூல சௌந்தரி
    திருக்கரம் நமைக்காக்குமே
    திருவடித் தாமரையில் செல்வங்கள் பொழிகின்ற
    திரிசூல அம்மையுமையே
    மீனாட்சி அம்மன் - மதுரை
    மீன்கொடி பறக்கவே மேதினி சிறக்கவே
    மிளிர்கின்ற மாமதுரையே
    மேகநிறச் சொக்கர் மீனாட்சி கல்யாணம்
    மேன்மையாய் நடக்கு தங்கே
    தேன்சொட்டும் சித்திரையில் திருவிழா நடக்குதே
    திக்கெட்டும் மக்கள் வெள்ளம்
    தெவிட்டாத மொழிபேசும் சிங்காரக் கிளியோடு
    சிரிக்கின்ற தாயின் உள்ளம்
    வான்முட்டும் கோபுரமும் வழிந்தோடும் வைகையும்
    வையத்தை வாழவைக்கும்
    வாழ்ந்திடும் தமிழ்ச்சங்கம் வள்ளுவன் குறளோடு
    வாழ்வினை உயரவைக்கும்
    கோனாட்சி செய்கின்ற மீனாட்சி பவனி வரக்
    கொஞ்சுமெழில் தங்காதமே
    கோடிப்பேர் நெற்றியில் குங்குமம் ஆகியருள்
    கோதை மீனாட்சி உமையே
    அகிலாண்டேஸ்வரி - திருஆனைக்காவல்
    மலையரசி மாதரசி மங்காத புகழரசி
    மாதவத்துப் பேரரசியே
    மாணிக்கக் தேரேறி மகிழ்வாகப் பவனிவரும்
    மங்கலத் தாயரசியே
    கலையரசி கயலரசி கனிவான மொழியரசி
    கற்கண்டுச் சொல்லரசியே
    காவியத் தமிழ் நெஞ்சில் கருணையாம் நிலைதந்து
    களிக்கின்ற பூவரசியே
    சிலையாக நின்றாலும் சீரான வாழ்வு தரும்
    செம்மைசேர் எழிலரசியே
    செவ்வானம் பொழிகின்ற சிங்கார அருள் முத்துத்
    தேவியவள் அருள் அருளரசியே
    நிலையான வாழ்வுக்கு நீங்காத ஒளியூட்டும்
    நெறியான தாயரசியே
    நித்தமும் சித்தத்தில் நின்றுமே அருளூட்டும்
    நீடுபுகழ் அகிலாண்டேஸ்வரியே!
    ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி ஓம்!
    ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி ஓம்!

  • @prasannas5154
    @prasannas5154 6 місяців тому +1

    Super

  • @veerappansubramanian5878
    @veerappansubramanian5878 3 роки тому +5

    மிக மிக அருமை

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  3 роки тому +3

    பகவதி அம்மன்
    வைரமுடிக் கிரீடங்கள் வானத்தை முத்தமிட
    வஞ்சியவள் ஆட்சி செய்வாள்
    வட்டமிடும் முத்துவிழி பொட்டிட்ட முகத்தினில்
    வண்டாடும் காட்சி தருவாள்
    மொய்குழலி மொழியரசி முத்தமிழ்ச் கலையரசி
    முனிவரின் வேதமானாள்
    மூலைக்கனலாகி முடியாத முதலாகி
    முழங்கிடும் நாதமானாள்
    நாயகி நான்முகி நளினி நந்தினி
    நலங்கூட்டம் பெயர் கடுவாள்
    நவில்கின்ற உள்ளத்தில் நல்லவர் இல்லத்தில்
    நயமுடன் வர நாடுவாள்
    மாயவள் உலகமே மந்திரத் திலகமே
    மங்கலத் தங்கமயிலே
    மக்களின் குறைகளை தீர்த்திடும் பாவையே
    பசுவதி அம்மை யுமையே
    திருவொற்றியூர் - வடிவுடையம்மன்
    சந்தனம், குங்குமம் சவ்வாது திருநீரில்
    தவழ்ந்திடும் சக்தி வடிவே
    தங்கமுக ஒளியிலே தரணியை வாழ்விக்கும்
    தாயமுத அன்பின் வடிவே
    செங்கனிச் சிரிப்பிலே செவ்வானம் பொழிகின்ற
    செம்பவள முத்து வடிவே
    செங்கதிர் ஒளிகூட்டி சிங்காரப் புகழ்சூடும்
    செப்பரிய அழகு வடிவே
    கந்தனைக் கணபதியை தந்தெமை வாழ்வித்த
    கற்கண்டு கனிவு வடிவே
    காற்றையும் மழையையும் கதிரவன் ஒளியையும்
    கலந்து தரும் இயற்கை வடிவே
    சிந்தனைச் சோலையில் தென்றலாய் உலவிடும்
    தெய்வ வொளி சிற்பவடிவே
    சிவனாரின் துணையாக திருவொற்றியூர் வாழும்
    வடிவுடையம்மை யுமையே
    பெரியபாளையம் - பவானி அம்மன்
    உள்ளத்தின் ஆசையை ஒப்பற்ற ஓசையாய்
    ஒலித்திடும் ஓங்காரியே
    உலகத்தின் ஆசையை உதிக்கின்ற அருளாக
    ஒளிர்கின்ற ரீங்காரியே
    பள்ளத்தில் விழாமல் பாவங்கள் செய்யாமல்
    பண்பாக்கும் சிங்காரியே
    பாசமுடன் கருணையை பாகாகக் குழைத்துமே
    பசிதீர்க்கும் அலங்காரியே
    கொள்ளைகள் கொடுமைகள் இல்லாத வாழ்வுமழை
    கொடுத்திடும் மின்னல் ஒளியே
    கொஞ்சிடும் குழந்தைகள் கோரிடும் வரங்களைக்
    கொடுக்கின்ற அன்னைவிழியே
    வெள்ளையம் பாளையம் வேப்பிலை ஆலயம்
    வெகுவாகப் பெற்ற தாயே
    வினைதீர்க்கும் சோலையாம் பெரிய நற்பாளையம்
    வீற்றிடும் பவானியுமையே
    அருள்மிகு முத்துமாரியம்மன் - காரைக்குடி
    கற்கண்டுத் தமிழ்ச் சோலை காரையம் பதியாளும்
    கருமுகில் முத்துமாரி
    காற்றாகி கனலாகி கருணையின் ஊற்றாகிக்
    காக்கின்ற சித்துமாரி
    அற்புத வேப்பிலைகள் ஆடிடும் சன்னதியில்
    அமர்கின்ற அழகுமாரி
    ஆயிரமாய்க் கருவாகி அருள்சிந்தும் உருவாகி
    ஆள்கின்ற உலகுமாரி
    நற்பாளை மதுக்குடம் நலம்பாடும் பாற்குடம்
    நனைந்தாடும் சின்னமாரி
    நாள்தோறும் உன் வீடு நாடுவார் அருள்கூட
    நலம்காக்கும் அன்னைமாரி
    பொற்கரத்து முத்திரை புவியினைக் காத்திடும்
    பூங்குழலி பொன்னிமாரி
    பொன்னொளி அலங்காரம் புகழ்கொண்ட ஓங்காரம்
    பூணும் தாய் அம்மையுமையே

    • @chithujana9752
      @chithujana9752 3 роки тому

      Only few lyrics...need full lyrics pls

  • @mr.mooncity8217
    @mr.mooncity8217 4 місяці тому

    Om sakthi 🙏

  • @6b23a.rohithannamalai5
    @6b23a.rohithannamalai5 3 роки тому +1

    Aarumai Akila.... Bharani

  • @parthideena1349
    @parthideena1349 2 роки тому +1

    அம்மா மிக மிக arumai. பாடல் இனிமையாக உளளது. குரல் மிக arumai. ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம்.

  • @user-vr9wp2ke1o
    @user-vr9wp2ke1o Рік тому

    Arumaiyana padalgal nañdri

  • @solaialagappan7152
    @solaialagappan7152 3 роки тому +2

    மிக மிக அருமை வாழ்கவளமுடன்

  • @kamachisolaiyappan7237
    @kamachisolaiyappan7237 3 роки тому +2

    அருமையானபாடல் அகிலா மா ஓம் சக்தி ஓம் சக்தி விஜயதசமி வாழ்த்துக்கள்

    • @annamalaivasantha6010
      @annamalaivasantha6010 3 роки тому

      Excellent songs and voice,Sister,pl,give more and more songs,,Inimai,,,,,Arumai
      Ippani,,,eraippani,,,thodarattum,,,
      Annamalai,,,chennai,,Nandri and,,,,

  • @mahakalyan6644
    @mahakalyan6644 Рік тому

    Om sakthi om sakthi om sakthi om sakthi om amma very nice song🙏🙏🙏🙏🙏🙏

  • @hariamma8919
    @hariamma8919 2 роки тому +1

    Om sakthi thaye mika makilchi Akila sakthi

  • @salasethu876
    @salasethu876 3 роки тому +1

    குரல் மிக இனிமை தமிழ் உச்சரிப்பு வெகு அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 роки тому +1

    அற்புத குரலில் பாமாலை

  • @subramanianchidambaram7243
    @subramanianchidambaram7243 3 роки тому +4

    அழகான பாடல் அழகான குரல்வளம். சக்தி துணையிருப்பாள்.

  • @geethapandurangan7595
    @geethapandurangan7595 Рік тому

    சூப்பர் அரூமைஇனிமை

  • @dhatchayanisivakumar7033
    @dhatchayanisivakumar7033 2 роки тому +2

    Super voice

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺அம்மன் துனை👏

  • @nagammaipalaniappan5529
    @nagammaipalaniappan5529 3 роки тому +2

    Excellent super expecting sivapuram in your voice

  • @carumugam7695
    @carumugam7695 2 роки тому +2

    👌👌👌wonderful devotional amman songs . please publish full lyrics

  • @packiamseeman6059
    @packiamseeman6059 3 роки тому +1

    அருமை அருமை

  • @keshavdhanraj1042
    @keshavdhanraj1042 3 роки тому +1

    Arumaiyana varigal

  • @premavathyrathinam3594
    @premavathyrathinam3594 3 роки тому +1

    அருமையான குரல்
    வாழ்கவளமுடன்

  • @savithirirajan4793
    @savithirirajan4793 3 роки тому +1

    அருமை அற்புதம்

  • @mahak3408
    @mahak3408 2 роки тому

    OM sakthi om sakthi om sakthi om sakthi

  • @alamelukolamandkitchen6620
    @alamelukolamandkitchen6620 3 роки тому +1

    voice super, song super

  • @vangakadalorathile3691
    @vangakadalorathile3691 2 роки тому

    நன்றி அம்மா தினமும் உங்கள் குரல் எங்கள் வீட்டில் ஒலித்து கொண்டே இருக்கிறது. சிவ புராணம் கந்த சஷ்டி கவசம் போன்ற வற்றையும் உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன். அளித்து அருளுங்கள் அம்மா.

  • @valliappanalagappan7318
    @valliappanalagappan7318 3 роки тому +1

    Expecting daily daily more songs Thankyou verymuch

  • @senthivenkatesh2846
    @senthivenkatesh2846 2 роки тому +2

    Amma ennidam varuvathu pole ulathu🙏🙏🙏

  • @kasiguru806
    @kasiguru806 3 роки тому +3

    Beautiful wordings on ambal chanting. Nice to listen and gives calmness to the mine
    Great maa.🙏🏼🙏🏼🙏🏼.kashi from indo

  • @spalagappan9002
    @spalagappan9002 3 роки тому +1

    மிக மிக நன்றாக பாடி பரவச படுத்தி விட்டீர்கள் . நன்றி

  • @laxmilaxman4362
    @laxmilaxman4362 3 роки тому

    Excellent 👌👌👌

  • @umadeviselvanathan5768
    @umadeviselvanathan5768 8 місяців тому

    You omitted Mankadu Kamakshi Amman Kovil Aalayam

  • @RamanathanRajan
    @RamanathanRajan 6 місяців тому +1

    Perumal street

  • @shenbagaprabha7557
    @shenbagaprabha7557 4 місяці тому

  • @ramdevk4915
    @ramdevk4915 3 роки тому +2

    Beautiful singing... A nice compilation of Ambal songs!!

  • @vidyalakshmin6973
    @vidyalakshmin6973 3 роки тому +2

    God gifted voice dear akila😊

  • @ravirm5441
    @ravirm5441 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @meenalannamalai9324
    @meenalannamalai9324 3 роки тому +1

    🙏🙏🙏

  • @ramanmunusamy8115
    @ramanmunusamy8115 2 роки тому

    Omshakthi0mshakthiom.....

  • @prasannas5154
    @prasannas5154 6 місяців тому +1

    Give me songs varekal

  • @geethavenkatesan7282
    @geethavenkatesan7282 2 роки тому +3

    Please share lyrics , very divine and beautifully composed

    • @niraiisaikudam5674
      @niraiisaikudam5674  2 роки тому

      Due to space constraint Lyrics is in comment section. Please look for comment from Nirai Isai Kudam

  • @sarojasundarrajan5336
    @sarojasundarrajan5336 2 роки тому

    Please send full song. Very beautiful soo nice

  • @shanmugavallik499
    @shanmugavallik499 Рік тому

    Super Amma book kitaikkuma

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  3 роки тому +8

    துர்க்கை அம்மன் - சிவகங்கை
    சிங்காரச் சிற்றாடை சிகப்பு நிறப் பட்டாடை
    தேவியவள் திருக்காட்சியே
    சிவகெங்கைச் சிற்றூரில் சீரான அலங்காரம்
    தெவிட்டாத கண்காட்சியே
    மங்காத புகழுக்கும் மலர்கின்ற வாழ்வுக்கும்
    மாயவளின் அரசாட்சியே
    மருவிடும் தீவினை மாய்ந்துமே மறைந்திட
    மாதவளின் அருளாட்சியே
    கங்கையில் குளித்திட்டு காவிரியில் பொட்டிட்ட
    காவியப் புகழாட்சியே
    கன்னியர் மணமாலை கனிந்துமே சூட்டிடும்
    கருணை மழை பொற்காட்சியே
    மங்கள முழக்கங்கள் தங்கியே ஒலித்திடும்
    மங்கையின் எழிலாட்சியே
    மலர்கின்ற புகழாரம் என்றுமே தந்திடும்
    மாதேவி துர்க்கையுமையே!
    கற்பகாம்பாள் - மயிலை
    தித்திக்கும் திருக்கோயில் சிங்காரப் பொற்கோவில்
    சிறக்கின்ற மயிலையூரே
    திருநீற்றுப் பாமாலை தினம்பாடி, அதிகாலை
    செப்புவர் சிவனின் பேரே
    முத்துஒலி வைரவிழி முழுநிலவு முகத்தின்ஒளி
    முருகவேள் தரும் புன்னகை
    முதலிறைக் கணபதியின் மோகனத் துதிக்கையோ
    முழுவெற்றி தரும் பொன்னகை
    சக்தியின் திருக்காட்சி சரித்திரப் புகழ்மாட்சி
    சாற்றிடும் அற்புதங்கள்
    தங்க உடல் அங்கமதில் தவழ்கின்ற சிங்காரம்
    தமிழ் தந்த பொற்பதங்கள்
    எத்திசைக்கும் மறையாக ஏழையரின் இறையாக
    இருப்பவள் கற்பகாம்பாள்
    எல்லோரும் எல்லாமும் என்றுமே பெற்றிட
    எழில் கூட்டும் அம்மையுமையே!
    அலமேலு மங்கை - திருச்சானூர்
    மாலவன் மலைவீட்டில் மணிசங்குப் பூபாளம்
    மலர்கின்ற சுப்ரபாதம்
    மங்கையவள் அலமேலு தங்கவிரல் மீட்டிடும்
    மதுரமொழி வீணைநாதம்
    கோலவிழி இரண்டிலும் கொஞ்சிடும் அருள்மணம்
    கோமகள் தரும் சீதனம்
    கோமகன் மாதவனின் குளிர்கொண்ட திருமார்பு
    கோதையின் அழகாசனம்
    சீலங்கொள் சங்கமமும் சிறக்கின்ற சக்கரமும்
    திருமகளை நிதம் பாடுமே
    செவ்வுடல் மாதரசி சிந்தைகொள்ள நாவரசி
    திருவடியை மனம் நாடுமே
    காலத்தை வென்றிடக் கருணைவழி பலகாட்டிக்
    காக்கின்ற அன்னை நீயே
    கார்முகில் வண்ணனின் கண்கவர் நாயகி
    களிப்பூட்டும் மங்கையவளே
    தையல் நாயகி - வைத்தீஸ்வரன் கோவில்
    கொஞ்சிடும் நெல்வளம் கொழித்திடும் பல்வளம்
    குவித்திடும் கொடை நாயகி
    கொடுமைமிகு நோய்தீர கோலமிகு திருச்சாந்து
    கொடுத்தருளும் புகழ்நாயகி
    வஞ்சியவள் பூவரசி வைத்தீசன் துணையரசி
    வற்றாத கங்கை நதியே
    வாடிடும் பக்தர்க்கும் பாடிடும் சித்தர்க்கும்
    வழிகாட்டும் சங்க நதியே
    நெஞ்சமலர் கோயிலில் நீதந்த ஓம் சக்தி
    நீடு புகழ் ஓங்காரமே
    நீங்காத அன்புக்கும் பாங்கான தமிழுக்கும்
    நெறியூட்டும் அலங்காரமே
    தஞ்சமென உன் வாசல் தங்கவரும் பிள்ளைக்கு
    தருகின்ற அருள் ஞானமே
    தங்கமுகங் காட்டித் தரணியைக் காத்திடு
    தாய்சக்தி தையல் உமையே

  • @adhishanmugam2387
    @adhishanmugam2387 3 роки тому +1

    Nice song.
    Muruanin kolarupathigam pada mudiuma

  • @laxmilaxman4362
    @laxmilaxman4362 3 роки тому

    Muthu pillaku

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🤞👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @jothieswari3222
    @jothieswari3222 3 роки тому +7

    இந்த பாடலை நாங்கள் பார்த்த பாடும்படி வரி வடிவில் கொடுக்கவும் பாடல் மனதுக்கு நிறைவாக உள்ளது

    • @niraiisaikudam5674
      @niraiisaikudam5674  3 роки тому +1

      Lyrics is given in comment section.....You can copy and paste as doc. Thank you.

    • @vijayamani7926
      @vijayamani7926 3 роки тому

      வணக்கம் மிகவும் அ௫மையாக உள்ளது

  • @meenakshiramachandran2977
    @meenakshiramachandran2977 Рік тому +1

    My Humble Namaskarams Intha Padalin lirics kidaikkuma Please

  • @thenammaimuthiah8569
    @thenammaimuthiah8569 Рік тому

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது ஆனால் வரிகளுடன் வந்தாள் நாங்களும் சேர்ந்து பாடுவோம்

  • @chitrakandhasamy5778
    @chitrakandhasamy5778 2 роки тому

    Please lyrics anupunga

  • @subapriyasubapriya7399
    @subapriyasubapriya7399 3 місяці тому

    Lyrics in tamil

  • @vimalraj4394
    @vimalraj4394 2 роки тому

    Please please please please please please please please please please please lyrics

    • @niraiisaikudam5674
      @niraiisaikudam5674  2 роки тому

      Due to space constraints in description, Lyrics is in comments section. Please check comments section.

  • @parvathihariharan1640
    @parvathihariharan1640 Рік тому +1

    Lrics

  • @parvathihariharan1640
    @parvathihariharan1640 3 роки тому

    Lric of this padaal

  • @indumathiindu562
    @indumathiindu562 Рік тому

    Lyric please

  • @chithramarimuthu104
    @chithramarimuthu104 2 роки тому +1

    Pls write the lyrics

  • @visalakship
    @visalakship Рік тому

    Lyrics pl

  • @thenuselvam7304
    @thenuselvam7304 Рік тому

    எ@

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  3 роки тому +4

    காந்திமதி அம்மன் - நெல்லை
    முல்லையுடன் மல்லிகை முத்தார அணிபூட்டி
    முடிசூடும் அன்னைநீயே
    மோகனப் புன்னகை பூத்திடும் இதழ்களில்
    முத்தமிழ் சிந்துவாயே
    கல்லையும் கனியாக்கும் கற்கண்டு மொழிதந்த
    கண்கண்ட தெய்வம் நீயே
    கடலையும் மலையையும் காலத்திற்கிணை சொன்ன
    காவியச் சோலை நீயே
    எல்லையே இல்லாத நெல்லையம் பதியினில்
    ஏற்றிய தீபம் நீயே
    எங்குமே இருள் நீக்கி இனியநல் அருளூட்டும்
    ஈசனின் பாதி நீயே
    தொல்லைகள் மறைந்திட தொண்டுள்ளம் மலர்ந்திட
    தூயவரம் அருளுவாயே
    தும்பிக்கை கணபதி தோகைமயில் முருகனுடன்
    தோன்றிடும் காந்திமதியே
    அபிராமி அம்மன் - திருக்கடையூர்
    ஆழிகழ் உலகத்தை அன்பாலே காத்திடும்
    அன்னையே அருள் நாயகி
    அமுதான கடவூரில் பட்டருக்கருள் செய்த
    அம்மையே புகழ் நாயகி
    வேழமாய் ஒருபிள்ளை வேலோடு மருபிள்ளை
    மேன்மையாய் பெற்ற தாயே
    வினைதீர்க்கும் குங்குமம் மஞ்சளில் விளங்கிடும்
    இணையற்ற கோதை நீயே
    ஏழிசை நாதத்தை எழுப்பியே மகிழ்ந்திடும்
    இணையற்ற இசைவல்லியே
    எங்குமே மங்கலம் பொங்கியே தங்கிட
    இயங்கிடும் சக்தி நீயே
    வாழியென அன்போடு வாழ்த்திடும் சொல்லாண்டு
    வாழ்ந்திடும் தமிழ் நாயகி
    வளம் கூட்டும் கரும்புவில் வழங்கும் காட்சியே
    வள்ளல் நீ அபிராமியே
    கருமாரி அம்மன் - திருவேற்காடு
    பூக்காட்டில் மணம் பரப்பி புகழ்க்காட்டில் வீற்றிருக்கும்
    பொன்னாரம் அன்னைமாரி
    புகழான திரிசுலம் புவனத்தை வாழ்விக்கும்
    பொற்புடைய தேவிமாரி
    வேற்காட்டில் வாழ்ந்திருந்து வேதனைகள் தீர்க்கின்ற
    வெண்குடை முத்துமாரி
    வித்தை பல செய்துமே சித்து விளையாடிடும்
    வெற்றி நகை கண்ட மாரி
    சாக்காட்டுச் சிந்தனைகளை சாகடித்து இன்பத்தைத்
    தருநின்ற பொன்னி மாரி
    சக்தி தனை உண்டாக்கும் சக்தியவள் என்று மனம்
    சாற்றுகிற அன்னை மாரி
    ஆக்கங்கள் பலகூட்டி ஆற்றல்கள் பலவூட்டி
    அன்பு தரும் சக்திமாரி
    அழகான வேற்காட்டில் சுடராக வாழ்கின்ற
    அன்னை கருமாரியம்மை யுமையே !
    மாரியம்மன் - சமயபுரம்
    இமயத்தில் பிறந்தாலும் இதயத்தில் வாழ்கின்ற
    இணையற்ற தாயமுதமே
    இல்லாமை இல்லாமல் எல்லோரும் வாழ்ந்திட
    எழுந்தருளும் அருளமுதமே
    சமயத்தில் வரும் இன்னல் தகர்த்திடும் அன்னையே
    சஞ்சலம் நீங்கிடச் செஞ்சுடர் காட்டிடும்
    சக்தியே தேவியம்மா
    உமையவளின் மறுஉருவாய் உலகத்தைக் காக்கின்ற
    ஓங்காரவல்லி நீயே
    உன் அருளில் பிள்ளைகள் உயர்வோடு வாழ்ந்திட
    உற்றவழி சொல்லுவாயே
    அமைந்திட்ட வாழ்க்கையும் சக்கரமாய்ச் சுற்றிட
    ஆறுதல் செப்புவாயே
    ஆறுதல் கூறியே மாறுதல் தருகின்ற
    அம்மையே மாரியுமையே

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  3 роки тому +7

    அம்மன் பாமாலை
    ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி ஓம்!
    ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி ஓம்!
    ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி - பெங்களூர்
    சந்தனம் குங்குமம் சவ்வாது திருநீறில்
    தவழ்ந்திடும் சக்தி வடிவே
    தங்கமுக ஒளியிலே தரணியை வாழ்விக்கும்
    தாயமுத அன்பு வடிவே
    செங்கனிச் சிரிப்பிலே செவ்வானம் பொழிகின்ற
    செம்பவள முத்து வடிவே
    செங்கதிர் ஒளிகூட்டி சிங்காரப் புகழ்சூடும்
    செப்பரிய அழகு வடிவே
    கந்தனைக் கணபதியைத் தந்தெமை வாழ்வித்த
    கற்கண்டு கனிவு வடிவே
    காற்றையும் மழையையும் கதிரவன் ஒளியையும்
    கலந்து தரும் இயற்கை வடிவே
    சிந்தனைச் சோலையில் தென்றலாய் உலவிடும்
    தெய்வ ஒளி சிற்ப வடிவே
    சிவனாரின் துணையான ராஜராஜேஸ்வரி
    ஸ்ரீசக்தி அம்மை யுமையே
    காமாட்சியம்மன் - காஞ்சிபுரம்
    முத்துமணி மண்டபம் ரெத்தினச் சிம்மாசனம்
    முழங்கிடும் மணி ஓசையே
    முப்பெரும் சக்தியாம் திரிசூலம் ஏந்திடும்
    முத்துநகை பெற்ற தாயே
    பத்துவிரல் சூட்டிய பவளமணி மோதிரம்
    பாடகத் தண்டை கொலுசும்
    பச்சையுடன் நீலமும் புஷ்பராகத்திலும்
    பதித்திட்ட தாலியழகும்
    முத்து மூக்குத்தியும் முழு வைரக்கம்மலும்
    மிளிர்கின்ற ஒட்டியாணம்
    முத்துமணி மாலையுடன் முக்திதரும் கைகளில்
    முக்கனிக் கரும்பு வில்லும்
    சித்தத்தில் என்றுமே சக்தியாய் விளங்கிடும்
    தேவியருள் அருள்மாட்சியே
    செந்தமிழ் பாடிடும் சிந்தையில் வாழ்ந்திடும்
    தேவியுமை காமாட்சியே
    விசாலாட்சி அம்மன் - காசி
    ஆதிசிவன் உடல்மீது பாதியுடல் பெற்றிட்ட
    அழகான அன்ளை உமையே
    ஆற்றல் சேர் சக்தியாய் அகிலத்தை காப்பதற்கு
    அருளாகி வந்த திருவே
    வேதனைகள் தீர்க்கின்ற வேல்விழியே அருள்காட்டி
    வெற்றியினைக் காட்டுவாயே
    வெங்கொடுமை தணிக்கின்ற கங்கைநதி தீரத்தில்
    விளையாடும் அன்னை நீயே
    மாதவங்கள் செய்கின்ற மாமுனிவர் பலபேர்கள்
    வாழ்கின்ற புனித காசி
    மாற்றங்கள் செய்கின்ற தீர்த்தங்கள் விளையாடி
    மணக்கின்ற இனிய காசி
    சோதனைகள் வரும்போது வேதனையை நீக்குகின்ற
    சோலையாம் விசாலாட்சியே
    சொந்தமென வந்துநிதம் உன்னடியைத் தொழுவோர்க்கு
    துணை நீயே விசாலாட்சியே
    சிவகாமி அம்மன் - சிதம்பரம்
    ஆட்டங்கள் ஆடியே அகிலத்தை ஆண்டிடும்
    ஆனந்தவல்லி நீயே
    அழகான நாட்டிய முத்திரை நூற்றெட்டு
    அமைத்திட்ட சிவகாமியே
    பாட்டரங்கம் கொண்டு பாவலர் நாள்தோறும்
    பாமாலை கோடி தருவார்
    பாமாலை பாடியே பூமாலை பல சூட
    பக்தர்கள் நாடி வருவார்
    கோட்டங்கள் மண்டபம் கோபுரம் நந்தியும்
    கூத்தனின் புகழ்பாடுதே
    கூத்தனுடன் சக்தியும் ஆடிடும் ஆட்டத்தில்
    கொடுமைகள் அழிந்தோடுதே
    வாட்டங்கள் போக்கிட வந்திடும் அன்னையே
    வல்லியிவள் சிவகாமியே
    வரம்வேண்டிக் கரம்கூப்பும் வறியவர் வாழ்வினை
    வளமாக்கும் தேவி உமையே
    கொப்புடையம்மன் - காரைக்குடி
    மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்
    மங்கலம் தருவதன்றோ
    மாணிக்க மூக்குத்தி நத்துப் பில்லாக்குமே
    மகிழ்வூட்டும் அலங்காரமோ
    அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில்
    அகிலமே அடக்க மன்றோ
    அழகான காதினில் ஆடிடும் குண்டலம்
    அலைகடல் முத்து வகையோ
    தஞ்சமென வந்வரைத் தாங்கிடும் கைகளில
    தவழ்ந்திடும் தங்க வளையல்
    தங்கமென நெஞ்சிலே கொஞ்சிடும் மாலைகள்
    தாயவளின் பொற்குவியல்கள்
    கொஞ்சிடும் உதட்டிலே கூடிடும் புன்னகை
    கோடிக்குக் கோடி பெருமே
    குறையாத வாழ்வினை நிறைவாகத் தந்திடும்
    கொப்புடையம்மை உமையே