பேசுவது கிளியா - Pesuvathu Kiliya Song |4K VIDEO |

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2022
  • படம் : பணத்தோட்டம்
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
    வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
    பாடகர்கள்
    டி.எம்.சௌந்தரராஜன் -பி சுசீலா
    @ _Please Search Tamil Golden Hits @
    M- பேசுவது கிளியா - இல்லை
    பெண்ணரசி மொழியா
    பேசுவது கிளியா - இல்லை
    பெண்ணரசி மொழியா
    கோவில் கொண்ட சிலையா
    கொத்து மலர்க் கொடியா
    ஹோய்
    பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா
    @ __ isaacdurai___ @
    F- பாடுவது கவியா இல்லை
    பாரி வள்ளல் மகனா
    பாடுவது கவியா இல்லை
    பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா ஹோய்..
    பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
    ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்
    பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
    M--கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
    இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
    F----வில்லேந்தும் காவலன்தானா
    வேல்விழியாள் காதலன்தானா
    வில்லேந்தும் காவலன்தானா
    வேல்விழியாள் காதலன்தானா
    சொல்லாமல் சொல்லும் மொழியில்
    கோட்டை கட்டும் நாவலன்தானா
    M ---பேசுவது கிளியா - இல்லை
    பெண்ணரசி மொழியா
    கோவில் கொண்ட சிலையா
    கொத்து மலர்க் கொடியா
    ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்
    F---- பாடுவது கவியா இல்லை
    பாரி வள்ளல் மகனா
    @ Please Search Tamil Golden Hits @
    F-------மன்னாதி மன்னர்கள்
    கூடும் மாளிகையா
    உள்ளம் வண்டாட்டம் மாதர்கள்
    கூடும் மண்டபமா.. ஓய்
    M -----செண்டாடும் சேயிழைதானா
    தெய்வீகக் காதலிதானா
    செண்டாடும் சேயிழைதானா
    தெய்வீகக் காதலிதானா
    செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
    செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா
    F---- பாடுவது கவியா இல்லை
    பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
    ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்
    M- பேசுவது கிளியா - இல்லை
    பெண்ணரசி மொழியா
    F----ஹஹஹஹ ஹஹஹா
    M-ஹோய்..ஹோய்
    F----லலலல ல ல லா
    F----ஹஹஹஹ ஹஹஹா
    M-ஹோய்..ஹோய்
    F----லலலல ல ல லா
    Pesuvathu Kiliya Tamil Song Lyrics in English
    Pesuvadhu kiliyaa - illai
    Pennarasi mozhiyaa
    Kovil konda silaiyaa
    Kothu malarkodiyaa
    Hoi.. hoi…hoi…hoii….
    Paaduvadhu kaviyaa - illai
    Paari vallal maganaa
    Seranukku uravaa
    Senthamizhar nilavaa
    Hoi..hoi….hoi…hoi…
    Paaduvadhu kaviyaa…
    Kalyaana pandhalil aadum thoranamaa - illai
    Kacheri rasigargal ketkum moganamaa
    Villendhum kaavalandhaanaa velvizhiyaal kaadhalandhaanaa
    Sollaamal sollum mozhiyil
    Kottai kattum paavalandhaanaa
    Pesuvadhu kiliyaa……
    Mannaadhi mannargal koodum maaligaiyaa - ullam
    Vandaatam maadhargal koodum mandabamaa… hoi..
    Sendaaadum seiyizhaidhaanaa dheiviga kaadhalidhaanaa
    Sendhooram konjum mugathil
    Sevvaai minnum thenmozhidhaanaa
    Pesuvadhu kiliyaa…..

КОМЕНТАРІ • 444

  • @vp774
    @vp774 2 роки тому +330

    இதை பார்த்து ரசிக்கும்பொழுது வயதில் முப்பது குறைகிறது. ஒருமனிதனை என்றும் இளமையா வைத்திருப்பது இசையே அதுவும் பழைய பாடல்களை கேட்க்கும்பொழுது அளவற்ற மகிழ்ச்சி.

  • @stardelta4332
    @stardelta4332 2 роки тому +228

    55ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த காதல் பாடல் இன்றும் ஜொலிக்கின்றது
    எம்ஜிஆர் மறைந்து 35ஆண்டுகள் கடந்தும் இன்றும் அவர் புகழ் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு சிறப்பு 👍

    • @TGP-he8tu
      @TGP-he8tu 2 роки тому +3

      Super melodies song

    • @manogaranmano1450
      @manogaranmano1450 Рік тому +4

      Only MGR Avaid Attached MGR is a great

    • @sakthivanarajan7854
      @sakthivanarajan7854 Рік тому +9

      🙏 மறைந்தும் இளமைக்கு சொந்தக்காரர் 💝💝

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di Рік тому +2

      1965ஆம் ஆண்டு வந்த திரைப்படம்

    • @arumugamgoldworks9598
      @arumugamgoldworks9598 11 місяців тому

      Sssssss

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Рік тому +49

    எத்தனை காலமாக பார்த்து வந்தாலும் சலிக்காமல் இருப்பது அவருடைய முகம். எத்தனையோ நடிகர்கள் வரலாம் போகலாம். ஆனால் இவர் போல் எவருண்டு.?

    • @moorthyd3268
      @moorthyd3268 7 місяців тому +2

      எவருமில்லை

  • @subramanyamjosyula2510
    @subramanyamjosyula2510 Рік тому +27

    என்றும் அழியாத இனிய காதல்கீதம். 1962ல் நான் 7ம் வகுப்பு படிக்கும் காலம். எப்பொழுதெல்லாம் வானொலியில் இக்கீதம் ஒலிக்கும் அப்பொழுதெல்லாம் உள்ளமும் மனமும் ஆனந்தத்தில் துள்ளும். எம்.ஜி.ஆர்.அவர்கள் என் இனிய தெய்வம். அவர்படம் என்றால் உயிர். சரோஜா அம்மா மிகவும் அழகான நடிகை. மிகவும் பிடித்தமானவர். டி.எம்.எஸ்.ஐய்யா, சுசீலா அம்மா அவர்கள் தேன்போன்ற பாடல்களுக்கு எம.எஸ்.வி.அவர்களின் இசையும் சேர்ந்துவிட்டால் ஆனந்த மயம்தான். இன்று இது போன்ற பாடல்கள் குறைவு.

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Рік тому +56

    பாடலை பார்க்கும்போது இளமை திரும்புவது என்பது "நூற்றுக்குநூறு" உண்மை

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 роки тому +116

    ஆங்கிலம் கலக்காத முழுமையான தமிழ் பாடல் என்றும் கேட்பதற்கு இனிமை.... தமிழுக்கு இவர்கள் செய்த சாதனைதான் மிகப்பெரியது....

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +128

    புரட்சித் தலைவரின் பாடலை கலரில் பதிவிட்டு எங்களையெல்லாம் ரசிக்கவைத்தீர்கள் ,.கோடிகள் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் தெருக்கோடியில் நிற்க்கும் ரசிகர்களை பார்ப்பதில்லை
    லட்சங்கள், குறைவான சம்பளம் வாங்கும் புரட்சித்தலைவரோ எங்களையெல்லாம் லட்சியத்தோடு அனுகுவார்,
    புரட்சித்தலைவர் எங்களின் ரத்தத்தில் கலந்தவர், இப்பாடலோ ரத்தத்தின் ரத்தத்தில் கலந்தது ,மறப்போமா.

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому +8

      உண்மையான ஒரு சொல்... மக்கள் திலகத்தின் பக்தருக்கு நன்றிகள் பல...!

    • @nandhagopalnatarajanmmmll.5876
      @nandhagopalnatarajanmmmll.5876 2 роки тому +4

      There​ is no words to express MGR songs.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +3

      @@nandhagopalnatarajanmmmll.5876 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +4

      @@nausathali8806 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +1

      @@nandhagopalnatarajanmmmll.5876 நன்றி

  • @sunraj6768
    @sunraj6768 2 роки тому +22

    வண்ணப்படத்தில்
    சரோஜா தேவி
    உற்சாகமான அழகு👏
    தலைவர் அழகுக்கு அழகு 👏

  • @schinnaduraisdurai9613
    @schinnaduraisdurai9613 Рік тому +16

    அருமையான பாடல்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சரோஜாதேவி யின் நடிப்பில் பணத்தோட்டம் படத்தில் வரும் இனிமையான பாடல்
    இன்று கலரில் சூப்பர் ங்க

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +51

    எங்கள் தலைவர் தலைவி பாடல் கலரில் தந்து அசத்தி விடீர்கள்.இனிமையிலும் இனிமை.

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 2 роки тому +128

    அமரர் MGR அவர்கள் வாழ்க்கையில் நாம் பாசத்தோடும், காதலோடும், நாட்டுப்பற்றோடும், கடமை உணர்வோடும் தர்மத்தோடும்,மற்றும் பண்பாட்டோடும் வாழ எத்தனையோ திரைக் காவியங்களை படைத்துவிட்டு நம்மிடம் இருந்து பிரிந்து விட்டார்.....

    • @indumathichandran2890
      @indumathichandran2890 2 роки тому +3

      Super song

    • @rajendranleonard1660
      @rajendranleonard1660 2 роки тому +4

      You said mouthful, thanks. He is a living Legend.

    • @tvrsmani
      @tvrsmani 2 роки тому +5

      வாழ்க்கை சலிப்புற்றவர்கள் வள்ளலின் முகம் கண்டால் புத்துணர்வு பெறும் 🌻

    • @samapthkumar7016
      @samapthkumar7016 2 роки тому +2

      Beautiful song m g r sorojadevi

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 Рік тому +1

      உண்மை

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Рік тому +30

    காலத்தால் அழியாத மாபெரும் தலைவர் மக்கள் திலகம்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்

  • @malligababu4777
    @malligababu4777 Рік тому +96

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் வரிகள்.
    மக்கள் திலகம் அவர்களும்
    அபிநயசரசுவதியும் என்னே அழகு

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Рік тому +17

    பாடுவது வாத்தியாராஇல்லை கன்னடத்து பைங்கிளி.அருமையானபாட்டு.
    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 Рік тому +75

    கவியரசு கவியரசுதான் கண்ணதாசன் பாடல்கள் இன்னும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன .🙏🙏🙏

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +39

    பாரி வள்ளலான புரட்சித்தலைவரின் புகழ் வாழ்க பார்க்க பார்க்க சலிக்காத பாடல்

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 Рік тому +20

    இரண்டுபேருமே சிரித்தமுகத்தோடு ஆடுவதுஅருமை

  • @ganesan7946
    @ganesan7946 Рік тому +58

    கருப்பு வெள்ளையில் பார்த்து ரசித்த..பாடல் இன்று வண்ணபடமாக பார்ப்பது அற்புதம் தான்♥..

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Рік тому +15

    மீடியா மியூசிக் ஒளி ஒலி
    பரப்பிற்கு இப்பாடலை வண்ணத்தில் வழங்கியமை க்கு மிக்க மிக்க நன்றி
    அந்த காலத்தில் இது போன்று கலரில் திரைப்படம் வெளிவந்த இருந்தால் இரட்டிப்பு வெற்றிபெற்றிருக்கும் பெற்றிருக்கும்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +16

    " பணத்தோட்டம் "
    எம்ஜிஆர் சரோஜா தேவி
    நாகேஷ் அசோகன் மற்றும் பலர்.நடித்து வெளியே வந்த வெற்றிப் காவியப்படம்.
    வாழ்த்துக்கள்.! 🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 20 днів тому

    சாதாரணமாகவே ஜொலிக்கும் தலைவர்❤ கலரில் இன்னும் ஜொலிக்கிறார்

  • @johnybabu4119
    @johnybabu4119 8 місяців тому +8

    சினிமா ஜோடிகள் என்றால் இவர்கள் போல் இருக்க வேண்டும்

  • @lakshumananrathinavel8547
    @lakshumananrathinavel8547 Рік тому +25

    அபிநய சரஸ்வதியால் ,அளவற்ற மகிழ்ச்சி என் மனதில்.

  • @g.g.1892
    @g.g.1892 Рік тому +12

    இந்த மாதிரி பாடல்கள் இப்போது இருக்கும் கலரில் பார்த்தால் எவ்வளவு அழகான காட்சிகளாக இருக்கும் 😎😎

  • @appaswamyr393
    @appaswamyr393 10 місяців тому +8

    இந்த பாடல் என்று கேட்டாலும் இனிமை குறையாமல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல இளமையாக இருக்கின்றது TMS, P. சுசிலாவின் மிகவும் இனிமையான குரல்களில்!

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 11 місяців тому +8

    தலைவா உங்களை மறக்க முடியாது.எங்களைமாற்றமுடியாது

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +11

    🌹இவ்வளவு இனிமை யான பாடலை ! நான் !கேட்காமல் போயிருந் தால் ! மறுபிறவி எடுத் தேனும் மறக்காமல் ? பாடல் கேட்க வருவேன் !🔥😝😍😎😘

  • @jayasvideos2374
    @jayasvideos2374 Рік тому +9

    எங்கள் ஊரில் சினிமா தியேட்டரில் படம் ஆரம்பிக்கும் பொழுதும் முடியும் பொழுதும் இதுபோன்ற பாடல்கள் ஒருமணிநேரம் ஒலிபரப்பு செய்வார்கள் அப்பொழுது எனக்கு வயது 10 இருக்கலாம் அந்த நேரத்தில் இந்த பாடல்கள் வரி எனது மனதிற்குள் ஒன்றும் செய்யவில்லை ஆனால் இப்பொழுது எங்கள் ஊரில் முன்புபோல் நெசவுதொழில் இல்லாமல் ஏதோ கிடைக்கும் வேலைக்கு செல்கின்றனர் என்ற கவலையாக உள்ளது.
    தயவு செய்து முடிந்தவரை அனைவரும் லுங்கிகள் அணிந்து நெசவாளர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும்

  • @user-rv2re9bq3b
    @user-rv2re9bq3b 5 місяців тому +28

    2024 la yarulam keteinga 👍 pannunga

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 7 місяців тому +5

    இந்த பாடலில் கதாநாயகனான புரட்சி தலைவரை எந்தளவுக்கு புகழ்ந்து பாடமுடிமோ அந்தளவுக்கு கதாநாயகிபுழ்வதுபோல் பாடல் வரிகள் அமைந்திருக்கும் சூப்பர் பாடல்

  • @saravananecc424
    @saravananecc424 Рік тому +20

    கலைத்தாயின் தலைமகன் மக்கள் திலகம் புகழ் வாழ்க...

  • @syedhussain2064
    @syedhussain2064 Рік тому +7

    புரட்சி தலைவர் பாடல் 0:44 0என்றும் புதிய பாடல் கள் தான் பாடல் கேட்கும் போது மிகவு மகி😢ழ்சியாகவும்இப்படம பார்க்க 1974கூட்ட நெரிசலில் சிக்கி டிக்கெட் எடுக்க நின்றதும் இன்னும் மனதில் நிற்கிறது

  • @durairaj369
    @durairaj369 Рік тому +9

    இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும்
    முதுமை எய்தி இருப்பார்கள்
    ஆனால் MSV - TKR ன் இசை
    என்றுமே இளமையானது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +58

    சூப்பர்! எம்ஜிஆர் அப்பாவின் அழகை வர்ணிக்கவார்த்தைகள் இல்லை !!! கவிகள் அருமை ! சரோசித்தி அழகி!!! இந்தூஞ்சலாட்டம் அழகு !!!இருவல்லவர்கள் இசை ஆஹாஹா!!!டிஎம்எஸ் சுசீமா அற்புதம்!!!! ஆஹாஹா!!!! நன்றீ 👸 🙏

  • @santhaveeran2665
    @santhaveeran2665 24 дні тому

    உண்மையில் இந்த காதலை இது போன்று யாரும் செய்திருக்கமுடியாது... வாழ்க எம்ஜிஆர்& சரோ....கிளி பேசும் மொழியில் அந்தகிளி மிகவும் அழகு...எம்ஜிஆர்&சரோ இணை ..சூப்பர்...காதற்கொள்ளையில்...ரசித்தேன்....சுவைத்தேன்...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +10

    இருவரும் எவ்வளவு ஆழகு அற்புதமான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Рік тому +30

    பேசுவது கிளியாக சரோஜா தேவி அவர்களும் பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் எம்ஜிஆராக அதுவும் கலரில் பாரிவள்ளல் ஸ்டைலும் பேசுவது கிளியாக ஸ்டைலும் என்னை மயக்கியே விட்டது நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kannankannan3200
    @kannankannan3200 Рік тому +30

    "பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா "..
    "செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன்மொழி தானா ".💆🏽‍♂️❤
    -கண்ணதாசன்..👑👏🏼👌🏿

  • @arunm6698
    @arunm6698 7 місяців тому +19

    இந்த பாடலை எவ்வளவு முறை
    கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...
    அண்ணாதுரை கண்ணதாசன்!
    பாடல் எழுதுகின்றபோது சில சமயம் ‘அந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்?’ என்பதை கேட்பார் அப்பா. வழக்கத்திற்கு மாறாக அவர்களது பெயரைப் பாடலில் சேர்ப்பார். சில சமயம் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை மறைமுகமாக சொல்வார். சில நேரங்களில் நேரடியாகவும் சொல்லிவிடுவார். பாடலுக்குப் பாடல் ஏதாவது புதுமை செய்யவேண்டும் என்று அப்பா நினைப்பார்.
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படம் ‘பணத்தோட்டம்.’ அதில் ஒரு பாடலுக்கான சூழல் சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி இருவரும் பாடுகின்ற ஒரு காதல் பாடல்.
    சரோஜாதேவியை ‘கன்னடத்து பைங்கிளி’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். அதுமட்டும் இல்லை. சரோஜாதேவி பேசுகின்ற கொஞ்சும் தமிழ், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். அத்துடன் சரோஜாதேவியின் உடல் அமைப்பிற்காகவே பெரும்பாலான படங்களில் அவர் அசைந்து நடந்து செல்வதை (Back Shot) காட்டுவார்கள். அதனால் பாடலின் தொடக்கத்திலேயே எம்.ஜி.ஆர் பாடுவதாக-
    “பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
    கோவில் கொண்ட சிலையா, கொத்து மலர்க் கொடியா”
    என்று அப்பா எழுதினார்.
    எம்.ஜி.ஆர்., கொடை வள்ளல் என்பது உலகிற்கு தெரியும். அவர் கேரள மேனன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்றைய கேரளம் என்பது அன்றைய சேர நாடு. ஆனால் எம்.ஜி.ஆர். முழுக்க முழுக்க வளர்ந்தது வாழ்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதனால் சரோஜாதேவி பாடுவதாக-
    “பாடுவது கவியா - இல்லை பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா”
    என்று எழுதினார்.
    இந்த வரிகளை சாதாரணமாகப் பார்த்தால் ஒரு காதல் பாடல் போலத் தோன்றும். ஆழமாகப் பார்த்தால் தான் அனைத்தும் விளங்கும்.
    இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டப் பிறகு, எம்.ஜி.ஆர். அந்தப் பாடல் வரிகளைக் கேட்டுவிட்டு புன்னகை செய்தார். அடுத்த சில தினங்களில் அவர், அப்பாவை ஒரு ஸ்டூடியோவில் பார்த்தார்.
    என்ன கவிஞர்... சேரனுக்கு உறவா?” என்றார் எம்.ஜி.ஆர்
    “ஆமா, பாரிவள்ளல் மகன். அவர்தான் செந்தமிழர் நிலவு” என்றார் அப்பா.
    எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார்.
    இப்படி எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அதனை ஏற்றுக்கொள்வதற்கு நல்ல மனமும் வேண்டும். இருவருக்கும் இரண்டும் இருந்ததால் தான் நமக்கு பல நல்ல பாடல்கள் கிடைத்தன

    • @jayamaaruthi2558
      @jayamaaruthi2558 3 місяці тому

      Kannadasan ayya oru legend 'na bhootho na bhavishyathi'

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Рік тому +9

    எப்பா கலரில் பார்க்கும் போது எவ்வளவு அழகு 😎😎🌹🌹

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 2 роки тому +20

    மக்கள் திலகம் பட பாடல்கள் ‌ எல்லாமே நம்பர்1

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 4 місяці тому +1

    அழகு தேவதை சரோஜாதேவி காட்டும் பாவனை இளமைக் காலத்திற்கு கொண்டு செல்கிறது. தலைவர் அழகு. அற்புதமான ஜோடி

  • @maruthuvarkarmegam7130
    @maruthuvarkarmegam7130 Місяць тому

    ஆகாயத்தில் பறப்பது போல் இருக்கின்றது இனிமையான பாடல்

  • @arshiya3972
    @arshiya3972 2 роки тому +14

    அருமையான பாடல் கலர் பிரிண்ட் சூப்பர் நன்றி

  • @vijayand5678
    @vijayand5678 10 місяців тому +7

    தலைவரின் பாடலை கலரில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +76

    கவிஞர் கண்ணதாசனுக்கு காதலை பாட கைகொடுக்கும் வார்த்தைகள் தான் என் தமிழ் மொழியின் வளம் .. காதல் கிளியான பெண்ணரசி பேசும் மொழி..."கல்யாணப்பந்தலில் ஆடும் தோரணமா ?.. இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா ? .. செண்டாடும் சேயிழைதானா ? .. தெய்வீக காதலிதானா?."..காதல் கவிதை பாட வந்த கவிஞன் தமிழ் கவிதை பாடி ஊஞ்சலில் ஆடி மகிழ்கிறான் .. கண்களில் காதல் மின்ன பெண்மையின் காதலை ஏற்ற ... 'சொல்லும் மொழி'யின் நாவலனாக எம்.ஜி.ஆர்.. தாமரை இலையில் தண்ணீர் கொண்டு வரும் கனவு தேவதை புத்துணர்வு தவழும் சரோஜாதேவி .. அழகு..
    சேரனையும்.. பாரி வள்ளலளையும் பாடிய இசைக்குயில் சுசீலா .. செந்தூர குங்குமத்தில மோகனம் பாடிவரும் சௌந்தர்ராஜன் .. தொடக்கத்தில் பான்ஜோவின் தாள துள்ளலுடன் .. எப்போது தபேலா தாளத்துள்ளலுக்கு மாறியது ?... பேசும் கிளியை இசை பாடும் கிளியாக்கிய விசுவநாதன் ராமமூர்த்தி ..

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +4

      கல்யாண பந்தலில்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +6

      பாடல் வரிகளை படித்தேன்
      சொல்லாமல் சொல்லும்
      மொழியில் என்று தான்
      உள்ளது "கொல்லும்"
      மொழியில் என்று இல்லை
      கவியரசர் பாடல்களில்
      இப்பாடல் வைரக்கல் !!

    • @kalidosskiran4482
      @kalidosskiran4482 Рік тому

      @@bhuvaneswariharibabu5656 on

    • @TeluguCongress-bh1nv
      @TeluguCongress-bh1nv Рік тому +2

      Paaratta vaarthaigalai thedikondirukinren

    • @kabilanv7904
      @kabilanv7904 9 місяців тому +1

  • @premsinghdhanushkodi3804
    @premsinghdhanushkodi3804 2 роки тому +20

    புரட்சித்தலைவர் Masss...♥️

  • @durairaj369
    @durairaj369 Рік тому +16

    Visvanathan - Ramamoorthy
    The greatest musicians of the
    Indian cinema .

  • @schinnaduraisdurai9613
    @schinnaduraisdurai9613 Рік тому +4

    பணத்தோட்டம் படத்தில் வரும் இப்பாடல் இனிய கலரில் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @muralitharank1736
    @muralitharank1736 Рік тому +13

    MGR-TMS and Sarojamma- Susheelamma combo always sweet and pleasant.

  • @tutor438
    @tutor438 2 роки тому +17

    Super கலரில் மிகவும் சூப்பராக உள்ளது. உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள

  • @venkatramanbalasubramanian7141
    @venkatramanbalasubramanian7141 11 місяців тому +4

    எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காத
    பாட்டு

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 роки тому +10

    அழகு செல்லம் புரட்சித்தலைவர் மிக அழகு

  • @sukra8190
    @sukra8190 Рік тому +6

    பாடல் அழகோ அழகு ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️என் தலைவா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @thambithambi1168
    @thambithambi1168 2 роки тому +29

    மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் பாடலை வண்ணத்தில் பார்க்க சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @RaviMeena-vg2pu
    @RaviMeena-vg2pu Рік тому +4

    சூப்பர் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் தலைவருடைய பாட்டு அருமை

  • @kalpanas9607
    @kalpanas9607 2 роки тому +11

    M. G. R sir we miss u a lot
    No words to say ur qualities sir ungala madri oru person parkave mudiyala
    All u have got good qualities
    How ?u r blessed child to ur parents
    Very proud M. G. R.

  • @karthikraju3597
    @karthikraju3597 2 роки тому +4

    ஈஸ்ட்மென்ட் கலர் ஸ்டீரியோ சவுண்ட்
    பிரமாதம்

  • @vsrn3434
    @vsrn3434 2 роки тому +13

    சரோஜாதேவி..லதா..இவர்கள் இருவரும்..இன்றளவு...MGR ஐ ஆசான்..குரு..ஏன் தெய்வமாக வே மதிக்கிறார்கள்...

  • @786-Shan
    @786-Shan 2 роки тому +40

    இந்த மனுஷன் முக ராசியை என்ன சொல்வது...... வார்த்தை இல்லை.

  • @kumareshan5019
    @kumareshan5019 Рік тому +4

    பதிவின் தரம் அருமையாக உள்ளது.பாடலும்அருமை.கேட்ககேட்கதிகட்டாத.அமிர்தம்

  • @vishnuhoney5919
    @vishnuhoney5919 11 місяців тому +2

    வேற மாரி வேற மாரி mgr-சரோஜாதேவி love seens ❤❤❤😘😘😘

  • @saranguradhakrishnanbalasu843
    @saranguradhakrishnanbalasu843 2 роки тому +19

    வண்ணத்தில்
    மின்னுது
    இந்த கிளி...

  • @MegaSunspark
    @MegaSunspark Рік тому +10

    MGR & Saro are amazing in their performances in this song. Let's not forget TMS & PS. As always, their magical singing voices are mesmerising.

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 2 роки тому +5

    Once in billions, handsome living God (MGR) avargal,
    Alugai varugirathu, kadavul yean ivarai innum vaala vidavillai yenru 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @pennarasir1323
    @pennarasir1323 Місяць тому +2

    எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய பெயர் இந்தப் பாடலில் வரும்

  • @jb19679
    @jb19679 Рік тому +2

    தலைவர் எம்ஜிஆர் சரோஜா தேவி நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Рік тому +3

    மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அருமையான பாடல். காலத்தை வென்றது.

  • @veliyarachalbalaji149
    @veliyarachalbalaji149 Рік тому +11

    Evergreen songs and today is a special day as it is MGR' birthday

    • @alagappamsm7754
      @alagappamsm7754 Рік тому +1

      கண்ணதாசன் தமிழ் பேசுது

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 6 місяців тому +1

    ஒளி ஒலி வர்ணம் பார்க்க கேட்க்க அற்புதம். இது போல் கருப்பு வெள்ளை காதல் பாடல்களை மாற்ரி தாருங்கள். PL.

  • @roysonroche04
    @roysonroche04 7 місяців тому +2

    "பாடுவது கவியா... இல்லை பாரி வள்ளல் மகனா..... "❤❤❤❤

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 роки тому +22

    ஆயிரம் முத்தம் கொடுக்க ஆசையாய் இருக்கிறது ஆனா பொன்மனச்செம்மலை எங்கே தேடுவது

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 роки тому +92

    தன் தொழிலில் கூட சமுதாய அக்கறை கொண்டவர். பெண்களை தெய்வமாய் நினைத்தவர்.MGR நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

    • @mageshg2058
      @mageshg2058 Рік тому +7

      அடடா, அப்படியா.

    • @chandruk5032
      @chandruk5032 Рік тому +7

      ​​​@@mageshg2058
      என்ன அடடா... அப்படியா❓
      அதனால் தான்
      அன்று லிரிந்து
      இன்று வரை
      பெண்கள் எங்கள் தங்கத்தை
      *எங்கள் வீட்டு பிள்ளையா*
      தாய்குலமே போற்றியது👌🏾
      தமிழ் உள்ளவரை
      போற்றும் ✅
      அவருடன் நடித்தவர்கள்
      அவருடன் பழகியவர்கள்
      அனைவரும்...
      அவரை நேசித்தார்கள்
      ஆராதித்தார்கள்
      இதய தெய்வமா
      வணங்கினார்கள்🙏
      அவரை தவறா விமர்சித்த
      ஒரு பெண்ணையாவது..
      உங்களால் சுட்டி காட்ட முடியுமா❓

    • @ranjithr4963
      @ranjithr4963 Рік тому

      Zee@@chandruk5032

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Рік тому +2

      😂😂😂😂😂. Ask Radha Saluja, Manjula and Latha how respectful he was!!

    • @chandruk5032
      @chandruk5032 Рік тому +4

      @@kodhaivaradarajan2154
      Of course, all these actress have *Gr8 Respect* towards *Gr8 MGR* the Darling of MASS.
      Proof : their interviews
      Not like all other actors for example Vijaykanth, Kamal who are womanizers.
      Kothai u r *not* a woman❌
      r u not ashamed writing comments behind a *Lady's Name* ❓
      Plz go n consult a gud *psychiatrist*
      If u r a girl, woman then
      u like *MGR*
      u love *MGR*
      u adore *MGR*
      u cherish *MGR*
      u fascinate *MGR*
      u worship *MGR*
      👉🏾Plz go n ask your wife✔️
      She will tell the above things.
      Then u will realize the fact.
      Plz go n watch the movies like :
      *இதயக்கனி நாளை நமதே...*
      your Life-Partner will be satisfied😂
      *Thanks to Gr8 Evergreen MGR,* your wife starts to love💙u....
      Hey dude, U catch the point, I hope!
      *All the Best* 💐

  • @ascok889
    @ascok889 2 роки тому +8

    Super man MGR sarojadevi super

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 роки тому +37

    அழகு க்கு அழகு சேர்த்த பாடல் MGR என்றென்றும் ஹீரோ தான்
    MGR பக்தன் ஆட்டோ
    பூபதிராஜ் கோவை 37

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Рік тому +1

    சரோஜா மேடம் மக்கள் திலகத்தின் அழகு முகத்தை ரசிக்கும் காட்சி அழகு குறுங்கவிதை.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Рік тому +2

    கண்ணதாசன் இந்த பாட்டை எதை வைத்து எழுதினார் மயக்கம வருது.தன் நிலையை மயக்குது

  • @rjhh1937
    @rjhh1937 7 місяців тому +1

    கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் சேரனுக்கு உறவு செந்தமிழரின் நில வா என புகழ்ந்து எழுதியிருப்பார்

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Рік тому +5

    Very Nice!🙏Amazing! Blossom!🌺Beautiful! Wonderful!🙏 Fantastic of M.G.R Song!🙏Thank u!🙏

  • @santhaveeran2665
    @santhaveeran2665 2 місяці тому

    பாடுவது கவியா...? இல்லை பாரி வள்ளல் மகனா...என நாயகி வினாவுவது சரியே...இருவரும் மாறி மாறி வினா எழுப்பும் தன்மையில் கண்ணதாசன் பாடலை சிறப்பாக தந்துள்ளார்..சிறந்த இசை அமைப்பு கேவிஎம்.. பாடல்களை பாடிய டிஎம் எஸ்..சுசிலா இருவரின் குரல்கள் அற்புதம்..

  • @rsv6603
    @rsv6603 6 місяців тому +2

    "Pesuvathu Kiliya.." ❤..Y present music directors don't compose such simple beautiful mind catching songs?

  • @rameshmurugesan5787
    @rameshmurugesan5787 Рік тому +7

    Mgr sarojadevi is best pair in south indian cinema

  • @yegachakkaravarthy7230
    @yegachakkaravarthy7230 Рік тому +2

    ஆஹா அடடா .. என்ன அழகு தலைவா !

  • @narasimhana9507
    @narasimhana9507 8 місяців тому +1

    பாடல்கள் அருமையாக இருக்கும் அவர் படங்களில் அது அவரது சிறப்பு

  • @sivadasang5816
    @sivadasang5816 9 місяців тому +1

    அருமை அருமை நன்றாக இருக்கிறது. கலரும் தெளிவும் அருமை சூப்பர்.

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k 3 місяці тому

    ❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou TMS appa ❤️ PSUCHEELA amma ❤️ imiss you iloveyou MGR appa ❤️😭😭😭😭,KANNADHASAN appa ❤️😭😭😭😭😭😭😭😭😭😭

  • @joyanuradha4566
    @joyanuradha4566 Рік тому +6

    Iam taken 52 years back effect of the song is same today also. What lyrics, composed tune, so natural. Without software.

  • @nagarajan5027
    @nagarajan5027 5 місяців тому

    இசையை பாராட்டுவதா? பாடியவர்களை பாராட்டுவதா? பாடல் எழுதியவரை பாராட்டுவதா? நடிப்பை பாராட்டுவதா? எல்லாவற்றுக்கும் highlight சரோஜாதேவி அவர்களின் கொஞ்சல் முகபாவனை !அப்பப்பா !மெய் சிலிர்த்துவிட்டேன்.

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 11 місяців тому +2

    GREAT MGR SONG SUPER SONG TMS VOICE SUPER P.SUSILA VOICE SUPER MGR SROJADAVI COMENATION SUPER

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 роки тому +9

    Colour very nice bro nice song mgr saroja devi duets song super from Malaysia

  • @viswanathanpv7655
    @viswanathanpv7655 Рік тому +1

    இந்தமாதிரி பட்டெல்லாம் தான் கோல்டன் ஹிட்ஸ் 👏👏👏👏👏👏👏👏👏👌

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Рік тому +11

    MGR and Sarojadevi duet mens number one in tamil cinema field even today.
    Best love pair of Tamil cinema.

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 роки тому +34

    அழகு என்றால் அது எம் ஜி ஆர் மட்டுமே.

  • @jayanthansrinivasan5701
    @jayanthansrinivasan5701 2 роки тому +3

    மஃர் போன்று ஒரு நடிகர் இந்த. ஜென்மதில் பிறக்க போவதில்லை

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 2 роки тому +18

    One of the all time hits that remains in our 💕 forever! An immortal song! Thanks for posting in colour! Lovely to watch Puratchi Thalaivar MGR and Abhinaya Saraswathi B. Saroja Devi! With mind full of joy!

  • @sunithajee3881
    @sunithajee3881 4 місяці тому

    I have seen them in Ooty in 1974… in a shooting… He is like Gold…. And you know BSD… I see her now also in Bangalore….
    I was just 16 years old and not seen Tamil movies…( I speak Telugu)
    But now (2024)
    I have finished watching all the movies of MGR sir available on UA-cam… I became a great fan of him

  • @vvapparaod5184
    @vvapparaod5184 3 місяці тому

    We are very lucky to see legendary
    MGR performance beause of youtube

  • @KasimJaleel
    @KasimJaleel 5 місяців тому +1

    அன்றைய மனிதர்கள் roll model mgr good advice all pupil

  • @salarkhan713
    @salarkhan713 2 місяці тому +1

    இன்றளவும்...தேனினும் இனிய கருத்துள்ள பாடல்..!

  • @indirakumar3271
    @indirakumar3271 Рік тому +4

    என்றும் மனதில் நின்ற பாடல்!!!✅️🍬✅️🍬✅️🍬✅️🍬✅️🍬✅️🍬✅️