பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Song: பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
    A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir..
    Follow us :
    FB: www. lakshmansruthi
    Instagram: lakshmansruthimusicals
    For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
    பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?
    பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?
    கோவில் கொண்ட சிலையா? கொத்து மலர் கொடியா?
    ஹோய்..
    பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?
    படுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா?
    படுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா?
    சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?
    ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
    படுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா?
    சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?
    கல்யாண பந்தலில் தோரணமா - இல்லை
    கச்சேரி ரசிகர்கள் கேட்குக் மோகனமா
    வில்லேந்தும் காவலந்தானா
    வேல் விழியால் காதலன்தான
    சொல்லாமல் சொல்லும் மொழியில்
    கோட்டை கட்டும் பாவலதானா
    மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்
    வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஹோய்..
    செண்டாடும் சேயிழைதனா
    தெய்வீக காதலிதான
    செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
    செவ்வாய் மின்னும் தேன் மொழிதான

КОМЕНТАРІ • 405

  • @kumaranayagamannamalai1034
    @kumaranayagamannamalai1034 2 роки тому +16

    உள்ளம் நெகிழ கண்கள் கலங்க ஐயா மெல்லிசை மன்னரின் பொற்பாதங்களை நானும் உள்ளத்தால் தொட்டு வணங்குகின்றேன்!!

    • @balasubramanianraja9875
      @balasubramanianraja9875 Рік тому +2

      உங்களோடு சேர்ந்து நானும் வணங்குகிறேன்

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 8 місяців тому +17

    ஐயா கவி அரசர் கண்ணதாசன் அவர்கள்.இசை அரசர் ஐயா எம் எஸ். விஸ்வநாதன் அவர்கள்.சிம்மகுரலோன் காலத்தால் வெல்ல முடியாத ஐயா டி எம்.சௌந்தரராஜன் அவர்கள் . மிக மிக இனிய குரலோன் (ள்) அம்மா பி.சுசீலா அம்மா அவர்கள் இவர்கள் எல்லோரும் இசையின் தெய்வங்கள்.. எனக்கு பாராட்டி எழுத வார்த்தைகள் தெரியவில்லை.

    • @masthanfathima135
      @masthanfathima135 5 місяців тому +3

      இந்த பாடல் வாலி அவர்கள்
      எழுதியது.

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar 10 місяців тому +1

    Voice arumai ❤❤❤❤❤❤❤

  • @mohamedthahir.a
    @mohamedthahir.a 2 роки тому +3

    Very nice voice

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 роки тому +6

    Male voice நைஸ். அந்தம்மா நிறைய பயிற்சி எடுத்துக்கணும்

    • @venkatesonm8361
      @venkatesonm8361 2 роки тому

      நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.நன்றி நண்பரே!

  • @southernwind2737
    @southernwind2737 2 роки тому +46

    சேரனுக்கு உறவா ?செந்தமிழர் நிலவா? என்ன அருமையான வரிகள்!

  • @tamilselvan.drajadhanabal7112
    @tamilselvan.drajadhanabal7112 3 місяці тому +6

    கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள் ஃ விஸ்வநாதன் இசையமைத்த பணத்தோட்டம் திரைப்படம் சௌந்தரராஜன் சுசீலா பாடிய பாடல் ஃ புரட்சி நடிகர் எம் ஜி ஆர் & சரோஜா தேவி ஃ எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஃ வாழ்த்துக்கள் சகோதரரே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 роки тому +37

    பாடுவது கவியா இல்லை பாரிவள்ளல் மகனா.
    மக்கள் திலகம் எம்ஜிஆர்.
    சரோஜா தேவி.நடிப்பில்
    அருமையான பாடல்.

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 2 роки тому +28

    அன்றைய பணத்தோட்டம் என்ற படத்திற்காக உருவான பாடல். கவிஞர் மெல்லிசை மன்னர் பாட்டு சித்தர் என ஜாம்பவான்கள்
    கூட்டமைப்பில் உருவான இந்தப்பாடல் சிரறஞ்சீவியானது.

  • @asolairajan4919
    @asolairajan4919 Рік тому +40

    சியாமளா அவர்கள் குரல் மிக இனிமை🌷

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 2 роки тому +48

    அப்படியே இருவரும் அந்த காலத்திற்கு என்னை கொண்டு சென்று விட்டனர்! வாழ்வாங்கு வாழ ஆசிகள் பல.

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +11

    சுசீலா அம்மா குரலை ஒரு இளம் பெண் ஒலிப்பதை கேட்டு அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்

  • @shr011104
    @shr011104 2 роки тому +14

    3:17 - 3:23 மது தபேலா மிக அருமை. செல்வகுமார் தான் அப்பா குரலில் பாதி கூட இல்லை, பாவம்!

  • @rimdeen5416
    @rimdeen5416 2 місяці тому +5

    1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது

  • @balasundaram1226
    @balasundaram1226 2 роки тому +54

    பெண் குரல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @Learning-Techniques
    @Learning-Techniques Рік тому +6

    பெண் குரல் : Zee Tamil சரிகமப ஷியாமளா 👍👍👍👍

  • @durairaj369
    @durairaj369 Рік тому +14

    லட்சுமண் ஸ்ருதி இசைக்குழுவினர் நன்றாக
    பாடியிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள். ஆனால் அசல் பாடலின் அருகில் நெருங்க முடியவில்லை.
    50 ஆண்டுகளுக்கு முன் இன்றைய தொழில்நுட்பங்கள் இல்லாத
    காலத்தில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கண்ணதாசன்,
    டி எம் செளந்தரராஜன் - பி சுசிலா போன்ற ஜாம்பவான்களால் படைக்கப்பட்ட பாடல் (பேசுவது கிளியாக) சாகா
    வரம் பெற்றவை. நன்றி!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 роки тому +25

    M S V ஐயா வாழ்த்துக்கள் நீங்கள் மரைந்தாலும் அனைவரின்
    உள்ளங்களை மகிழும்படி செய்துவிட்டீர்கள் மிகவும் நன்றி ஐயா
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌹🌹🌹🌺🌺🌺

  • @iyersethuraman7895
    @iyersethuraman7895 2 роки тому +24

    The lady ( girl) is very fluent and has command over this song. We Wish her happy life. God bless her.

  • @akpvenu5546
    @akpvenu5546 2 роки тому +17

    1963கொண்டு சென்ற‌இனிமையானபாட்டு
    பள்ளத்தூரிலே கேட்ட‌பாடல்!! அப்போ அதென்ன பாரிவள்ளல்‌மகன்??என்று கேட்வர்களும் உண்டு
    கவிஞர் ‌கண்ணதாசன்‌பதிலும் அழகு!!

    • @anupriyarajkumar835
      @anupriyarajkumar835 Рік тому

      What answer sir pls reply

    • @senthamaraikannan2721
      @senthamaraikannan2721 11 місяців тому +1

      தமிழகத்தின் எட்டாவது வள்ளல் திரு MGR அவர்கள்.அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம். வாழ்க MGR புகழ்.

    • @sekarvara6094
      @sekarvara6094 7 місяців тому

      Only mgr true vallal

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 Рік тому +21

    சியாமளாவின் குரல் மிக மிக அருமை....சுசீலா அம்மாவின் குரலுக்கு மிக மிகஅருகில்

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 3 роки тому +23

    Female voice is very nice super

    • @ravit3250
      @ravit3250 2 роки тому

      ஆண் குரல் முதிர்ந்தது.

  • @irjjraj2179
    @irjjraj2179 2 роки тому +10

    Female voice is perfect. வாழ்த்துக்கள் தோழர்.

  • @RAVINDRANEXCELLENTWOWM
    @RAVINDRANEXCELLENTWOWM 2 роки тому +9

    There is no substitute for Late TMS and Shrimathi. P.Suseela. My prayers for longevity of life full of Peace, Happiness and Prosperity to Shrimathi. P. Suseela.
    TMS's son - I think his name is Selva Kumar sang the song in his pattern. However, he could not imitate his father. The lady singer did her wonderful attempt. My Blessings to both of them!☺

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 роки тому +125

    M. S. V.. ஐயாவை கௌரவப்படுத்தி வழங்கப்பட்ட இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்கி luxman ஸ்ருதி இசை காப்பகத்திற்கு கோடானு கோடி நன்றிகள்.... ❤❤

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 роки тому +11

    பெண் வாய்ஸ் சூப்பர்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +151

    தான் பாடிய பாடலை வேறொருவர் பாடும் போது சுசீலா அம்மா அருமையாக ரசிக்கின்றார்.

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 роки тому +9

    புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.. ஜெய் ஹிந்த்... இந்த பாடல் யாராவது பாடினால் நமக்கு எம்ஜிஆர் அவர்களின் நினைவு வருகிறது... எங்காவது ஒலி பரப்பினால் என்ன எம்ஜிஆர் பாட்டா பாடுது என்று தான் சொல்கிறோம்... இதில் பாடியவரோ இசை அமைத்தவரோ நமக்கு நினைவு வருவதில்லை...

  • @chellapandipandy1810
    @chellapandipandy1810 Рік тому +9

    சியாமளாவின் குரல் மிக மிக அரமை வாழ்த்துக்கள்

    • @ravimurthy2105
      @ravimurthy2105 Рік тому

      My favourite songs fabulous voice Shyamala.

  • @sampathsampath9401
    @sampathsampath9401 Рік тому +2

    பாடகர் தமிழ் உச்சரிப்பு சிலையா என்ற இடத்தில் ச்சிலையா என்று உச்சரிக்கிறார் இது சரியல்ல பாடகி உச்சரிப்பு மிகச்சரி

  • @thamilselvam5827
    @thamilselvam5827 Рік тому +22

    மிக சிறந்த குரல் சியாமளாவிற்கு தமிழ்திரையில் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.

    • @vaimeivaa7760
      @vaimeivaa7760 4 місяці тому

      SuperUnmaiNsntri

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Місяць тому

      குரல் நன்றாக இருந்தால் மட்டும் போதாது சில விளங்காதவன் கூடவும் ஒத்துப்போகனும்

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 роки тому +8

    நல்ல பாடல் உற்சாகமான தெளிவான குரல் 👍👍👍
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +22

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @trueindian887
    @trueindian887 Рік тому +25

    The female voice is deep,fluent on a high note and complementing male voice very well

  • @kannan2682
    @kannan2682 2 місяці тому +2

    ஷியமளாவிற்கு அற்புதமான குரல் கடவுளின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கட்டும்

  • @knrajan7838
    @knrajan7838 2 роки тому +9

    ITS NOT SUFFICIENT TO HONOUR THE GREAT LEGENDARY LEGAND OF OUR HONEY SWEETEST COMPOSER MR.M.S.V.

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому +4

    இருவர் குரல் அருமை அருமை. 👌👌👌👌👌👌💅💅💅சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌🙏🙏

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 2 роки тому +6

    God (Mgr) Bless. you All.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 роки тому +12

    இன்னிசை இறைவன்
    மெல்லிசைமன்னர்

  • @paulrajv3281
    @paulrajv3281 2 роки тому +26

    இந்த பாட்டை 1965 வாக்கில் பாபநாசம் கோவில் சித்திரை விஷூ சமயத்தில், சங்கரன் கோவிலைச் சேர்ந்த நாதஸ்வர வித்துவான் சம்பாரி அவர்கள் நாதஸ்வர இசையில் கேட்டேன். அப்படியே நெஞ்சில் பதிந்து விட்டது. இந்த பாட்டை எங்கே எப்போது கேட்டாலும் அந்த நாதஸ்வர இசையோடு இணைத்துக் கொள்வேன்.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому +6

    Original always original , imitation canot stand before it

  • @rdn3704
    @rdn3704 2 роки тому +2

    With due respects to the male singer, you may be the son of the great TMS Sir. Your pronounciation of the lyrics is not as crystal clear like your dad. You need to pronounce the words clearly.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 роки тому +14

    இருவருடைய குரலும் அருமையாக இருக்கிறது.

  • @manivannans9154
    @manivannans9154 2 роки тому +83

    இசை உலகின் கடவுள், இவரின் பாடல்கள் கூட பலரின் மனஅமைதிக்கு காரணமாக இருந்திருக்கும்.

    • @m.nagarajm.nagaraj7244
      @m.nagarajm.nagaraj7244 2 роки тому +1

      V.very nice song M.G.R

    • @ThamilNesan
      @ThamilNesan 2 роки тому +1

      மன்னிக்கவும் இசையை உருவாக்க உன்னதமான ஞானத்தையும் அறிவையும் வழங்கியவன் எல்லோரையும் தனித்துவமா படைக்கும் எல்லாம் வல்ல இறைவனே ஆவன் அந்த எல்லாம் வல்ல🙏 இறைவனை கேவலப்படுத்த செத்தால் பிணமாக போகும் மனிதனை மனிதன் கடவுளாக்குவது மிகவும் தவறானதும் அறிவு போதாமையுமே ஆகும்🙂

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 Рік тому +5

    Both male and female voice was great they should be given opportunity to sing in tamil movies with similar songs.

  • @cpjeddah1182
    @cpjeddah1182 3 роки тому +13

    LADY VOICE SUPER

  • @jankiram3768
    @jankiram3768 Місяць тому +1

    இசைவானி இனி காணா படல் பாடுவ தை நிறுத்தி விட்டு விசிக மேடை பேச்சாளராக அங்கிகாரம் பெறலாம் அது தான் சிறப்பு.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 2 роки тому +2

    அசலை அசலாகவே விட்டு வைத்திருக்கலாம். எல்லாம் நடுக்கமாக இருக்கிறது.

  • @nadarajannadarajan3984
    @nadarajannadarajan3984 8 днів тому +2

    அருமையான பாடல் Super.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 роки тому +20

    People tend to forget Mr.Ramamurthi who was co-director. Music by the Duo touched Himalayan Heights. Many number of songs only by the Duo, repeat only by the Duo were super hit.This is for the information of the Public.

    • @gopinathks9140
      @gopinathks9140 2 роки тому +2

      Director sridhar had in an interview to the Indian Express had said it was MSV who was all in all and ramamurti was only a dummy

    • @ramanivenkata3161
      @ramanivenkata3161 2 роки тому

      @@gopinathks9140
      I made my comments based on the Highly Hit songs and remembered even today by many on the music of the Duo.

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 2 роки тому +1

      TKR was only conductor not tune creator after separation he failed he scored only 17 movies only few hits given by him.

    • @ravivenki
      @ravivenki 2 роки тому

      ராமமூர்த்தியை விடவும் அதிக திறமைசாலி Msv சார். இதனால் Tkr இடம் விஷயம் இல்லை என நினைப்பது பெரும் தவறு. இருவரும் சேர்ந்து இசைமைத்த பாடல்களே அதிக மதிப்பெண் பெறும்.

    • @ramanivenkata3161
      @ramanivenkata3161 2 роки тому

      @@ravivenki
      Yes. It is true. And I have also meant the same in my
      Comment

  • @jeevanandham9985
    @jeevanandham9985 2 роки тому +1

    எங்கள் தலைவர்,, எம் ஜி யார்,, பாரிவள்ளல்மகன்தான்,,

  • @Samaneethi-m4m
    @Samaneethi-m4m 2 роки тому +4

    Excellent song 👍💯😀 congratulations to all.singars &archestra technician

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому +4

    Excellent reproduction of the original song.Both have such a sweet voice.Congrats.I see Susheela,Eswari,SPB,Vaira Muthu etal.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 роки тому +4

    அன்பான பாடகர்களே ரசிகா்களே இந்த பாடல்கள் அருமை நன்றி.லஸமன் ஸ்சுருதீ அமைப்புக்கு வாழ்த்துக்கள்.அணைவரும் வாழ்க வளமுடன்.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +9

    No one can beat the great TMS sir Voice

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV 2 роки тому +1

    வாழ்த்துக்கள். ஸ்ருதி (pitch) மிக சுத்தமாக இருத்தல் வேண்டும்.
    அதிக இன்ஸ்ட்ரூமென்ட்ன்ஸ் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் உண்டு. அனைத்தும் ஒரே நாதத்தில் இருக்க வேண்டும்.. நிறைய இடங்களில் விலகல் தெரிகிறது.

  • @TheDrvel
    @TheDrvel 3 роки тому +16

    Beautiful voice excellent performance TMS And. P. Suseela on the stage in action , it is real ,

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 роки тому +25

    ஆஹா.கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு ஈடு இடையே இல்லை.கேட்டுக்கொண்டே இருக்கலாம் அந்த பாடல் வரிகளையும் அதற்கேற்ற இசையையும்.எல்லா கவலைகளும் சிறிது நேரம் மறந்து விடும்.

    • @mohandasambikapathy805
      @mohandasambikapathy805 2 роки тому +1

      அந்தக் காலம் திரும்பி வருமா? பழைய பாடல்கள் என்றும் அழியாத பொக்கிஷம்.

    • @balasubramani3011
      @balasubramani3011 Рік тому

      பட்டுக்கோட்டை வரிகள்

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 2 роки тому +1

    பேகனுக்கு உறவா என பாடுங்கள் டி எம் எஸ் குரலைக்கானோம்

  • @nps8235
    @nps8235 2 роки тому +2

    சிறு வயதில் திரு. டி எம் எஸ். செல்வகுமார் அவர்களின் மேடைக் கச்சேரியினைக் கேட்டிருக்கிறேன். அருமை.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Рік тому +3

    Absolutely beautiful voices. Well done Amma and sir

  • @mjponnurangam2224
    @mjponnurangam2224 2 роки тому +6

    பெண்ணின் குரல் அருமை

  • @danielmanickaraj1427
    @danielmanickaraj1427 3 роки тому +7

    Male voicesuperp...........,............r

    • @shunthiru
      @shunthiru 2 роки тому

      T.M.S son T.M.S.Selvakumar

  • @rangarajraju2520
    @rangarajraju2520 2 роки тому +2

    ஆண்குரலுக்கு TMS புதல்வன்பாடியிருப்பது அவ்வளவு பொருத்தமில்லை!
    கிளியா என்பதற்கு யாஆஆஆஆ
    என்றுஇழுக்கிறார்! இழுவை ஜாஸ்தி!

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 роки тому +1

      நீங்க படியிருக்கலாம் பாவம் நேரம் கிடைக்கலை அதானே!!

    • @arulraj560
      @arulraj560 2 роки тому

      Poda naaye

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 роки тому +3

    Dear Sir what a Special (Shruthi) bonding for yourself & The 🙏great
    MSV God only knows.

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 2 роки тому +19

    Happy to hear pure Tamil words in a nicer voice of a legend TMS

  • @m.sankarnarayananmanisanka2166
    @m.sankarnarayananmanisanka2166 2 роки тому +1

    அன்றேகண்ணதாசன்தலைவரைசொல்லாமல்மலையாளிஎன்றும் சேரனுக்கு உறவு. அடுத்தவரி தமிழனுக்கு இவரைபோல் எவனும். உண்மையாக இல்லை என்பதை அடுத்த வரியில். செந்தமிழர்நிலவா என் எழதியிருப்பார்

    • @THENI374
      @THENI374 2 роки тому

      ராமச் சந்திரன்(நிலவு)தான்

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Рік тому +1

    டிஎம்எஸ் அவர்களின் மகனும் பாடகியும் பின்னி எடுத்து விட்டார்கள் இந்த பாட்டை.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому +8

    இளைய தலைமுறையினர் நல்ல உச்சரிப்புடன் பாடுவது வரவேற்கத்தக்கது...!💐🙏🏻

  • @chellamuthumarappan8487
    @chellamuthumarappan8487 4 місяці тому +1

    அழகான வரிகள்..
    அருமையான இசை
    குரல்இனிமை.நாங்கள்
    மட்டுமின்றி அரங்கத்தில்
    அனைவரும் குறிப்பாக
    பெண்கள் ரசிப்பது
    உடல் மொழியில் தெரிகிறது..நன்று..
    தொடர்க..

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 2 роки тому +1

    மூவேந்தர்களும் எப்ப திரும்ப வருவீர்கள்.

  • @jothikumar3045
    @jothikumar3045 2 роки тому +1

    பழைய பாட்டு போல இந்த காலத்தில் ஏது?

  • @trueindian887
    @trueindian887 Рік тому +2

    T M Selvakumar voice echoes that of TMS with the same pitch and perfect Tamil pronounciation

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 10 місяців тому +1

    என்றென்றும் நீங்க நினைவுகளுடன் ஐயா எம் எஸ் வி அவர்கள்

  • @m.srinivasanm.srinivasan2092
    @m.srinivasanm.srinivasan2092 Рік тому +3

    கேட்பவற்கும் பாட்டை பாடியவர்கும் பொற் காலம்

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 роки тому +3

    முன்னுக்கு இருப்பது கிளியே தான்

  • @parasuramankuppan4525
    @parasuramankuppan4525 2 роки тому +4

    Wonderful singers ....male & female voice👐🙏

  • @thunderstorms0024
    @thunderstorms0024 3 роки тому +5

    காதுக்கு விருந்து...

  • @baijukrishnan9718
    @baijukrishnan9718 Рік тому +2

    The answer of all questions throughout these songs are being the questions. That's the magic of the lyricist. தமிழ் வாழ்க.

  • @muthuraman5536
    @muthuraman5536 2 роки тому +6

    TMS அவர்கள் குரலில் பாடிய பாடகர் அருமையாக பாடி இருக்கின்றார்கள். அருமை, அருமை.

    • @nps8235
      @nps8235 2 роки тому +4

      TMS அய்யா அவர்களின் மகன் தான் அவர்

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 роки тому +1

      மகன் ஐயா.

    • @muthuraman5536
      @muthuraman5536 2 роки тому

      தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

    • @ravikumarnallamuthu9768
      @ravikumarnallamuthu9768 2 роки тому +1

      ஆமாம் சிவாஜி மாதிரி அருமை யாக பாடுகிறார்

    • @muralidharangovindan999
      @muralidharangovindan999 Рік тому

      He is his son 🎉

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Рік тому +3

    Great to hear and thank you
    sabesan Canada

  • @karthickb1973
    @karthickb1973 Рік тому +1

    i came here for shyamala madam

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 2 роки тому +7

    Female voice super

    • @Shamala2021
      @Shamala2021 2 роки тому

      Thank you so much this is Shamala I sung the female version 🙏

    • @Shamala2021
      @Shamala2021 2 роки тому

      Thank you this is Shamala I sung the female version 🙏

  • @samsona7826
    @samsona7826 2 роки тому +3

    The world withouttamil song is like without sun.

  • @mjponnurangam2224
    @mjponnurangam2224 2 роки тому +1

    இந்த பாடல் பாடிய பெண்ணின் குரல் அருமை. சுசீலாம்மா குரல் போலவே இருக்கிறது

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 2 роки тому +4

    MSV TMS PS 🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊

  • @vijayakumarsrinivasan2938
    @vijayakumarsrinivasan2938 Рік тому +3

    ச்யாமளா நன்றாக இணைந்து பாடியுள்ளார்

  • @selvamanir1171
    @selvamanir1171 2 роки тому +5

    அருமை சூப்பர்

  • @prabuprabu9854
    @prabuprabu9854 2 роки тому +3

    Ziyamala voice super😍

  • @malars9961
    @malars9961 Рік тому +2

    Excellent voice of TMS' son and lady singer. Super.

  • @ragupathy6482
    @ragupathy6482 2 роки тому +6

    Female voice semma

  • @christiesebaratnam9155
    @christiesebaratnam9155 2 роки тому +2

    More traditional attire for the musicians would have better suited the occasion .

  • @jasminejasmine655
    @jasminejasmine655 2 роки тому +2

    So sweet like T.M.S &P. Susheela

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +1

    சியாமளா (ளா ) என்று சரியாக எழுதுங்கள் - யார் யாரோ வந்து ங்கே ங்கே என்று பாடினார்கள் என்பதைவிட ஊளையிட்டார்கள். உலகக்குரல் இறைவன் ரி.எம்.எஸ் அவர்களே, சரஸ்வதியை மகிழ்விக்கும் வகையில் பாடினார். அவரின் கார்வைக்கு ஈடு இணையில்லை எவர் குரலும். வாழ்க ரி.எம்.எஸ் புகழ் .

    • @Shamala2021
      @Shamala2021 2 роки тому +1

      🙏சியாமளா தேவி

  • @dofdofar8242
    @dofdofar8242 2 роки тому +2

    Tms voice ku nigar ilai no words

  • @smrma1640
    @smrma1640 2 роки тому +2

    A1 Song in Tamil World Great TMS sir

  • @slimshady2100
    @slimshady2100 10 місяців тому

    Why is there no mention or credit given to Ramamurthi ? This song was composed by both Viswanathan and Ramamurthi. Both have passed away, Viswanathan could not have achieved this by just himself. Tamil cine industry is a disgrace. If anything Ramamurthi was a Tamil and Viswanathan was a malayali. Reversely the malayalis will never do this type of disgrace for their own. I have nothing against Malayalis, this is not happening because of them. We all know why this is happening, it is because Ramamurthi was from the so called lower caste of Isaivellala and Vishwanathan was a Brahmin. But who is the one who has witnessed that Brahmins came out of Vishnus head and so called Shudra’s that supposedly Isaivellala are assigned to came out of Vishnus behind. First off has anyone seen Vishnu or for that matter any god ? Nope, yet Brahmins write these stories and put themselves on the top. Then they want everyone else to follow those stories. I have no problems with people manipulating and scheming others as one can’t help out idiots for being misled. But not giving Ramamurthi his due is a disgrace. Without the Isaivellala community Tamil and Carnatic music will not exist today, Ramamurthi, TN Rajaratnam pillai, MS Subbulakshmi are only recent giants of music. There have been many giants from this community over the centuries and millennia that we don’t know about.

  • @sriakshaya4102
    @sriakshaya4102 2 роки тому +2

    மாபெரும் இசை மேதை.எம.எஸ்.வி. அவர்கள்

  • @Numbers0123
    @Numbers0123 2 роки тому +1

    Thumpnail aunty at 1:44
    👌

  • @a.v.nagarajan726
    @a.v.nagarajan726 2 роки тому +4

    Tms. செல்வகுமார் வாய்ஸ் அவர் தந்தை tms அய்யாவை போல் இருக்கு