நமக்கு நோய் வரக் காரணம் என்ன...? வந்துவிட்டால் எப்படி நீக்குவது...?
Вставка
- Опубліковано 2 лис 2024
- வயது ஆனதலோ உணவுப் பழக்கத்தினாலோ பரம்பரையாலோ தான் நோய் வருகிறது என்கிறோம் - நோய் வருவதற்குக் காரணமே “நாம் நுகரும் உணர்வுகளால் தான்…” என்பதை நாம் அறிந்திருக்கின்றோமோ…!
மனிதனுக்கு மெய்ஞான உணர்வு சில தத்துவ ஞானியர்களால் கொடுக்கப்பட்டாலும் ஏதாவது குறை நம் உடலில் ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டி இருக்கின்றது.
அப்படி அணுகும்போது டாக்டர் சொல்லுகிறார், ஒரு உறுப்பு கெட்டுவிட்டது. அதன் அணுக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி அதற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள்.
பிறகு இதைச் சரி செய்வதற்காக நமக்குப் பலவித கட்டுப்பாடுகள் கொடுக்கின்றார்கள். மனிதனாக இல்லாத அளவுக்கு நமக்குக் கட்டுப்பாடு செய்கின்றார்கள்.
இதனுடைய நிலைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
மிக்க செல்வத்தோடு நாம் சந்தோஷமாக இருக்கும்போது சந்தர்ப்பவசத்தால் குடும்பத்திற்குள் வெறுப்பான நிலைகள் கொண்டு செயல்படும்போது
1.வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகச் சேர்க்கப்படுகின்றது.
2.வேதனை என்ற உணர்வும் அதிகமாகச் சேர்க்கப்படுகின்றது.
இதனால் நாம் உட்கொள்ளும் சுவை மிக்க உணவுடன் இந்த வேதனை உணர்வுகள் “இணையாது” போய்விடுகின்றது.
சர்க்கரைச் சத்தைச் சரியான அளவில் ஜீரணிக்கும் நம் உறுப்புகள் செயலற்றதாக மாறுகின்றது. அப்படிச் செயலற்றதாக மாறிவிட்டால் நிச்சயம் நமக்குள் அந்தச் சர்க்கரைச் சத்து இரத்தத்தில் இருக்கத்தான் செய்யும்.
விஞ்ஞான அறிவு கொண்டு இதைக் குறைப்பதற்காக அவ்வப்பொழுது எதிர்மறையான மருந்துகளைக் கொடுத்து இந்த இரத்தத்திலே அதை மாற்றுகின்றனர்.
நாம் அடிக்கடி வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் அதிகமாக எடுத்தோம் என்றால் அடுத்தகணம் பார்த்தால் இரத்தத்திலே சர்க்கரைச் சத்து உள்ளது என்பார்கள்.
அதே சமயத்தில் நாம் சத்தான உணவை உணவாக உட்கொள்ளும்போது அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி இந்த சலிப்பு சஞ்சலம் என்ற நிலைகள் அதிகரிக்கப்படும்போது
1.அதனால் கொழுப்பின் சக்தி அதிகமாகி
2.அதுவும் நம் இரத்தநாளங்களுடன் கலக்கின்றது.
3.இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கின்றது என்று சொல்வார்கள்.
அடுத்து இந்த இரத்தம் வடிகட்டுப்படுவதற்காகக் கிட்னிக்குச் செல்லும்போது கிட்னிக்கு இந்த கொழுப்புச் சத்தை வடிகட்டும் தன்மை இல்லை.
இரத்தத்தில் வரும் பலவீனமான இந்த உணர்வுகளை இந்த கிட்னி அது சீராக வடிகட்டாத இந்த உணர்வுகள் மீண்டும் நம் உடல் உறுப்புகளில் செல்கிறது.
கிட்னியில் பரிசுத்தப்பட்ட இரத்தம் இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து இந்த உணர்வுகள் அது உடல் முழுவதும் பரவச் செய்யும்போது அது மூன்று விதமான குழாய்க்குள் ஊடுருவிச் செல்லுகின்றது.
ஆனால் இந்த கொலஸ்டரால் என்ற உணர்வின் தன்மை அதிகமாகச் சேர்க்கப்படும்போது வேதனையோ வெறுப்போ அல்லது நாம் தொழில் செய்யும் நிலைகளில் கஷ்டமோ என்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும்போது
1.இருதயத்தின் துடிப்பு அதிகரிப்பதைக் காட்டிலும்
2.படபடப்பு அதிகமாகும்.
இது அதிகமாகும்போது இதனுடைய நுழைவு வாயில் அதிகமாகச் சேர்க்கப்படும்போது இருதயத்திற்குள் சிறிது சிறிதாகச் சேர்ந்து “கொலஸ்டரால்” என்ற நிலைகள் அங்கு தேங்கத் தொடங்குகின்றது.
அவ்வாறு தேங்கிவிட்டால் நமது இருதயத்தில் இந்த கொழுப்புச் சத்து அதிகமாகி நாம் சுவாசிக்கும் உணர்வுகள் வெளிப்படுத்த முடியாத நிலை ஆகிவிடுகிறது. அதாவது
1.இரத்தத்தில் இருந்து ஆவியாக மாற்றி
2.ஆவியின் தன்மை எல்லா இடங்களுக்கும் அனுப்பி
3.இதன் வழி கொண்டு எதன் உணர்வினை ஆவியாக மாற்றுகின்றதோ
4.அதன் உணர்ச்சிகளை ஊட்டும் இந்த உணர்வுகள்
5.தீமையைப் பிளக்கும் தன்மைகளை இழந்துவிடுகின்றது.
தீமையைப் பிளக்கும் தன்மை இழந்து தீமையின் அணுக்கள் அதிகமாகப் படும்பொழுது இருதயத்தில் இருந்து பிரியும் சக்தி அது குறைகின்றது.
இதைப்போல அதன் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க சில சில உறுப்புகளில் இந்த கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது அதன் வடிகட்டும் தன்மை இழக்கப்படும்பொழுது உடல்களில் கொழுப்புச் சத்து அதிகமாகத் தேங்கி அதன் அணுக்கள் பெருகத் தொடங்கிவிடுகின்றது.
இதன் அணுக்கள் பெருகத் தொடங்கிவிட்டால் உடல் முழுவதற்கும் “நீர்ச்சத்து அதிகமாகும்… இரத்தத்தின் தன்மை குறையும்”.
அடுத்து அதில் ஆசிடாக மாற்றும் இந்த உணர்வுகள் விஷத்தன்மை உடையதாக மாற்றப்படும்பொழுது நமது உடலில் நரம்பு மண்டலங்களில் என்ன நடக்கிறது?
ஒரு பொருளை நாம் தூக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த நரம்பு மண்டலங்களுக்குள் அந்த ஆசிட் என்ற வாயுவில் அதிகமான இந்த விஷத்தன்மை கலந்ததால்
1.பொருளை நாம் தூக்கும்போது அதனால் வரும் வேதனையால்
2.பொருளைத் தூக்க முடியாத நிலை ஏற்படும்.
இதைப்போன்ற நிலைகள் இது எதனால் வருகிறது? அடிக்கடி கவலை சஞ்சலம் என்ற உணர்வுகளை அதிகமாகச் சுவாசிக்கும்போது இந்த விஷத்தன்மைகள் கூடி இந்த நிலையாகின்றது.
இதையெல்லாம் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியை யாம் கொடுக்கின்றோம்.
உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்வதற்கு நீங்கள் இந்தத் தியானத்தை எடுத்து எந்த உறுப்பின் தன்மை இயக்கவில்லையோ உங்கள் எண்ணத்தை “அந்த உறுப்பின்பால் செலுத்த வேண்டும்”.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகள் முழுவதும் படரவேண்டும், உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தி பெறவேண்டும். அந்த உறுப்புகள் சீராக இயங்க வேண்டும்.
நோயை நீக்க மருத்துவர்கள் ஊசி மூலம் மருந்தை ஏற்றி எப்படி “INJECTION…” செய்கின்றனரோ அதைப்போன்று உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் செலுத்துதல் வேண்டும்
எந்தெந்த உறுப்புகள் சரியாக இயங்கவில்லையோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை கண்ணின் நினைவு கொண்டு அங்கேல்லாம் ஊடுருவிப் பாய்ச்ச வேண்டும்.
எங்கள் உடலிலுள்ள கொலஸ்ட்ராலோ அல்லது சர்க்கரைச் சத்தோ இதையெல்லாம் மாற்றியமைத்து உறுப்புகள் சீராக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.மருந்து கொடுத்துக் கட்டுப்படுத்த நிலைகளைக் கூட
2.”உங்கள் எண்ணத்தால் மாற்றி அமைத்து”
3.நோய் வராதபடி காக்கும் சக்தியை உங்களுக்குள் வளர்க்க முடியும்.