வாழ்வியல் விழுமியங்களை அதிகம் சொல்ல வந்தது மெல்லிசைப் பாடல்களா ? துள்ளல் இசைப் பாடல்களா ?

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • 'மனதை மயக்கும் மெல்லிசைப் பாடல்கள் ', 'இரவில் கேட்க வேண்டிய இனிமையான பாடல்கள் ' என்று பாடல்கள் பலவற்றை நாம் அன்றாடம் கேட்டிருப்போம். வாழ்வியல் தத்துவங்களைச் சொன்ன பாடல்கள் இவைகளில் ஏராளம். 'ஒவ்வொரு பூக்களுமே ' என்ற பாடலாக இருக்கட்டும், மணமகன் மணமகள் ஆகியோரின் சத்தியத்தைச் சொல்லக் கூடிய பாடலாக இருக்கட்டும் அனைத்துமே சமூகத்திற்கு எதோ ஒன்றைச் சொல்ல வந்த பாடல்கள் தான் . ஆனால் , இவை மட்டும் தான் வாழ்வியல் விழுமியங்களைச் சொன்னதா ? இவைகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் துள்ளல் இசைப் பாடல்களும் வாழ்வியல் விழுமியங்களைச் சொல்லியிருக்கின்றன என்று பார்க்க முடிகிறது. ' ஆளப் போறான் தமிழன் ' என்ற பாடலில் சொல்லப்பட்ட தமிழின் சிறப்பு ; தமிழரின் சிறப்பு; 'தை பிறந்தால் வழி பிறக்கும் ' போன்ற பாடல்களும் அவற்றில் சொல்லப்பட்ட வாழ்வியல் விழுமியங்கள் அதே அளவு கொண்டாடப் படுகிறதா ? உண்மையில் வாழ்வியல் விழுமியங்களை அதிகம் சொல்ல வந்தது மெல்லிசைப் பாடல்களா ? துள்ளல் இசைப் பாடல்களா ? என்ற பட்டிமன்றத்திற்கு நாங்கள் தயாராகிறோம்.
    10ஆவது இலக்கிய இசையரங்கம் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றமாக நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் லிஷாவின் பெண்கள் பிரிவின் தலைவர் ஜாய்ஸ் கிங்ஸ்லி தலைமை ஏற்கவிருக்கிறார்.
    வாருங்கள் வாழ்த்துங்கள்.
    நாள்: அக்டோபர் 22 மாலை 6.30 மணி

КОМЕНТАРІ •