பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி பலருக்குத் தெரியாதது ! | Causes of Stroke | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2023
  • பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது?
    இந்தியாவில் அதிக இறப்புக்கு காரணமாக உள்ள நோய் பக்கவாதம். நம் நாட்டில் பக்கவாத நோயால் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
    இதில் ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். மேலும் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒருவர் பக்கவாத நோயால் மரணம் ஏற்படுகிறது.
    மூளைக்கு செல்லக்கூடிய இரத்தம் தடைபடுவதால் அல்லது இரத்தம் குறைவதால் பக்கவாத நோய் வருகிறது. நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புக்களுள் ஒன்று மூளை ஆகும். இதில் மூளை செல்களால் ஆனது.
    பொதுவாக மூளை இயங்க இரத்தம், ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மூளைக்கு தேவையான ஆற்றல் இரத்தத்திலிருந்து கிடைக்கிறது. மூளைக்கு செல்லக்கூடிய ஆக்சிஜன் இந்த இரத்தத்தின் கூடவே போகும்.
    இதில் மூளைக்கு ஆற்றல் கொடுக்கக்கூடிய இரத்தம் மற்றும் ஆக்சிஜன் இல்லையெனில் மூளையில் இருக்கக்கூடிய செல்கள் பாதிக்கப்பட்டு பின் மூளையைச் செயலிழக்கச் செய்கிறது. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம்.
    பக்கவாத நோய்க்கான காரணங்களான அதிக துரித உணவுகளை உண்பது, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயின் அளவைக் கட்டுக்குள் வைக்காமல் இருப்பது.
    ஒருவர் பக்கவாதம் நோயால் பாதிக்கபட்டுள்ளாரா என்று கண்டறிய அதன் ஒரு சில அறிகுறிகள் உள்ளது. அதை இப்பொழுது பார்க்கலாம்.
    பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு சில அறிகுறிகள்:
    1. முதலில் நடக்கச் சொல்ல வேண்டும். பின் அவர் நடையில் தடுமாற்றம் இருந்தால் பக்கவாத நோய்க்கான அறிகுறிகளாகும்.
    2. பார்வையைப் பரிசோதனை செய்யலாம். இதில் சாதாரணமாக பார்க்கும் பார்வை போல் இல்லாமல் சற்று வேறுபாடு இருக்கும் குறிப்பாக அவர்களுடைய பார்வை மங்கலாக தெரியும்.
    3. முகத்தில் ஒரு பக்கம் வேலைச் செய்யாமல் இருப்பது போல் இருக்கும் அதாவது ஒரு பக்கம் செயலிழந்ததைப் போல் தெரியும் மற்றும் இதில் நாக்கு கூட ஒரு பக்கமாகச் சென்று விடும்(நாக்கு தள்ளிடிச்சு).
    4. கை, கால்கள் சத்து இல்லாதது போல் உணர்வு(கை, கால்கள் விழுந்து விடுவது) அல்லது செயலிழந்ததை போல் உணர்வு இருக்கும்.
    5. பாதிக்கப்பட்டவரை பேசச் சொல்ல வேண்டும். பேச்சு தெளிவாக பேச முடியாது, பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.
    6 இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அல்லது சந்தேகம் இருந்தாலும் நீங்கள் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் காலம் தாழ்த்தக் கூடாது. நேரத்திற்கு அழைத்து செல்லவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    இன்றைய நவீன சிகிச்சை முறையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரைக் குணபடுத்த முடியும்.
    EMERGENCY SERVICE: 044 - 27528528 | 94990 59990
    Toll-Free: 1800 599 0999
    #strokesymptoms #stroke #paralysis #befast #braindysfunction
    #adhiparasakthihospitals #bloodclotting #adhiparasakthi #tamilhealthtips #tamilhealthtipsvideo

КОМЕНТАРІ •