ஸ்ரீ ரமண அருள் நோக்க வகுப்பு : Sri Ramana Arul Nokka Vahuppu

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 4

  • @spdevarajan2665
    @spdevarajan2665 Рік тому

    அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா

  • @ramanabakathan820
    @ramanabakathan820 2 роки тому

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாசல ரமணாய அருணாசலசிவ

  • @savithrivenkataraman8121
    @savithrivenkataraman8121 3 роки тому +3

    verse3
    இனித்தகுண நலத்துடனு மிறைக்குவெகு பிறப்புவழி
    படப்பழகி யவர்க்கிறைவ டிவத்திலரு - ளூட்டும்
    இசைப்புலவர் மொழிப்புலவர் கலைப்புலவ ரகத்தினவ
    நவப்புலமை மிகுத்தொளிர வெழிற்பிரபை - யூட்டும்
    இகத்திலொரு சுகத்திலெனு மினிப்புறுவ தறப்பழக
    விருப்பமுறு பவர்க்கரிய விசித்ரவழி - காட்டும்
    இறப்பிலெழு பயத்தையுத வியப்பொழுது மரிப்பதெது
    விருப்பதெது வெனத்தெளிய மிகுத்தவொளி - கூட்டும்
    பதச்சேதம்:-
    இனித்த குண நலத்துடனும் இறைக்கு வெகு பிறப்பு வழிப்பட பழகியவர்க்கு இறை வடிவத்தில் அருள் ஊட்டும்
    இசைப் புலவர் மொழிப் புலவர் கலைப் புலவர் அகத்தின் நவ நவப் புலமை மிகுத்து ஒளிர எழிற் பிரபை ஊட்டும்
    இகத்தில் ஒரு சுகத்திலெனும் இனிப்புறுவதறப் பழக விருப்பமுறு பவர்க்கு அரிய விசித்ர வழிகாட்டும்
    இறப்பில் எழு பயத்தை உதவி அப்பொழுது மரிப்பது எது இருப்பது எது எனத் தெளிய மிகுத்தஒளி கூட்டும்
    bestowing Grace as God in form to those who by sweet virtues have practiced worshipping Lord in many births,
    impregnating those who are talented in music - poetry - arts with new new skills to exhibit their forte in beautiful radiant forms,
    showing rare strange ways to those who desire to practise enjoying not even one worldly pleasure,
    helping with abundant clarity on what dies and what remains during death to those who fear death
    [is the benevolent gaze of Sri Ramana]
    verse4
    செனித்தமன முனைப்பகல செபப்பணியி லிணைத்தொருமை
    செயச்செபவ டிவிற்றிகழு மகப்பொருள - தாக்கும்
    செனித்தமன முதிக்குமிட மொடுக்கவொரு திருப்பமுடை
    யவர்க்ககமு ளிழுத்தசல வியற்கைவடி - வாக்குந்
    திரட்டியுள வபக்குவமு மொருப்படிவ மெனத்தகுதி
    திளைத்தவடி யனுக்குமொரு கடைக்கணுற - வாக்குந்
    திறத்தருண மலைக்கெழுர மணத்திருவ தனத்திலிரு
    ரவிக்குமுய ரொளிப்பரவு திருக்கணரு - ணோக்கே
    பதச்சேதம்:-
    செனித்த மனம் முனைப்பு அகல செபப் பணியில் இணைத்து ஒருமை செயச் செப வடிவில் திகழும் அகப் பொருளதாக்கும்
    செனித்த மனம் உதிக்கும் இடம் ஒடுக்க ஒரு திருப்பம் உடையவர்க்கு அகம் உள் இழுத்து அசல இயற்கை வடிவு ஆக்கும்
    திரட்டியுள அவபக்குவமும் ஒருப் படிவம் எனத் தகுதி திளைத்த அடியவனுக்கும் ஒரு கடைக்கண் உற ஆக்கும்
    திறத்த அருண மலைக்கு எழு ரமணத் திரு வதனத்தில் இரு ரவிக்கும் உயர் ஒளிப் பரவு திருக்கண் அருள் நோக்கே
    to remove the drive of the rising mind , those who do Japa and get focussed, the ‘I’ that shines clearly in that focussed japa,
    pulling inside the ego of those who turn their attention within so as to make the rising mind subside in its source thereupon making them experience the still natural state,
    bestowing grace even to this servant who [due to] accumulated immaturity takes this body form as fit to enjoy [sensual pleasures],
    the two shining eyes in the elegant face spreading more light than the sun rising in the Aruna mountain,
    is the benevolent gaze of Sri Ramana.
    🙏🙏🙏🙏🙏

  • @savithrivenkataraman8121
    @savithrivenkataraman8121 3 роки тому +3

    verse1
    அநித்தவுல குதித்துமல மிகுத்தவுட லெடுத்தவுயி
    ரனைத்துமத னெதிர்ப்பகைமை யறத்தன்வய - மாக்கும்
    அலைத்தமன முறுத்தகுணம் வெறித்தனமு மிகுத்தசுர
    மனித்தவுறு படைத்தவரு மழுக்ககல - நோக்கும்
    அறத்ததெது மறத்ததெது வெனத்தெரியு மதிச்சிறிது
    மிலர்க்குமுயர் வறத்திலொரு பிடிப்படைய - வூக்கும்
    அசுத்தமன மிழுத்தவழி திரித்துழலு பசுத்தனம
    னிதர்க்கவரை நடத்துபதி யெனக்கவலை - போக்கும்
    பதச்சேதம்:-
    அநித்த உலகு (உ)தித்து மல(ம்) மிகுத்த உடல் எடுத்த உயிர் அனைத்தும் எதன் எதிர் பகைமை அறத் தன் வயமாக்கும்
    அலைத்த மனம் உறுத்த குணம் வெறித்தனமு(ம்) மிகுத்த சுர மனித்த உறு படைத்தவரும் அழுக்கு அகல நோக்கும்
    அறத்ததெது மறத்ததெது எனத் தெரியும் மதி சிறிதும் இலர்க்கும் உயர் அறத்தில் ஒரு பிடிப்படைய ஊக்கும்
    அசுத்த மனம் இழுத்த வழி திரித்த சுழலு பசுத்தன மனிதர்க்கு அவரை நடத்து பதி எனக் கவலை போக்கும்
    [the benevolent gaze of Sri Ramana],
    to which all the lives that are born in a filthy body in the impermanent world forget their mutual animosity and subjugate,
    the sight of the One who took a human form that removes the blemishes of excessive flow of anger/fury/ devilish qualities produced by the wandering mind,
    that encourages a liking for higher knowledge even for those who do not have the least understanding of what morals / virtues are [to be followed], what forgetfulness has befallen [them]
    of the Master benefactor who removes the afflictions of those with animal traits (irrational, non discerning) wandering in the path pulled by the impure mind
    verse2
    தனித்தனையை யெமற்குரிமை கொடுத்தழுது தவிக்குமொரு
    சிசுக்குநிக ருளத்தடியர் தமக்கபய - மூட்டும்
    தணிக்கரிய மிகப்பெரிய தனப்பிரிவு மகப்பிரிவு
    தனிற்றுயர மிகுத்துவரு பவர்க்கமைதி - கூட்டும்
    தனத்தருற வினத்தர்மனை விபுத்திரரு நகைக்குமிடி
    தனைக்களைய நினைத்துவரு பவர்க்குதவி - காட்டும்
    தரித்தவுட லிடர்ப்பிணிக டவிர்ப்பதோடு மநித்யவுடல்
    விதிக்கமைய விடுத்தமைதி யுறற்குநினை - வூட்டும்
    பதச்சேதம்:-
    தனித்தனையை எமற்கு உரிமை கொடுத்து, அழுது தவிக்கும் ஒரு சிசுக்கு நிகர் உளத்து அடியர் தமக்கு அபயம் ஊட்டும்
    தணிக்கரிய மிகப் பெரிய தனப் பிரிவு, மகப் பிரிவு, தனித் துயரம் மிகுத்து வருபவர்க்கு அமைதிகூட்டும்
    தனத்தர் உறவினத்தர் மனைவி புத்திரரு(ம்) நகைக்கு(ம்) மிடி தனைக் களைய நினைத்து வருபவர்க்கு உதவி காட்டும்
    தரித்த உடல் இடர் பிணிகள் தவிர்ப்பதோடும் அநித்ய உடல் விதிக்கு அமைய விடுத்து அமைதி உறற்கு நினைவூட்டும்
    giving us the privilege of intimacy, infusing fearlessness in the devotees who cry and languish like a child,
    assuaging the unmitigable extreme personal sorrows of devotees like loss of wealth - child etc and giving them peace,
    helping those, ridiculed by wealthy relatives - even wife and son, who come to alleviate their poverty,
    along with warding off the diseases and sorrows afflicting the donned body, also reminding one to leave matters to destiny and remain calm
    [is the benevolent gaze of Sri Ramana]