நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும்/ஏற்கனவே உள்ள நோய்கள் குணமாகவும் படிக்க வேண்டிய பதிகங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • 1. அப்பர் பெருமான் அருளிய
    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈச னெந்தை யிணையடி நீழலே
    2. ஆழ்வார் அருளிய
    குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
    படு துயர் ஆயின எல்லாம்
    நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
    அருளொடு பெரு நிலம் அளிக்கும்
    வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
    தாயினும் ஆயின செய்யும்
    நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
    நாராயணா என்னும் நாமம்
    3. அருணகிரிநாதர் அருளிய
    இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி
    விடமேநீ
    ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே
    பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள்
    பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் அருள்வாயே
    வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக இசைபாடி
    வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே
    தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா
    சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே
    4. ஞானசம்பந்தர் அருளிய
    அவ்வினைக் கிவ்வினை யாமென்று
    சொல்லு மஃதறிவீர்
    உய்வினை நாடா திருப்பதும்
    உந்தமக் கூனமன்றே
    கைவினை செய்தெம் பிரான்கழற்
    போற்றுதும் நாமடியோஞ்
    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ
    றாதிரு நீலகண்டம். 1
    காவினை யிட்டுங் குளம்பல
    தொட்டுங் கனிமனத்தால்
    ஏவினை யாலெயில் மூன்றெரித்
    தீரென் றிருபொழுதும்
    பூவினைக் கொய்து மலரடி
    போற்றுதும் நாமடியோம்
    தீவினை வந்தெமைத் தீண்டப்பெ
    றாதிரு நீலகண்டம். 2
    முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற்
    றெவையு மெல்லாம்
    விலைத்தலை யாவணங் கொண்டெமை
    யாண்ட விரிசடையீர்
    இலைத்தலைச் சூலமுந் தண்டும்
    மழுவும் இவையுடையீர்
    சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ
    றாதிரு நீலகண்டம். 3
    விண்ணுல காள்கின்ற விச்சா
    தரர்களும் வேதியரும்
    புண்ணிய ரென்றிரு போதுந்
    தொழப்படும் புண்ணியரே
    கண்ணிமை யாதன மூன்றுடை
    யீருங் கழலடைந்தோம்
    திண்ணிய தீவினை தீண்டப்பெ
    றாதிரு நீலகண்டம். 4
    மற்றிணை யில்லா மலைதிரண்
    டன்னதிண் டோ ளுடையீர்
    கிற்றெமை யாட்கொண்டு கேளா
    தொழிவதுந் தன்மைகொல்லோ
    சொற்றுணை வாழ்க்கை துறந்துந்
    திருவடி யேயடைந்தோம்
    செற்றெமைத் தீவினை தீண்டப்பெ
    றாதிரு நீலகண்டம். 5
    மறக்கு மனத்தினை மாற்றியெம்
    மாவியை வற்புருத்திப்
    பிறப்பில் பெருமான் திருந்தடிக்
    கீழ்ப்பிழை யாதவண்ணம்
    பறித்த மலர்கொடு வந்துமை
    யேத்தும் பணியடியோம்
    சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ
    றாதிரு நீலகண்டம். 6
    இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7
    கருவைக் கழித்திட்டு வாழ்க்கை
    கடிந்துங் கழலடிக்கே
    உருகி மலர்கொடு வந்துமை
    யேத்துதும் நாமடியோம்
    செருவி லரக்கனைச் சீரி
    லடர்த்தருள் செய்தவரே
    திருவிலித் தீவினை தீண்டப்பெ
    றாதிரு நீலகண்டம். 8
    நாற்ற மலர்மிசை நான்முகன்
    நாரணன் வாதுசெய்து
    தோற்ற முடைய அடியும்
    முடியுந் தொடர்வரியீர்
    தோற்றினுந் தோற்றுந் தொழுது
    வணங்குதும் நாமடியோம்
    சீற்றம தாம்வினை தீண்டப்பெ
    றாதிரு நீலகண்டம். 9
    சாக்கியப் பட்டுஞ் சமணுரு
    வாகி யுடையொழிந்தும்
    பாக்கிய மின்றி இருதலைப்
    போகமும் பற்றும்விட்டார்
    பூக்கமழ் கொன்றைப் புரிசடை
    யீரடி போற்றுகின்றோம்
    தீக்குழித் தீவினை தீண்டப்பெ
    றாதிரு நீலகண்டம். 10
    பிறந்த பிறவியிற் பேணியெஞ்
    செல்வன் கழலடைவான்
    இறந்த பிறவியுண் டாகில்
    இமையவர் கோனடிக்கண்
    திறம்பயில் ஞானசம் பந்தன
    செந்தமிழ் பத்தும்வல்லார்
    நிறைந்த உலகினில் வானவர்
    கோனொடுங் கூடுவரே. 11
    5. அருணகிரிநாதர் அருளிய
    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 179

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 4 роки тому +3

    தங்களின் குரல் கேட்டாலே மனதிற்கு நிம்மதி மிக்க நன்றி சகோதரி

  • @BhakthiPasiTamil
    @BhakthiPasiTamil 9 днів тому

    முருகா என் நோய் தீர அருள்புரிய வேண்டும் அப்பா😢

  • @parvathamsankaran6836
    @parvathamsankaran6836 4 роки тому +1

    நமஸ்காரம். உங்களின் எந்த ஒரு ஆன்மீக தகவலும் மிகவும் நன்றாக புரிகிறது. விளக்கமும் நன்றாக உள்ளது.மேலும் நல்ல தகவல்கள் தரணும். கேட்டு தெரிந்து கொள்ளணும் என்று ஆசை படுகிறேன். ஓம் சக்தி ஓம்.

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 4 роки тому +2

    வணக்கம் மேடம் பதிகங்கள் தரும் பலன் பற்றி அருமையாக கூறியமைக்கு நன்றி. திருநீறு அணிவது பற்றிய பதிவு அருமை நன்றி.

  • @rajrenu3069
    @rajrenu3069 4 роки тому +1

    எங்கள் மனநிலைமைக்கு ஏற்றவாறு இந்த பதிவு இருக்கு மிக்க நன்றி

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +2

    நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும்/ஏற்கனவே உள்ள நோய்கள் குணமாகவும் படிக்க வேண்டிய பதிகங்கள் - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச.மங்கையர்க்கரசி

    • @vijayvija9844
      @vijayvija9844 Рік тому

      நோய்களிலிருந்து குணமாகவும் அம்மா கப்பாத்துக🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kalaiselvi5569
    @kalaiselvi5569 4 роки тому +3

    நன்றி அம்மா 🌹🌹🌹🌹.

  • @Bharathi-tr3uk
    @Bharathi-tr3uk 10 місяців тому +2

    மனக் கஷ்டங்கள் தீர வேண்டும் அம்மா .நிம்மதி இல்லாமல் இருக்கிறோம மனபயமும் எல்லா நேரமும் இருக்கிறது அம்மா நலம் பெற வேண்டும்

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    இந்த காலகட்டத்தில் இந்த பதிவு அருமையாக இருந்தது..அம்மா..🙇🙇🙇

  • @kalaivani6023
    @kalaivani6023 4 роки тому +2

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 10 місяців тому +2

    நன்றி அம்மா 🙏❤️

  • @suthaeswaramoorthy4679
    @suthaeswaramoorthy4679 4 роки тому +1

    உங்கள் இனிமையான குரலில் கேட்கும் அருமையாக இருக்கிறது.

  • @gokulanv6937
    @gokulanv6937 4 роки тому +1

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி மேடம்

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 роки тому +1

    மிகவும் சிறப்பு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🤗🤗🙏🤗

  • @Dlk57
    @Dlk57 4 роки тому +1

    Thank you so much Amma. Your devotional and speech about our ancient ethics are innumerable values to the young society. Thanks again wish to have lots more from you as like this.

  • @sundarisundari428
    @sundarisundari428 4 роки тому

    அம்மா மிக்க நன்றி தங்களின் இந்த கானொளி மனதின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அளிக்கிறது.

  • @universallibrary8032
    @universallibrary8032 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா ..

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Рік тому +1

    நன்றி குருமாதா

  • @kirubhasree3285
    @kirubhasree3285 4 роки тому +1

    ஓம் நமசிவாய
    நன்றிகள் பல பல அம்மா
    சிவாய நம

  • @sangeethasenthil8411
    @sangeethasenthil8411 4 роки тому +2

    நன்றி அம்மா

  • @Vijay-hr3dq
    @Vijay-hr3dq 4 роки тому +2

    Thank you Madam for giving a proper information for reciting.

  • @vijeasj5577
    @vijeasj5577 4 роки тому +11

    அம்மா நான் இதை முன்னரே பாராயணம் செய்து என் தந்தை மாரடைப்பு நீங்கியது.

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому +7

      அருமையான செய்தி.. பலர் பலன் அடைந்துள்ளனர்

  • @gomathigomathi7768
    @gomathigomathi7768 4 роки тому +1

    இந்த காலகட்டத்தில் உங்களுடைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள தாக இருக்கும்.நன்றி

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா..🙇🙇🙇

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 роки тому

    பலருக்கும் பயனுள்ள பதிவு.
    நன்றி சகோதரி

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 роки тому +2

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🥰🥰🥰🌹🌹🌹

  • @mythilisaishri8628
    @mythilisaishri8628 4 роки тому +1

    Nandri amma... Innum neraiya videos upload pannuga unga speech daily um kekanum pola iruku

  • @devakondasollu9210
    @devakondasollu9210 4 роки тому

    Beautiful speech! Kanda Shashti Kavasam is so powerful!

  • @vaithialingamsivakumar5522
    @vaithialingamsivakumar5522 4 роки тому

    Valga vaiagam valga VALAMUDAN
    God bless you and your family for Spiritual Awakening

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому

    Namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +1

    Good speech keep it up 👍🏿

  • @nithish.r.m
    @nithish.r.m 4 роки тому +4

    அம்மா என் ஊர் காரைக்கால், நிங்கள் ஒரு நாள் வந்து எங்கள் கயிலாயநாதரையும் காரைக்காலம்மையாரையும் வழிப்பாடு செய்து உங்கள் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்று என் ஆசை.pls reply amma

  • @aneeswargurushankar3652
    @aneeswargurushankar3652 4 роки тому

    அற்புதமான பதிவு. 🌺🌺🙏🙏🌺🌺நன்றி மேடம்.

  • @rajiswari527
    @rajiswari527 4 роки тому +1

    Migavum Nandri Amma

  • @hemalathakathiresan7819
    @hemalathakathiresan7819 4 роки тому +3

    Thank you so much mam

  • @parthebankaliyappan6283
    @parthebankaliyappan6283 4 роки тому +1

    மகிழ்ச்சி அம்மா

  • @ananthakrishnanv.s2191
    @ananthakrishnanv.s2191 4 роки тому +2

    Awesomatic presentation madam. Send abirami anthathi from part 1 to part 4. Please upload in youtube

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому

      It's already uploaded.
      Please search as Abirami Anthathi song1,2,3 & 4 (all songs separately)

  • @priyamohan6725
    @priyamohan6725 4 роки тому

    அம்மா மிக்க நன்றி அம்மா .

  • @chinnasamychinnasamy1026
    @chinnasamychinnasamy1026 4 роки тому

    Arumaiyana thagaval madam nandri

  • @vetriaruna9762
    @vetriaruna9762 4 роки тому +1

    வணக்கம் சகோதரி, நம் வாழ்வில் ஆண்,பெண் கடைபிடிக்க வேண்டிய நித்திய நியமங்கள் பற்றி கூறவும். நல்லொழுக்கங்கள் மனிதனை அடுத்த நிலைக்கு இட்டுச்செல்கின்றது. அதை தாங்கள் கூறினால் சிறப்பாக இருக்கும். நன்றியுடன்🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 4 роки тому

    Thank you sister nandrigal kodi🙏🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 роки тому

    Thank you madam for give this god slogam detail for reliefs from diseases.

  • @vadivelg
    @vadivelg 4 роки тому +1

    Neega ithu mathiri yengaluku payanula thagavalgala yeppavum sollanuma.. Nanga thavarama atha ketu nadapom.. ungal aanmiga karuthugal innum thodara vendum ena antha kaduvulai vendi kolkirom amma🙏🙏

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 4 роки тому +1

    Mikka nantri Amma 🙏🙇

  • @johnsondhanapal1148
    @johnsondhanapal1148 4 роки тому +1

    நாயன்மார்களின் வரலாறு பற்றி கூறியமைக்கு நன்றி.அடுத்த நாயன்மார்களின் வரலாறு பற்றிய காணொளி எப்பொழுது இடுவீர்கள்

  • @kmaniisharpkmanii
    @kmaniisharpkmanii 4 роки тому +2

    Nandri amma... அம்மா எனக்கு ஒரு சந்தேகம் தெய்வங்கள் தவத்தில் இருக்கின்றனர் என்று ஒரு பதிவில் கூறினீர்கள் அப்படியானால் நாம் முறையாக வழிபடுவது சரியா ?நாளை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கேட்கிறேன். தவத்தை களைப்பது போல் ஆகி விடாதா? Solla maranthu vitten today also 1st comment.

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 роки тому

    நன்றி மா ரொம்ப யூஸ்புல்லா இருக்குது மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏

  • @kanagavalli7999
    @kanagavalli7999 4 роки тому +2

    நன்றி அக்கா

  • @sharmikhasreevelenr.6656
    @sharmikhasreevelenr.6656 4 роки тому

    Thank u so much ma kodana kodi nantrigal

  • @manthiramoorthy2863
    @manthiramoorthy2863 4 роки тому +1

    Nandri Amma.

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 4 роки тому

    உங்கள் பதிவை கேட்டாலும் புத்துணர்ச்சி ஏற்படும் அம்மா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому

    மேடம். தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому

      உங்கள் கேள்விக்கு நாளை இமெயில் அனுப்புகிறோம்

    • @DhivyapP-yh7sd
      @DhivyapP-yh7sd 2 роки тому

      @@AthmaGnanaMaiyam படித்தால் நடக்குமா அம்மா

  • @muthukumar5512
    @muthukumar5512 4 роки тому

    அருமை அம்மா ஓம் சரவணபவ 🦚🦚🦚

  • @mv4689
    @mv4689 4 роки тому

    Thank you so much from London

  • @kavithasanju2570
    @kavithasanju2570 4 роки тому

    Amma pls upload nayanmargal varalaru and thiruvilaiyadal Purana🙏🙏waiting a lotttt

  • @geethasaraswathi7989
    @geethasaraswathi7989 4 роки тому

    Very good 👍 God bless you

  • @nithish.r.m
    @nithish.r.m 4 роки тому +2

    அம்மா என் ஊர் காரைக்கால், நிங்கள் ஒரு நாள் வந்து எங்கள் கயிலாயநாதரையும் காரைக்காலம்மையாரையும் வழிப்பாடு செய்து உங்கள் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்று என் ஆசை.pls reply amma.

  • @saisanthosh6845
    @saisanthosh6845 4 роки тому

    Tq so much Amma... 🙏🙏❣️❣️Love u so much Amma... 🙏🙏amma pls explain Sai baba pooja at home plz earrings waiting for next voided.... 🙏🙏

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 роки тому +2

    Thank you ma🙏🙏

  • @RajeshRamDev50
    @RajeshRamDev50 4 роки тому +1

    nandri amma

  • @sivathasanmathyvannan8003
    @sivathasanmathyvannan8003 4 роки тому +1

    Thankyou amma🙏🇩🇪

  • @rmanimekalai4740
    @rmanimekalai4740 4 роки тому +1

    Super Akka.nandri Akka.

  • @shreevenkat1545
    @shreevenkat1545 4 роки тому +1

    Usefull and super

  • @malathivivek8141
    @malathivivek8141 4 роки тому +6

    அம்மா கர்ப்பப்பை பிரச்சினை தீர பதிகம் இருந்தா சொல்லுங்க

  • @kalaivani6023
    @kalaivani6023 4 роки тому

    Thank you madam. Is there any pathigam/ slogan or pooja for gynaecology problem like UTERUS (fibroid,pcos,pcod), HARMONE IMBALANCE. Kindly tell me remedy for that madam plz, thank you.

  • @nageswary7146
    @nageswary7146 4 роки тому +1

    Thanks Mdm

  • @swapnas5549
    @swapnas5549 4 роки тому

    Thank you so much sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manthiramoorthy2863
    @manthiramoorthy2863 4 роки тому

    Thanks Amma useful video 😃😃

  • @Usermade6556
    @Usermade6556 4 роки тому

    Aahaa miga miga arumai amma🙏

  • @anuradhasub
    @anuradhasub 4 роки тому

    Thank you so much

  • @gokilamahesh1580
    @gokilamahesh1580 4 роки тому

    Nandri amma. Tamil la idhu pola iruppathellam naan ariyen. Padikkum poluthe nambhikkayum porakkirathu. Thamadhu sevaikku nandrigal kodi 🙏🏾

  • @akshayarajkapoor583
    @akshayarajkapoor583 4 роки тому +1

    Nanriamma

  • @ganeshanv7
    @ganeshanv7 4 роки тому +1

    Nanri amma 🙏

  • @sathyas1487
    @sathyas1487 4 роки тому +2

    Kolaru pathigam pattri solluga Amma

  • @medyraj8309
    @medyraj8309 4 роки тому

    Kak,,, I learn so much knowledge for u,,,,, god bless you akka

  • @sankarivdm7038
    @sankarivdm7038 4 роки тому +1

    Amma vannakam karupai perchanai theera pathikam iruthal sollungal amma

  • @naveenvenkatesh6435
    @naveenvenkatesh6435 4 роки тому +1

    We are waiting for nayanmar varalaru and thiruvilayadal puranam

  • @barathmani91
    @barathmani91 4 роки тому

    அக்கா, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் அதை எப்படி பாராயணம் செய்வது என்பதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன். 🙏

  • @shanthia3311
    @shanthia3311 Рік тому +2

    Mikka nantri Amm🙏🙏🙏🙏

  • @Bharathi-tr3uk
    @Bharathi-tr3uk 10 місяців тому +1

    அம்மா உடல் வலியால் தசைபிடிப்பு வலியால் நுரையீரல் சளி wizzing பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் முழுவதும் குணமாக வில்லை என்ன எந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுவது என்று சொல்லுங்கள் அம்மா.வலி தாங்க முடியாமல் அழுகிறார்கள் wizzing சிரம்படுகிறார்கள்

  • @astrology1247
    @astrology1247 4 роки тому +1

    சிவாயநம

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 роки тому +1

    Thanks Mam

  • @umashankariseetharaman1747
    @umashankariseetharaman1747 4 роки тому +1

    Nantri amma

  • @RajeshKumar-fg3xf
    @RajeshKumar-fg3xf 4 роки тому

    thanks a lot amma.

  • @gayathirisai920
    @gayathirisai920 4 роки тому +1

    Thank you amma

  • @Jaya.Satheesh
    @Jaya.Satheesh 4 роки тому

    Thank u so much..ma

  • @venkattesh5502
    @venkattesh5502 4 роки тому +1

    Om namashivaya

  • @thilagavathinadarajah8082
    @thilagavathinadarajah8082 4 роки тому

    Thank you madam

  • @vsparamasivam993
    @vsparamasivam993 4 дні тому

    4:11

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому

    மகிழ்ச்சி. ஒரு யோசனை. பதிகங்கள் கொடுக்கும் போது Word File ஆகக் கொடுக்காமல் PDF ஆகக் கொடுத்தால் நாங்கள் எடுத்து எங்கள் கணினியில் ஏற்றும் போது மாறாமல் இருக்கும். நன்றி.

  • @karthigaalagappan745
    @karthigaalagappan745 4 роки тому

    Amma, enaku niraya pathigangal manappadam Sriya vendum ena aasaiyaga ullathu. Isaiyodu allamal seiyulai neengal solvathu pola ganeer endru sollanumnu virumbaren. Athai eppadi padipathunu sollunga Amma. Eppo nan sivapuranam padam panni thinamum sollitu iruken. Athu pola niraya thevara thiruvasangal padikanumnu aasai. Uthavungal..

  • @petchik3233
    @petchik3233 4 роки тому +1

    சண்முககவசம்....எங்களுடைமூச்சாக.வேண்டூம்..பாம்பன்சாமியேசரனம்

  • @geethashiva1968
    @geethashiva1968 4 роки тому +1

    Thankyou mam🙏

  • @nivethaarumugam4482
    @nivethaarumugam4482 4 роки тому

    நன்றி அம்மா இந்த வாரம் 63 நாயன்மார்கள் பற்றி பதிவு?

  • @thiruvasagam7253
    @thiruvasagam7253 4 роки тому +1

    அம்மா நாயன்மார்கள் வரலாறு இன்னும் கொடுக்கவில்லையே. ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.

  • @sankaragomati3836
    @sankaragomati3836 4 роки тому

    Thanks Amma

  • @vijeasj5577
    @vijeasj5577 4 роки тому +1

    சண்முக கவசம் மிக வலிமை கொண்டது

  • @sankarapandiyanm1941
    @sankarapandiyanm1941 4 роки тому +1

    நாயன்மார்கள் வரலாறு கூறுங்கள்

  • @jsubramanyam2243
    @jsubramanyam2243 4 роки тому

    Sister explain about vastu Shastra tips

  • @TN55traveller
    @TN55traveller 4 роки тому

    Psoriasis problem enoda sister ku iruku.... Marriage vera pananum.. Athuku evalovo treatment pandrom sari vara matithu.. Athuku enna panrathu... Muraiyana valipadu solunga