சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன? அதை குணப்படுத்த முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2016
  • www.kauveryhospital.com/
    வணக்கம். நான் காவேரி மருத்துவமனையில் தலைமை நெஃப்ராலஜிஸ்ட், அதாவது சிறுநீரக சிகிச்சை மருத்துவராக பணி புரிகின்றேன். இந்த நிகழ்ச்சியில் சிறுநீரக செயலிழப்பு பற்றிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.இது பரவலாக குழந்தை முதல் முதியவர் வரை எவரையும் பாதிக்கக்கூடும். நாம் இது பற்றி பயப்பட தேவையில்லை. இந்த நோயை தற்காலிகமானது மற்றும் நீண்ட நாட்களாக உள்ள நிரந்தரமானது என்று வகைப்படுத்தலாம்.
    தற்காலிக நோய் தொற்று, காயம், மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் தாமாகவே சில மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களினால் ஏற்படலாம். இதன் காரணமாக வாந்தி, நீர் மலம், சிறு நீரில் இரத்தம், கை கால் முகவீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.இந்த தற்காலிக நோயின் காரணத்தை இரத்த மாதிரியின் சோதனை மற்றும் பயாப்ஸி எனப்படும் சதை சோதனை ஆகியவற்றின் மூலம் கண்டுபிடித்து மருந்துகளினால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.
    நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நீண்ட காலமாக கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை வியாதி மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பெறும்பாலும் ஏற்படுகிறது. இதை ஆரம்ப கட்ட ,நடுத்தர மற்றும் நீண்ட கால நோய் என்று வகைப்படுத்தலாம். எத்தகைய நிலை நோயாக இருந்தாலும் பயப்படத்தேவையில்லை.குணப்படுத்த மருத்துவம் உள்ளது. டயாலிசிஸ் ,மாற்று சிறுநீரகம் பொருத்துதல் போன்ற மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. இது குணப்படுத்தமுடியாத நோய் அல்ல. தேவைக்கேற்ப டயாலிசிஸ் மருத்துவமோ அல்லது மாற்று சிறுநீரக சிகிச்சையோ மேற்கொண்டு இயல்பான வாழ்க்கை வாழலாம். எனவே, நோயின் அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெற்று நலமாக வாழவும். நன்றி
    www.kauveryhospital.com/cente...
    #KIDNEYFAILURE #DIALYSIS #TAMIL #HEALTH #facts #kidneydisease #renalfailure #kidneyfailure #chronickidneydisease
    Twitter
    @kauveryhospital
    Facebook
    @kauveryhospitalchennai
    @KauveryHospitalTrichy
    @kauveryhospitalkaraikudi
    @kauveryhospitalhosur
    @KauveryHospitalSalem
    Linkedin
    @KauveryHospitalGroup
    Instagram
    @kauveryhospital
    Podbean
    @kauveryhospital

КОМЕНТАРІ •