ஆக்காட்டி பத்திருக்கின்களா? ஆள் காட்டி என்பதனின் சொல் வழக்கு தான் ஆக்காட்டி. காட்டில் இது இருக்கும் இடத்திற்கு எதாவது நடமாட்டம் இருந்தால் சத்தமிடும் . ( வீரப்பனே இந்த ஆக்காட்டி சத்தத்தை வைத்து நடமாடினான் என்று மலை மக்கள் செல்வதுண்டு .) ஆக்காட்டி இல் இரு வகை உண்டு . Yellow wattle lab wing ,red wattle lab விங். ஜெயா மூர்த்தி பாடிய இந்த பாட்டு புதுவை பல்கலை கழக பேராசிரியர் குண சேகரன் அவர்கள் தொகுத்த நட்டு புற பாட்டு. அந்த உருண்ட மலை ஓரத்துல... உருண்ட மலை ஓரத்துல உருண்ட மலை ஓரத்துல உளுந்து காயப் போட்டிருந்தேன்... அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே... அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன... ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி எங்கெங்கே முட்டையிட்டே? எங்கெங்கே முட்டையிட்டே? எங்கெங்கே முட்டையிட்டே...? நாங் கல்லத் தொளைச்சி கருமலையில் முட்டையிட்டேன் கருமலையில் முட்டையிட்டேன் கருமலையில் முட்டையிட்டேன்... நான் இட்டது நாலு முட்டை பொரிச்சது மூனு குஞ்சு ஐயா நான் இட்டது நாலு முட்டை பொரிச்சது மூனு குஞ்சு அந்த மூனு குஞ்சுல மூத்த குஞ்சிக்கெரை தேடி மூனு மலை சுத்தி வந்தேன் நடு குஞ்சிக்கெரை தேடி நாலு மல சுத்தி வந்தேன் இளைய குஞ்சிக்கெரை தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே... என்னை கானாங்குறத்தி மகன், ஐயா என்ன கானா...கானா...ங் குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான் என்னை கானாங் குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான் எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே றெக்க ரெண்டும் மாரடிக்க றெக்க ரெண்டும் மாரடிக்க றெக்க ரெண்டும் மாரடிக்க நான் பெத்த மக்கா நான் அழுத கண்ணீரு ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட ஏரி பெருகி எருது குளிப்பாட்ட பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட நான்... பெத்த... மக்கா... நான் பெத்த மக்கா உங்கள பாதியில விட்டு நான் இப்போ பரலோகம் போறேனே...போறேனே...போறேனே... (வேகமாய்) ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2) வலை என்ன பெருங்கனமா? அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2) சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2) அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம் அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம் வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2) வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம் வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
மதிப்பிற்குரிய ஐய்யா வணக்கம்,இந்த பாடல் என் மனம் கவர்ந்த பாடல்,நான் பல கோடி வணக்கத்தை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்,மிக்க மகிழ்ச்சி.
நான் இதைவிட அழகாக பாடுவேன்
விரைவில் பாடி பதிவிடவும்..காத்திருக்கிறோம்
Video send pannunga
உங்கள் குரலுக்கு உலகில் எதுவுமே ஈடே இல்லை
ஆக்காட்டி பத்திருக்கின்களா? ஆள் காட்டி என்பதனின் சொல் வழக்கு தான் ஆக்காட்டி. காட்டில் இது இருக்கும் இடத்திற்கு எதாவது நடமாட்டம் இருந்தால் சத்தமிடும் . ( வீரப்பனே இந்த ஆக்காட்டி சத்தத்தை வைத்து நடமாடினான் என்று மலை மக்கள் செல்வதுண்டு .) ஆக்காட்டி இல் இரு வகை உண்டு . Yellow wattle lab wing ,red wattle lab விங். ஜெயா மூர்த்தி பாடிய இந்த பாட்டு புதுவை பல்கலை கழக பேராசிரியர் குண சேகரன் அவர்கள் தொகுத்த நட்டு புற பாட்டு.
அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...
ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...
நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...
என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...
(வேகமாய்)
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)
வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)
சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
Great Work
Thank you so much
Vera level sir neenga😊🎉
Nice song palavatam keta padal👌👌👌
அண்ணா இந்த பாடலை super singerல பாடுங்க
முதல் பரிசு உங்களுக்குத்தான்..
Super anna
Super annnnnnnnnnnnna💖💖💖💖❤❤❤❤❤💕💕💕
மக்கள் இசைக்கு என்றுமே தனி சிறப்பு உண்டு
0:1
Indha song ooda oringinal link
Or sond details sollunga broo
Aakati aakati
இந்த பாடல் முனைவர் புதுவை சித்தன் ஜெயமூர்த்தி அவர்களின் பாடல்
Hii bro
அருமையான பதிவு
Op. Song
Super beautiful song
👌🏻song
புல்லாங்குழலை ஊதி பாடின அழகையே கெடுத்து விட்டார்கள்
Vera 11
Good. Fleeing. Song. 😰😰😰😰😰👍👍👍❤❤❤
Super this song
Hi uninhaloda padalama
Ian name eshwar elamathi my Mani name
Please Nanu paduran
Elamathi Nenga Nalla sing pannuvingla
Anna supper song
👍👍👍🙏🙏🙏
Not good voice
Hi uninhaloda padalama
Hi Anna super