முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
🦚அரோகரா🦚 🦚முருகா நீயே துணை 🦚 பழனி திருப்புகழ்...... தனதனன தத்த தான தனதனன தத்த தான தனதனன தத்த தான ...... தனதான ......... பாடல் ......... கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய கபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர் கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு கலகலென மிக்க நூல்க ...... ளதனாலே சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி தெரிவரிய சித்தி யான ...... வுபதேசந் தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு திருவடியெ னக்கு நேர்வ ...... தொருநாளே கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு குரகதமு கத்தர் சீய ...... முகவீரர் குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை ...... விடுவோனே பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார பரிமளத னத்தில் மேவு ...... மணிமார்பா படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு பழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய ... தாம் கற்ற கலைகளைக் கொண்டு, பெளத்தர்களும், விருப்பமான கிரியைகளைச் செய்வதே நியதி என்று கருதும் கருமவாதிகளும், முகமதியர்களும், மாயாவாதிகளும், கபிலர் பகர் அக்கணாதர் உலகாயர் ... கபில முனிவர் நிறுவிய சாங்கியர்களும், சொல்லப்பட்ட அந்தக் காணாபத்யர்களும், உலகாயதர்களாகிய சமூகவாதிகளும், கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு ... கலகம் புரியும் தர்க்கவாதிகளான வாம மதத்தினரும், பைரவர்களும், தம்முடன் மாறுபட்ட கொள்கையுடன் கலகல என மிக்க நூல்கள் அதனாலே சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ... சத்தத்துடன் அதிக விதமான நூல்களின் மேற் கோள்களுடன் சண்டை இட்டு, எதிர் தாக்கி வாது செய்தாலும், ஒருவர்க்கு(ம்) நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் ... ஒருவருக்குமே உண்மை இதுதான் என்று தெரிதற்கு அரிதான, வீடு தரும் பொருளான உபதேசத்தை, தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே ... யான் அறியும்படி விளக்கி ஞான தரிசனத்தையும் அருளி, மேம்பட்ட உனது திருவடியை எனக்குத் தந்தருளும் நாள் உண்டோ? கொலை உற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு ... கொலைகள் நேரும்படியாக எதிர்த்து வந்த கோரமான யானை முகமுடைய தாரகாசுரனுடன் குரகத முகத்தர் சீய முக வீரர் குறை உடல் எடுத்து வீசி ... குதிரை முகமுடையவர்கள், சிங்க முகம் உடையவர்கள் ஆகிய பல அசுர வீரர்களின் குறைபட்ட உடலை எடுத்து வீசி எறிந்து, அலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே ... பேயும் பத்ர காளியும் மகிழ்ச்சி அடைந்து வாயால் குலவை ஒலி (நாவை உதடுகளுக்கு இடையே வேகமாக அசைத்து எழுப்பும் ஒலியை) எழுப்ப, வெற்றி வேலைச் செலுத்தியவனே, பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணிமார்பா ... நல்ல விளைச்சல் இருந்த தினைப் புனத்தில் உலாவுகின்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் அழகிய, கனத்த, வாசனையுடன் கூடிய மார்பினைத் தழுவிய அழகிய மார்பனே, படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே. ... ஒன்றோடொன்று போர் செய்து கொண்டு மிக்கெழுந்த பெண் குரங்குகள் மழை பொழியும் மேகத்தைக் கண்டு அஞ்சி ஏறி ஒளிந்து கொள்ளும் பழனி மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
முருகன் அருள் என்றும் உனக்கு உண்டப்பா. வாழ்க உன் பணி முருகா சரணம்.
🦚அரோகரா🦚
🦚முருகா நீயே துணை 🦚
பழனி திருப்புகழ்......
தனதனன தத்த தான தனதனன தத்த தான
தனதனன தத்த தான ...... தனதான
......... பாடல் .........
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க ...... ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான ...... வுபதேசந்
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
திருவடியெ னக்கு நேர்வ ...... தொருநாளே
கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
குரகதமு கத்தர் சீய ...... முகவீரர்
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை ...... விடுவோனே
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமளத னத்தில் மேவு ...... மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய ... தாம்
கற்ற கலைகளைக் கொண்டு, பெளத்தர்களும், விருப்பமான
கிரியைகளைச் செய்வதே நியதி என்று கருதும் கருமவாதிகளும்,
முகமதியர்களும், மாயாவாதிகளும்,
கபிலர் பகர் அக்கணாதர் உலகாயர் ... கபில முனிவர் நிறுவிய
சாங்கியர்களும், சொல்லப்பட்ட அந்தக் காணாபத்யர்களும்,
உலகாயதர்களாகிய சமூகவாதிகளும்,
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு ... கலகம்
புரியும் தர்க்கவாதிகளான வாம மதத்தினரும், பைரவர்களும்,
தம்முடன் மாறுபட்ட கொள்கையுடன்
கலகல என மிக்க நூல்கள் அதனாலே சிலுகி எதிர் குத்தி
வாது செயவும் ... சத்தத்துடன் அதிக விதமான நூல்களின் மேற்
கோள்களுடன் சண்டை இட்டு, எதிர் தாக்கி வாது செய்தாலும்,
ஒருவர்க்கு(ம்) நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் ...
ஒருவருக்குமே உண்மை இதுதான் என்று தெரிதற்கு அரிதான,
வீடு தரும் பொருளான உபதேசத்தை,
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி
எனக்கு நேர்வது ஒரு நாளே ... யான் அறியும்படி விளக்கி ஞான
தரிசனத்தையும் அருளி, மேம்பட்ட உனது திருவடியை எனக்குத்
தந்தருளும் நாள் உண்டோ?
கொலை உற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு ...
கொலைகள் நேரும்படியாக எதிர்த்து வந்த கோரமான யானை
முகமுடைய தாரகாசுரனுடன்
குரகத முகத்தர் சீய முக வீரர் குறை உடல் எடுத்து வீசி ...
குதிரை முகமுடையவர்கள், சிங்க முகம் உடையவர்கள் ஆகிய
பல அசுர வீரர்களின் குறைபட்ட உடலை எடுத்து வீசி எறிந்து,
அலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை
விடுவோனே ... பேயும் பத்ர காளியும் மகிழ்ச்சி அடைந்து வாயால்
குலவை ஒலி (நாவை உதடுகளுக்கு இடையே வேகமாக அசைத்து
எழுப்பும் ஒலியை) எழுப்ப, வெற்றி வேலைச் செலுத்தியவனே,
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள
தனத்தில் மேவு மணிமார்பா ... நல்ல விளைச்சல் இருந்த தினைப்
புனத்தில் உலாவுகின்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் அழகிய,
கனத்த, வாசனையுடன் கூடிய மார்பினைத் தழுவிய அழகிய மார்பனே,
படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி
மலை உற்ற தேவர் பெருமாளே. ... ஒன்றோடொன்று போர் செய்து
கொண்டு மிக்கெழுந்த பெண் குரங்குகள் மழை பொழியும் மேகத்தைக்
கண்டு அஞ்சி ஏறி ஒளிந்து கொள்ளும் பழனி மலையில் வீற்றிருக்கும்,
தேவர்களின் பெருமாளே.
🦜முருகா சரணம்
நன்றி ஐயா...🦚
🙏🙏🙏
🦚அரோகரா🦜
🦜முருகா நீயே துணை 🦚
🌸இத் திருப்புகழ் உங்கள் வாழ்கைக்கு உரியது இதனை தொடர்ந்து 48 நாட்கள் பொருள் உணர்ந்து பாராயணம் செய்யும் பொழுது முருகன் அருளால் உங்கள் பிறவி பயன் அடைவீர்கள்......🌸
🦜 திருச்செந்தூர் திருப்புகழ்......🦜
தந்தன தானான தானன
தந்தன தானான தானன
தந்தன தானான தானன ...... தனதான
......... பாடல் .........
கொம்பனை யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே
உம்பர்கள் ஸ்வாமிந மோநம
எம்பெரு மானேந மோநம
ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர மேபோல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
கொம்பனையார் காது மோது இரு கண்களில் ... பூங்கொடி
போன்ற மாதர்களின் காதுவரை நீண்டு அதை மோதும் இரண்டு
கண்களிலும்,
ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகமேவு
கொங்கையில் ... வாசம் மிக்கதும், குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம்,
நகைகள் அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களிலும்,
நீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையில் ...
நீர்த் தடாகத்தின் மேல் வளரும் செங்கழுநீர் மலர்மாலையைச் சூடிய
கூந்தலிலும்,
ஆதார சோபையில் மருளாதே ... உடலின் அழகிலும்
மயங்காமல்,
உம்பர்கள் ஸ்வாமி நமோநம ... தேவர்களின் ஸ்வாமியே போற்றி,
போற்றி,
எம்பெருமானே நமோநம ... எங்கள் பெருமானே போற்றி, போற்றி,
ஒண்டொடி மோகா நமோநம ... ஒளி பொருந்திய வளையல்களை
அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி,
எனநாளும் உன்புகழேபாடி ... என்று தினமும் உனது புகழையே
பாடி
நானினி அன்புடன் ஆசார பூசைசெய்துய்ந்திட ... யான் இனி
அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும்,
வீணாள்படாதருள் புரிவாயே ... என் வாழ்நாள் வீண் நாளாகப்
போகாதபடியும் அருள் புரிவாயாக.
பம்பரமேபோல ஆடிய சங்கரி ... பம்பரம் போலவே சுழன்று
நடனம் ஆடும் சங்கரி,
வேதாள நாயகி ... வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு)
தலைவி,
பங்கய சீபாத நூபுரி கரசூலி ... தாமரை போன்ற திரு நிறைந்த
பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத்
தரித்தவள்,
பங்கமி லாநீலி மோடிபயங்கரி ... குற்றமில்லாத கருநீல
நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள்
(தந்த பயத்தைப் போக்குபவள்)
மாகாளி யோகினி ... மகா காளி, யோகத்தின் தலைவியாகிய
அன்னை பார்வதி,
பண்டுசுராபான சூரனொடெதிர் போர்கண்டு ... முன்பு மதுபானம்
செய்திருந்த சூரனோடு நீ எதிர்த்துப் போர் செய்யவேண்டி,
எம் புதல்வா வாழி வாழியெனும்படி ... என் மகனே நீ வாழ்க, வாழ்க
என்று ஆசி கூறும் வகையில்
வீறான வேல்தர என்றுமுளானே ... வெற்றியைத் தரும்
வேலாயுதத்தைத் தரப்பெற்ற, என்றும் அழியாது விளங்கும் மூர்த்தியே,
மநோகர வயலூரா ... மனத்துக்கு இன்பம் தருபவனே, வயலூர்ப்
பெருமானே,
இன்சொல் விசாகா க்ருபாகர ... இனிய சொற்களை உடைய
விசாகப் பெருமானே, கருணை நிறைந்தவனே,
செந்திலில் வாழ்வாகியே யடியென்றனை ... திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் செல்வமாகி அடியேனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே. ... உய்விக்கும்படியாக வாழ்வை
எனக்கு அருளும் பெருமாளே.
OM Murugaaaa OM Murugaaaa OM Murugaaaa OM Murugaaaa OM Murugaaaa OM Murugaaaa.
🦚அரோகரா🦚
🦚முருகா நீயே துணை 🦚
🦚அரோகரா🦚
🦚முருகா நீயே துணை 🦚
திருத்தணிகை திருப்புகழ்......
தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்
தத்ததன தான தத்தம் ...... தனதான
......... பாடல் .........
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான
எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்
கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல்
பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
பெற்றிடநி னாச னத்தின் ...... செயலான
பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
பெத்தமுமொ ராது நிற்குங் ...... கழல்தாராய்
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
திக்குகளொர் நாலி ரட்டின் ...... கிரிசூழச்
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
செக்கர்நிற மாயி ருக்கும் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
எத்தனைக லாதி சித்து அங்கு எத்தனை ... எத்தனை கலகச்
சண்டைகள், எத்தனை சித்து வேலைகள்,
வியாதி பித்து அங்கெத்தனை ... அங்கு எத்தனை வியாதிகள்,
எத்தனை பைத்தியக்காரச் செயல்கள்,
சர அசரத்தின செடமான ... அசையும் உயிராகவும்,
அசையாததாகவும் உலகில் எடுத்த உடல்கள் எத்தனை,
எத்தனைவிடாவெருட்டு ... நீங்காத அச்சம் தரும் செயல்கள்
எத்தனை,
அங்கெத்தனைவல் ஆண்மை ... அங்கே வலிமையுடைய
ஆண்மைச் செயல்கள்தாம் எத்தனை,
பற்றங்கு எத்தனைகொல் ... அங்கே ஆசைகள் எத்தனை
விதமானவையோ,
ஊனை நித்தம் பசியாறல் ... புலால் உண்டு தினந்தோறும்
பசியாறக்கூடிய செயல்கள் எத்தனை,
பித்தனையன் நான் அகட்டு உண்டு ... பித்துப்பிடித்தவன்
போன்ற யான் வயிற்றில் உண்டு
இப்படிகெ டாமல் முத்தம் பெற்றிட ... இவ்வாறு கெட்டுப்
போகாமல் பிறவியினின்றும் விடுதலை பெற்றிட,
நினா சனத்தின் செயலான பெற்றியும் ... உனது அடியார்
கூட்டத்தின் செயல்களான தன்மையும்,
ஒராது நிற்கும் ... யாராலும் உணர்தற்கு அரியதாக நிற்பதும்,
தத்த குரு ... பரவிப் பிரகாசிக்கின்ற ஒளிமயமான
தார நிற்கும் ... ப்ரணவ மந்திரப் பொருளாக நிற்பதும்,
பெத்தமும் ஒராது நிற்கும் கழல்தாராய் ... பாச பந்தங்களால்
அறிவதற்கு அரிதாக நிற்பதுமான உன் கழல்களைத் தந்தருள்க.
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ் ... (இதே) தாளத்தில் ஒலிக்கும்
சதபேரி ... நூற்றுக்கணக்கான முரசுகளின் ஒலயுடன்,
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் ...
சித்தர்களும், மலை வேடர்களும், அரசர்களும்,
இறைவனின் அடியார்களும்,
திக்குகளொர் நாலிரட்டின் கிரிசூழ ... எட்டுத் திக்குகளிலும்
மலையை வலம் வந்து பணிய,
செக்கண் அரிமா கனைக்குஞ் சித்தணிகை வாழ் ... சிவந்த
கண்களை உடைய சிங்கம் கர்ஜிக்கும் ஞானத் திருத்தணிகை
மலையில் வாழ்பவனே,
சிவப்பின் செக்கர்நிறமாயிருக்கும் பெருமாளே. ... செக்கச்
சிவந்த நிறத்திலே இருக்கும் பெருமாளே.
தமிழ் தான்... ஆனாலும் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. கேட்க இனிமையாக இருக்கிறது. அர்த்தத்தையும் வெளியிட்டால் நன்றாயிருக்கும்.
🦚அரோகரா🦚
🦚முருகா நீயே துணை 🦚
வரும் பதிவுகளில் கண்டிப்பாக அர்த்தத்துடன் பதிவு செய்கிறேன்...🙏
🦚ஐயா இப்பாடலுக்குரிய தமிழ் அர்த்தம் பதிவிட்டுள்ளேன் படித்து பயன்பெறுங்கள். முருகன் அருள் பெறுங்கள் 🦚
மேலும் அதிகமான முருகன் பற்றிய திருப்புகழ், கந்தர் அலங்காரம் ,கந்தர் அனுபூதி பற்றி தெரிந்து கொள்ள கௌமாரம் இணையதளத்தை பார்க்கவும்..
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
திருப்பரங்குன்றம் திருப்புகழ்......
......... பாடல் .........
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
உனைத்தி னந்தொழு திலன் ... யான் உன்னைத் தினந்தோறும்
தொழுவதும் இல்லை.
உனதியல்பினை உரைத்திலன் ... உன் தன்மைகளை எடுத்து
உரைப்பதுமில்லை.
பல மலர்கொடுன் அடியிணை ... பல மலர்கள் கொண்டு உன்
திருவடிகளை
உறப்ப ணிந்திலன் ... பொருந்தப் பணியவில்லை.
ஒருதவ மிலன் ... ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை.
உனதருள்மாறா உளத்து ளன்பினர் ... உன்னருள் நீங்காத
உள்ளத்தை உடைய அன்பர்
உறைவிடம் அறிகிலன் ... இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும்
இல்லை.
விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன் ... ஆர்வத்தோடு உன்
மலையை வலம்வருவதும் இல்லை.
உவப்பொடுன்புகழ் துதிசெய ... மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க
விழைகிலன் ... விரும்புவதும் இல்லை.
மலைபோலே கனைத்தெ ழும்பகடது ... மலைபோல் உருவமுடன்,
கனைத்தவாறு வரும் எருமையின்
பிடர் மிசைவரு ... கழுத்தின் மீது வருகின்ற,
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் ... கரிய நிறமும்
கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள்
கதித்த டர்ந்தெறி கயிறு ... என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற
பாசக்கயிறு கொண்டும்,
அடுகதைகொடு பொருபோதே ... துன்புறுத்தும் கதாயுதம்
கொண்டும் என்னோடு போரிடும் போது,
கலக்கு றுஞ்செயல் ... மனம் கலங்கும் செயலும்,
ஒழிவற அழிவுறு கருத்து ... ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும்
நைந்து அல முறுபொழுது ... நைந்துபோய் யான் துன்புறும்போது
அளவைகொள் கணத்தில் ... ஒரு கண அளவில்
என்பய மற ... என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி
மயில் முதுகினில் வருவாயே ... மயிலின் முதுகினில் நீ வருவாயாக.
வினைத்தலந்தனில் ... போர்க்களத்தில்
அலகைகள் குதிகொள ... பேய்கள் கூத்தாடுவதால்
விழுக்கு டைந்துமெய் உகுதசை ... ஊன் உடைந்து உடல்களிலிருந்து
சிதறின மாமிசத்தை
கழுகுண ... கழுகுகள் உண்ணவும்,
விரித்த குஞ்சியர் எனும் ... விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும்
அவுணரை அமர்புரிவேலா ... அசுரர்களோடு போர் புரிந்த வேலனே,
மிகுத்த பண்பயில் குயில்மொழி ... நிறைய ராகங்களில் பாடவல்ல
குயிலின் மொழி ஒத்த குரலாள்,
அழகிய கொடிச்சி ... அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்)
குங்கும முலைமுகடு ... குங்குமம் அணிந்த மார்பில்
உழுநறை விரைத்த சந்தன ம்ருகமத ... அழுந்தும் வாசமிகு
சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த
புயவரை உடையோனே ... மலை போன்ற தோள்களை உடையவனே,
தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு ... தினந்தோறும்,
நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி,
புனற்சொரிந்து அலர் பொதிய ... நீரால் அபிஷேகம் செய்து,
பூக்களை நிறைய அர்ச்சித்து,
விணவரொடு ... தேவர்களும்
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ... கோபத்தை நிந்தித்து
விட்ட முனிவர்களும் தொழ,
மகிழ்வோனே ... அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே,
தெனத்தெனந்தன என ... தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன்
வரி யளிநறை தெவிட்ட ... இசைக்கும் வண்டுகள் தேனைத்
தெவிட்டும் அளவுக்கு
அன்பொடு பருகு ... ஆசையுடன் குடிக்கும்
உயர் பொழில்திகழ் ... உயர்ந்த சோலைகள் விளங்கும்
திருப் பரங்கிரி தனிலுறை ... திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும்
சரவண பெருமாளே. ... சரவண மூர்த்தியே.
ஓம் முருகா
🦚அரோகரா🦚
🦚முருகா நீயே துணை 🦚
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே!!
🦚அரோகரா🦚
🦚முருகா நீயே துணை 🦚
🦚அரோகரா🦚
🦚முருகா நீயே துணை 🦚
இத்திருப்புகழ் உங்கள்
வாழ்க்கைக்கானது
இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் பாராயணம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து வினைகளும் முருகன் அருளால் தகர்த்தெறியப்படும்
திருச்செந்தூர் திருப்புகழ்......
தந்தந்தந் தந்தன தானன
தந்தந்தந் தந்தன தானன
தந்தந்தந் தந்தன தானன ...... தனதான
......... பாடல் .........
வஞ்சங்கொண் டுந்திட ராவண
னும்பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாகஎ
திர்ந்துந்தன் சம்பிர தாயமும்
வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ
குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி
மிண்டுந்துங் கங்களி னாலெத
கர்ந்தங்கங் கங்கர மார்பொடு
மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிணமூளை
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போடவு
யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே
தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட
மெங்கெங்கும் பொங்கம காபுநி
தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
வஞ்சங்கொண்டும் திட ராவணனும் ... வஞ்சக எண்ணம்
கொண்டவனும், வலிமை வாய்ந்தவனுமான ராவணன்,
பந்தென் திண்பரி தேர்கரி ... பந்து போல வேகமாய்ச் செல்லும்
வலிய குதிரை, தேர், யானை,
மஞ்சின்பண்புஞ் சரியாமென வெகுசேனை ... மற்றும் மேக
வரிசைக்கு நிகராக அடுக்கிய அனேகம் காலாட்படைகளுடன்,
வந்து அம்பும் பொங்கியதாக எதிர்ந்தும் ... போர்க்களத்துக்கு
கூட்டி வந்து, அம்புக் கூட்டங்கள் நிறைந்து எதிர்த்தாலும்,
தன் சம்பிரதாயமும் வம்பும் தும்பும் பல பேசியும் ... தனது
சாமர்த்தியப் பெருமைப் பேச்சும், வீண் பேச்சும், இழிவான வார்த்தைகளும்
பலவாகப் பேசியும்,
எதிரே கைமிஞ்சு என்றுஞ் சண்டைசெய்போது ... எதிரில் உள்ள
சேனையோடு மிகவும் இடைவிடாது போரிட்ட போது,
குரங்குந் துஞ்சுங்கனல் போல வெகுண்டும் ... குரங்குச்
சேனைகள் நிலையான நெருப்பைப் போல கோபம் கொண்டு,
குன்றுங் கரடார் மரமதும்வீசி ... மலைகளையும், கரடுமுரடான
மரங்களையும் பிடுங்கி வீசி,
மிண்டும் துங்கங்களினாலெ தகர்ந்து ... பேர்த்து எடுக்கப்பட்ட
மலைப்பாறைகளினாலே நொறுக்கி,
அங்கம் கம் கர மார்பொடு ... அசுரர்களின் உடம்பு, தலை, கரம்,
மார்பு இவைகளுடன்
மின்சந்துஞ் சிந்த நிசாசரர் வகைசேரவும் ... ஒளிவீசும் மற்ற
உடற்பகுதிகளையும் சிதற அடித்து, அசுரர்களின் இனம் முழுவதையும்,
சண்டன் தென்றிசை நாடிவிழுந்து ... யமனுடைய தெற்குத்
திசையை நாடிச்சென்று விழச்செய்து,
அங்குஞ் சென்று எம தூதர்கள்உந்து உந்து உந்தென்றிடவே ...
அங்கு சென்றும் யம தூதர்கள் அசுரர்களைத் தள்ளு, தள்ளு, தள்ளு
என்று கூறும்படியாக
தசை நிணமூளை உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் ... மாமிசம்,
கொழுப்பு மூளை இவற்றை சில பேய்கள் பார்த்தும், உண்டும்,
டிண்டிண்டென்றுங் குதி போட ... டிண்டிண்டென்றும் தாளமுடன்
குதித்துக் கூத்தாடவும்,
உயர்ந்த அம்புங் கொண்டு வெல் மாதவன் மருகோனே ...
சிறந்த அம்புகளைக் கொண்டு வென்ற ராமனின் (திருமாலின்) மருகனே,
தஞ்சந்தஞ்சம் சிறியேன்மதி கொஞ்சங்கொஞ்சம் துரையே ...
அடைக்கலம், அடைக்கலம், சிறியேனுடைய அறிவு மிகக் கொஞ்சம்,
கொஞ்சம், துரையே,
அருள் தந்து என்று இன்பந்தரு வீடது தருவாயே ... அருள்
பாலித்து எப்போது எனக்கு இன்பம் தருகின்ற மோக்ஷ வீட்டைக்
கொடுக்கப் போகிறாய்?
சங்கங் கஞ்சங்கயல் சூழ்தடம் எங்கெங்கும் பொங்க ...
சங்குகளும், தாமரையும், கயல் மீன்களும் உள்ள குளங்கள் பல
இடங்களிலும் பொங்கி நிறைந்திருக்க,
மகாபுநிதம் தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் பெருமாளே. ...
மிகுந்த பரிசுத்தம் துலங்கும் திருச்செந்தூரில் வாழ்ந்து ஓங்கும் பெருமாளே.
@@Murugaa-ey612c எத்தனையாவது பாடல்
🙏🙏🙏🙏🙏🔥
🦚அரோகரா🦚
🦚முருகா நீயே துணை 🦚