இது சாமர்த்தியம் அல்ல; அயோக்கியத்தனம் & துரோகம் ("பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடி" -ன் பாகம் - 2)

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • பத்திரப்பதிவில் நடைபெறும் முறைகேடு, மோசடிகளுக்கு நிரந்தரத் தீர்வு என்ன?
    திருப்பூர் பதிவு மாவட்டம், கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதி வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. தாமோதரன் அவர்கள் முறைகேடு ஆவணங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    பதிவு செய்த சார்பதிவாளர் மக்கள் அறியும் வகையில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டார். ஆனால் அந்த ஆவணத்தைத் தயாரித்தவர் யார்? அவரையும் அம்பலப் படுத்தினால்தானே விவசாயிகளோ, பொது மக்களோ பாதிக்கப்படுவதிலிருந்து மீள முடியும்?
    பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆவண விவகாரத்தில் உயில் எழுதி வைத்த வருக்கு வாரிசு இல்லை. இவ்வாறு வாரிசு இல்லாதவர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரருக்கோ, சகோதரிக்கோ, அவர்களுடைய வாரிசுகளுக்கோ உயில் எழுதி வைத்தால் மனைவியிடம் சொல்பவர்கள் சிலரே. மனைவிக்குத் தெரிந்தால் தனக்கே முழு உரிமை வேண்டும் என்று கேட்பார் என்பதால் பலர் சொல்ல மாட்டார்கள்.
    அவ்வாறு எழுதுவோர் தனக்கு நம்பிக்கை உள்ள ஆவணம் தயாரிப்பவரிடம் மட்டுமே உயில் எழுதுவார். இந்த உயில் சம்பந்தமாக யார் கேட்டாலும் சொல்லி விடாதீர்கள் என்று ஆவணம் தயாரிப்பவரிடம் சொல்வதும் வழக்கம். யாருக்கும் தெரிந்து விடக் கூடாதே என்பதற்காக வேறு சார்பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்வோரும் உண்டு. உயில் ஆவணத்தை எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.
    உயில் எழுதிப் பெற்றவர்களும் அவர் உயிருடன் இருக்கும் வரை உயில் எழுதியவரின் மனைவியிடம் சொல்ல மாட்டார்கள் என்பதையும் நான் சொல்லித்தான் இந்த பதிவைப் படிப்பவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.
    உயிலை மறைத்து உயில்படி உரிமையுள்ளவர்களை ஏமாற்றி உயில் எழுதி வைத்தவரின் மனைவி விற்றதாகத் தயாரித்த ஆவணங்களை சார்பதிவாளர் பதிவு செய்தார் என்பதே சார்பதிவாளர் மீது கூறும் குற்றச்சாட்டு.
    உயில் சாசனம் என்பது ரகசிய ஆவணம். அது வில்லங்கச் சான்றில் வராது. உயில் எழுதப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்டவர் சொன்னால் ஒழிய ஆவணம் தயாரிப்பவருக்கோ, சார்பதிவாளருக்கோ தெரிய வாய்ப்பில்லை.
    சார்பதிவாளரிடம் சொல்கிறார்களோ, இல்லையோ ஆவணம் தயாரிப்பவரிடம் நிச்சயமாக சொல்வார்கள். ஏனென்றால் மறைத்து பதிவு செய்து விட்டால் பின்னிட்டு சட்டப்பிரச்னை எழுமோ என்பதால் ஆவணம் தயாரிப்பவரிடம் மறைக்க மாட்டார்கள். முன் ஆவணங்களை, சிட்டா, பட்டா, இறப்புச் சான்று, வாரிசு சான்று முதலான வற்றைப் பரிசீலித்து விற்பனை செய்பவரிடம் கேள்விகள் எழுப்பினால் உயில் எழுதப்பட்ட விவரத்தை ஒரு ஆவணம் தயாரிப்பவரால் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
    ஆனால் ஆவணங்களின் தன்மை, ஆவணம் தயாரிப்பவர்கள் சார்பதி வாளர்கள் பெயரில் அடிக்கும் கொள்ளை ஆகியபவற்றை நன்கறிந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவோரில் சிலர் வாரிசு யாரும் இல்லாமல் மனைவிக்கு ஆயுள் வரைக்கும் அனுபவிக்கும் உரிமையை மட்டுமே கொடுத்து விட்டு சகோதர ருக்கோ, சகோதரிக்கோ, அவர்களுடைய வாரிசுகளுக்கோ பாத்தியப்படும் வகையில் உயில் எழுதப்பட்ட விவரத்தை அறிந்தால் உயில் எழுதியவரின் மனைவியிடம் மட்டுமே சந்தை விலையில் 75 சதவீதத்திற்கோ அல்லது அதைவிட சற்றுக் கூடுத லாகவோ, குறைவாகவோ மட்டுமே விலை பேசி முடித்து ஆவணம் தயாரிப்ப வரிடமே அந்த உயில் விசயத்தை மறைத்து இறப்புச் சான்றையும், வாரிசு சான்றையும் மட்டுமே ஆவணம் தயாரிப்பவரிடம் கொடுத்து வழக்கம்போல் விற்பனை ஆவணத்திற்குக் கொடுக்கும் லஞ்சத்தை மட்டுமே கொடுத்து அச்சொத்தை வாங்கி பட்டா பெயர் மாறுதல் செய்து, தனிப்பட்டா பெற்று சந்தை விலையை விட சற்றுக் குறைவாகவும், அதே சமயம் தனக்கு நல்ல லாபம் கிடைக்கும் வகையிலும் ஏதாவது ஒரு அவசர காரியத்திற்காக என்று கூறி வேறு நபருக்கு விற்றுவிடுவார்கள். இதற்கென தனித்தனி குழுக்களே இயங்கிக் கொண்டிருக்கின்றன. விலை குறைவாகக் கிடைப் பதால் உடனடிக் கிரயம் செய்து கொள்ளும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகிறார்கள்.
    இவ்வாறு ஆவணங்களில் முறைகேடு, மோசடி நடக்க பல்லாயிரம் ஓட்டைகள் இருக்கின்றன. அந்த ஓட்டைகள் எல்லாவற்றையும் ஒரு பத்திரத்தைப் பதிவு செய்ய சார்பதிவாளருக்கு ஒதுக்கப்பட்ட மூன்று நிமிடங்களில் சார்பதிவாளரால் கண்டறிய இயலாது.
    ஆவணம் தயாரிப்பவர் உயிலை மறைத்து சொத்தை விற்பவருக்கு உடந்தை யாக வாரிசு சான்றுப்படி ஆவணம் தயாரித்துக் கொடுக்க முடிவெடுத்து விட்டால் சார்பதிவாளரைக் கரெக்ட் செய்ய இவ்வளவு வேண்டும் என்று விற்பவரிடமோ, வாங்குபவரிடமோ, இருவரிடமுமோ பெருந்தொகையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு சார்பதிவாளரிடமே அந்த உயில் விவரத்தைத் தெரிவிக்காமல் இறப்பு, வாரிசு சான்றை மட்டுமே காண்பித்து பதிவு செய்து விட்டு சார்பதிவாளருக்கு வழக்கமாகக் கொடுக்கும் தொகையை மட்டுமே கொடுத்து விட்டு அப்பெருந்தொகையை ஆவணம் தயாரிப்பவரே வைத்துக் கொள்வார்.
    மேலும் இதுபோன்ற முறைகேடு, மோசடிகளுக்கு வருவாய்த்துறை பதிவேடு களில் குறிப்பிடப்பட்டுள்ள புல எண்கள், உட்பிரிவு எண்கள், பரப்பளவு, உரிமையாளர் கள் பெயர்கள் முதலானவைகளில் பல்வேறு குளறுபடிகளும் காரணம்.
    எனவே, முறைகேடு, மோசடி ஆவணங்களைத் தயாரிப்பவர்களை அம்பலப் படுத்தாமலும், வருவாய்த் துறைப் பதிவேடுகளில் உள்ள குளறுபடிகளைக் களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமலும் சார்பதிவாளர்களையும், பதிவுத்துறையையும் மட்டுமே குறை கூறுவதும், போராட்டங்கள் நடத்தி சார்பதிவாளர்களைப் பணியிட மாற்றம் செய்வதும் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு அல்ல. வேறு என்னதான் தீர்வு…?
    ரீசர்வேதான் நிரந்தரத் தீர்வு.

КОМЕНТАРІ • 3