2024-ம் ஆண்டு நான் வாசித்ததில், சிறந்த 36- புத்தகங்கள் பரிந்துரை.📚

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 55

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804 20 днів тому +3

    அங்கலாய்ப்பின்றி
    ஆர்வத்துடன்
    இந்தப் புத்தகங்களை
    ஈர்ப்புடன் படித்தால்
    உன்னதமான அறிவடைய
    ஊன்றுகோலாய் இருக்கும்.
    எண்ணங்களெல்லாம்
    ஏற்றம் பெற
    ஐயமின்றி நாடி
    ஒப்பற்ற வளம்பெற
    ஓதுவது கைவிடாமற்
    ஔவை வழியில்
    ஆற்றுப் படுத்தும் நின் சேவை செழிக்க அன்பான வாழ்த்துக்கள் தோழர்..💐💐💐💐💪💪💪

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  20 днів тому +1

      என்னை சிறகின் அடர்வுக்குள் வைத்து அடைகாக்கும் தாய்க்கோழியே, நன்றி 🙏💐

  • @srinivashram110
    @srinivashram110 10 днів тому +2

    2024 -ல் வாசித்த புத்தக பட்டியல்:
    1. உருவாகும் உள்ளம்
    2. சிதம்பர நினைவுகள்
    3. இந்தியாவில் சாதிகள்
    4. அசுரன்
    5. லீ குவான் யூ
    6. அறம்
    7. நீர் வழி படுஉம்
    8. இச்சா
    9. Why we sleep
    10. ஆடு ஜீவிதம்
    11. பட்டத்து யானை
    12. குட்டி இளவரசன்
    13. சோளகர் தொட்டி
    14. கழிவறை இருக்கை
    15. Never split the difference
    16. Influence
    17. ஓநாய் குலச்சின்னம்
    18. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
    19. தேசாந்திரி
    20. காவல் கோட்டம்
    21. ஆதி இந்தியர்கள்
    22. Deep work
    23. தமிழர் உறவுமுறை, சமய கேட்பாடுகள்
    24. Historical Notes on Adi-dravidians
    25. உணவு சரித்திரம்-2
    26. நீர் எழுத்து
    27. கோவேறு கழுதைகள்
    28. உணவு சரித்திரம்-3
    29. தமிழக. சாதி உருவாக்கம்,சமூக மாற்றம்
    30. அம்மா வந்தாள்
    31. அற்றவைகளால் நிரம்பியவள்
    32. வைகை நதி நாகரீகம் கீளடி ஆய்வுகள்
    33. சிந்து சமவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்
    10000 pages challenge completed successfully this year

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  10 днів тому +1

      @@srinivashram110 நல்ல புத்தகத் தேர்வு, மிகச் சிறந்த பட்டியலை வைத்திருக்கிறீர்கள். நான் இன்னும் உங்கள் பட்டியலில் உள்ள சில புத்தகங்களை வாசிக்க வேண்டும். வாசிப்பை நேசிப்போம்.

  • @saravanakumar-or9jz
    @saravanakumar-or9jz 18 днів тому +2

    சிறந்த காணொளி.
    உங்கள் சிறந்த புத்தக பரிந்துரைகள் மிக அருமை.
    நான் கவிதைகள் அதிகமாக படித்ததில்லை.
    உங்கள் சிறந்த நாவல், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் பரிந்துரையில் பெரும்பான்மையான புத்தகங்களை நான் படித்திருக்கிறேன்.
    2024 இல் நான் 115 புத்தகங்களுக்கு மேல் வாங்கியிருக்கிறேன்.
    ஈரோடு புத்தக திருவிழா 2024,
    கரூர் புத்தக திருவிழா 2024,
    திண்டுக்கல் புத்தக திருவிழா 2024 மற்றும்
    சேலம் புத்தக திருவிழா 2024 சென்று புத்த்கங்கள் வாங்கியிருக்கிறேன்.
    2024 இல் எஸ். ராமகிருஷ்ணன் புத்தகங்கள் அதிகம் படித்தேன்.
    2024 இல் நன் வாங்கிய புத்தகங்களில் 54 புத்தகங்கள் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது.

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  18 днів тому

      நன்றி 🙏 வாசிப்பு அனுபவம் உள்ளவர்களுக்கு தான் தெரியும், வாசிப்பு என்பது எவ்வளவு அரிதான அழகு என்று, தேடித்தேடி புத்தகங்களை வாங்கி இருக்கிறீர்கள், மகிழ்ச்சி.!
      எப்போதும் வாசகர்களை ஏமாற்றாத எழுத்து எழுத்தாளர் ஐயா எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து,
      நான் அவரது இடக்கை, யாமம், நிமிர்த்தம்,சஞ்சாரம், உறுபசி, தேசந்திரி, ஒரு சிறிய விடுமுறை கால காதல் கதை,மறைக்கப்பட்ட இந்தியா, கதா விலாசம், சிறிது வெளிச்சம், மலைகள் சத்தமிடுவதில்லை, புத்தாவது சுலபம், சிவப்பு மச்சம், மண்டியிடுங்கள் தந்தையே, துணை எழுத்து, 100 சிறந்த சிறுகதை தொகுப்பு (நினைவில் உள்ளவை மட்டும்) போன்றவை வாசித்திருக்கிறேன்.
      இன்னும் அவருடைய புத்தகங்களை நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் நிறைய வாசித்து இருக்கிறீர்கள், உங்கள் வாசிப்பு அனுபவத்தில் அவரது புத்தகத்தில், சிறந்த புத்தகங்களின் பட்டியல் இருந்தால் சொல்லுங்கள்.நன்றி 🙏

    • @saravanakumar-or9jz
      @saravanakumar-or9jz 18 днів тому +1

      @ஏழிலைப்பாலை
      நன்றி.
      என் பார்வையில் எஸ்.ராமகிருஷ்ணனின் அனைத்து புத்தகங்களும் சிறந்தவை தான்.
      எஸ். ராமகிருஷ்ணனின் சிறப்பு அவரின் பல புத்தகங்கள் படித்து மனதில் உள்வாங்க கூடியவை.
      அவரின் பல சிறுகதைகள் மற்றும் நாவல்களை நம்மால் மற்றவர்களுக்கு கதையாக கூறிவிட முடியாது.
      மனதால் மட்டுமே படிக்க கூடிய நூல்கள் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுடையது.

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  18 днів тому

      @saravanakumar-or9jz உண்மை தான் 🙏

  • @Vassthra
    @Vassthra День тому

    மிக்க நன்றி சகோதரரே

  • @tamilputhagam
    @tamilputhagam 19 днів тому +1

    அருமையான புத்தகங்கள் 🎉🎉🎉 தங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  19 днів тому +1

      @@tamilputhagam உங்களின் இந்த வாழ்த்துப் பகிர்வுக்கு என் அன்பும் நன்றியும்.!🙏💐

  • @fpdesigner145
    @fpdesigner145 День тому

    நன்றி சகோதரரே💫

  • @Venkatesh.Bala23
    @Venkatesh.Bala23 9 днів тому

    Arumai, pagirthalukku nandri 😊 subscribed! Vaasippai nesipom❤

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  9 днів тому

      நன்றி 🙏 தோழா, தொடர்ந்து வாசிப்பை பகிர்வோம், நேசிப்போம்.!💐

  • @senthilkumar2005
    @senthilkumar2005 12 днів тому +1

    சூப்பர். I like you sir 😍

  • @kidarirajarajuboy4452
    @kidarirajarajuboy4452 18 днів тому

    நீங்க ரொம்ப அழக இருக்கேங்க 🎉 உங்களுக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @anbarasuanitha
    @anbarasuanitha 18 днів тому +2

    👏👌👍📚

  • @batmanbegins7691
    @batmanbegins7691 13 днів тому

    ❤ மிக அருமை சகோதரரே..

  • @ShanSundars
    @ShanSundars 19 днів тому +1

    மிக அருமையான காணொளி ! உங்கள் நல்ல நோக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
    காணொளியில் பகிரப்பட்ட புத்தகங்கள்:
    கவிதை தொகுப்புகள் :
    1. பெய்யென பெய்யும் மழை - கவிஞர் வைரமுத்து
    2. உடைந்த நிலாக்கள் - 1 - பா. விஜய்
    3. ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
    4. கனிந்து உதிர்தலே கால விதி - யாத்திரி
    5. தரைக்கும் வானத்துக்கும் - கல்யாண்ஜி
    6. மணல் கடிகாரம் - பனிப்பூக்கள் பார்த்திபன்
    7. பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி - வெய்யில்
    8. தப்பரும்பு - பிரிம்யா கிராஸ்வின்
    9. வாடியது கொக்கு - லிங்குசாமி
    10. நினைவில் ஒளிரும் ஜிம்மிக்கு கம்மல் - சீனு ராமசாமி
    11. பெயரற்ற யாத்ரிகன் - ஜென் கவிதைகள் - யுவன் சந்திரசேகர்
    நாவல்கள்:
    1. மண்டியிடுங்கள் தந்தையே - எஸ். ராமகிருஷ்ணன்
    2. வெள்ளை யானை - ஜெய மோகன்
    3. பட்டத்து யானை - வேல ராமமூர்த்தி
    4. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
    5. மாக்கியவெல்லி காப்பியம் - கபிலன் வைரமுத்து
    6. பால்யகால சகி - வைக்கம் முஹம்மது பஷீர் - தமிழில் - குளச்சல் யூசுப்
    7. சுமித்ரா - கல்பட்டா நாராயணன் - தமிழில் கே. வி. ஷைலஜா
    8. நீர்வழி படூஉம் - தேவி பாரதி
    9. காலா பாணி - டாக்டர். மு. ராஜேந்திரன்
    10. செல்லாத பணம் - இமையம்
    சிறுகதைகள்:
    1. புத்தனாவது சுலபம் - எஸ். ராமகிருஷ்ணன்
    2. சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - அம்பை
    3. என் தலைமாட்டில் - தெம்சலா ஆவின் - தமிழில் திலகவதி IPS
    4. அறம் - ஜெயமோகன்
    5. திருக்கார்த்தியல் - ராம் தங்கம்
    6. வேல ராமமூர்த்தி கதைகள்
    7. 100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு - எஸ். ராமகிருஷ்ணன் - 2 தொகுப்புகள்
    கட்டுரைகள்:
    1. காகித புரட்சி - ஸ்டாலின் குணசேகரன்
    2. தமிழுக்கு அப்பால் - க. பூரணச்சந்திரன்
    3. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் - தமிழில்
    இரா. முருகவேள்
    4. மேல் கணக்கு - யுகா பாரதி
    5. மரணம் ஒரு காலை - அ. வெண்ணிலா
    6. மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன்
    7. வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார்
    8. சொல்வழி பயணம் - பவா. செல்லதுரை

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  19 днів тому +2

      🙏என் புத்தகப் பரிந்துரை என்ற உண்மையான சேவைக்கு அதன் உழைப்பிற்கு *வாழ்த்துகள்* என்ற வார்த்தை, அறிமுகமான மற்றும் அறிமுகம் இல்லாத பலரிடம் வந்துகொண்டே இருப்பது மகிழ்ச்சி.!
      இந்தப் பதிவை மிகப்பெரிய வாழ்த்தாகக் கருதுகிறேன், மகிழ்ச்சி.!
      உங்களுக்கு என் நன்றியும் பேரன்பும்.!💐

  • @karthikkaniyankarthikkaniy8813
    @karthikkaniyankarthikkaniy8813 19 днів тому +2

    2001 லிருந்து இன்றுவரை 2000 book க்கு மேல படிச்சிட்டேன்பா..

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  19 днів тому +2

      @@karthikkaniyankarthikkaniy8813 👌அருமை வாழ்த்துகள், நீங்கள் வாசித்த புத்தகங்களின் சிறந்த புத்தகங்களின் சிறுபட்டியல் இருந்தால் சொல்லுங்கள், உங்களைப் போன்ற அதிக புத்தகங்கள் வாசித்தவர்கள் பிறரையும் வாசிக்க வைக்க துணை புரிய வேண்டும்.!🙏

  • @Vanasakthitiruchendur
    @Vanasakthitiruchendur 20 днів тому +4

    உங்ககிட்ட உள்ள எல்லா புத்தகத்தையும் காட்டுங்க 🙏

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  20 днів тому +3

      @@Vanasakthitiruchendur 470 புத்தகங்கள் உள்ளன. மிகப்பெரிய காணொளியாக வரும். வாய்ப்பு கிடைக்கும் போது பதிவிடுகிறேன் நன்றி.!🙏

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  13 днів тому

      ua-cam.com/video/OIDOrXwBIWU/v-deo.htmlsi=_UbWwhwDflkm_3co

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  13 днів тому

      *100* -க்கும் மேற்பட்ட காணொளிகள், *50,000* பார்வையாளர்கள் பயனடைந்து, *1000* - மணி நேரத்திற்கு மேலாக என்னுடைய உரை கேட்கப்பட்டிருக்கிறது. *200* - புத்தகங்களுக்கு மேலாக பரிந்துரை செய்திருக்கிறேன். ஒரு தலைமுறை வாசிப்பை நோக்கி நகர்கிறது என்ற பெருமகிழ்ச்சியோடு.! எனது வீட்டு நூலகம் காணொளியாக.!
      ua-cam.com/video/OIDOrXwBIWU/v-deo.htmlsi=3zvnpJ3gxPVIGV6b

  • @ramalakshmi3727
    @ramalakshmi3727 18 днів тому +1

    Sir enakku books padikka romba pudikkum but budget problem sir bcz I m student enakku ethum pdf available la irukkuma

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  18 днів тому +2

      உங்க முகவரி சொல்லுங்க நானே உங்களுக்கு நல்ல புத்தகம் அனுப்பி வைக்கிறேன்.! பணம் இல்லாத காரணத்தினால் புத்தகம் படிக்காம இருக்க வேண்டாம். 🙏

    • @ramalakshmi3727
      @ramalakshmi3727 18 днів тому

      @ஏழிலைப்பாலை TQ so much sir neenga sonnathu pothum sir it's kk sir no problem ungalukku ethukku kastam

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  18 днів тому

      இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, புத்தகங்களை படிக்க வைக்கணும் அப்படிங்கற நோக்கத்துல தான் இந்த காணொளிகளையே பதிவிடுகிறேன், நீங்க அனுப்புன பதிவுக்கு நான் இதை பண்ணலைனா, நான் இதை பண்றதுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். 🙏
      சும்மா சொல்லுங்க,
      pdf படிக்க அவ்வளவு சுவாரசியமா இருக்காது, ஆத்மார்த்தமாகவும் இருக்காது. இல்ல, pdf -தான் வேணும் என்றால் what's app no சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன்.!🙏

    • @ramalakshmi3727
      @ramalakshmi3727 18 днів тому

      Unga number sollunga sir I m text u

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  18 днів тому

      @ramalakshmi3727
      வாசிப்பை நேசிப்பவர் என்னும் போது, இயல்பாகவே என் சகோதர உறவாகிவிடுகிறீர்கள், உங்களுக்கு வாசிக்க எந்த விதமாக வழி காட்ட முடியுமோ, அதைச் செய்ய தயாராக இருக்கிறேன். 8754978588.🙏

  • @omsaimantra
    @omsaimantra 18 днів тому +1

    பெரும்பாலான விளக்கங்களின் போது உங்கள் வலது கை விரல்கள் புத்த கத்தின் தலைப்பை மறைத்து விடுகிறது \

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  18 днів тому

      @@omsaimantra உங்கள் சுட்டிக்காட்டல் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏

  • @omsaimantra
    @omsaimantra 18 днів тому +2

    கடைசி வரை குரல் தெளிவே இல்லை \

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  18 днів тому

      @@omsaimantra இனிவரும் காலங்களில் தெளிவாக பதிவிடுகிறேன் நன்றி 🙏

  • @kumarashok8280
    @kumarashok8280 15 днів тому

    ஐயா! உங்கள் குரலொலி உயர்ந்தும் தாழ்ந்தும் வருகிறது. சரியான ஒலி வாங்கியை பயன்படுத்தி ஒருமுறை நீங்களே சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்ளவும். உங்கள் குரலில் சற்று வேகம் தென்படுவதாக உணர்கிறேன். உங்கள் தமிழும் உச்சரிப்பும் சிறப்பாக உள்ளது. வளர்த்து கொள்ள வேண்டும்.

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  15 днів тому

      @@kumarashok8280 நன்றி, உங்கள் சுட்டிக்காட்டுதலை பெரிதும் மதிக்கிறேன். என் நலம் விரும்பிகள் சுட்டிக்காட்டுதலை கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாக மாற்றி வருகிறேன். இதையும் அடுத்தடுத்த காணொளியை சரி செய்து கொள்கிறேன். 🙏

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 19 днів тому +3

    நான் உங்கள் காணொளி யை தவர விட்டு விட்டேன் தம்பி நான் ஒரு 500புத்தகம் வாங்கி 300படித்துள்ளேன் இனி உங்களை பின்பற்றுகிறேன்

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 17 днів тому

    உங்களின் எல்லாப்புத்தகங்களையும் சிறு கிராமத்து மக்களிடம் சேர்த்தால் பயனுள்ளவை ஆகும். அங்கே குழந்தைகள் கழிக்கும் மலம் வழிக்கலாம்; வரட்டி தட்டி விற்கவும் உதவும்.

    • @BagathBoseBagathBose
      @BagathBoseBagathBose 14 днів тому

      தாங்கள் ஏதாவது சிறந்தப் புத்தகங்கள் இருந்த சிறு குறிப்பு தாருங்கள்...அந்த புத்தகங்கள் மலம் கழித்து துடைக்க பயன்படுகிறதா இல்லை உங்கள் முஞ்சியில் நான் காரி உமிழ்ந்தால் துடைக்க பயன்படுகிறதா என்று பிறகு யோசியுங்கள்...

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  14 днів тому +2

      சகோதரா அவரை விட்டு விடுங்கள், அவருக்கு பதில் சொல்ல எனக்கு தெரியும், ஆனால் இவர்கள் போன்றவர்களுக்கு பதிலளிப்பதை விட ஆக்கபூர்வமான சிந்தனை மிகுந்த செயல்களில் ஈடுபடுவதே முக்கியம் என தவிர்த்து விட முடிவெடுத்து விட்டேன். இதுவரை என்னுடைய நூறு காணொளியில் பதிவிட்ட அத்தனை கருத்துக்கும் பதில் எழுதியிருக்கிறேன். இது ஒன்றைத் தவிர. அனைவரின் நிறை குறைகளை ஏற்கிறேன்.🙏 ஒரு புத்தகப் பரிந்துரை என்ற காணொளிக்கு இது போன்ற பதிவை செய்கிற மனோ நிலையை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. 🙏

    • @BagathBoseBagathBose
      @BagathBoseBagathBose 14 днів тому +1

      @@ஏழிலைப்பாலை மன்னிக்கவும் சகோ...

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  14 днів тому +1

      @@BagathBoseBagathBose இது போன்றவர்களை கேள்விக்குள்ளாக்க வேண்டும், ஆனால் தவிர்த்து விடுவது அதைவிட சிறந்தது, நன்றி.!🙏

  • @omsaimantra
    @omsaimantra 18 днів тому

    குரல் தெளிவு இல்லை \ எக்கோ அதிகம் \

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை  18 днів тому

      @@omsaimantra கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்கிறேன்.நன்றி 🙏