எற்றான் மறக்கேன் எழுமைக்கும்எம்பெரு மானையே

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • முதலை உண்ட பாலனை மீட்டு அருளல்:
    திருவாரூர்ப் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளை நினைந்து மலைநாடு செல்லத் திருவுளங்கொண்டார். சோழநாட்டைக் கடந்து, கொங்குநாட்டை யடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசியை அணுகி, திருவீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒலியும், அதன் எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதலைக் கேட்டு இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார். அதுகேட்ட வேதியர்கள் நிகழ்ந்ததைக் கூறினர்.
    ஒத்த பருவத்தினராய் ஐந்து வயது நிரம்பப்பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்தபோது ஒருவனை முதலை விழுங்கியது. மற்றொருவன் பிழைத்தான். பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நிகழ்கிறது. இவர்கள் வீட்டில் எழும் மங்கல ஒலி முதலை வாயில் அகப்பட்டிறந்த சிறுவனுடைய பெற்றோர்க்கு, புதல்வனை நினைப்பித்தமையால் அவர்கள் வருந்துகின்றனர் என்று வேதியர் கூறக்கேட்ட சுந்தரர் வேதனைகொண்டார். அந்நிலையில் இறந்த சிறுவனின் பெற்றோர், சுந்தரர் வருகையை அறிந்து முகமலர்ச்சியோடு வரவேற்றனர். தாங்கள் இங்கெழுந்தருளியது எங்கள் தவப்பேறே யாகும் என மகிழ்ந்துரைத்தார்கள். சுந்தரர் இவ் வேதியரும் அவர் மனைவியும் மகனை இழந்த துன்பத்தையும் மறந்து என்னை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். இவர்கள் புதல்வனை முதலைவாயினின்று அழைத்துத் தந்த பின்னரே அவிநாசிப் பெரு மானை வழிபடவேண்டுமென்று உறுதிகொண்டார். அம் மடு இருக்கு மிடத்தைக் கேட்டறிந்து அங்குச் சென்றார். முதலை விழுங்கிய புதல்வனை உயிருடன் கரையில் கொண்டுவந்து தரும்படி அருள் செய்க என இறைவனை வேண்டி, ``எற்றான் மறக்கேன்`` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினார். ``உரைப்பார் உரை`` என்னும் நான்காம் திருப்பாடலைப் பாடும்பொழுது இயமன் மடுவிலிருந்த முதலை வயிற்றுள் புதல்வன் உடம்பைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சி யுடையதாகச் செய்து புகுத்தினன். முதலை கரையிலே வந்து தான் முன் விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் தழுவியெடுத்தாள். தாயும் தந்தையும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினர். இந் நிகழ்ச்சியைக் கண்டோர் அனைவரும் திருவருள் திறத்தை வியந்தனர். சுந்தரர் சிறுவனை அவிநாசித் திருக் கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவரைத் தொழுது வேதியர் வீட்டிற்கு வந்து மங்கல வாத்தியங்கள் முழங்க உபநயனம் செய்வித் தருளினார்
    திருப்புக்கொளியூர் அவினாசி
    பண் :குறிஞ்சி
    பாடல் எண் : 1
    எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
    எம்பெரு மானையே
    உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்
    உணர்ந் துள்ளத்தால்
    புற்றா டரவா புக்கொளி
    யூர்அவி னாசியே
    பற்றாக வாழ்வேன் பசுபதி
    யேபர மேட்டியே
    பொழிப்புரை :
    புற்றின்கண் வாழ்கின்ற , படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே , உயிர்களுக்கெல்லாம் தலைவனே , மேலான இடத்தில் உள்ளவனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து , மனத்தால் நினைக்கின்றேன் ; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன் ; உன்னை எக்காரணத்தால் மறப்பேன் !

КОМЕНТАРІ • 1

  • @balajis2410
    @balajis2410 2 місяці тому

    அரிய பொருளே அவிநாசி அப்பா போற்றி 🙏🙏🙏