SUNDARAMOORTHI NAYANAR (1967)-Etraan marakken -Seerkazhi Govindarajan-S.M.Subbiah Nayudu

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • 1967ஆம் ஆண்டு K. சோமு இயக்கத்தில் வெளியான 'சுந்தரமூர்த்தி நாயனார்' படத்தில் இடம் பெற்ற பாடல்.
    சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தேவாரம் திருப்புக்கொளியூர் அவிநாசி பதிகம். முதலை விழுங்கிய குழந்தையை மீட்கப் பாடிய பதிகம். பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
    படத்திற்கு இசையமைப்பு S. M. சுப்பையா நாயுடு.
    எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
    எம்பெரு மானையே
    உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்
    உணர்ந் துள்ளத்தால்
    புற்றா டரவா புக்கொளி
    யூர்அவி னாசியே
    பற்றாக வாழ்வேன் பசுபதி
    யேபர மேட்டியே
    உரைப்பார் உரைஉகந் துள்கவல்
    லார்தங்கள் உச்சியாய்
    அரைக்கா டரவா ஆதியும்
    அந்தமும் ஆயினாய்
    புரைக்காடு சோலைப் புக்கொளி
    யூர்அவி னாசியே
    கரைக்கால் முதலையைப் பிள்ளை
    தரச்சொல்லு காலனையே

КОМЕНТАРІ • 4

  • @balajis2410
    @balajis2410 2 місяці тому

    அரிய பொருளே அவிநாசி அப்பா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 9 місяців тому +1

    "எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
    உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
    புற்றாடரவா புக்கொளியூர் அவிநாசியே
    பற்றாக வாழ்வேன் பசிபதியே பரமேட்டியே "
    "உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
    அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
    புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
    கரைக்கால் முதலையை பிள்ளை தரச் சொல்லு காலனையே "
    சுந்தரமூர்த்தி நாயனார்

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 9 місяців тому

      தேவாரங்கள் 7ம் திருமுறை அவிநாசிப் பதிகத்தில் இருந்து இரு தேவாரங்கள்..
      நமச்சிவாயம்.

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 9 місяців тому

      ஐயா, இத்திரைப்படத்தின் இறுதியில் சுவாமிகள் பாடும் திருவஞ்சைக்களப் பதிகமான "தலைக்குத் தலைமாலை " என்ற பதிகத்தில் உள்ள ""வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் விளங்கும் குழைக் காதுடை வேதியனே
      இறுத்தாய் இலங்கைக்கு இறையாம் அவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ
      கறுத்தாய் கடல் நஞ்சமுது உண்டு கண்டங் கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று
      அறுத்தாய் கடலங் கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே "
      இதனையும் தயவு செய்து பதிவிடுங்கள். நாயனார் பூமியில் பாடிய இறுதிப் பதிகம் இது. அதுவும் இத் தேவாரம் அவர் தனக்கு உலகப் பற்று விட்டொழிந்தது எனவும் இறைவன் தன்னை மீண்டும் அழைத்துக் கொள்ளுமாறும் விண்ணப்பிக்கும் பாடல்..இதன் பின்னரே இறைவன் அனுப்பிய வெள்ளை யானையில் கயிலாயம் சென்றார். போகும் வழி தோறும் பாடிய பதிகம் கயிலை அடைந்து, அங்குள்ள முனிவர்கள் யார் இவன் எனக் கேட்க எம்பெருமான் "இவன் நம்தம் ஊரான் "என்று மொழிந்தது ஈறாக பாடிய பதிகம் "தான் எனை முன் படைத்தான் "..இது 100வது பதிகமாக பின் சேர்க்கப்பட்டது. இப்பதிகம் கயிலையில் இருந்து வருணபகவான் மூலம் திருவஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. இன்று நாத்திகம் பேசும் பாவிகளுக்குச் செருப்படியாக அமைந்த பதிகம்..இதனை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.கயிலாயம் எப்படி இருக்கும் . அங்கு யார் யார் இருப்பார் என நேரே கண்டு பாடியது.,சந்தரமூர்த்தி நாயனார் ஒருவரே..மற்ற நாயன்மார்கள் சம்பந்தர், அப்பர் போன்றோர் எம்பெருமான் அருளால் கயிலைக் காட்சியை மனக் கண்ணில் கண்டு பாடியது.
      சிவகதி எனும் முத்தி எவ்வளவு உண்மை என்பதனை நிரூபிக்க இதனை விட வேறு அரிய சாட்சி இருக்க முடியாது.
      துர்அதிஷ்ட வசமாக இப்பதிகம் இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை.
      நமச்சிவாயம்.