Tamil New Year Kavithai | தமிழ் புத்தாண்டு கவிதை 2024 By ரெ. சந்திரசேகரன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • #tamilnewyear2024 #newyearkavithai #தமிழ்புத்தாண்டுகவிதை
    பொருள் விளங்க சீவரினமேலெழுந்து
    மூங்கை யதன் நிலை மாற யிறை விரும்ப
    தெருவிளங்க திரைவிலக யவனரருளால்
    பஞ்சமதின் சுவையறியும் இந்திரியம்
    உறுவதுவே தான் சுழல வந்துதித்த தமிழ் மொழி வாக்கு ..
    அவ்வாக்கு பல் நிலை உயர்ந்து நல்
    பெருமைமிகு இலக்கணமாம் ஐந்துமாக
    முதுமை பெற்று இப்புவியில் தோன்றிய பின்
    கருக் கொண்ட வளர்குழவி இலக்கியமாம்
    சீர்குண்டு ஈரதையும் தான் கொண்ட
    அருமொழியின் யுதிநிலை யதுகாண
    பல்நூறாம் பயின்றோர்கள் உரை செய்தர்..
    இருள் விளக்கி யொளிகாண இன்றுதிக்கும்
    புதுக்குழவி குரோதி தனை
    விரோதிகளை மருவிதழ் போல் மணங்கொண்டு இனம் நீள மகிழ்வோடு வாழ்த்தியிந்த திருநாளை உருக்குழைந்து உள் நெகிழ்ந்து உன்னம் நிறை நுதல் கொண்டு நுடங்கி தமிழ் தாள் பணிந்தே..
    விளக்கம்:
    எங்கும் நிறைந்த இறைவன் விருப்பத்தினால் ஊமை சைகை நிலையில் இருந்த மனித இனம் பரிணாம வளர்ச்சியினால் கருத்தறிவு சொல்லறிவு திறன் மிகுந்து அறிவு தெளிய ஐந்து இந்திரியம் அதில் வாயின் கண் உள்ள நாக்கு சுழல பேச முயன்ற கலை அதுவே பேச்சு மொழி ..நம் தமிழ் மொழி..
    பேச்சு நிலைமொழி அதுவும் பரிணாமம் பெற்று ஐந்து இலக்கணங்களாக எழுத்து, சொல், பொருள் யாப்பு ,அணி என்று பெருமை பெற்றது.
    பின் அதன் குழந்தையாக இலக்கியம் என்ற நிலை உருவாகியது இந்த புகழ்மிக்க இலக்கண இலக்கிய உச்ச சிறப்பு பெற்ற மொழியே நம் தமிழ் மொழி நம் தாய்மொழி.
    இந்த அருமையான சிறப்பு மிக்க தமிழ் மொழியின் தோற்ற காலம் பல்லாயிரம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    மயக்க நிலை தெளிந்து அறிவுநிலை தரும் இன்று புதிதாக பிறந்திருக்கும் சிறு குழந்தை குரோதி அதை விரோதம் என்னும் களை அகற்றி புத்தம் புது மலரின் மணம் வீச மனித இனம் நீண்டு வாழ அன்பு கருணை மகிழ்வு இரக்கம் இதுகலந்த வேள்வியாகிய தவம் செய்து தலை சாய்த்து வணங்கி தமிழ்த்தாயின் பாதம் பணிகின்றேன்
    அன்புடன்
    சந்திரசேகரன். ரெ.

КОМЕНТАРІ • 1

  • @venkataramajanakiramanjana1011
    @venkataramajanakiramanjana1011 3 місяці тому

    ஐயா. முதர்கண் வணக்கம் நல்வாழ்த்துக்கள் 1:04சித்திரையில் கோடைவெய்யில். அதில் தாங்கள் கவிதை மழை பொழிந்து குளிர்ச்சியாக செய்துவிட்டீர்கள்.தங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள். வணக்கம் ஜானகிராமன் நாகை