U.G.KRISHNAMURTHI ll ஆன்மீகங்களை உடைத்த ஆன்மீகம் l யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி ll பேரா. இரா. முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2022
  • #ugkrishnamurthi,#mind#myth
    மனம் என்பது வெறும் கற்பனையே என்று சொல்லிய யு.ஜி.கிருஷ்ணமூர் த்தி எப்படி எல்லா ஆன்மீக தத்துவங்களையும் மறுக்கின்றார் என்பது பற்றிய விளக்கம்

КОМЕНТАРІ • 852

  • @wmaka3614
    @wmaka3614 2 роки тому +21

    யூ ஜி பற்றி மிகச் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே,
    அவரின் உரையாடல்கள் தமிழில் மிக குறைவாகவே நூல்களாக கிடைக்கின்றன. அனைத்து விதமான கொள்கைகள் மதிப்பீடுகள்,கருத்துகள்,சிந்தனைகள் அனைத்தையும் உடைத்து விடுகிறார். உங்களைக் காப்பாற்றப் போவதாக கூறுபவர்களிடம் இருந்து நீங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார். இரட்சிக்கப்படுத்துகிறேன் என்பவர்களிடம் இருந்து நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்கிறார். உங்கள் நம்பிக்கைகள்தான் நீங்கள் நம்பிக்கை அற்று இருப்பதற்கான ஆதாரங்கள் என்கிறார். ஞானம் என்று ஒன்று கிடையாது என்கிறார். தத்துவ அறிவுத் தளத்தில் தமிழில் எமக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு காணொளி உங்கள் Socrates studio மட்டுமே. மிக்க நன்றி.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 роки тому +13

    UGK அவர்களின் தத்துவத்தை அருமையாக விளக்கினீர்கள். நன்றி 🙏எனக்கும் கடவுள் மனம், ஆன்மா, மறுபிறவி போன்றவைகள் மாபெரும் கற்பனை /பொய் எனத் தோன்றுகிறது. RIP என்று சொல்வது அர்த்தம் அற்றது என்றும் நினைக்கிறேன்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 роки тому +7

    யுஜி கிருஷ்ணமூர்த்தி கருத்துகள்
    எனக்கு முழு உடன்பாடு உண்டு
    எது என்பதற்கு எதுவும் இல்லை
    இது என்பதற்கு இதுவும் இல்லை
    அது என்பதற்கு அதுவும் இல்லை
    வாழ்வதாக நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு.. அறியாமை 🔥

  • @nagarajr7809
    @nagarajr7809 2 роки тому +26

    வழக்கம்போல்,
    UGk பற்றி அருமையான
    கருத்துவிளக்கம்.நன்றி சார்.

  • @veeraveera8486
    @veeraveera8486 2 роки тому +7

    ஆமாம் ஐயா....இத்தனை நாள் என்னுடைய தேடலுக்கு கிடைத்த சரியான விடை......தெளிவு பெற்றேனைய்யா.... நன்றி. 🙏...🙏....🙏

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 роки тому +25

    மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு,
    வணக்கம்.
    நான் கேட்டுக்கொண்டதை மதித்து யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி பற்றிய காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி.
    யு. ஜி பற்றி சுமார் பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்திருக்கிறேன்.
    ஆனாலும் உங்கள் மூலமாக அவரைப் பற்றி கேட்கவும்.,அதன் மூலம் யு.ஜி பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவும் தங்களின் காணொளி அமையவேண்டும் எனவும் மிகவும் விரும்புகிறேன்.
    மிக்க நன்றி பேராசிரியர் அவர்களுக்கு.
    என்னை புரட்டிப் போட்டு பல..... தத்துவவியலாளர்களுள்
    யு.ஜி. யே முதல் இடத்தில் இருக்கின்றார்.
    நன்றி ஐயா.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому +3

      நீங்க தான் கேட்டங்கல

    • @rajank1821
      @rajank1821 2 роки тому +5

      ஓ நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் இந்த காணொளி யா ... நன்றி மற்றும் மகிழ்ச்சி

    • @vrvsundaram
      @vrvsundaram 2 роки тому +1

      சூன்ய தரிசனம்
      பெற்றவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள்...
      இந்த வரிசையில் சென்னை
      புத்தகரம் யோகக்குடில்
      சிவயோகி சிவக்குமார் அவர்களை
      எதிர்பார்க்கிறேன்.
      நன்றி

    • @perumalnarayanan2975
      @perumalnarayanan2975 2 роки тому

      Thanks

    • @entervr1392
      @entervr1392 2 роки тому

      புரட்டிப் போட்டு

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 2 роки тому +39

    தங்கள் காணொளிகள் பல புத்தகங்களை படித்த ஒரு திருப்தியை தந்துவிடுகின்றன. UG K அவர்களுடன் நேரில் பேசி இருந்தால் கூட இப்போது கிடைத்த புரிதல் இருக்குமா என தெரியவில்லை. தங்களுடைய நடுநிலையான சிந்தனை உள்ளதை உள்ளபடி எடுத்து உரைக்கும் பண்பு போற்றுதலுக்கு உரியது. தங்கள் மாணாக்கர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். மிக்க நன்றி தாங்கள் அளிக்கும் சிந்தனை விருந்துகளுக்கு 🙏

  • @thirdeye5895
    @thirdeye5895 2 роки тому +4

    ஜேகேவின் பேச்சை கேட்டு கேட்டு யூஜீயின் பேச்சை கேட்கும்போது சற்றே ஆச்சிரியப்பட்டேன்…..அவரை பற்றி உங்க கானொளி அற்புதமாக இருந்தது……மிக்க நன்றி🙏💐

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 роки тому +24

    உங்கள் காணொளி உரையாடல்களின் சிறப்பென்னவெனில், நீங்கள் அவற்றைத் தமிழில் தரமாக.... தெளிவாக வழங்கிவருவதுதான்.

    • @GuitSiva
      @GuitSiva 2 роки тому

      Well said.. 👏👍

    • @seethalakshmi2723
      @seethalakshmi2723 2 роки тому

      நன்று சிந்தை திரவு கோல் உங்கள் காணொலி உரையாடல்

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 Рік тому +2

    இதில் பெரும் பங்கு எனக்கு சிறு வயதிலேயே உடன்பாடு உண்டு. வாழ்க வளமுடன் திரு. முரளி அவர்கள்...

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 2 роки тому +45

    தலைப்பு மிகச்சரி.இறப்பு மற்றும் இயலாமை.தோல்வி இவை தான் பயத்தை உருவாக்கும்.பயத்தின் குழந்தை கடவுள்.கடவுளின் குழந்தை மதமும் ஆன்மாவும்.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +22

    ஆஹா! நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமாக சிந்திப்பதை அறிந்துகொண்டேன். பதிவிட்டதற்க்கு மிகவும் நன்றி

    • @rajendranp7908
      @rajendranp7908 2 роки тому

      🌷வாழ்க வளமுடன் 🌹💐

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +7

    அவரை இன்று அறிமுகம் எனக்கு செய்ததற்கு மிக்க நன்றி உலகில் பிறந்த அனைவரும் அவரவர் சிந்தனைக்கு ஏற்றார் போல் அவர் கருத்துக்களை கட்டமைத்து வருகின்றனர் இது தான் உண்மை அவர் சொன்னதைத்தான் நம் முன்னோர்கள் சும்மா இருத்தலே சுகம் என்றார்கள், நாம் vazhunthu கொண்டு இருக்கிறோம் நாளை இறந்து விடலாம் பாரதி சொல்கிறான் காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்க நோக்க kaliyatam நோக்கும் இடமெல்லாம் யாம் அன்றி verilai 🙏

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 роки тому +20

    மனித சமுதாயம் படைத்துள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பார் ஆசான் லெனின் அந்த வகையில் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 🌹💐

  • @anandraj85
    @anandraj85 2 роки тому +5

    மிகசிறந்த விளக்கம். என்னை மிகவும் கவர்ந்தது தேசபக்தியை பற்றிய அவரது கருத்து. மிகவும் சரியானது என்று நினைக்கிறேன். நன்றி. என்னுடைய எண்ணங்கள் உங்களின் காணொளிகளை பார்க்கும்பொழுது ஏற்றம் அடைகிறது என்று நம்புகிறேன்.
    மீண்டும் நன்றிகள் பேராசிரியரே ...

  • @parasuraman137
    @parasuraman137 2 роки тому +6

    மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களே நிச்சயமாக இந்த எண்ணங்கள் எல்லாம் என் மனதில் தோன்றி இருக்கிறது ஆனால் நான் இதை யாரிடம் சொல்லுவது சொன்னதில்லை எதையும் நான் படித்ததும் இல்லை என் மனதில் தோன்றிய அனைத்து சிந்தனைகளையும் இந்த பேராசிரியர் கூறியிருக்கிறார்/என் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களால் நாள் ஒரே ஒரு முறை நான் சிந்தித்தது எண்ணங்களின் தொகுப்பே இந்த மனிதன் என்பது.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 8 місяців тому +4

    உலகில் உள்ள அனைத்து மதங்கள் கூறுவதும் கட்டுக்கதைகள் மதம் மனிதனை மிருகமாக்கும் மனிதன் மனிதனாக வாழ வேண்டுமென்றால் நமக்கு இயற்கை கொடுத்தஅறிவை வைத்து அறிவியல்❤

  • @kandavel.a6544
    @kandavel.a6544 2 роки тому +39

    உங்கள் தத்துவ காணொலிகளில் நன்கு தெளிவாக 100% ஏற்றுக்கொள்ளக்கூடிய காணொலி இதைக் கேட்டவுடன் ஞானமும் விடுதலையும் அடைந்தேன் மற்ற தத்துவ அறிஞர்கள் நடிகர்கள் உலகால் ஒதுக்கப்பபடுவோம் என்று
    நடித்துசென்றனர் இவர் முழுமையான உண்மை

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 роки тому

      ua-cam.com/video/ZifRJ-xZzGw/v-deo.html
      பணம்,வளம் தரும் பதிகங்கள்.

    • @perumalnarayanan2975
      @perumalnarayanan2975 2 роки тому

      Excellent

    • @karuppiahv5221
      @karuppiahv5221 Рік тому +2

      யாரெதச் சொன்னாலும் நம்பிடாதீங்க. அனுபவம் வேறு. அறிவுரை வேறு.

  • @Ramasubramanianv-zl8le
    @Ramasubramanianv-zl8le 2 роки тому +3

    யுஜி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒரு வாழ்க்கை என்ற புத்தகத்தின் தமிழாக்க பதிப்பு கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அப் புத்தகத்தையும் எண்ணம்தான் உங்களின் எதிரி என்ற அவரின் மற்றொரு புத்தகத்தையும் இன்று நான் வாங்கியுள்ளேன் ஒரு புதிய சிந்தனை தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு தங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 роки тому +9

    நல்ல தத்துவம். ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். இந்த தத்துவம் உயிருடன் இருக்கும் ஆனால் சொன்ன கிருஷ்ணகூர்த்தி இல்லை என்பதுதான் உண்மை.
    பிரபஞ்சம் பற்றி மனிதர்கள் தான் பேசுகின்றனர். அது பேசும் பொருளே இல்லை. நாம்தான் அதைப்பற்றி பேசுகிறோம். பேசவில்லை என்றாலும் அது இருக்கும். அதைப் பற்றி பேசாமல் நாம் நாமாகவே இருப்பதுதான் இயல்பு. இயல்பாக இருப்பது இயற்கையின் கட்டமைப்பு.

    • @sundararajk8646
      @sundararajk8646 2 роки тому +2

      Many used to talk about Nature but they dont seem to understand.
      Those who understand will not talk . They start enjoying it. He said that he had not learnt anything.Without learning anything how he could arrive at a decision. If he is in tune with UNIVERSE , he should how come the universe came in to existance without a creator.. CAN we DETACH FROM OUR thoughts. Then we will be in tune with UNIVERSE /GOD which only our Rishis had done.
      Always it is easy to confuse people. Is that that easy to UNDERSTAND THE ALMIGHTY WITH our thoughts which is full of confusions. First let us try to find " WHO AM I". I AM NOT MY BODY. IF WE GET THE ANSWER we need not get birth again.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 2 роки тому +2

      @@sundararajk8646
      "கண்டவர் விண்டிலர்
      விண்டவர் கண்டிலர்."

    • @sundararajk8646
      @sundararajk8646 2 роки тому

      It is easy to spell Aanmeegam. To understand it one should understand SANADAN DHARMA.
      SAMASTHA LOGA SUGINO BHAVANTHU.

    • @ashokkananth5869
      @ashokkananth5869 Рік тому

      Just BE with the flow as you said is the right, we don't have the rights to point to the universe bcoz we are microns in front of this Infinity existence.

  • @ramaswamyramakrishna606
    @ramaswamyramakrishna606 2 роки тому +17

    Excellant narrative. Very much impressed by your style of explanation and thank you for introducing UGK.

  • @ganeshganesh404
    @ganeshganesh404 2 роки тому +4

    குருவும் இல்லை கடவுளும் இல்லை-Jk ஆத்மாவும் இல்லை கடவுளும் இல்லை -UGk இரண்டும் ஒன்று தானே. அருமையான புரிதல். நன்றி சார்.

  • @arjunank9278
    @arjunank9278 2 роки тому +3

    பகுத்தறிவு ரீதியான சொற்பொழிவாக கொள்ளலாம்.அனைத்து உயிர்களுக்குமானதாக உணர இயலவில்லை.சத்தான சமாச்சாரம் இருப்பதாகவும் உணர இயலவில்லை. இறுதியாக உலகிற்கு என்ன கூறிவருகிறார் என்பது விளங்கவில்லை. யூஜிகே வாழ்கையில் நடந்தவை ஏதோ அதிசயங்கலாக தோன்றுகிறது. வாழ்க்கைக்கானது ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் எடுத்து இயம்பிய விதம் அருமை.........

  • @sri8696
    @sri8696 2 роки тому +1

    ஐயா வணக்கம், நல்ல அருமையான பேச்சு. எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. இவர் சிந்தனை எனக்கு அகப்பேய் சித்தர் பாடலை நினைவு படுத்தியது. ஈசனும் மாயையடி அகப்பேய் எல்லாமும் இப்படியே. இந்த உலகத்தில் எவ்வளவோ ஆச்சர்யம் அதில் இது போன்ற மனிதர்களும் ஒன்று. அருமை அருமை உங்கள் அறிவு பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா. ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @SatsangwithUdhayji
    @SatsangwithUdhayji 2 роки тому +11

    Thank you very much Prof Murali. While listening to your narration, I was thinking about my few days with UGK when he came to Bangalore many years ago. Those days were so deeply moving, touching, transforming and divine. What a being he was! Wow!

    • @sudharsansan3816
      @sudharsansan3816 Рік тому +1

      Very nice. Philosopher. I like very much. Thank you .

    • @haneefhasanuddin7172
      @haneefhasanuddin7172 Рік тому +2

      You are great.

    • @devsen71
      @devsen71 4 місяці тому +1

      I lived in the other corner of the same street where he lived. I passed by his ome a 1000 times. Hung out with my friends in the same partk where he walked. Never remember having passed by him or even heard about him. So sad.

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 роки тому +3

    பேராசிரியர் அவர்களுக்கு.
    இந்தக் காணொளி வழங்கியமைக்கு கோடானுகோடிநன்றி நன்றி
    நன்றி

  • @rajapa3430
    @rajapa3430 Рік тому +3

    UGK சார் ஒரு இயற்கையான மா மனிதர். I like him......

  • @amuthavijay5960
    @amuthavijay5960 Рік тому +2

    வாழ்க வளமுடன் இப்படி ஒன்றை யாரும் பேசியது இல்லைநீங்கள் வணக்கத்துக்கு உரியவர் தாங்கள் பதிவுகள் எல்லாம் பார்கிறேன் வாழ்க வளமுடன்

  • @sureshsa9695
    @sureshsa9695 2 роки тому +2

    இல்ல எனக்கு இதுவரை போட்ட வீடியோகளிலே இது தான் மிகவும் பிடித்திருக்கிறது. யாதோரும் புனிதமும்மில்லை என்ற நிலை வாழ்வை சுவராயசமாய் வாழ முடியும் என்பதை உணரமுடிகிறது. சிறப்பு !!!

  • @anuanu4352
    @anuanu4352 2 роки тому +1

    என்னோட தேடலுக்கு , உங்கள் எல்லா காணொளியும் மிக உதவியாக உள்ளது.நன்றிகள் பல.

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 2 роки тому +1

    மிகத்தெளிவாக தத்துவ அறிஞர்களின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் உங்களின் ஆளுமை தமிழுக்கு கிடைத்த பெரும் கொடை‌...எண்ணங்களிலிருந்து விடுதலை என ரத்தினசுருக்கமாக யூ ஜி கிருஷ்ணமூர்த்தியை விவரித்த தங்களின் திறன் போற்றற்குரியது.‌‌..மிக்க நன்றியும்..வாழ்த்துக்களும்.‌.

  • @sammisuresh3946
    @sammisuresh3946 2 роки тому

    அற்புதம் எத்தனை விதமான மனிதர்கள் கேட்க கேட்க ஆச்சரியம் தான் இவரை பார்க்கும் போது இறைவன் அவதாரம் போல் தான் இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் இந்த காணொளி இரண்டாவது தடவையாக கேட்டேன் இன்னும் தொடர்ந்து கேட்கலாம் போல் உள்ளது👌👏

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu Рік тому +1

    மிக அருமையான ஆழமான விளக்கம், அத்துடன் **நூல் அறிமுகம்** இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளமை பாராட்டத்தக்கது ஐயா அவர்களே,, நன்றிகள்,, வாழ்த்துக்கள் 📕🇨🇭📚📖❤️🇨🇭📚

  • @SuperSuman777
    @SuperSuman777 2 роки тому +5

    👌👌👍👍💐💐Thank You Sir!🙏🏿I just started to watch it for a few seconds only but then I could not stop it for a tea break too which I usually do between long duration videos,This one I watched fully with one straight shot without any stop!The Way of narration is so natural and interesting,Thanks again!🙏🏿💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏿🙏🏿🙏🏿

  • @maddy121com
    @maddy121com 2 роки тому +1

    Excellent post on UGK !
    Much awaited post.
    Thank you Sir

  • @vijayjoe125
    @vijayjoe125 2 роки тому +19

    பழைய சோறு மட்டும் கிடைச்சுதுன்னா அதை மட்டுமே சாப்பிடுவோம். அதன் ருசி மிக அருமை என்போம். உணவு மேசையில் பலவிதமான உணவுகளும் வைத்திருந்தால் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் ருசி பார்ப்போம். ஆகா இத்தனை நாள் இதனை சுவைக்காமல் இருந்துவிட்டோமே என்று எண்ணத் தோன்றும. தத்துவங்களும் அப்படித்தான் போல. எதையாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டால் அதிலேயே போதையாக இருக்கிறது மனது. பலவற்றையும் படித்தால் ஏற்கனவே நாம் பின்பற்றியது ஒன்றுமில்லாமல் வெறுமையாகப் போய்விடுகிறது. இதனால் நாம் மேன்மையடைந்துவிட்டோம் என்பதா? அறியாமையில் இருந்தோம் என்பதா? கடைசியில் பார்த்தால் ஒன்றுமே இல்லை அதற்குத்தான் இத்தனை அக்கப் போரா என்ற நிலைக்கு மனம் வந்து விடுகிறது.
    சித்தர் மரபியலில் உடலைப் பற்றியும் உள்ளத்தைப் பற்றியும் ஏராளமாகச் சொல்லி இருக்கிறார்கள். செய்திருக்கிறார்கள். மனித குலத்திற்கு உறுப்படியாக சிலவற்றை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் யுஜிகி யோ சாதாரண மனிதன் போகிற போக்கில் சொல்கிற மாதிரி ஞானம் எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லியிருக்கிறார்.
    ம்ம்ம் சரி எதுக்கும் இவரையைம் கேட்டு வைப்போம்.🌹🌹இவரை அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றிகள் அய்யா.

    • @HubertSatheesh
      @HubertSatheesh 2 роки тому

      Quite true

    • @somasundaram4604
      @somasundaram4604 11 місяців тому

      Pookira pookkil sonnalum athaan unmai.arthame illatha vazhkai thaan ithu.

  • @naveenkumar-ew1uf
    @naveenkumar-ew1uf 2 роки тому +4

    சத்தியமாக நான் U.G ன் காணெளியை எதிர்பார்க்கவில்லை. நன்றிகள் பல.

  • @gnanavel3550
    @gnanavel3550 5 місяців тому

    அருமை அருமை அருமையான கானொளி பதிவு அய்யா வணக்கம் நான் ஆன்மீக பாதையில் பயணிக்கும் ஆன்மீக அன்பர்களில் நானும் இருக்கின்றேன் யூஜிஅய்யா வாழ்வின் சூட்சுமம் பற்றி அவர்கூறிஉள்ளார் என்று தான் எனக்குதெரியவருகிறது இதுவும் ஒரு ஆன்மீகபாதைதான் அழகு என்பதே பார்வைதிறன் கேட்புதிறன் இரண்டிலும்தான் உள்ளது இவைஇரண்டிலும் நாட்டம் இல்லாதது பைத்தியம் ஆன்மீகம் மட்டுமே நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஸ்ரீலஸ்ரீஞாணானந்தம் வைகாவூர் பழனி பாளையம்

  • @kalyanig405
    @kalyanig405 2 роки тому

    ஐயா. மிக அற்புதமான காணொளி. தங்கள் சிரத்தைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். "சும்மா இரு. சொல்லற" என்பதே அருணகிரி நாதருக்கு முருக பெருமான் உபதேசம். " எண்ணங்கள் அற்ற இருப்பு" என்பதையே UG.K அவர்களும் உணர்த்த வருகிறார். நன்றி. 🙏

  • @user-pr4fd8oz2h
    @user-pr4fd8oz2h 2 роки тому +1

    ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு. பல வேண்டுதலுக்கு பிறகு நிறைவேறி உள்ளது. மிக்க மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

  • @learncreativeenglish8213
    @learncreativeenglish8213 2 роки тому +3

    You gave about Ug krishnamurthy a real picture.I enjoyed.keep updating many unknown to the world.
    Great effort Dr murali sir. Great 👍

  • @GuitSiva
    @GuitSiva 2 роки тому +8

    Thanks for a brilliant presentation on UGK which was literally a glued book-reading Or interview experience.. 👏Vaazhga Valamudan🙏

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +6

    Thank you sir for your thought provoking discourse. " Every thing is determined, you have to live & go". Golden lines. I admired my professors lectures during my college days forty years before, now I appreciate your presentation,as revisiting my golden days. Yes, death fear is present in most human beings, there may be few exception.10-11-22.

  • @ravindranvp4059
    @ravindranvp4059 2 роки тому +2

    Your presentation is good. Absolutely true, his experience, his understanding, his conclusion. கருத்துக்களோடு முழுமையாக உடன்படுகிறேன்.

  • @ammukannan8017
    @ammukannan8017 3 місяці тому

    மதிப்பிற்குரிய பேராசிரியர் ஐயா அவர்களுக்கு இப்படி ஒரு அருமையான காணொளியை தந்ததற்கு மிக்க நன்றி.

  • @soundararajanramaswamy1415
    @soundararajanramaswamy1415 2 роки тому +6

    விடுதலை என்று ஒன்று கிடையாது என்பதே மிக பெரிய விடுதலை ஆகும் . மிக அருமையான மாற்று கண்ணோட்டம்.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 роки тому

    Beautiful presentation. Expecting more such excellent video. Thank you Sir.

  • @jayapallaxman4260
    @jayapallaxman4260 2 роки тому +9

    ஓம்.பூர்னமிதஹ எனும் ‌சாந்தி மந்திரம் நினைவுக்கு வருகிறது. கடைசியில் ஒன்றும் இல்லை என்பது. நன்றாக இருக்கிறது.

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      Alla m manam nanmey nanmey ku de mey say sol vadi yet?y

  • @kannank9840
    @kannank9840 2 роки тому +3

    சிறப்பான அளிப்பு. நன்றி.
    உண்மையை எண்மையிலேயே உணர்ந்தவர்கள் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். ஏன் என்றால் அதை மனிதர்கள் தெரிந்து கொண்டால் இந்த உலகை அழித்து விடுவார்கள்.

  • @gnanasundari829
    @gnanasundari829 2 роки тому +8

    Superb sir, iam a fan of your simple and clear speech, your doing a great service to society. This video has cleared many spiritual doubts. I accept all the principal s of U.G. k,lam a regular reciter of kandar anuboothy, where the words summa eru Sol Ara exists. Thankyou.

  • @BNainar
    @BNainar 2 роки тому +1

    சார் சூப்பர். நீங்க ஒரு முறை mention செய்ததே பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் ஒரு chapter போட்டுவிட்டீர்கள். அருமை அருமை 🙏🙏🙏

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 2 роки тому +7

    Brilliant. One real chethana has had the real clarity of existance devoid of all the human mind and brain construct to live . Life is to live unbound ! What a fine State . Just thrilled to listen to from your lucid straight honest talk .
    Pranams to you sir .
    Many of his expressions do happen to all of us. We shyaway to realise that is how life existance is . Just very good nice experience. I had the privilege of watching videos in meets of the like minded in America Italy. To day as a consolidation i am really is at a different plane. Thanks aillion . Hearty congratulations and salutations to you sir

  • @shahulhameed-fn1yy
    @shahulhameed-fn1yy 2 роки тому +3

    இந்த சிந்தனையும் நிகழ்வுகளும் எனக்கு மட்டும் தான் இருக்கின்றன என நினைத்தேன் இந்த பதிவின் மூலம் கொஞ்சம் தெளிவு கிடைத்தது

  • @meenasambandan4714
    @meenasambandan4714 2 роки тому +8

    Superb Sir, fully drenched in your presentation, first time knowing about him through you. Looks like he resembles osho in many ways, osho's thoughts are same, just to make common man understand he had to talk in so many different ways, but essence is same. Wonderful sir, could not stop in between. The way you put it is not only information but a glimpse of transformation. Thanks a ton for such an awesome sharing.

    • @ksranganath4993
      @ksranganath4993 2 роки тому

      Brilliant exposition of an unthinkable way of philosophy
      I am keen to hear more of UGK and your videos. I felt I am travelling in a pathless path

  • @vishnugubera3230
    @vishnugubera3230 2 роки тому +2

    ஓஷோவிற்கு அடுத்து யு ஜியை ரொம்ப பிடிக்கும் இதில் தத்துவஞானிகளை மக்களுக்காக அறிமுகம் செய்துகொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்

  • @sarojinidevi7871
    @sarojinidevi7871 2 роки тому +3

    Amazing Sir. You are explaining, the tough subject like Philosophy, in a lighter way. Thank you Very much . I salute you Sir.

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 2 роки тому +1

    சில விடயங்களை நாமாக வாசித்து விளங்குவது கடினம். அதனை இன்னுமொருவர் கூற கேட்கும் போது, எளிதில் விளங்கி விடுகின்றது. இல்லாத ஒன்றைத்தான் தேடுகின்றேனா என்கின்ற சந்தேகம் அப்பப்போது எழுவதை தடுக்க முடியாதுள்ளது. நன்றி, திரு. பேராசிரியர் முரளி அவர்களே!

  • @user-zx3bs3yu3c
    @user-zx3bs3yu3c 2 роки тому

    வணக்கம்
    பதிவுகள் அனைத்தும் மிக அருமை .தொடர்ந்து காணொளிகளை பார்த்து வருகிறேன் .புதுப் புது விடயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது .நன்றிகள் பல . ஹீ லிங் பற்றி படித்துக் கொண்டிருக்கும் மாணவி நான். தொடாமலேயே அல்லது மென்மையாக தொடுதல் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். எங்கள் படிப்பின் சாரமே அனைத்து பொருட்களும் பிரபஞ்சத்தின் துகள்கள் .மனிதன் வேறு விலங்கினங்கள் புழு பூச்சிகள் வேறு இல்லை .மாற்று மருத்துவங்கள் ஆல் கைவிடப்பட்ட குணமாக்க முடியாத நோய்கள் கைவிடப்பட்ட நோயாளிகள் ஹீலிங் மூலம் எளிமையாக குணப்படுத்த முடிகிறது .பிரபஞ்ச சக்தியுடன் எண்ணங்களை இணைத்து விட்டீர்கள் என்றால் நீங்கள் நடந்து சென்றால் கூட உங்கள் அருகில் வந்து சென்றவர்களுக்கு நோய் குணமாகும் என்று எங்கள் மாஸ்டர் அடிக்கடி கூறுவார் .நானாவது படித்துக்கொண்டிருக்கிறேன் எனது குழந்தைகள் நான் கற்றுக் கொடுப்பதை கொண்டே ஹீலிங் கொடுக்கிறார்கள் நோய்கள் குணமாகிறது .ஹீலிங் கொடுத்த இரண்டு நாட்களில் எந்த நோயாக இருந்தாலும் கண்டிப்பாக மாற்றம் தெரியும். சிகிச்சை கொடுப்பது மிக மிக எளிமை .நோயாளிகளுக்கு மருந்து ,மாத்திரை ,கத்தி,ரத்தம் ,மிகப்பெரிய பொருட்செலவு எதுவும் கிடையாது .எழுதப்படிக்கத் தெரிந்த இயற்கை விரும்புகின்ற எவராலும் இதனைக் கற்றுக் கொள்வது என்பது மிக எளிது. இந்தப் பதிவினை பெருமைக்காக பதிவிடவில்லை உண்மை மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவிடுகிறேன் வாய்ப்பு இருந்தால் எனது மாஸ்டர் அவர்களிடம் ஒரு நேர்காணல் எடுத்தால் சிறப்பாக இருக்கும்
    நன்றி.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 роки тому +1

    நம் உடலும் பிரபஞ்சமும் ஒன்றுதான்.இவரின் சிந்தனைகளை கேட்கும் பொழுது இப்படி எண்ண தோன்றுகிறது.பிரபஞ்சத்தின் காந்த அலைகள் நம் எண்ணங்களின் காந்த அலைகளோடு உறவாடும் பொழுது இயற்கையோடு ஒன்றியும் அனைத்து உயிர்களோடு இணைந்தும் போகிறோம்....நன்றி பேராசிரியர் அவர்களே....இவரின் சிந்தனைகள் மனதை ஈர்க்கிறது...🙏🙏🙏

    • @ulaganathan1904
      @ulaganathan1904 Рік тому

      கிருஷ்ணமூர்த்தி சொன்னது மிக மிக சரியே

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 2 роки тому +1

    அருமையான சிந்தனை
    பலரும் பயனடைய
    வாழ்க வளமுடன்.

  • @prakashsomanivannan8080
    @prakashsomanivannan8080 Рік тому

    U GK அவர்களின் பல பதிவுகளை தாங்கள் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் தங்கள் மூலம் நானும் மற்றவர்களுக்கும் அமைதியை தேடி கொண்டிப்பதை. ஏற்கனவே அமைதியாகவே இருப்பதை உணரமுடிகிறது. நன்றி

  • @jigjacktrading8754
    @jigjacktrading8754 2 роки тому +1

    From this Moment am liberated.Thanks for abt Shru.UGK

  • @pranatharth
    @pranatharth 2 роки тому +6

    UGK அவர்களின் சிந்தனையை பார்த்தால் உலகில் ஓரறிவு ஜீவன் சிறந்ததோ என எண்ண தோன்றுகிறது.

  • @user-pr4fd8oz2h
    @user-pr4fd8oz2h 2 роки тому +10

    மனிதன் தன் இயல்பான (இயற்கையான, வழியில் வாழ்வதற்கு இரண்டு விசயங்களை அவர் சொல்கிறார். ஒன்று. தனது பாதுகாப்பு உணர்வை விட்டு ஒரே தாவுதல், என்று குறிப்பிடுகிறார். இரண்டு. முழுமையான சரணாகதி நிலைக்கு வந்துவிட வேண்டும் என்கிறார். இவை இரண்டுமே ஒன்றுதான். ஆனால் மிக ஆழமான பொருள் கொண்டவை. எப்படியாவது புரிந்துகொள்ளுங்கள்.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Рік тому

    Very informative speech.I thank Professor R.Murali for giving this informative speech.

  • @deepanpetervishwajeet2712
    @deepanpetervishwajeet2712 2 роки тому +9

    Whenever I have a free time I just close my eyes and listen to your words. It gives me a great relief and guides me in a right path.
    🙏🙏🙏

  • @rajaramanvenkatachalam1832
    @rajaramanvenkatachalam1832 2 роки тому +1

    Excellent presentation about the most controversial subject. First time I listen to your video. Really excellent. Coming to the content , I feel UGK's philosophy matches 100% with Ramana Maharishi's NO MIND - concept. So what I understand from UGK's philosophy is " Just experience your existence doing your duty.. Again duties means that which is automatically happening for feeding the body with food & comforts. I got it 100% but struggling to put it in words. A great Spiritual lesson. All upanishads are saying the same thing but insisting on certain methodology. Thank you sir

  • @ramananvivek6206
    @ramananvivek6206 2 роки тому +3

    U G அவர்களை அறிமுகம் செய்தது வைத்ததற்கு மிக்க நன்றி

  • @manimaranp3722
    @manimaranp3722 2 роки тому +4

    மாற்றபடுவதற்கு எதுவுமில்லை தியாணம் தேவையில்லை இது இரண்டும் என்னுள் வந்த பின்பே இவரை அறிந்தேன் உண்மையை உணர்நதேன்

  • @asokasalem
    @asokasalem 2 роки тому

    I absolutely agree with the thoughts of U.G Krishnamoorthy. Thank you for bringing such valuable information to us.

  • @user-pr4fd8oz2h
    @user-pr4fd8oz2h 2 роки тому +2

    என்னங்களைத் தவிர வேறெதுவும் இல்லை. புரிந்துகொண்டு செயல்படுத்த எதுவும் இல்லை, என்று எனக்கு புரிய வைத்தவர்.

  • @k.spalanisamy9854
    @k.spalanisamy9854 10 місяців тому

    திரு யு ஜி கிருஷ்ணமூர்த்தி பற்றி தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

  • @shankarpalanisamy4706
    @shankarpalanisamy4706 2 роки тому +2

    தத்துவங்களும், புத்தகங்களும், மதங்களும் கோட்பாடுகளும் பிறர் அனுபவமே. அவை மனிதன் தன்னிலை அறிந்தபின் பயனற்றது.
    இயற்கையை உணர்ந்த பின்
    கடவுள் என்பது ஒர் குறியீடு
    என்பது எனது எண்ணம்.

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 2 роки тому +1

      இயற்கையை மனிதனால் அறிந்து கொள்ள முடியாத புள்ளியில் தான் கடவுள் என்ற எண்ணம் துவங்குகிறது. அதன்பின்னர் உண்மையான அறிவியல் குறித்த தேடல் முடிவுக்கு வருகிறது.

  • @kanankanan6047
    @kanankanan6047 2 роки тому +3

    அவர் அவர் சொன்ன இயற்கையுடன் ஒத்து வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை,,,

  • @inspireme910
    @inspireme910 2 роки тому +16

    It so wonderful Sir that you present different philosophy at one place …. 🙏🙏

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 2 роки тому

    இவரைத் தான் உலகம் முழுவதும் பாராட்டி பேசி... வாழ்க்கையில் நடைமுறை படுத்தல் வேண்டும்.
    மிகவும் அருமையான பதிவு.
    நானும் இவரைப் போன்று பலமுறை மனித வாழ்வின் நோக்கம் பற்றி சிந்தித்து இருக்கிறேன். அனைவரும் இந்த பதிவை கேட்க வேண்டும்.வாழ்க்கை மேம்படும். இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்.

  • @TheManzagirl
    @TheManzagirl Рік тому +1

    இந்த காணொளி மிக சிறப்பாக இருந்தது நாம்நாமாக இருந்தால் தந்தை பெரியாரும் வேண்டாம் சங்கராச்சாரியும் வேண்டாம்

  • @GangaiRajesh98
    @GangaiRajesh98 8 місяців тому

    Thank you sir. After listening to this speech I felt more relaxed and happy 😃

  • @user-in6le4nl9l
    @user-in6le4nl9l 2 роки тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா! நான் 10. வருடங்களுக்கு முன் திரு யூ. ஜி. கிருஷ்ண மூர்த்தி அவர்களின் புஸ்தகம் மாற்ற படுவதற்கு ஏதும் இல்லை, ஞானம் அடைதல் என்ற புதிர், தனித்து நிற்கும் துணிவு! என்ற புஸ்தகம் படித்தேன்! என்ன ஒரு அருமையான புஸ்தகம் மற்றும் யூ. ஜி. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் என் ஆன்மீக தேடல் நின்றது ஐயா! உலகத்தில் வந்த மகான்கள் எல்லோரும் ஒரு நிலைக்கு பிறகு உண்மை நிலையை கூறாமல் மண்ணை போட்டு மறைத்து விட்டார்கள் என்று வள்ளலார் கூறுகிறார்! அதை போல இவரோ உண்மை நிலையை அப்படியே கூறுகிறார்! இந்த ஆன்மீக வியாபாரிகள் நன்றாக வியாபாரம் செய்கிறார்கள்! இந்த அறியாமை உள்ள மக்களை ஏமாற்றி வருகிறாரகள்! இன்றும்! என் தேடுதல் நின்றது ஐயா! அவரது தமிழ் மொழி பெயர்ப்பு வழங்கியதுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா அவரது புஸ்தகம் அனைத்து தமிழ் பெயர்ப்பு செய்யவும் ஐயா வணக்கம் அருட் பெரும் ஜோதி தயவு நாகராஜன் தூத்துக்குடி முருகேசன் நகர் மடத்தூர் ரோடு! 23.05.2022

  • @kavithasan1991
    @kavithasan1991 2 роки тому +2

    வணக்கம் பேரா. இரா. முரளி ஐயா
    இந்த பதிவில் தாங்கள் கூறினீர்கள் கிருஸ்ணமூர்த்தியின் வாழ்வில், ஒரு அம்மா குழந்தைக்கு அடிக்கும் போது அந்த அடி அவரது உடலில் பட்டது போல் இருந்தது என்று.
    அவர் இயற்கையோடு இருக்கின்றார் அல்லது இயற்கையில் ஏற்படும் மாற்றம் அவருக்கு வந்தது என்று.
    எனக்கு என்ன சந்தேகம் என்றால்
    அடித்த அம்மாவும் இயற்கை அடிவாங்கிய மகனும் இயற்கை அவ்வாறெனில் மகன் மட்டும் வாங்கிய அடி எப்படி பட்டிருக்கும் அடி கொடுத்ததும் இவர் உணர்ந்து இருக்க வேண்டும் அல்லவா.
    உங்களது பதிவுகள் அருமை நன்றி.
    திருக்குறளில் உள்ள மெய்யியல் சிந்தனைகள் மற்றும் திருக்குறளினுள் குறள்களுக்கிடையில் வேறுபாடுகள் உண்டா என்பதை பதிவிட கேட்டுக் கொள்கிறேன்.
    நான் திருக்குறள் படித்தபோது அதனுள் நனுக்கமாக பார்த்தபோது திருக்குறள் தமக்குள் வேறுபடுவது போல் தெரிகிறது.
    நன்றி ஐயா.

  • @vijaykishna59
    @vijaykishna59 2 роки тому +2

    UG Krishnamurthy seems to be the only genuine philoshoper. Truth absolute truth. Great only one who had already said what that has been in my mind. Thank you for your services.

  • @jayaramanswaminathan9143
    @jayaramanswaminathan9143 Рік тому

    You have beautifully presented the life of an extraordinary human being lucidly and dispassionately without thrusting or advocating his ideas. We have read about Universal Consciousness but could never understand its meaning. But I think I can at least vaguely understand it's real meaning.
    Thank you Sir. 🙏🙏

  • @muninatan9813
    @muninatan9813 5 місяців тому +1

    ஆசிரியர் அவர் களுக்கு மேலும் இவரைப்பற்றி ஆராய்ந்து விடியோ போடவும்

  • @alawrence5665
    @alawrence5665 2 роки тому +6

    An Excellent Compilation. Mr. UGK broke all the myths and you have explained them well. Thanks.

  • @sukumarjayaraman9697
    @sukumarjayaraman9697 10 місяців тому

    நான், அதிலிருந்து பிரிந்திருக்கும் போது ( பிரபஞ்சம்) நானாக ஏற்படித்திக்கொன்ட கட்டமைப்பில்
    வாழ்கிறேன் ‘ எதிலிருந்து’ எனபதை விளக்க மீனடும் அந்த கட்டமைப்புக்குள் வந்துதான் புரிய வைக்க முடியும்( explanation) so
    இயற்கையுடன் இணைவதே மனித
    வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும்
    நன்றி
    டாக்டர் சுகுமார், கோவை
    7-30 pm 26-8-2023

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 2 роки тому +3

    Sir, Bring the reality, Someone who is accepts, some one is not.. ...Vazhthukkal. 👏👏👏👏

  • @mukilanmukilan8818
    @mukilanmukilan8818 Рік тому +1

    யூஜி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எண்ணமும் என்னுடைய எண்ணமும் நெருங்கி வருகிறது

  • @ramramamoorthi9910
    @ramramamoorthi9910 2 роки тому +3

    superb sir. its very useful for me And your speech gives clarity who practice on art and philosophy. Small request can you make video about "Jacques Lacan"

  • @maamanithar7383
    @maamanithar7383 2 роки тому +3

    அருமையான வாழ்க்கை எண்ணமில்லா வாழ்க்கை நடைமுறை வாழ்க்கையை வாழ்ந்து சாதிமதங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்துள்ளார் மனித குலம் சிந்திக்க வாழ்ந்துள்ளார்

  • @physicswithsir
    @physicswithsir 2 роки тому +1

    Really Classic Presentation Murali Sir ❤

  • @vijayalakshmibalasubramani3154
    @vijayalakshmibalasubramani3154 2 роки тому +2

    Simply breathtaking illuminating liberating takes you where you do not know he has questioned every body every thing . Takes enormous courage and insight

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 роки тому

      ua-cam.com/video/ZifRJ-xZzGw/v-deo.html
      பணம்,வளம் தரும் பதிகங்கள்.

  • @madhubalu7249
    @madhubalu7249 2 роки тому +1

    உங்களுடைய பதிவுகளை பார்த்துக்கொண்டு வருகிறேன். அருமையாக விளக்குகிறீர்கள். இந்த காணொளியில் சிலது எனக்கு புரியவில்லை. அத்வைத தத்துவமாகவும் இருக்கிறார். ஆனால் கடைசியாக நமக்கு என்ன சொல்ல வருகிறார் என் புரியவில்லை.🤔

  • @rajadurais1074
    @rajadurais1074 2 роки тому

    அருமை .சிந்தனை மேலும் ஆழமாக்கும் பேச்சு . வாழ்கவளமுடன் .

  • @ss-bu9pq
    @ss-bu9pq 2 роки тому +1

    ஒரு மனிதன் பழகுகிற அனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியாது நான் பேசுகிற வார்த்தை அனைவரையும் கவரும் என்றும் சொல்ல முடியாது ஆக நல்லவர்களுக்கும் கெட்ட விமர்சனங்கள் உண்டு உங்கள் உரையாடல் மிகவும் நன்றாக இருக்கிறது அதைத் தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள் ஐயா விமர்சனங்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்

  • @vijayaragavanmuthuraman3803
    @vijayaragavanmuthuraman3803 2 роки тому +3

    யுஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் அருமையான நபர். உண்மையை பேசியவர். ஆன்மீக நாட்டம் உள்ளவர்களுக்கு சில சக்திகள் உருவாகும். அது கடவுளினால் அல்ல நமது உடலில் இயற்கையாக அமைந்துள்ள சக்திதான். இதைத்தவறாக புரிந்து கொண்டு ஆன்மீகத்தில் உச்சநிலையை அடைந்து விட்டதாக தவறான விசயங்களை சொல்லுவார்கள்.

    • @vijaynarayanan7816
      @vijaynarayanan7816 Рік тому

      That nature is called godliness by believers.
      You call it as nature .

  • @ganapathyjayaseelan
    @ganapathyjayaseelan 2 роки тому +1

    Simple and therefore lucid but excellent...kudos to you

  • @user-dy4yw1rm6g
    @user-dy4yw1rm6g 2 роки тому +18

    நான் உடன் படுகிறேன் ஐயா. மிக தெளிவாக சிந்தித்துள்ளார் இவர்.

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 9 місяців тому +1

    Excellent one. Thanks for your presentation of great philosophers complete life and philosophy in very short duration with unbiased view. I have listened to a few and this philosopher's view is excellent and really stands apart from others.

  • @dhanasinghjoseph968
    @dhanasinghjoseph968 2 роки тому +1

    நன்றி சார். என் தேடல் நிறைவடைந்தது. UGK மிக சரி

  • @physicswithsir
    @physicswithsir 2 роки тому +4

    @49.20 - To me the mind is about thought + emotions. Both thought and emotions are created from different parts of the brain. The thought ripples as feelings. When we say 'I love You' is about feelings originating from brain. It's my opinion. 👍