98 )தில்லானா மோகனாம்பாள் பாடல் எழுதும்போது ஒரு உரசல் -KANNADASAN-VIDEO-98

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடல் எழுதும் போது ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கும் அப்பாவுக்கும் நடந்த செல்லமான சண்டை

КОМЕНТАРІ • 396

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому +1

    ஏ பி நாகராஜன் கவிஞர் கண்ணதாசன் இருவரும் காலத்தில் மறக்கமுடியாத மாமேதைகள் நன்றி

  • @manoama9421
    @manoama9421 3 роки тому +22

    You tube க்கு வந்தாலே நான் முதன்முதலாக தேடுவது கவியரசர் சம்பமந்தமான விஷயங்கள் தான், அதிலும் திரும்ப திரும்ப கேட்க அலாதி இன்பம் அது ஏன் ன்னு மட்டும் சொல்ல தெரியல.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +28

    எங்கள் கவியரசு எழுதிய பாடல்களை எல்லாம் கல்லில் செதுக்கி அதில் தங்க மை கொண்டு பூசி பாதுகாக்க வேண்டும் 🙏🙏🙏

    • @rajanrajan8199
      @rajanrajan8199 2 роки тому

      குறை சொல்லாதீர்கள் அந்த காலத்து டைரக்டர் எல்லாம் நாடகத்தில் இருந்து வந்தவங்க எல்லாம் மியூசிக் எல்லாமே தெரியும் இன்னிக்கு அப்படி இல்ல புதுசா வர்றவங்க மியூசிக்கலி எதுவுமே தெரியல ஆனா டெக்னீசியன் தெரியுது கதை எழுது ரங்கா.படம்.ஹிட்டாகுது

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 3 роки тому +4

    நடிகர்திலகத்தின் எண்ணற்ற படங்கள் ரீ பிளேஷ் செய்ய இயலாதவை .Impossible.

  • @kabinayaprathap8146
    @kabinayaprathap8146 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @arajeshwari287
    @arajeshwari287 3 роки тому +1

    Amazing sir

  • @poobalans4767
    @poobalans4767 Рік тому

    🎉

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 роки тому +17

    இதை ரசிக்கவும் தகுதி உள்ள ரசிகர்கள் அப்போது இருந்தார்கள்....

  • @solai1963
    @solai1963 3 роки тому +32

    மெய்சிலிர்க்கிறது...
    ஏதோ பாடல் வரிகளை சொன்னோம் அதற்கு ஏதோ ஒரு ராகத்தில் இசையை அமைத்தோம் அதனை என்னமோ ஒரு கோணத்தில் இயக்கினோம் என்றில்லாமல்,
    பாடலுக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பாக காட்சிப்படுத்தியதை நினைக்கையில் அந்த மேதைகளை இரு கரங்கள் கூப்பி வணங்க வேண்டும் அது தான் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்..
    பாடலின் நாடி நரம்புகளான நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி இருரையும் பாராட்டிக்.கொண்டேயிருக்கலாம்...
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே....நன்றி.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +2

      ஒப்பில்லா அந்த இரு நடிக ரத்தினங்ளை படத்தின் நாடி நரம்பு என்று உயர்த்தி எழுதி மகிழ்ந்து எம்மையும் மகிழ்த்திய நீங்களும் உங்கள் ரசனையும் நீடூழி வாழ்க

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 роки тому +16

    சிவாஜி கதாநாயகனாக நடித்த மாபெரும் காவியத்தில் சிவாஜிக்கு ஒரு பாடல் கூட இல்லை என்பது இந்த படத்தின் சிறப்பு, ரஜினி படத்தில் எல்லா பாடல்களும் எல்லா வரிகளும் ரஜினி மட்டுமே, எல்லா பாடல்களையும் தானே எடுத்துக்கொண்டால் தான் படத்துக்கு வெற்றி என்பது கிடையாது என்பதற்கு தில்லானா மோகனாம்பாள் ஒரு உதாரணம்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +2

      சிவாஜிக்கும் பத்மினிக்கும் ஒரு கனவுக் காட்சிபோல அமைத்து ஒரே ஒரு duet ஆவது வையுங்கள் என்று யார் யாரோ கெஞ்சியும் கூட (அனேகமாக distributors) A.P.நாகராஜன் தீர்மானமாக மறுத்து விட்டதாகவும், வேறொரு சாரார் அந்த தவறை மட்டும் இந்த படத்தில் செய்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும் அப்போது செய்தி வந்தது.
      இது போல் எடுக்கவேண்டும் என்று புறப்பட்டு இரண்டு படங்கள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்று படு தோல்வி. மற்றொன்றான கரகாட்டக்காரன் அருமையான திரைக்கதையாலும் நல்ல நகைச்சுவை காட்சிகளாலும் அபரிதமான வெற்றி பெற்றது. கலைச் செழிப்பு குறைவாக இருந்தாலும் இதைவிட நன்றாக எடுக்க முடியாது எனும்படி இருந்தது..

  • @sivakumar-gu9nk
    @sivakumar-gu9nk Рік тому +6

    கண்ணதாசன் பாடல்களைச் சின்ன வயதிலேயிருந்தே பாடி மகிழ்ந்தவன். இன்று எனக்கு வயது 74. இன்றும் ஒருநாள் கூட அவர் பாடல்களைக் கேட்காமல் இருந்ததில்லை. இதயத்தைத் தொடும் எளிமையான வார்த்தைகள்.
    நான் சமீபத்தில் எழுதிய கண்ணதாசன் கவிதை ஒன்று.
    கண்ணதாசனே!
    கவிகளின் அரசனே!
    வாழ்க்கையின் யதார்த்தத்தை
    கவிதை வரிகளில்
    வடித்தவனே!
    கன்னித்தமிழை
    உந்தன் நாவினில்
    களிநடனம் புரிய வைத்தவனே!
    படக்காட்சிகளுக்கு
    பாடல் வரிகளால்
    உயிரூட்டியவனே!
    எளிமையான
    சொற்களால்
    பாட்டுக் கோட்டை கட்டியவனே!
    பட்டி தொட்டி
    பாமர்களையும்
    பாடல்களால்
    கட்டி போட்டவனே!
    திரைப்படங்களின்
    வெற்றிக்குப்
    தீனி போட்டவனே!
    'அர்த்தமுள்ள இந்துமத'த்தால்
    ஆன்மீகவாதிகளை
    ஆச்சரியமூட்டியவனே!
    காலங்கள் பல சென்றாலும்
    கவிஞர்கள் பல வந்தாலும்
    கன்னித் தமிழும்
    கண்ணன் அருளும்
    உன்னைக்
    காலத்தை வென்ற‌க்
    கவிஞன் ஆக்கிடும் என்றும்!
    கோ.சிவகுமார்.

  • @jayakumarp9648
    @jayakumarp9648 3 роки тому +13

    தில்லானா மோகனாம்பாள் ஒரு நாவல்.....அந்த நாவலை சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றி எடுத்த a.p நாகராஜன் ஒரு வித்தகர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை...பாலையா குரலில் சொன்னால்..இது காவியமப்பா காவியம்...

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 роки тому +37

    தமிழ் சினிமாவின் உச்சம் தில்லானா மோகனாம்பாள்

  • @nedumaranlakshmi9806
    @nedumaranlakshmi9806 2 роки тому +6

    உண்மை இந்த படம் மறுபடியும் வரவேண்டும் என்றால் இறந்த அத்தனை கலைஞர்களும் உயிர் பெற்று வரவேண்டும் () தில்லானா மோகனாம்பாள் ஆஸ்கார் விருதுக்கு கொடுப்பினை இல்லை()செவாலியே விருதை பிரெஞ்சு அரசாங்கம் சிவாஜி அவர்களுக்கு அளித்து தனது புகழை,கௌரவத்தை தக்கவைத்துக்கொண்டது

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +38

    அருமையான கலைப்பொக்கிஷம், கலை உலக மாமேதைகள் நடிகர் திலகம், நாட்டியப்பேரொளி, பழம் பெரும் நடிகர்கள் பாலையா, TR ராமசந்திரன், PD சம்பந்தம்,அருட்ச்செல்வர் APN, இப்படத்திற்கு பாடல் எழுதி வெற்றி பெற செய்த கவியரசர் ஆகியோர் என் கண் முன்னே தோன்றி கண்ணீர் வர வழைத்து விட்டனர்

    • @seetharamanramamirtham7785
      @seetharamanramamirtham7785 2 роки тому +2

      ஆல் டைம் கிரேட். நாட் டு forget தி கிரேட் நகேஷ்.

    • @arumugamannamalai
      @arumugamannamalai 2 роки тому

      @@seetharamanramamirtham7785 , Never forget Nagesh sir.His Vaithi character is unforgettable

    • @muthunirmala1247
      @muthunirmala1247 2 роки тому

      பத்மினி,பாலையா,சாரங்கபாணி, மனோரமா நடிப்பும் கூட மறக்க இயலாதது

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 2 роки тому

      What is that thing called 'jalra'?
      You don't know!
      It is Jing ja.
      I enjoyed this scene. Now I am 72.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +18

    காணக் கிடைக்காத பொக்கிஷம். நடிகர் திலகமே உயர் பெற்று வந்தது போல் இருக்கு சார். இந்த கிளிப்பிங்கை எங்களுக்கு தந்த உங்களுக்கு கோடானு கோடி நமஸ்காரம். மேலும் அந்தக் காலத்தில் பன்முகத் திறமை கொண்டவர்கள் மட்டுமே இயக்குநர்களாக இருந்தார்கள் என்பது நூறு சதவீதம் உண்மை. நன்றி.

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 2 роки тому +13

    கண்ணதாசன் அவர்கள் விரைவில் மறைந்தது நமக்கெல்லாம் மிகப் பெரிய இழப்பு 🙏🙏

  • @jivarattinam5388
    @jivarattinam5388 3 роки тому +28

    அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமே, அதற்காக அல்லவா நாம் கொடுத்து வைத்துருக்க வேண்டும்.

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 3 роки тому +12

    பல நூறு தடவைகள் கேட்டு இரசித்த பாடல். கவியரசரின் திறமையை என்னவென்று சொல்வது. வார்த்தைகளில் சொல்ல இயலுமா? முடியமா? வே. கா. கணேசன். மலேசியா

  • @வாடாமல்லிகவிதைகள்

    கவியரசு கண்ணதாசனின் புகழ் மலர் என்றும் மணம் வீசிக் கொண்டிருக்கும்..!

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 роки тому +13

    எங்களை அந்த காலகட்டத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டீர்கள்.
    பல செய்திகள் கேட்டு பெருமையாய் உள்ளது. மக்கள் ரசனையில் வெற்றி பெற்ற பாடல்களுக்குப் பின் கடின உழைப்பு உள்ளது கண்டு மகிழ்ச்சி.
    படம் எடுத்ததை படம் எடுத்தவர்களுக்கு நன்றி.அதனை வெளியிட்ட தங்களுக்கு பாராட்டுக்கள்.

  • @mgrajan3995
    @mgrajan3995 3 роки тому +14

    அது ஒரு கனாக் காலம்.இனி கிடைக்காது.
    நினைக்கத் தெரிந்த மனம் இதை மறக்காது.

  • @srk8360
    @srk8360 3 роки тому +34

    வணக்கம் அண்ணா 🙏
    அற்புதமான பதிவு...
    அது காவியம்...
    கவியரசரின் பாடல் தனித்துவம்........
    அந்த நாட்கள் இனிவராது.... நீங்கள் சொல்லும் விதம் அருமை..
    நன்றி நன்றி 🙏💜💐💐💐💐💐😄😄😄💯/💯💜💜💜💜💜

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 3 роки тому +14

    மலரும் நினைவுகள் கண்ணதாசன் அவர்கள் காலம் சினிமாவின் பொற்காலம் நன்றி

  • @versatp2538
    @versatp2538 2 роки тому +11

    அருமையான கலைப்பெட்டகம்.
    தங்களுக்கு நன்றி!
    கவியரசர் புகழ் என்றும் வாழும்.
    மீண்டும் தில்லானா மோகனாம்பாள் வராது.

  • @ருத்துருத்ரேஸ்வரன்

    ஒளி பெரிதா ஒலி பெரிதா = தில்லானா மோகணாம்பாள்

  • @naanaasdesigns7262
    @naanaasdesigns7262 3 роки тому +15

    கண்ணீர்த்துளியும் நடித்திருக்கும் தருணத்தின் அற்புதக்கலவையில்
    கண்ணீர் பெருகுகிறது!

  • @rbsmanian729
    @rbsmanian729 2 роки тому +14

    ஏ பி நாகராஜன்... தமிழ் ரசிகர்களுக்கு....கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.....

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam 3 роки тому +14

    Gana Saraswathi Nightingale P Susheelaji's immense contribution to this movie 🎥 is unparalleled. None before her and none after....

  • @somasundarabarathy
    @somasundarabarathy 2 роки тому +8

    பாடல்கள் இடம் பெற்ற வரிகள் வியக்கவைக்கும்
    கற்பனை செய்ய முடியாத வைர வரிகள் காலத்தால்
    அழிக்க முடியாத பொக்கிசம் இறைவன் கொடுத்த வரம்
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அமுதரசம்
    கேட்க்கக்கேட்க்க பரவசம்

  • @sptgnadar
    @sptgnadar 3 роки тому +6

    இப்படியும் பாடல்களை எழுதி படமாக்கினார்கள் அன்று...
    அதனால் இரண்டு தலைமுறைகள் தாண்டியும் இப்பாடல்கள் நிலைத்து நிற்கின்றன!
    ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் எப்படி வேண்டுமானாலும் எழுதி, எப்படி வேண்டுமானாலும் படமாக்கலாம் என்பது இன்று...அதனால் இரண்டு வாரங்களைக் கூட தாண்டி நினைவில் வைத்திருக்க முடியாத நிலையில் இருக்கின்றன இன்றைய காலப் பாடல்கள்!

  • @Lakkuish
    @Lakkuish 3 роки тому +4

    MGR ஆட்சிக்காலத்தில் ரஸ்சியாவிலிருந்து ஒரு நல்லெண்ண குழு ஒன்று இந்தியா வந்தபோது தமிழருடைய கலாச்சார படம் காண்பிப்பதற்காக MGR அவர்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தை அவர் தலைமையில் குழுவினருக்கு காண்பித்தார் என்று படித்ததாக ஞாபகம். காமெராவுக்கு மலர் மாலை வைத்ததிலிருந்து கதையின் தன்மையையும் வந்த French குழு கவனித்துள்ளது.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 роки тому +13

    Amazing Amazing
    Those days pictures were
    Platinum Milestone in Tamil cinema we never ever want remake of such

  • @balasreenivasan3286
    @balasreenivasan3286 2 роки тому +4

    அந்த வெளிநாட்டு படப்பிடிப்பு குழுவினர் எடுத்த காட்சிகளை பெற்று ஆவண காப்பகத்தில் வைத்து இந்த கால சினிமா ரசிகர்களுக்கு போட்டுக் காட்டவேண்டும். நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் போலவே தமிழ் சினிமாவின் மகோன்னதமான காலத்தை பதிவு செய்யும் அற்புதமான ஆவணங்கள் அவை.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 роки тому +37

    உண்மைதான், இந்த மாதிரி படம், படத்தின் பாடல்கள், இசை, இயக்கம் எதுவும் அமைவதற்கு சாத்தியமே இல்லை. கண்ணதாசன், APN, KVM என்ன ஒரு கூட்டணி. உங்களுடைய சொல் நடையும் மிக அருமை.

  • @vijayadass5276
    @vijayadass5276 2 роки тому +5

    இது போன்ற காலத்தால் மறக்க முடியாத மனிதர்களுடைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு, ஐயாவுக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏🏽🙏🏽🙏🏽 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽 👏🏼👏🏼👏🏼

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +2

    ஏபிஎன் காலமான நாளில் கண்ணதாசன் எங்கிருந்தார்....அவர் மனநிலை பற்றி சொல்லுங்க ப்ளீஸ்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +15

    கவிஞரைப்பற்றி ஆயிரமாயிரம் விஷயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.சலிப்பே தட்டாது.
    வாழ்த்துக்கள்.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +7

    நிரந்தரம்.அழிக்க முடியாத புகழ்.பதிவுக்கு பாராட்டும் நன்றியும்.

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 3 роки тому +4

    வீரபாண்டிய கட்டபொம்மன்
    கப்பலோட்டிய தமிழன்
    திருவிளையாடல்
    கர்ணன்
    சரஸ்வதி சபதம்
    திருவருட்செல்வர்
    போன்ற இன்னும் பல படங்களையும் Replace செய்ய முடியாது

  • @omprakashar9038
    @omprakashar9038 3 роки тому +5

    AP,Nagarajan Aiya iyakkunar sikaram📽️
    Makadhevan Aiya isaimethai 🎶
    Sivajiganesan,sir Nadippin Sikaram
    Alivillatha Methaikalai potruvom 🙏

  • @subramanianchandramouli2776
    @subramanianchandramouli2776 2 роки тому +5

    In my view Thillana Mohanambal is the best picture. Best in all aspects. A perfect text reference for Tamil film.

  • @bharatetios3450
    @bharatetios3450 3 роки тому +6

    உன்மையில் சிறப்பு சிறப்பு சிறப்பு, 👏👍.நன்றி நன்பரெ; ஒரு அன்பான வேண்டுகோல் இந்த நிகழ்ச்சியில் பெரும் அறிஞர்கள் பேட்டி எடுத்தால் மகிழ்ச்சி, நன்றி அண்ணாதுரை.

  • @ravidang
    @ravidang 3 роки тому +7

    Mr. Annadurai Kannadasan I am delighted to watch your channel. Your presentation andnarrations are excellent. I am blessed to see the Tillana Mohanambal in the theatre because of my age group. Nobody can think of remaking the movie. No One can replicate Such actors in this time. Please go on with your presentation.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 роки тому +58

    ஈடு இணையற்ற படம் தில்லான மோக்னாபாள் இதற்கு இனையான படம் இதுவரை தமிழில் வரவில்லை

    • @ritz1510
      @ritz1510 3 роки тому +2

      பாகம் இரண்டு கரகாட்டக்காரன்....🙏

    • @asnandhakumar
      @asnandhakumar 3 роки тому +6

      @@ritz1510 such a stupid comparison

    • @ritz1510
      @ritz1510 3 роки тому +2

      @@asnandhakumar உன்மை நன்பரே ஆனால் திரு கங்கை அமரன் அவர்கள் திரு கண் ணதாசன் அவர்களிடம் சொன்னது...அதை தான் நான் கூறினேன்...🙏

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 роки тому

      A few months later in a mltiple stores in a caset CD section in aUSA New Jercy a foreigner took this films CD and joyfully looking front and back side of the CD and at that time Padmini who was in USA visited that stores and when she visited this section and saw a foreigner was seeing and keeping the CD. She went nearer to him and enquired about this film
      He told her I saw this movie when I was in Chennai and both the actor and actress acted beautiful. He could not understand the actresses was she.
      She also without identifying her asked about the dance and the lady who acted in this movie
      Even then he was not able to identifying
      She tolled him that this actresses was her only and told him that Nadhswara vidhvans name is Shivaji Ganesan
      He was surprised and enquired about this movie and then only he understood her face and compared with at CD cover where she and Shivaji's picture and glorified the movie and the actors and director
      This information she herself told in an interview

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 3 роки тому +1

      @@ritz1510
      நிழல் நிஜமாகாது நண்பரே !

  • @chidambaramannamalai2663
    @chidambaramannamalai2663 3 роки тому +6

    கண்ணதாசன் சரஸ்வதி தேவி யின் அவதாரம் 🙏

  • @asiriyathevanam2572
    @asiriyathevanam2572 2 роки тому +1

    தில்லானா மோகனாம்பாள் ஒரு திரைப்படம் அல்ல அது ஒரு காவியம், எவராலும் முடியாத காலத்தால் அழியாத இசைக் காவியம்

  • @sumappuramki
    @sumappuramki 2 роки тому +4

    அண்ணா! கர்ணன் படத்தின் பாடல்களுமே என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவைவிட்டு நீங்காத பாடல்கள். அந்தப் பாடல்கள் உருவான விதத்தையும் விளக்குங்கள் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்திருப்பதும் பாடகர்களின் குரல் வளத்தாலும், இசையமைப்பாலும், பாடல் வரிகளாலும், நடிகர்களின் இயல்பால நடிப்பாலும் மலர்ந்த சாகாவரம் பெற்ற பாடல்கள்!

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 3 роки тому +51

    அடுத்த சரணத்தில் கவிஞர் இப்படி எழுதி இருப்பார் " "மோகத்திலே என்னை மூழ்கவிட்டு" என்ன ஒரு கற்பனை வளம் பாருங்கள்.
    காதல் மோகம் என்றும் , காதலன் நாதேஸ்வர கலைஞன் என்பதால் , அவன் வாசிக்கும் மோகன ராகம் என்றும் பொருள் படும் படி எழுதி உள்ளார். கவிஞகருக்கு நிகர் கவிஞர் தான்.

    • @somasundarams3884
      @somasundarams3884 2 роки тому +2

      அன்பு அண்ணா, வணக்கம். திருவாளர்கள் கே. வி. எம், கண்ணதாசன் மற்றும் நாகராஜன் இவர்களை போல ஒரு தெய்வீக பிறவிகளை இனி மேல் பார்க்க முடியாது. என் உள்ளத்தில் குடிகொண்ட
      அய்யா மகா தேனையும், கவிஞர் அவர்களையும் இனி எப்பொழுது பார்க்க போகிறோம். அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள். எனது திருமணத்தை அப்பா கே. வி. எம்.. நடத்தி வைத்தார்கள். எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். தங்களுடைய செல் போன் நம்பரை அறிய ஆவல். நன்றி. வணக்கம். அன்புடன் சோமசுந்தரம். 99948 26617.🙏🙏🙏👌👌👌

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 роки тому

      மோகத்திலே பெண்களை மூழ்கவிட்டபிறகு என்ற வார்த்தைகள் கன்னித்தன்மை கொண்டவை....

  • @mgr3566
    @mgr3566 3 роки тому +9

    "தில்"லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தை ரீமேக் எடுக்க "தில்"லான ப்ரடியூசர், டைரக்ட்டர், நடிக்க "தில்"லான நடிகர்கள் உண்டோ?

    • @uzhavarmenmai6309
      @uzhavarmenmai6309 3 роки тому

      Already vanthachu Karagattakaran, padam...itharkku otti vantha padam (Remake with a little difference, everyone knows) and successful too!!

    • @mgr3566
      @mgr3566 3 роки тому +3

      @@uzhavarmenmai6309
      கேக்ரான் மேக்ரான் மாதிரி பேசப்டாது. கரகாட்டக்காரன் "தில்"லானா மோகனாம்பாளை resample செய்யலாம், remake ஆகாது. மோகனாம்பாளும் சிக்கல் சன்முகசுந்தரனாரும் தரும் இன்ப காதல் ரசத்தை பிழியவில்லை.
      முந்தி முந்தி விநாயகரே பாடலும் நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா பாடலின் உணர்ச்சி வேகத்தையும் ஒன்றாக கருத முடியாது. கரகாட்டக்காரன் காலத்தில் நிற்க அதன் கதை(கதை தில்லானா மோகனாம்பாள் கதையின் உல்ட்டா) திரைக்கதை, வசனம், டைரக்ஷன், பாடல், இசை, ஒளிப்பதிவு, நகைச்சுவை என அனைத்து துறைகளிலும் ஓக்கே. ஆனால் நாயகன் நாயகி கேரக்ட்டருக்கு தன் நடிப்பினால் சிவாஜி கணேசன், பத்மினி அளவுக்கு உயிர் கொடுக்க ராமராஜன் கனகா ஜோடிக்கு இயலவில்லை அல்லவா? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான்.
      மலை மலைதான்
      மடு மடுதான்.
      நலந்தானா பாடலில் பத்மினியின் கண்களில் வழியும் கண்ணீர் அவர் ஆப்பிள் கண்னங்களில் வழியும் போது விம்மாத நெஞ்சங்கள் இல்லை.
      கரகாட்டக்காரன்
      "தில்"லானா மோகனாம்பாள்
      இரண்டில் ஒன்றுக்கு உங்கள் ஓட்டு என்றால் யாருக்கு போடுவீர்கள்?

    • @uzhavarmenmai6309
      @uzhavarmenmai6309 3 роки тому

      @@mgr3566 , ungalukku thaan Iyaa...en vote

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 роки тому

      Avalavu priya dirctorai thanuudaiya eyalamiyal dunpuritheye kondurvittar MGR. APN died at the age of only 49 years. Tamil cinema world en sabakedu MGR then and now Raji ikanth mattrum solar. Tamil cinemacon golden period is between 1950 to 1980

    • @adakalamandy7366
      @adakalamandy7366 2 роки тому

      @@sreenivasanpn3506 True Brother- from a proud Malaysian Tamil whose ancestors from Alangudi, Pudukkottai District.

  • @laxmandurai7885
    @laxmandurai7885 3 роки тому +3

    தமிழன் தமிழின் ஆளம் கண்டான்.ஆனால் அரசியல் ஆளுமை இன்றுவரை காணவில்லை.
    வேதனை ! வேதனை !! வேதனை!! தமிழுக்கே .

  • @geethalakshmanan9883
    @geethalakshmanan9883 2 роки тому +3

    அருமையான பதிவு. 🙏🙏 ஐயா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை 👍👍👏👏👏👏

  • @balasreenivasan3286
    @balasreenivasan3286 2 роки тому +3

    அதுபோன்றே நாகராஜன் கதை வசனம் எழுதி வேணு தயாரித்து இயக்கிய சம்பூர்ண ராமாயணம் படமும் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்.

  • @Arunprasad1129
    @Arunprasad1129 3 роки тому +7

    அருமை அருமை, அந்த காலம் பொற்காலம்.

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 3 роки тому +10

    அண்ணா உங்கள் விளக்கம் அருமை எங்களை படப்பிடிப்பு தலத்துக்கு அழைத்து சென்று விட்டீர்கள்.

  • @chesterwilliam2647
    @chesterwilliam2647 3 роки тому +5

    Sir you are a Gifted son long live Legendary Mahakavinjar Iya Kannadhasan

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 роки тому +19

    அதனால் தான் அந்த பாடல்கள் இன்றும் நிற்கிறது அ. க. அவர்களே! நன்றி. மேலும் மேலும் கூறுங்கள்

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 2 роки тому +3

    'மறைந்திருந்தே பார்க்கும்
    மர்மம் என்ன' என்ற பாட்டிலே
    'ஷண்முகா' என்று பத்மினி அழுத்தம் கொடுத்து பாடுவதும்..அதற்கு சிவாஜி
    கொடுக்கும் ரியாக்ஷனும் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் பசுமையாக உள்ளது....
    எப்பேர்ப்பட்ட கலைஞர்கள்!!

    • @ranineethi760
      @ranineethi760 Рік тому

      தில்லானா மோகனாம்பாள் படம் அருமையான கலைப்படம் .

  • @mgr3566
    @mgr3566 3 роки тому +5

    எத்தனை கோடி இன்பம் "வைத்திருந்தாய்" இறைவா!

  • @raju1950
    @raju1950 3 роки тому +2

    Karnan thiruvilayadal
    konjum salangai also at same level

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 2 роки тому +3

    வணக்கம் 🙏ஐயா காவியதலைவனின் கற்பனையில் விளைந்த முத்துக்கள் ஒவ்வொன்றும் இன்றும் உலகமெங்கும் உளவிக்கொண்டுதான் இருக்கிறது அதற்கு அழிவே கிடையாது இவ்வுலகம் உள்ளவரை 👌👍🙏

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy 2 роки тому +2

    இந்தக்கதை விகடனில் வெளிவந்த ஒரு தொடர்கதை என்பதையும் எழுதியவர் உயர்திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் என்பதையும் நினைவுறுத்த வேண்டுகிறேன்

    • @micsmurmurs
      @micsmurmurs 2 роки тому

      கதையும், காட்சிகளும், கதாபாத்திரங்களும் வாசிக்க அருமை.

  • @68tnj
    @68tnj 3 роки тому +6

    Very nice narration. One of the all time favourite songs by Kavingar. Many. Talented artists made this film a great success and one of the finest and rare film of yesteryear.

  • @nsraghavanerode9000
    @nsraghavanerode9000 3 роки тому +3

    அருமையான, அற்புதமான பதிவு.
    மெய்சிலிர்க்கிறது.

  • @ramani.g390
    @ramani.g390 3 роки тому +8

    What an imagination of song! Unforgettable incident.

  • @ravisundaram3431
    @ravisundaram3431 3 роки тому +4

    ஜில் ஜில் ரமாமணி விட்டுடீங்களே!

  • @UmaDevi-hs3be
    @UmaDevi-hs3be 3 роки тому +2

    Of late I noted one Alangudi man's observation about பாட்டும் நானே .
    I lost my temper and have lashed at him pointing out how K aviarasu himself has given details . By repeatedly uttering an unfounded falsehood It can't become truth .
    A part of the details you have shared in this episode has already been told by you.

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 роки тому +4

    Thillana Mohanambal is Magnum opus film of APN Sivaji Padmini Kaviyarasu Kannadasan KV Mahadevan Nagesh Balaiah Manorama and all artists of that classic movie. All time best of Tamil cinema. Thank you Mr..Annadurai for your pictorial depiction.

  • @priyas4049
    @priyas4049 3 роки тому +3

    இப்படி'பா'வரிசையில் பல வெள்ளி விழா படங்கள் தந்த இயக்குனர் பீம்சிங் அவர்களுக்கு தமிழ் திரையுலகம் சரியான அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது என் கருத்து

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar1026 3 роки тому +30

    அந்த காலத்தில் அனைவரது உழைப்பும் எந்த ஒரு படைப்பிலும் காட்டப்பட்ட சிரத்தையும் தான் இதுபோன்ற திரைப்படங்களும் திரைப்பாடல்களும் இன்று வரை நிலைத்து நிற்கிறது. வாழ்க அவர்களின் புகழ்.

    • @ponvanathiponvanathi4350
      @ponvanathiponvanathi4350 2 роки тому +1

      கூட்டு முயற்சி என்றும் தோல்வியடைந்ததில்லை.

    • @gopalkalavathi7611
      @gopalkalavathi7611 Рік тому

      77

    • @sundararajansrinivasan1968
      @sundararajansrinivasan1968 Рік тому

      புராணப் படம் மட்டுமன்றி சமூகத்தில் வாரம் பாணியில் கங்கைக்கரை தோட்டம் பாடலில்நாம் ஊர்ந்து கவனித்தால் மீராவின் வரலாற்றை கண்ணன்முகம் கண்டகண்கள்மண்ணன்முகம் காண்பதில்லை என்ற அழகாக எழுத கண்ணதாசன் தவிர யாரையும் நான் காணவில்லை.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 роки тому +1

    மனோரமா ஆசீசியும் தான்

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 3 роки тому +5

    தமிழ் சினிமாவின் பொற்காலம் இந்தப் படம் வந்த நேரம்

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw 3 роки тому +6

    What you said is absolutely true... It's really a master piece....

  • @ramaas4032
    @ramaas4032 3 роки тому +5

    உண்மை. காலத்தை வென்ற காவியம்.

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 2 роки тому +1

    அருமை யான தகவல் நன்றி

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +2

    அந்த காலத்தில் கலையை மதித்து உடன் இருப்பவர்களை மதித்து தொழில் செய்யும் நடிகர்கள். ஆனால் இந்த காலத்தில் பணத்தை மட்டுமே பார்க்கும் நடிகர்கள் 😆😆😆

  • @kanikak5040
    @kanikak5040 2 роки тому +1

    காவியக் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மலரும் நினைவுகள் ..............
    விளக்கம் ...............................
    அருமை ! வணக்கங்கள் சார் !

  • @kasthurilitho
    @kasthurilitho 3 роки тому +3

    உடனே சிந்தனை செய்து சில மணித்துளிகளில் ஒரு பாட்டை எழுதுவது என்பது சாதாரண வேலையில்லை. ஆனாலும் கவிஞர் அவர்கள் உடனே சிந்தனை செய்து ஒரு பாடலை சாதாரண பாமரனும் அறியக்கூடிய வகையில் மிகவும் எளிய நடையில் எழுதி தயாரிப்பாளரையும், டைரக்டரையும், இசை அமைப்பாளரையும் திருப்தி செய்து விடுவார். அதுதான் அவரது பெரிய பலம்.

  • @மதுரைகண்ணதாசன்

    தில்லானா மோகனாம்பாள் ஓர் காவியம்! அதில்கவிஞரின் பாடல்கள்! ஓவியமயமான காவியம்! மறக்கமுடியுமா? படத்தையும் கவிஞரின் பாடல்களையும்!

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +1

    அருமை. உண்மை.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 роки тому +5

    Thanks. You always drag your viewers to the good old times. You told incidents related to thillana moganaambal. It is a classic film, this episode is also a classic episode. Well done!

  • @georgemariyan8854
    @georgemariyan8854 2 роки тому +1

    வானத்தில் நிலவு ஒன்றுதான்.அது போலவே தில்லானா மோகனாம்பாள்.படமும் ஒன்றுதான் .replace பண்ணமுடியாது உண்மைதான் அண்ணா.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 роки тому +5

    Legends of Legend is only Dr. Sivaji Ganesan.

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 3 роки тому +6

    All are living in that movie
    , The film and the songs will live ever. Great legends.🙏🙏

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 2 роки тому +1

    கவி.கா. மு.ஷரீப் பற்றிய உங்களின் கருத்து தேவையற்றது.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  2 роки тому

      மன்னிக்கவும்.அது என் கருத்து கிடையாது.பாட்டும் நானே பாடல் குறித்த கண்ணதாசனின் கோபமான பதிவு அது....கண்ணதாசனின் கருத்து தான் அது. அவ்வளவே.

  • @murugesanrathinavel2204
    @murugesanrathinavel2204 3 роки тому +2

    சார் ஆச்சர்யம் சந்தோசம் நன்றி சார்.நேராக சூட்டிங் பார்த்த மாதிரி இருக்கு. APN சார நேரில் பார்த்த மாதிரி இருக்கு. நீங்கா நினைவலைகள்

  • @RaviKumar-fj2zb
    @RaviKumar-fj2zb 3 роки тому +3

    Theivame...... Neenga engeyo poitteenga🙏🙏🙏 innum aayiramaayiram pathivugal pottaalum thavaraamal kaanbom.. Engal kavignanukkaaga

  • @krn8078
    @krn8078 3 роки тому +5

    *நீங்காத நினைவுகளே*

  • @mithubarath832
    @mithubarath832 3 роки тому +1

    ஜயா மகாகவிகாளிதாஸ் படத்தின் பாடல்களை பற்றி தயவு செய்து சொல்லுங்கள்

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 роки тому

    Sir great episode...evalavhu..periya arihuvhu.jeevighal...Vaazhnta..Tamizh..cinemaa...eind er u..taram..ketti...pick up dropu..sarakku...kettinu..solli..settuporaanughaa

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 3 роки тому +2

    இசை.நடிப்பு ஆகியவை பாடலுக்கு கூடுதல் மெருகேற்றலாம்.இவை இல்லாமலும் கவியரசு பாடல் வரிகள் மனப்பாடம் ஆகி அவர் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் ‌பெற்றுள்ளன.உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்.அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்.(.உதாரணத்திற்கு )

  • @mohamedsharif4149
    @mohamedsharif4149 2 роки тому +1

    க.மு ஷெரிப் எந்த உநூ

  • @mithubarath832
    @mithubarath832 3 роки тому +1

    ஜயா மகாகவிகாளிதாஸ் படத்தின் பாடல்களை பற்றி தயவு செய்து சொல்லுங்கள்

  • @bgsreedhharbg313
    @bgsreedhharbg313 2 роки тому +3

    THILANA MOHANAMBAL will always remain an encyclopedia in film making spanning generations. I would have watched this masterpiece many a time. Every frame is classically executed. The song portrayed in this video takes the viewer into trance. My salutations to all the great men behind this movie, specially Late Kannadasan Sir.

  • @dinar2623
    @dinar2623 2 роки тому +1

    Super sir. Well explained and really great👍👏😊

  • @sugumaransambandam118
    @sugumaransambandam118 2 роки тому +1

    பல அரிய நல்லப்படங்களை பாா்க்கும் பாக்கியத்தை
    நான் பெற்றேன்
    என்பதை நினைத்து
    பெரிதும் மகிழ்கின்றேன்.
    அந்த காலத்து படங்களையும், கவிஞரின்
    பாடல்களையும் பிரித்துப்பாா்க்கமுடியாத
    அளவு பின்னிப்பினைந்து
    இருந்திருந்ததை நினைத்தாலே பரவசம்
    கொள்கின்றேன்.

  • @gurutemplekuruviththurai9902
    @gurutemplekuruviththurai9902 3 роки тому

    ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்திற்கு நிகர் தில்லானா மோகனாம்பாள் தான் இனிமேலும் இப்படி ஒரு படம் எடுக்கவும் முடியாது அதற்கு வாய்ப்பும் இல்லை .

  • @MSBharani007
    @MSBharani007 3 роки тому +3

    அந்த படத்தை கொஞ்சம் உல்ட்டா பண்ணி பட்டி ட்ங்கரிங் பார்த்து ஒரு படம் வந்துடுட்சி

  • @sivaramanmahadevan1180
    @sivaramanmahadevan1180 3 роки тому +4

    After seeing this we feel, why the French government delayed Chevalier award for so many years.

  • @mithubarath832
    @mithubarath832 3 роки тому +1

    ஜயா மகாகவிகாளிதாஸ் படத்தின் பாடல்களை பற்றி தயவு செய்து சொல்லுங்கள்