மனஅழுத்தம் நீங்கியது.. எனக்கும் நல்ல வேலை அமையும், திருமணம் நடக்கும், முருகன் போன்று மகன் பிறப்பான் என்று தன்னம்பிக்கை பிறந்தது. மிகவும் நன்றி.. ஓம் முருகா போற்றி🙏🙏🙏
அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி இளைஞோனாய் ... இளைஞனாய் அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி, சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள், மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து துதிக்காமல், தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை, உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு, மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர், மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில் வீற்ற பெருமாளே.
சரியாக இன்னும் 20 நாட்களுக்குள் எனக்கு பிரசவம் தற்செயலாக இந்த படைப்பை பார்க்க நேர்ந்தது. பாடலின் வரிகளா, கம்பீர குரலா, காட்சி படங்களா எதுவென்று தெரியவில்லை எனக்குள் அத்துனை உற்சாகம்... குட்டி குமரனை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் பாடலின் வரிகளும், காட்சிகளும் வேற லெவல் ... பொதுவாக இந்த சமயத்தில் உடல் சோர்வு, பயம் சேர்ந்துக் கொள்ளும் ஆனால் அடுத்த நொடியே மனத்திரையில் பாடலை ஓடவிடுவேன் எனக்குள் அந்த மெல்லிய புன்னகை எட்டிப் பார்க்கும் .... Thanks team Great work
Hi Thenu, we are very happy to know that this song is creating a positive energy and excitement in you, all the credit goes to the saint Arunagirinathar for creating such a timeless masterpieces. Wishing you very good luck for the delivery, continue to stay positive and stay safe ! Baby Murugar or Baby Parvathi on the way to your house !
Sagothariye...ungal ennam pol ellam nadakum...i will pray to god MURUGA....same my wife ku innum 14 days la delivery date...ellam valla MURUGA THUNAI yudan
எத்தனை முறை கேட்டேனென எண்ணவில்லை.... ஆனா எண்ணமெலாம் இப்பாடலையே குட்டி போட்ட பூனை போல சுற்றி சுற்றி வந்து மூளைக்குள்ளே முடங்கியே விட்டது .... மனம் உருக்கிய இப்பாடலை உருவாக்கியோர் யாவரும் நீடுழி வாழ தோரணமலை முருகனை பிரார்த்திக்கிறோம் 🙏🙏🌹🌹🙏🙏
என் மகள் பிரியதர்ஷினி க்கு நாளைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் குழந்தை நலமுடன் வளர்ச்சி யுடன் இருக்க வேண்டும் அப்பா முருகா நீங்க தான் அப்பா எங்களுக்கு துனை
1:53 தெருவையர்கள் ஆசை மிஞ்சி.. வெகு கவலையே உழன்று... திரியும் அடியேனை உந்தன் அடி சேராய்................ இன்றைய இளைஞர்கள் மத்தியில் உண்டாகும் முறையற்ற பெண் மோகத்தினை... தெளிவாக பாடி அருளியுள்ளார்... அருணகிரி நாத பெருமான்... வாழ்க தமிழ்... வளர்க முருகன் புகழ்.......
முருகப்பெருமானே! ஞான ஒளியே! நல்லோரிடம் சென்று உங்கள் இன்பத்தமிழ்,இசைத்தமிழ் அனைத்தும் கேட்டு மகிழ்வீர்கள்,இப்பாடலை கேட்க வைத்த உங்களை மண்டியிட்டு வணங்குகிறேன் ஐய்யனே! ஓம் மலைக்கடவுளே வாழ்க! வாழ்க! 🙏🙏🙏
மிக அருமையான படைப்பு..... இதே வடிவில் மனிதன் கூற இறைவன் படைத்த எம் ஈசன் புராணம் சிவபுராணத்தையும் படையுங்களேன்..... ஓம் நம சிவாய..... இசை வடிவம் மிக அருமை.....
என் அப்பன் பழனி ஆண்டவனின் திருப்புகழ் அவனித்தனிலே பாடலுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் தினமும் இசையுடன் கூடிய உங்கள் இந்த பதிவை கேட்க மறப்பதில்லை.... நன்றி.... முருகா... 😍
மிகவும் அருமையான திருப்புகழ் பதிவு.தங்களுடைய ஒலி& ஒளி அமைப்பு பிரமாதம்.எல்லாம்வல்ல எம் பெருமான் முருகன் உங்களுக்கு குறைவில்லா வாழ்வையும் நிறைந்த செல்வத்தையும் தந்தருள்வார்.வாழ்க வளர்க
யாரப்பா இதோட வரிகள் தேனொழுக எழுதினது யாரப்பா இதற்கு இவ்வளவு அழகாக இசை அமைச்சது யாரப்பா நெஞ்சம் பிழிய ஆவி கூடு பறக்க உயிர் உருக பாடியது இவங்க மூணு பேரையும் எனக்கு ஆர தழுவணும்
பாடலா, தேன் குரலா, இசையா, ஓவியங்களா, திருப்புகழ் மகிமையா, சம்பந்த குருக்கள் அய்யாவின் சாயலா.. என்ன சொல்ல இந்த அற்புத படைப்பை!! அழகிய தமிழ் படைப்புக்கு கோடி நன்றிகள்!! இந்த இசை பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்!! 🙂
சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏... மெய் சிலிர்ந்தேன் 😇... முதல் முறையாக உங்கள் சேனலில் நுழைகிறேன்... இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலமாக ! And, subscribed immediately !! 💐❤
இப்படி தமிழில் பொருளோடு எந்த பதிவிலும் கண்டதில்லை. மிகவும் பயனுள்ள வீடியோ. பொருள் தெரியாமல் பார்க்கிறோம் கேட்கிறோம். பொருள் அறிந்து பார்ப்பதும் கேட்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும்... உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் ❤❤❤
என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி 😍😍😍😍🙏🙏🙏🙏🙏 மிக மிக அருமை அற்புதம்... இதை பார்க்கும் பாக்கியம் இன்று கிடைத்தது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️ thanks a lot to the whole team who behind this work
என்ன சொல்வது எப்படி பாராட்டுவதென்றே தெரியல. அவ்வளவு அருமையான ஒலிநயம் இசைநயம் அருமையான கண்களை கவர்ந்து ஈர்க்கும் அழகான காட்சிகள், முருக பெருமான் உலகை வலம்வரும் காட்சிகள் மிக மிக அருமை!!👌👌👌👌👌👌🌹🌹🌹🙏
வெங்கடேஷ் மற்றும் சித்ரா அவர்களே, கொஞ்சம் மாத்தி யோசிச்சீங்கனா, உங்களுக்கே புரியும். நம்மைப் போன்றவர்களை பற்றி பாடலில் வரும் சமயம், நம்மைப் போன்றவர்கள் உண்மையில் எப்படி வாழ வேண்டும என்ற தர்மத்தை , அதாவது ,தெய்வ நிலையை அடைந்த மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற உதாரணத்தை ரொம்ப அழகாக படம் ஆக்கியிருக்கிறார்கள். இதைப் பார்க்கும் இளம் சிறார்கள் சரியாக வாழ உதவுமே! அதற்காகத்தானே மகான்கள் பாடல்களும் புராணங்களும் எழுதி வைத்துள்ளார்கள்.
முருகா இதுவும் திருவிளையாடலால் உன்னில் பக்தனுக்கு எத்தனை இனிமையான குரல்வளம் சுற்றி போடுங்கள் அம்மா உலகமே கண் பட்டு விட்டது பிள்ளாய் என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வாய் கண்ணா❤❤❤❤❤
அப்பனே முருகா உனது புகழ் உலகமெங்கும் பரவவேண்டும். பாடல் வரி மிகவும் அருமை இசையும் மிகவும் அருமை இந்த பாலை கேட்கும்போதும் என் மனம் அமைதி அடைகிறது என்னையே அறியாமல் என் கண்களில் தண்ணீர் வருகிறது. முருகன் புகழ் போற்றி
ஐயா என் கண்ணீரால் முருகன் பாதத்தை கழுவி விட்டேன் ரொம்ப நன்றி ஐயா ஏன் தெரியவில்லை இதை பார்க்கும் பொழுது என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் இன்னும் நீங்கள் முருகனைப் பற்றி பேச வேண்டும் ஐயா
யாழ் இசை ஊடகத்தில் நானும் ஒருத்தனாக இணைந்தமைக்காக பெருமை அடைகிறேன். உங்களின் இனிமையான குரலும் உங்கள் வாய் வழியே வரும் இன்பத் தமிழும் எங்களை சங்ககாலத்திற்கு கொண்டு செல்வது போல் ஓர் உணர்வு வருகிறது அண்ணா. தமிழ் ஈழத்தாய் உங்களை ரசித்துக் கொண்டிருக்கிறாள். தமிழ்த்தாயின் அருளும் முப்பாட்டன் முருகப்பெருமானின் துணையும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். 🙏🙏வாழ்க தமிழ்🙏🙏 🇰🇬🇰🇬வளர்க தமிழர்🇰🇬🇰🇬
One the best version to make young generation to listen to thirupagl with the soul of murugan..... It's very addictive once you start your day with this song thanks to the team
நான் இதுவரை இப்பாடலை கேட்டதில்லை . நீண்ட காலமாக நான் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன் முருகன் வந்து பிறப்பாய் என்று இன்று எதிர் பார்க்காமல் கிடைத்த பாடலால் நம்பிக்கை வந்தது கண்டிப்பாக முருகன் வந்து பிறப்பார் என்று 😢😢😢😢😢😢
மனஅழுத்தம் நீங்கியது.. எனக்கும் நல்ல வேலை அமையும், திருமணம் நடக்கும், முருகன் போன்று மகன் பிறப்பான் என்று தன்னம்பிக்கை பிறந்தது. மிகவும் நன்றி..
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
Yes bro.
Memory panni padi paarunga. Stress buster.
🙏🙏🙏
இதேபோன்று எனக்கும் முருகன் பிறந்து விட்டார்
@@rajeswarip9084 gf')
Muthal murai ketapave yarukellam pudichavanga oru like pannunga...
அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து
மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து
அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி
இளைஞோனாய் ... இளைஞனாய்
அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர
குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி
அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப
வளர்ந்து
பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி,
சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,
மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும்
அன்பர்களுடைய
திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து
துதிக்காமல்,
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து
வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன்
அலைந்து
திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை,
உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?
மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம்
செய்த சம்பு,
மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை,
தும்பைப்பூ
மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின்
மேலணிந்த மகாதேவர்,
மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை
அணைத்துக்கொண்டு
ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த
மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே
துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை
உடையவனே
பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு
மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி
படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த
கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே
பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று
முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி
பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில்
வீற்ற பெருமாளே.
Super
Super🙏🏻
Happy
🙏🙏🙏🙏👌👌👌👌
Super
நான் கர்பம் தரித்த போது என் கணவர் முகமாக இந்த பாடல் கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்தது, என் மகன் பெயர் கழல்வீரா
❤
Woow same to
Enakkum enathu kanavan mulamakathan naanum entha padalai ketten
Naanum 4 masama irukkan❤
என் மகன் பெயரும் கழல்வீரன் தான்....❤❤
Enakum kayalveran piraka vefum endru pray pannikonga.. 10 varudama baby Ila.
சரியாக இன்னும் 20 நாட்களுக்குள் எனக்கு பிரசவம் தற்செயலாக இந்த படைப்பை பார்க்க நேர்ந்தது. பாடலின் வரிகளா, கம்பீர குரலா, காட்சி படங்களா எதுவென்று தெரியவில்லை எனக்குள் அத்துனை உற்சாகம்... குட்டி குமரனை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் பாடலின் வரிகளும், காட்சிகளும் வேற லெவல் ... பொதுவாக இந்த சமயத்தில் உடல் சோர்வு, பயம் சேர்ந்துக் கொள்ளும் ஆனால் அடுத்த நொடியே மனத்திரையில் பாடலை ஓடவிடுவேன் எனக்குள் அந்த மெல்லிய புன்னகை எட்டிப் பார்க்கும் .... Thanks team Great work
Hi Thenu, we are very happy to know that this song is creating a positive energy and excitement in you, all the credit goes to the saint Arunagirinathar for creating such a timeless masterpieces. Wishing you very good luck for the delivery, continue to stay positive and stay safe ! Baby Murugar or Baby Parvathi on the way to your house !
வாழ்த்துக்கள் முருகன் உம்மை காத்தருள்வாயகா🙏🙏
Sagothariye...ungal ennam pol ellam nadakum...i will pray to god MURUGA....same my wife ku innum 14 days la delivery date...ellam valla MURUGA THUNAI yudan
💥🔥🔥🙏முத்துமலை முருகன் உங்கள் வயிற்றில் பிறப்பான் 🙏🙏🙏🙏
உங்களுக்கு அந்த முருகனின் அருள் பார்வை உள்ளது
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
என் மகனை பெற்ற நேரத்தில் நான் அதிகம் கேட்ட பாடல்...
எத்தனை முறை கேட்டேனென எண்ணவில்லை.... ஆனா எண்ணமெலாம் இப்பாடலையே குட்டி போட்ட பூனை போல சுற்றி சுற்றி வந்து மூளைக்குள்ளே முடங்கியே விட்டது .... மனம் உருக்கிய இப்பாடலை உருவாக்கியோர் யாவரும் நீடுழி வாழ தோரணமலை முருகனை பிரார்த்திக்கிறோம் 🙏🙏🌹🌹🙏🙏
இப்பாடலை இயற்றியவர் அருணகிரிநாதர் ஆவார்
Same feeling for me....appan murugan arul purivaar
True
Yes
True🙏
என் மகள் பிரியதர்ஷினி க்கு நாளைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் குழந்தை நலமுடன் வளர்ச்சி யுடன் இருக்க வேண்டும் அப்பா முருகா நீங்க தான் அப்பா எங்களுக்கு துனை
1:53 தெருவையர்கள் ஆசை மிஞ்சி.. வெகு கவலையே உழன்று... திரியும் அடியேனை உந்தன் அடி சேராய்................ இன்றைய இளைஞர்கள் மத்தியில் உண்டாகும் முறையற்ற பெண் மோகத்தினை... தெளிவாக பாடி அருளியுள்ளார்... அருணகிரி நாத பெருமான்... வாழ்க தமிழ்... வளர்க முருகன் புகழ்.......
Unmai 👍 super
(*_*)
அருணகிரிநாதர் எல்லா சுகத்தையும் அனுபவிச்சிட்டு போனாரு
Real fact....
2:10 😅 2:11 😅 2:13 ☺️😅☺️😅☺️☺️☺️💐😊💐😘😘😘💐😡😘😘😘💐😊😊😊😅😊😊😅😅😊😅😊😅😅😅😊☺️☺️💐💐
இந்த திருப்புகழ் கேட்க கேட்க திருப்பம் வந்தது வாழ்க்கையில் ஓம் முருகா போற்றி
என்னை தொலைத்து விட்டேன் பாடல் கேட்டு ..பாடலை இயற்றியவர்,பாடியவர்,இசையமைப்பாளர் உங்களை வணங்குகிறேன்🙏
இப்பாடலைக் காணும் போதெல்லாம் கண்கள் குளமாகின்றன,
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
Who all are addicted to the photos Of little muruga
இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு அப்படி ஒரு மனசு சந்தோஷமா அப்படித் துள்ளிக் குதிக்குது அப்படி முருகர் உங்களுக்கு நல்லதே செய்யட்டும்
correct u❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்கள் இமைக்க மறந்த தருணம்.... அருமையானப் படைப்பு.... வாழ்த்துக்கள் யாழ் மியூசிக்.... Do it more...
💓💓
👏👏👏👏👏❤️❤️❤️
Command comes from "HEART"
Am to feel the same
.
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஆனால் எனக்கு இந்தப் பாட்டு மிகவும் பிடித்தது. நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர்🎉❤
Ayyo paavam
naam natharigal... naame naatharigal.....
மிகவும் அழகான படைப்பு... வரிகளை ரசிப்பதா😊 முருகன் காட்சிகளை ரசிப்பதா இசையை ரசிப்பதா 😊...அருமை அருமை...உங்கள் படைப்பு இன்னும் பல பல தொடர்ட்டும்...🎉
உண்மை உண்மை உண்மை
என் முருகன் ஆசி உன்னிலும் உண்டு சாமி முருகா லட்சியம் நிறைவேற மனம் இறங்கி அருள வேண்டும் ஆறு படையானே ❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
இந்த திருப்புகழ் பாடலை தினமும் பத்து முறை கேட்பேன். மனதிற்குள் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். யாவரும் நலம் பெற முருகன் அருள்வார்
முருகப்பெருமானே! ஞான ஒளியே! நல்லோரிடம் சென்று உங்கள் இன்பத்தமிழ்,இசைத்தமிழ் அனைத்தும் கேட்டு மகிழ்வீர்கள்,இப்பாடலை கேட்க வைத்த உங்களை மண்டியிட்டு வணங்குகிறேன் ஐய்யனே! ஓம் மலைக்கடவுளே வாழ்க! வாழ்க! 🙏🙏🙏
அருமை பா.
என்ன தவம் செய்தேன் இப் பிறவியில் இந்த பாடலை கேட்க ❤❤❤💯💯💯💥💥💥💥💥💥💥
என்ன இசை.! என்ன வரிகள்.! அடேங்கப்பா.! மனதை ஏதோ செய்கிறது.! முருகா.! எல்லோரையும் காப்பாத்து.! சிறந்த படைப்பு.! வாழ்த்துக்களும், நன்றிகளும்.!
🙏🙏🙏
அருணகிரிநாதர் வரிகள் உலகம் அழிந்தாலும் தணித்து நிற்கும் வரிகள்
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் பாடியவர் க்கும் இசை அமைப்பாளர்க்கும் மிக்க நன்றி
அருணகிரிநாதரே மெய்மறக்கும் படியான இசை நன்குப் பாடினமை ஆக சிறப்போ சிறப்பு
கவிஞர் நாதமணி
இந்த பாடலை பாடியவருக்கு இறைவன் கொடுத்தவரம் வாழ்கவழமுடன்
மிக அருமையான படைப்பு..... இதே வடிவில் மனிதன் கூற இறைவன் படைத்த எம் ஈசன் புராணம் சிவபுராணத்தையும் படையுங்களேன்..... ஓம் நம சிவாய..... இசை வடிவம் மிக அருமை.....
என் அப்பன் பழனி ஆண்டவனின் திருப்புகழ் அவனித்தனிலே பாடலுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் தினமும் இசையுடன் கூடிய உங்கள் இந்த பதிவை கேட்க மறப்பதில்லை.... நன்றி.... முருகா... 😍
Vandhom vazhndhom endru illamal ,Vandhom Payindrom Panindhom murugan thiruvandu sendrom ena vazhkai mara vendum...
Ethani sodhani vandhalum ungal meedhu konda bakthi ,ungali marakkamal irukka vendum .Guruvai Neengal endrum iruthal vendum
Siruvapuri muruga engal sillarai ennagali sidhaithu Mel selirukum ungal pugazhai thirupugazhi ulagam uyya padi konde irukka vendum
எத்தனை முறை கேட்பது தெரியவில்லை திருப்புகழ் அமுதம் பாடிய விதம் அருமை👌👌👌🌹🙏🙏 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
நன்றி தனலட்சுமி அவர்களே
இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் முத்துக்கள்
நேற்று இந்த மெய்ஞானபாடல் கேட்டேன். இதுவரை 100முறை கேட்டு விட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆத்ம நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அய்யா / அம்மா
செந்தூர் முருகன் போன்று எனக்கு ஒரு மகள் பிறப்பால்
யுனிவர்சல் ஃபைன்ஸ்ட் டியூன் செய்யப்பட்ட நல்ல இசையில் இந்த அழகான அர்ப்பணிப்புக்கு நன்றி.
Thank you 🙏🏽
என் கண்களை விட்டு அவன் காலடிகளை கழுவுகின்றது கண்ணீர்த்துளிகள். 🙏🙏🙏🙏🙏
எழுந்து வா முருகா
மிகவும் அருமையான திருப்புகழ் பதிவு.தங்களுடைய ஒலி& ஒளி அமைப்பு பிரமாதம்.எல்லாம்வல்ல எம் பெருமான் முருகன் உங்களுக்கு குறைவில்லா வாழ்வையும் நிறைந்த செல்வத்தையும் தந்தருள்வார்.வாழ்க வளர்க
மனக்கவலை தீர்க்கும் மருந்தாக உள்ளது இப்பாடல்.அனைவரும் பயனையும் முருகன் அருளையும் பெறுங்கள்.
கேட்க. கேட்க திகட்டாத. அமுத சுரபி போன்ற பாடல் 🎉
ஓம். முருகா சரணம் 🙏🙏🙏
மெய் மறந்த தருணம் சொல்ல வார்த்தைகள் இல்லை மனமார்ந்த நன்றிகள்
என்ன தவம் செய்தேன் இதை கேர்ப்பதற்கு !
💐💐💐💐💐💐💐💐💐💐அரோகரா அரோகரா
அது என்னவோ. முருகனை போல முருகன் பாடல்களும் தான் எவ்வளவு அழகு
ஆமா❤
யாரப்பா இதோட வரிகள் தேனொழுக எழுதினது
யாரப்பா இதற்கு இவ்வளவு அழகாக இசை அமைச்சது
யாரப்பா நெஞ்சம் பிழிய ஆவி கூடு பறக்க உயிர் உருக பாடியது
இவங்க மூணு பேரையும் எனக்கு ஆர தழுவணும்
Ithu thirippugazh
கேட்க கேட்க இன்பம் பாய்கிறதே காதினிலே...🖤🖤🖤🖤🖤🖤
🎉❤ஓம் சரவணபவ வடிவேலா என் குடும்ப பிரச்சனைகள் முழுவதும் நீங்கி என் குடும்பத்த காத்தருள வேண்டும் அய்யனே ❤🎉
கே ட்க நினைத்த ஒரு பாடல்
அருமையான பாடல் . அருமையான காட்சி.
உள்ளம் உருகுது பாடலைக் கேட்கும் போது ❤❤❤
பாடலா, தேன் குரலா, இசையா, ஓவியங்களா, திருப்புகழ் மகிமையா, சம்பந்த குருக்கள் அய்யாவின் சாயலா.. என்ன சொல்ல இந்த அற்புத படைப்பை!! அழகிய தமிழ் படைப்புக்கு கோடி நன்றிகள்!! இந்த இசை பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்!! 🙂
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐 அற்புதமான குரல்... . இனிமையான பதிவிற்கு நன்றி நன்றி 🙏💐💐🙏💐💐💐💐
சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏... மெய் சிலிர்ந்தேன் 😇... முதல் முறையாக உங்கள் சேனலில் நுழைகிறேன்... இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலமாக ! And, subscribed immediately !! 💐❤
Super song n music excellent
முருகா சீக்கிரம் குழந்தை வரம் தாங்க ஐயா அப்பனே.... ஓம் சரவண பவ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவனி தனிலே பிறந்து. மழலை எனவே தவழ்ந்து என்ன. அற்புதமான பாடல் இந்த பாடலை கேட்டாலே நாம் பிறந்த. பயனை அடையலாம் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
இப்படி தமிழில் பொருளோடு எந்த பதிவிலும் கண்டதில்லை. மிகவும் பயனுள்ள வீடியோ. பொருள் தெரியாமல் பார்க்கிறோம் கேட்கிறோம். பொருள் அறிந்து பார்ப்பதும் கேட்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும்... உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் ❤❤❤
நான் தினமும் 10 தடவையாவது உங்கள் படைப்பான இந்த பாடலை கேட்டு விடுவேன். சிலசமயங்களில் தொடர்ச்சியாக 30நிமிடம் கூட கேட்டதுண்டு.🎉
நெஞ்சை உருக்கும் குதம்பை சித்தரின் பாடல். அருமையான வரிகள் மற்றும் அதற்கொப்ப காட்சியமைப்பு. கேட்பாருக்கு புண்ணியம் கிட்டும்.
திரும்ப திரும்ப கேட்கத் தோன்றும் பாடல் 😊😊😊
என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி 😍😍😍😍🙏🙏🙏🙏🙏 மிக மிக அருமை அற்புதம்... இதை பார்க்கும் பாக்கியம் இன்று கிடைத்தது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️ thanks a lot to the whole team who behind this work
Vera Level 🎵🎵🎵Songs... Animation.. Music... Singer🎤 all are super...
என் ஊரு பழனி, இப் பாடல் எனது மனதை ஒருநிலைப்படுத்தும்.
மிகவும் அருமையான படைப்பு இசை மனதை மயக்குகிறது அற்புதம் 🙌🙌🙌👏👏👏
தமிழ் கடவுளுக்கு அழகு தமிழில் பாமாலை. கேட்க கேட்க இனிமை
முருகா நாளைக்கு குழந்தை பரிசோதனை செய்ய்ய போகிறேன் positive வரணும் முருகா நீயே வர வேண்டும் முருகா உன்னையே நம்பி இருக்கிறேன்
Good luck 🙏🏽🙏🏽🙏🏽
மனக்கவலை போக் கும் என் அப்பன் திருப்புகழ்
மீண்டும் , மீண்டும் கேட்க துண்டும் பாடல். 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
எங்குள தெய்வமே அரோகரா
இசை அருமை வாழ்த்துக்கள்
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி, அன்புள்ள சக்தி சரவண சிவன் திருப்புகழ் வேலவா.
என்ன சொல்வது எப்படி பாராட்டுவதென்றே தெரியல. அவ்வளவு அருமையான ஒலிநயம் இசைநயம் அருமையான கண்களை கவர்ந்து ஈர்க்கும் அழகான காட்சிகள், முருக பெருமான் உலகை வலம்வரும் காட்சிகள் மிக மிக அருமை!!👌👌👌👌👌👌🌹🌹🌹🙏
பாடல் ஆசை வயப்பட்ட மனிதர்களை பற்றி இருக்கும் இடத்தில் முருகன் பிறப்பு காணொளி தமிழறியாத காரணத்தால் இருக்குமோ
உண்மை...நம்மை போன்ற சாதாரண மக்கள் இறைவன் மீது பக்தியோடு இருக்க பாடிய பாடல்...
வெங்கடேஷ் மற்றும் சித்ரா அவர்களே, கொஞ்சம் மாத்தி யோசிச்சீங்கனா, உங்களுக்கே புரியும். நம்மைப் போன்றவர்களை பற்றி பாடலில் வரும் சமயம், நம்மைப் போன்றவர்கள் உண்மையில் எப்படி வாழ வேண்டும என்ற தர்மத்தை , அதாவது ,தெய்வ நிலையை அடைந்த மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற உதாரணத்தை ரொம்ப அழகாக படம் ஆக்கியிருக்கிறார்கள். இதைப் பார்க்கும் இளம் சிறார்கள் சரியாக வாழ உதவுமே! அதற்காகத்தானே மகான்கள் பாடல்களும் புராணங்களும் எழுதி வைத்துள்ளார்கள்.
@@sridevisoorianathasundaram5239 👏👏👏👏👏
மகனாக நீயே வரவேண்டும் முருகா❤
அருணகிரிநாதர்
சுவாமி.திருவடி.போற்றி.போறீறி❤.
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அற்புதமான பாடல் வாழ்கவளமுடன்
3D Animation.... Awesome....
👏👏👏👏👏
Singer... Music... Nice
முருகா இதுவும் திருவிளையாடலால் உன்னில் பக்தனுக்கு எத்தனை இனிமையான குரல்வளம் சுற்றி போடுங்கள் அம்மா உலகமே கண் பட்டு விட்டது பிள்ளாய் என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வாய் கண்ணா❤❤❤❤❤
எழுந்து வா முருகா முருகா
ஆறுபடைமுருகனே கதிர்காமத்துஞானி இரண்டாம் தமிழ்சங்கத்தைநிறுவியதெய்வமே போற்றி 10000ஆயிரம் வருடம்முன் வாழ்ந்த ஆசீவஆசானேபோற்றிபோற்றிபோற்றி😊
Om muruga potri💓🌺🌼🌹🙏💗💚💛🌹🌺💓🌼🌹💛
அப்பனே முருகா உனது புகழ் உலகமெங்கும் பரவவேண்டும். பாடல் வரி மிகவும் அருமை இசையும் மிகவும் அருமை இந்த பாலை கேட்கும்போதும் என் மனம் அமைதி அடைகிறது என்னையே அறியாமல் என் கண்களில் தண்ணீர் வருகிறது. முருகன் புகழ் போற்றி
Wow, classic in current trend ....keep going
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏 ஓம் ஶ்ரீ சற்குரு சுவாமிகள் போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
First class song & editing mersal🙏
அழகுக் குரல்....உங்களை பார்க்க வேண்டும்...என் முருகனின் ஆசிகள் நிறைய உண்டு நோக்கு.
Music Animation Editing Vocal 🍫🍫🍫 Everyu Superb 🎸🎸🎸🎸🎸🎸🎸
Great work...எத்தனை time கேட்டாலும் சலிக்கவில்லை....My best of best of this song and music... lot's of love
அருமைங்க. அழகான காட்சிப்படுத்தல்,வரிகளை பரிபூரணமாக பார்ப்போரின் உள்ளத்தில் சேர்த்தல் மற்றும் இசை என அனைத்தும் அருமைங்க 🙏❤🙏❤🙏❤ நன்றி நன்றி நன்றி🙏❤🙏❤🙏❤
ஐயா என் கண்ணீரால் முருகன் பாதத்தை கழுவி விட்டேன் ரொம்ப நன்றி ஐயா ஏன் தெரியவில்லை இதை பார்க்கும் பொழுது என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் இன்னும் நீங்கள் முருகனைப் பற்றி பேச வேண்டும் ஐயா
Great - voice, edit , animation, music வாழ்த்துக்கள், எல்லா திருப்புகழ் லயும் இதுமாதிரி ஈசியா பாடி பதிவு பன்னுங்க🙏
எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் நான் மெய்மறந்து நிற்கிறேன். ஏன் என்று தெரியவில்லை? முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா...
இறையருள் பெற்ற, பெற வைக்கின்ற குரல் இசை, அருமை, நன்றி, வாழ்த்துக்கள்.
கேட்கும் அனைத்து உயிர்களையும் இறை பாடல்கள் மயக்கிவிடுகிறது 🙏🙏
எல்லாமே சூப்பர்
நான் பலமுறை
கேட்டுவிட்டேன்.
ஓம் முருகா
3:19 Evlo periya story ah oru chinna visual la convey pannirukinga semmaaa... Vaazhthukkal
Yessssss... nice creativity
யாழ் இசை ஊடகத்தில் நானும் ஒருத்தனாக இணைந்தமைக்காக பெருமை அடைகிறேன்.
உங்களின் இனிமையான குரலும் உங்கள் வாய் வழியே வரும் இன்பத் தமிழும் எங்களை சங்ககாலத்திற்கு கொண்டு செல்வது போல் ஓர் உணர்வு வருகிறது அண்ணா.
தமிழ் ஈழத்தாய் உங்களை ரசித்துக் கொண்டிருக்கிறாள்.
தமிழ்த்தாயின் அருளும் முப்பாட்டன் முருகப்பெருமானின் துணையும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
🙏🙏வாழ்க தமிழ்🙏🙏
🇰🇬🇰🇬வளர்க தமிழர்🇰🇬🇰🇬
Superb, my eyes full of tears while listening this thirupugazh. God bless you
മുരുകൻ സ്വാമിയേ ഞങ്ങളെ കാക്കണേ saravanaa ...........❤
One the best version to make young generation to listen to thirupagl with the soul of murugan..... It's very addictive once you start your day with this song thanks to the team
Heart melted.....Addicted to the song
நன்றி 🙏🙏
Muruga..... Wow
நான் இதுவரை இப்பாடலை கேட்டதில்லை . நீண்ட காலமாக நான் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன் முருகன் வந்து பிறப்பாய் என்று இன்று எதிர் பார்க்காமல் கிடைத்த பாடலால் நம்பிக்கை வந்தது கண்டிப்பாக முருகன் வந்து பிறப்பார் என்று 😢😢😢😢😢😢
ராகம்: பௌளைதாளம்:
அவனிதனி லே பிறந்து மதலையெனவே தவழ்ந்து அழகுபெறவே நடந்து இளைஞோனாய்
அருமழலை யே மிகுந்து குதலை மொழி யே புகன்று அதிவிதமதாய் வ ளர்ந்து பதினாறாய்
சிவகலைகளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிகளே நி னைந்து துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யா யுழன்று திரியுமடி யேனை யுன்ற னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதிய றுகு வேணி தும்பை மணி முடியின் மீத ணிந்த மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள் குமார துங்க வடிவேலா
பவனிவர வேயுகந்து மயிலின் மிசை யே திகழ்ந்து படியதிர வேந டந்த கழல்வீரா
பரமபதமே செ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்தபெருமாளே.
அருமை 🙏🙏🙏
நன்றி
Padalin palan
Vera level editing n all keep rocking editing team💐💐💐💐
வெற்றி வேல் முருகனுக்கு ஹறோ ஹறா.என்னா பாடல்,,என்னா பாடகரின் கனீர் குறல், அம்மை,அப்பனுடன் முறுக பெறுமாளை பார்க, பார்க, பாடலின் வரிகள் ,மிக்க சந்தோஷமாக இறுந்து, மிக்க அறுமை, சிறப்பான பாடல். முருகா போற்றி போற்றி.