பாம்பன் சுவாமிகள் அருளிய நாளறுபது பதிகம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024
  • பாம்பன் சுவாமிகள் அருளிய ஸ்ரீமத்-குமாரசுவாமியத்தைச் சேர்ந்த நாளறுபது பதிகம்:
    எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் (இசை)
    எழுத்தளவுடையன.
    நென்மு தற்பல நன்னி லத்தில்வி தைக்கு நாள்புன் னிறுத்துநாள்
    பன்மு கக்களை யெற்று நாள்கதிர் வெட்டு நாள்பதி கொட்டுநாள்
    நன்மு கத்துட னுண்ணு நாள்களு மோய வேநம னாள்வரின்
    என்மு னைப்புறு வீர்செவ் வேளடி யெண்ணி வாழ்மினி லத்தரே. 1
    பெட்பி னோடுச ரக்கெ லாம்விலை பேசு நாள்பெறு கின்றநாள்
    ஒட்ப மாயவை விற்கு நாள்பொரு ளீட்டு நாள்களும் வீட்டவே
    திட்ப வேனம னாள்வ ரும்பொழு தென்செய் வீர்கள்செவ் வேட்பரன் நட்பி னார்நெறி பற்றி யுய்குதிர் நாண யம்விழை மைந்தரே. 2
    ஆடு நாள்களு மோடு நாள்களு மாடி நேடிம டந்தைமார்
    கூடு நாள்களு மக்கள் வந்துகு லாவு நாள்களு மோயவே
    வீடு நாளுற லாவ தென்னெனு மெய்யு ணர்ந்தரு ளெம்பிரான்
    கேடு றாதசெவ் வேள டித்துணை கேண்மி னாளுநன் மைந்தரே. 3
    சேகு சேர்மரம் வெட்டு நாளவை செப்ப மேவுற வெற்றுநாள் வாகு சேரவ மைத்து மாளிகை கட்டு நாளது முற்றுநாள் ஆகு லந்தப வாளு நாள்களு மோய வேநம னார்முனே போகு நாள்செய்வ தென்னெ னாவருள் போற்றி வாழ்மின்கண் மைந்தரே. 4
    பாட மேவிழை வீர்பன் மாகலை பற்று நாளவை முற்றுநாள்
    பீடர் தம்மைய டுக்கு நாள்பிழை யின்றி யேவரை கின்றநாள்
    சேடர் சம்பள மேற்கு நாள்களு மோயு மேசெலு நாளிலே
    ஆட லொன்றுமி லாதி றுங்குக னார்வ மெய்தியும் வீர்களே. 5
    ஐந்தி லக்கண நச்சு நாளவை கற்கு நாள்கவி கட்டுநாள்
    பந்த ரைத்துதி செய்த யாவையு மேப டித்துரை செய்யுநாள்
    சந்த னந்துணி யேற்கு நாள்களு மோய வேசம னாள்வரும்
    அந்த நாள்செய்வ தென்னெ னாவயி லானை நாடுதிர் மைந்தரே. 6
    மண்ணி னாற்கல மேசெய் நாள்வன்ம ரத்தி னாற்பல பண்ணுநாள்
    திண்ணி தாயபொன் வெள்ளி யாற்பணி செய்யு நாடுணி நெய்யுநாள்
    நண்ணு நாள்களெ லாஞ்செல் வானம் னாள்வ ரும்பொழு தென்செய்வீர் அண்ண லார்முரு கைய னாரரு ளன்பி னின்மின்கண் மைந்தரே. 7
    புரையி லோவியர் தீட்டு நாள்கரு மார்தொ ழிற்பொரு ளீட்டுநாள் விரைசெய் மாலைகள் கட்டு நாண்மிளிர் வெண்க லம்பல தட்டுநாள்
    திரைபல் கோடிக டைக்கு நாள்களு மோய வேயுயிர் தீருநாள்
    தரையு ளீர்செய்வ தென்கொல் சேயிறை தாள்க ளெண்ணுதி ரன்பொடே. 8
    ஆடு மாடுபெ ருக்கு நாளலை யாட்டு நாள்கல மோட்டுநாள்
    கோடு செங்குழ லூது நாள்பறை கொட்டு நாள்படை வெட்டுநாள்
    மூட நாள்களு மோய வேகண்ணை மூடு நாள்வரி னென்செய்வீர்
    நாடல் செய்யுள மேவு சண்முக னண்பை நாடுதிர் மைந்தரே.9
    எத்து ணைத்திற லாரை யுங்கவ ரேம னாள்வரி னீவிர்செய்
    உத்தி யாதுள துங்க ணாள்களு ளொன்று மின்றத னாலிந்நாள்
    முத்தி மேவரு ணாசல ப்பெய ரானை யாண்முரு கோனெனும்
    அத்த னேமப தாம்பு யத்தைய கத்தி ருத்துதிர் மைந்தரே.10

КОМЕНТАРІ • 19

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому +1

    முருகா சரணம்.
    மயிலும், அயிலும், சேவலும் துணை.
    அத்யாச்ரம சுத்தாத்வைத வைதீக சைவசித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடிகள் சரணம்., சரணம்.
    அருமையான பதிவு. எத்தனை நாட்கள் என்பதை ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டுள்ளீர்கள். பாடல்கள் முழுவதையும் தந்து, பொருள் விளக்கத்தையும் தந்திருக்கிறீ்ர்கள். மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.

  • @arumugamsanthi6706
    @arumugamsanthi6706 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ மத் குமரகுருதாச குருப்யோ நம:💐
    தெளிந்த நீரோடை போன்ற இசை.
    பூவுலக நிலையாமையை தெளிவுபடுத்த தக்க அருட்பாடல்.
    பதிவிட்டு நினைவூட்டியமைக்கு நன்றிகள்.
    திருப்பணி தொய்வின்றி தொடர ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருள வேண்டுகிறேன்.
    நன்றிகள்\வாழ்த்துக்கள்

  • @vijisekar9819
    @vijisekar9819 Рік тому +1

    இறைநலம், மனநலம், உடல்நலம், பொருள் நலம், மற்றும் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல குமார பரமேஸ்வரனை அன்புடன் வேண்டுகிறேன். அற்புதமான பாடல்,இனிய குரல் வளம்.

  • @premaa.p3638
    @premaa.p3638 3 місяці тому

    அரிய கருத்துக்கள் கொண்ட பாடல் வரிகளை சந்தம் பிரித்து, பொருள் - விளக்கத்துடனும், ஒவ்வொரு பாடலில் எத்தனை முறை நாள் என்ற சொல் வந்துள்ளது என்பதை வெளியிட கையாண்ட யுக்தி மிகச் சிறப்பு. சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @rajparadise
    @rajparadise Рік тому +1

    பாடல் தந்தமைக்கு நன்றி

  • @bakia100
    @bakia100 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🦚🦚. ஐயா மிக அருமை. மிக்க மகிழ்ச்சி. நன்றி. ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 місяці тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sivakaru9689
    @sivakaru9689 Рік тому

    அருமை..

  • @gkalagnanaudayan8444
    @gkalagnanaudayan8444 2 роки тому +1

    ஓம் ஸ்ரீமத் குமரகுருதாச குருப்யோ நம 🙏
    குருவே சரணம் 🙏

  • @JdjdididWhdyhd
    @JdjdididWhdyhd 11 місяців тому +1

    நன்று

  • @jothivasthumalaisamy8073
    @jothivasthumalaisamy8073 Рік тому

    ❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @banumathi5508
    @banumathi5508 Рік тому

    Excellent

  • @knraja100
    @knraja100 Рік тому

    Kindly make the script/lyrics available offline in tamil.
    Thanks.

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 4 місяці тому

    Starts @ 1.08

  • @thamaraimsmchannelindia9880
    @thamaraimsmchannelindia9880 2 роки тому +1

    sreemath kumara gurudhasa guruve namaha