த.வெ.க தலைவர் நடிகர்.விஜய் 50-வது பிறந்த நாள் # பரணிபுத்தூரில் 2-ஆட்டோ வழங்கிய த.வெ.க-வினர் # 2024

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2024
  • தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர்.விஜய் பிறந்த நாள் விழா
    பரணிபுத்தூர் சின்னபனிச்சேரியில்
    2பேருக்கு ஆட்டோ வழங்கி கொண்டாடிய தமிழக வெற்றி கழகத்தினர்
    ஜீன்-22 அன்று 50-வது பிறந்த நாள் காணும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர்.விஜய் அவர்களின் பிறந்த நாள் விழா
    சென்னை, போரூர் அடுத்த பரணிபுத்தூர் ஊராட்சி, சின்னபனிச்சேரி பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடபட்டது.
    2024 ஆம் ஆண்டு, ஜீன்-16-தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் நடைபெற்ற பிறந்தநாள் விழா நிகழ்ச்சியினை தமிழக வெற்றி கழகத்தின் பரணிபுத்தூர் ஊராட்சி தலைவர் ஹரிஹரன், பரணிபுத்தூர் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் சகேயுராஜ், ஊராட்சி துணை செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழக சென்னை புறநகர் மாவட்ட தலைவர் இ.சி.ஆர்.சரவணன், சென்னை புறநகர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஓ.எம்.ஆர்.ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாடகை ஆட்டோ ஓட்டுனர்கள் 2பேருக்கு சொந்தமாக இரண்டு புதிய ஆட்டோக்கள் வழங்கினர்.
    அதை தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள், மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் பரணிபுத்தூர் ஊராட்சி தமிழக வெற்றி கழகம் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை பரணிபுத்தூர் ஊராட்சி தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசுகள் வெடித்து, பேண்டு, வாத்தியம், முழங்க சிறப்பான முறையில் வரவேற்றனர்.
    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றி கழகத்தினர், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

КОМЕНТАРІ • 3