MAMOOTY SPEECH IN SEVALIYAH SIVAJI

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 156

  • @vijaiananth3565
    @vijaiananth3565 3 роки тому +19

    சிறந்த பேச்சு திரு மம்மூட்டி அவர்கள்..........

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 роки тому +19

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் ஓங்குக 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnbosco6412
    @johnbosco6412 5 років тому +53

    Mr
    Mamooty sir you also another sivaji.
    I love your film in malayalam. You also greatest artist..
    God bless you.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +24

    1952 லிருந்து 1999வரை இடைவிடாது 47 ஆண்டுகள் நடித்துவந்த288 படங்களும் கௌரவ நடிகராக 19 படங்களும்
    இதைத் தவிர ஆயிர கணக்கான நாடகங்களும் மராட்டிய தூர்தர்ஷனுக்கு சத்திரபதி சிவாஜியாக நடித்து அரும்பெரும் சாதனைகளை அவர் அளவுக்கு நடத்தியவர் குறைவுதான். அவர் பெற்ற விருதுகளைப்போல் யாரும் பெறவில்லை. உலகத்து தேசங்கள் எகிப்து, அமெரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர், மொரிஷஸ், பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அவருக்கு தந்த மரியாதையை உலகம் அறியும். 47 ஆண்டுகள் ஓய்வரியா உழைத்த மகன் அடுத்த இரண்டாண்டுகள் இருந்தார் 2001ல் மறைந்தார். மறைந்து18 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் பாடும் கூட்டம் இன்னும் இருக்கிறது. கர்ணன், ராஜபாட் ரங்கதுரை, வசந்த மாளிகை இவைகள் இந்த கால வெளியீட்டிற்கு பின்னும் மாபெரும் வெற்றியை ஈட்டித்தருவது தமிழனுக்கு பெருமை இல்லையா? தமிழன் பெயரை தமிழன் குலைப்பானா? ஆம் சிலையெடுத்து அவமானத்தை வாங்கிக் கொண்டது போதாது. சிவாஜி ரசிகர்களுக்கு எந்தக் கட்சியின் பின் புலம் இல்லை. ஆனாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அத்தனை ரசிகர்கள் மடிந்து போனாலும் "அவன் ஒரு சரித்திரம்"
    கலை உள்ளவரை கணேசனார் புகழை மறைக்க எந்த சக்தியாலும் முடியாது. இது சத்தியம்! வாழ்க அய்யன் சிவாஜி!
    :- ஐயா நடராஜன் பச்சையப்பன் அவர்கள்

  • @seoduramanevanji7775
    @seoduramanevanji7775 5 років тому +54

    சிவாஜி பிறந்த இந்த பூமியில் நாமும் பிறந்தோம்!
    இது நமது வாழ்வின்
    பாக்கியம்!

    • @balajis5619
      @balajis5619 3 роки тому

      So important now

    • @valiantvimal
      @valiantvimal Рік тому +1

      @@karthikks9976 உங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?

    • @valiantvimal
      @valiantvimal Рік тому +1

      @@balajis5619 Yes, why not,?
      What's wrong with you

    • @valiantvimal
      @valiantvimal Рік тому

      @@karthikks9976 நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசனை நினைத்தால் பூரிப்படையாமலும் பெருமை கொள்ளதவரும் இவ்வுலகில் உண்டா?!!
      நீங்கதான் மனநோயாளியா இருக்கீங்க 😆.....யாவரும் நலம்

  • @TheProtagonist555
    @TheProtagonist555 4 роки тому +40

    Manmootty has much respect for Sivaji..

  • @mams7774
    @mams7774 3 роки тому +12

    Excellent Mr.Mamooty 🤝🙏

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +46

    1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 4 роки тому +23

    MAMOOKA"s PERFECT FELICITATION TO NADIGARTHILAGAM CHEVALIER DR.SHIVAJI..

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +9

    1953ல் தான் நடிக்க வந்த மறு ஆண்டிலேயே,
    இலங்கை யாழ்பாணத்தில்
    கூட்டுறவு மருத்துவமனை கட்டுவதற்காக,
    தன் நாடகத்தை இலவசமாக நடத்தி, அதற்கான செலவினங்களையும் தானே ஏற்று,
    அந்நாடகத்திற்கு வசூலான ரூ.25,000த்தையும் மருத்துவமனை கட்டுவதற்காக அளித்த கர்ணன் நடிகர்திலகம்.
    தான் செய்யும் எந்த கொடையும் வெளியே தெரியகூடாது என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். அவர் மூலம் பயன் பெற்றோர் ஏராளம்.
    புயல், மழை என பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில், மக்கள் பரிதவத்த போது, ஓடிச் சென்று உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
    சொந்தமாக மட்டுமன்றி, தன் நடிகர்சங்கம் மூலமாகவும் நிதி திரட்டி அரசிற்கு பெரும் தொகையை வசூலித்து கொடுத்துள்ளார்.
    அவருடைய நன்கொடைகள் எண்ணிலடங்காது.
    இது நான் சொல்லவில்லை,
    வேறு எந்த சிவாஜி ரசிகரும் சொல்லவில்லை.
    தற்போது நடந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் அதிமுக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், நடிகர்திலகத்தின் மணிமண்டபம் திறப்பு விழாவில் வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பில்.... 9வது பக்கத்தில், சமுதாய மேன்மையில் நடிகர்திலகத்தின் பங்கு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
    கொடுப்பதில் கர்ணன் என்பதையும்,
    விளம்பரம் தேடாத வள்ளல் சிவாஜி என்பதையும் எம்ஜிஆரின் அதிமுக அரசு சொல்கிறது...
    இது, தான் சிவாஜி....
    உண்மையை காலம் வெகுநாள் மறைத்து வைக்காது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +19

    தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக் கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின்காவலராய் திகழ்ந்தவர் வள்ளல் சிவாஜி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +10

    சித்ராலயா
    12.02 1971.
    புதுமையான விழா..
    சென்ற தீபாவளி தினத்தன்று வெளியான எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் ஆகிய இரண்டு படங்களும் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடின.
    அந்த வெற்றி விழாவை இரண்டு பட தயாரிப்பாளர்களும் சேர்ந்து அசோகா ஹோட்டலில் கொண்டாடினார்கள்.
    இரண்டு படங்களிலும் சிவாஜியே கதாநாயகனாக நடித்திருந்தார்.
    ஒரே கதாநாயகன் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் திரையிடப்பட்டு 100 நாட்கள் இரண்டுமே வெற்றிகரமாக ஓடியதால் மாபெரும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் ஆச்சர்யம் என்னவெனில் இரண்டு படங்களின் வெற்றி விழாவையும் ஒரே மேடையில் நடத்த திட்டமிடப்பட்டது.
    இரண்டு பட வெற்றிவிழாவும்
    ஒரே மேடையில் கொண்டாடப்படுவது தமிழ் திரையுலகில் இது தான் முதல் தடவை என்று நான் நினைக்கிறேன்.
    விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களை பாலாஜியும் , ராமண்ணாவும் உற்சாகத்தோடு வரவேற்றனர்.
    இந்த இரண்டு படங்களிலும் பங்கேற்றிருந்த எல்லா நடிகர் நடிகைகளும் அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.
    விஜயா தன் கணவருடன் வந்திருந்தார். ஜெயலலிதா தன் தாயாருடன் வந்திருந்தார்.
    பட உலகின் முக்கியஸ்தர்கள் பலரும் நிறைய பேர் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
    எல்லோரும் ஓர் மிகவும் உற்சாகமாக இருந்தனர்.
    புதுமை..
    இந்த காலத்தில் ஒரு படத்தின் நூறாவது நாள் விழாவே கொண்டாடு்வது கடினமாக இருக்கிறது .இங்கு இரண்டு படங்களுக்கு அல்லவா 100 நாள் கொண்டாடப்படுகிறது.
    நடிகர் திலகம்
    சிவாஜிகணேசன் ,நாகேஷ்,முத்துராமன் ,
    சச்சு ,பாலாஜி ஐந்துபேரும் இரண்டு படங்களுக்கும் கேடயம் வாங்கினார்கள். இது மிகவும் புதுமையாக இருந்தது.
    அதேபோல இசையமைப்பாளர் விஸ்வநாதன், பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் ,சுசீலா ஆகியோர் இரண்டிரண்டு கேடயங்களை
    பெற்றார்கள் .
    இந்த விழாவில் இன்னொரு புதுமையும் நடந்தது .
    நடிகர்திலகம் சிவாஜிக்கு பிரதம நீதிபதி திரு கே வீராசாமி கேடயத்தை வழங்கினார்.
    ஹிந்தி பட கதாநாயகன் சஞ்சய் ஜெயலலிதாவுக்கு கேடயம் வழங்கினார்.
    இந்தி நடிகை ராகி விஜயாவிற்கு பரிசு பொருளை வழங்கினார்.
    இப்படி எல்லா கலைஞர்களுக்கும் மற்ற படத்தில் பங்கு கொள்ளாத கலைஞர்கள் பரிசளிப்பு நடத்தியது நன்றாக இருந்தது.
    ஜெமினி கணேசன் எல்லா பிண்ணனி பாடகர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
    தமிழில் தயாரிக்கப்படும் எல்லா படங்களுமே இப்படிப்பட்ட வெற்றி விழாவை கொண்டாடும் விதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் நினைத்தேன் .
    அந்த நாள் என்று வருமோ?

  • @renjithpr1170
    @renjithpr1170 6 років тому +32

    What a smart voice modulation mammooty sir

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +9

    எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம்
    . அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.
    அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
    நன்றி..இந்து தமிழ் திசை..
    எகிப்து அதிபர் நாசருடன் சிவாஜி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +8

    தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன்.
    − எஸ்.எஸ்.ஆர்....
    'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன்.
    இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
    அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன். `சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன்.
    சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான்.
    அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார்.
    இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள். நடிகர், என்றால் அவர் மட்டும்தான் இங்கு நடிகர்.
    ராஜ்யசபா எம்.பியாக நான் தேர்வு செய்யப்பட்டேன். சிவாஜி என் வீட்டிற்கு வந்து மாலையணிவித்து பாராட்டிவிட்டு, விருந்திலும் கலந்து கொண்டார். எல்லோரும் போனபிறகு சிவாஜி என்னிடம், `நீ, எம்.பியானதிலே எனக்கு சம்மதமேயில்லை. எந்த வயசுல வேணும்னாலும் நீ எம்.பியாகலாம். நீ எம்.பி., ஆனதனால தமிழ்நாடு ஒரு நல்ல நடிகனை இழக்குது’ என்றார்.'சிவாஜிக்கு என் மீது எவ்வளவு பாசமும், பற்றும் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்' என்றார் எஸ்.எஸ். ஆர்.
    .

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 роки тому +12

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புகழ் வாழ்க

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +4

    சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.
    கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
    ‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
    சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
    நன்றி!
    சிவாஜி ஏன் உசத்தி!
    பத்மினி
    இணையத்திலிருந்து....

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +8

    சிவாஜியின் நினைவு துளிகள். ¶
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    சிவாஜி சொல்கிறார் :- எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின் போது நடந்தது. ¶
    அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்து இருந்தேன். அங்கிருந்த வங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியன்னு நினைச்சிருந்தாங்க. ¶
    கட்டபொம்மன்தான் சிறந்த படம். கட்ட பொம்மனா நடிச்ச நான்
    தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க. ¶
    நான் எழுந்து நின்னேன். வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன் நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோது கூட அசையா மல் இருந்தவன்¶
    ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது. என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க. ¶
    இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான். ¶

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +5

    8 ஒரே வருடத்தில் ஒரே நடிகர் நாயகனாக நடித்த மூன்று திரைப் படங்கள் தேசிய விருது பெற்று சாதனை படைத்தது சிவாஜிக்கு நிகழ்ந்த அதிசயம். 1961-ல் வெளியான ‘பாவ மன்னிப்பு’ அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த திரைப்படமாகவும், ‘கப்பலோட்டிய தமிழன்’ தமிழில் சிறந்த படமாகவும் ‘பாச மலர்’ தமிழில் இரண்டாவது சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றன.7 சிவாஜி நடித்த ‘பாரத விலாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் நெகடிவ் உரிமையை வாங்கியது இந்திய அரசு. அதேபோல் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை தாமாகவே முன்வந்து வாங்கியது ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நிறுவனமான டுவென்டியத் செஞ்சுரி பாஃக்ஸ் நிறுவனம். தமிழில் கேளிக்கை வரிவிலக்கு பெற்ற முதல் திரைப்படம் சிவாஜியின் ‘கப்பலோட்டிய தமிழன்’6 அமெரிக்க அரசாங்கம் மட்டுமின்றி, குவைத், சிங்கப்பூர், சவுதி அரேபியா,மொரிஸியஸ் நாடுகளின் அரசத் தலைவர்களால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட இந்திய நடிகர் சிவாஜி ஒருவரே.10தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘ராஜ ராஜ சோழன்’ தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம், ‘சாணக்கிய சந்திரகுப்தா’ மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘தச்சோளி அம்பு’ இந்த மூன்று படங்களிலும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்த பெருமை சிவாஜிக்கே சாரும்.5 தமிழின் முதல் ‘டெக்னிக் கலர்’ திரைப்படமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் நெகட்டீவ் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே முதல் பிரதி அச்சிடப்பட்டது. இந்தியாவில் வெளியாகும் முன்னரே லண்டனில் இந்திய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருந்த அன்றைய பாரதப் பிரதமர் நேருவின் சகோதரியான விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு அங்கே திரையிட்டு காண்பிக்கப்பட்டது.4 ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் வெற்றி விழாவுக்கு சிவாஜி கணேசன் மதுரை வந்தபோது அதுவரை வழக்கில் இல்லாத நடைமுறையாக மதுரை மாநகராட்சியின் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.1எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.1960ல் எகிப்து நாட்டில் ஆசிய ஆப்ரிக்க பட விழாவில் நடிகர் திலகத்துக்கு விரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
    படவிழாவின் இறுதி நாளில் எகிப்து அதிபர் நாசர் அவர்கள் கலந்துக்கொண்டு விருது வழங்க இருந்தது. ஆனால் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டதால் அவரால் விருது வழங்க இயலவில்லை.
    அடுத்த ஆண்டு இந்தியா வந்த நாசர் சிவாஜியை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதை அறிந்த சிவாஜி அவருக்கு விருந்து அளிக்க இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
    இந்திய அரசு அப்போது சென்னையிலுள்ள பாலர் அரங்கில் ( கலைவாணர் அரங்கம் ) நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது.
    ஒரு அயல்நாட்டு அதிபருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத ஒரு தனிநபர் விருந்தளித்தது இந்திய வரலாற்றில் அதுவே முதன்முறை.
    அந்நிகழ்ச்சியிலிருந்து எகிப்து அதிபரும், நடிகர் திலகமும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர்.
    அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைபடம்தான் இது.
    .

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +13

    "புதிய பறவை என்றும் விரிக்கும் தனது சிறகை".....
    சிவாஜி மனதில், சௌகார் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. தன் கருத்தை படக்குழுவினரிடம் தெரிவித்தார். சிவாஜியின் திட்டத்தை ஏற்க மனமின்றித் தவித்தனர் படக்குழுவினர். நவநாகரீக மங்கை வேடம் அது. குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கும் சௌகாருக்கு எள்ளளவும் பொருந்தாது என இப்படத்தின் இயக்கநர் தாதா மிராசி மறுத்துப் பார்த்தார். சிவாஜி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். உற்ற கலைஞர்களின் திறமையைக் கணிப்பதில் சிவாஜிக்கு நிகராக யாரையும் சொல்ல முடியாது.
    நாகேஷின் நடிப்புத் திறனை ’திருவிளையாடல்’ படத்தில் தட்டிக் கொடுத்து தருமியாக மிளிரச் செய்தவர் அவர். ’
    எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ஜெயலலிதாவின் நடிப்பை மிளிரச் செய்து சிறந்த நடிகை என்று திரையுலகத்துக்கு அடையாளம் காட்டினார்.
    ’நீலவானம்’ படத்தில் தேவிகாவின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். ’
    உயர்ந்த மனிதன்’ படத்தில் அசோகனின் நடிப்பை மெய்சிலிர்க்கும்படி மாற்றி அமைத்தார்.
    சௌகாரால் ’புதிய பறவை’ படத்தில் மிளிர முடியும் என சிவாஜி நம்பியது, தன்னால் அக்கலைஞரை மெருகேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. சிவாஜியின் கணிப்பு பொய்த்துப் போகவில்லை
    . அதுவரை 99 படங்களில் நடித்திருந்தும் சாதிக்காத சாதனையை, 100-வது படமான ’புதிய பறவை’ படத்தில் சாதித்தார் சௌகார் ஜானகி. தன்னைப் போல பிறரையும் கருதும் எண்ணம் இருந்தால், அடுத்தவர் திறமையும் அகமகிழ்வே என்ற தத்துவம் சிவாஜிக்குள் உயிராக இருந்ததால், சிவாஜியோடு நடித்த கலைஞர்கள் எல்லாம் மிளிர்ந்தார்கள்.
    ‘புதிய பறவை’ சௌகார் ஜானகியே அதற்குச் சான்று. ஜெமினி அரங்கின் வலது பக்கம் ’புதிய பறவை’ படத்தின் பெரிய விளம்பரத் தட்டி வைத்திருந்தார்கள். எங்கே நிம்மதி... என்ற பாடலில் சிவாஜி கை விரித்து நடிப்பது போன்ற படம் அதில் இடம் பிடித்தது. சௌகார் ஜானகியின் படமும் பெரிய அளவில் சிவாஜிக்கு அருகில் இடம் பிடித்திருந்தது. ’புதிய பறவை’ படத்தில் கொலை செய்த குற்றத்தை வாக்கு மூலமாகச் சொல்லிவிட்டு, அழுகையோடு சிவாஜி மூக்கைச்டா சீந்தும் காட்சி இன்றும் கை தட்டல் பெறும் காட்சி. கலைத் தாயின் முந்தானையில் தூளி கட்டி, தாலாட்டுப் பாட்டு கேட்கும் நடிகர்கள் மத்தியில் கலைத் தாயாக பிறப்பெடுத்த சிவாஜி, வியப்பின் ஆச்சரியக்குறி!!!.....
    நன்றி!
    இந்து தமிழ் திசை
    கலைபறவை சிவாஜி கணேசன்.
    (இணையத்திலிருந்து)

  • @anithiru152
    @anithiru152 5 років тому +12

    சிவாஜி புகழ் ஓங்குக,

  • @idreestp8103
    @idreestp8103 4 роки тому +13

    Stylish mega star

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +12

    2 ‘புரோட்டோகால்’ எனப்படும் அரசு மரபுகளை மீறி, பிரதமராக இருந்த வி.பி.சிங், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு ஆகிய இருவரும் சென்னை வந்தபோது சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ வீட்டுக்கு வருகை தந்து கவுரவம் செய்தனர்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +4

    படித்ததில் பிடித்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையரங்கம்ஒன்றை தரைத்தளம் முதல்மாடி அடங்கிய கட்டடத்தை கட்டுவதற்கு மிகப்பெரிய நிதியை அன்றைக்கு வழங்கி உள்ளார் இன்றைக்கும் அதற்க்கு சிவாஜி ஹால் என்ற பெயரும் உண்டுமனிதாபிமானம் அதற்க்கு மறு பெயர் சிவாஜியா நன்றி charlesinvento

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +8

    1973 ஜனவரி மாதம்னு நினைக்கிறேன். ரொம்ப நாளைக்குப்பிறகு #சிவாஜி அண்ணாவை நடிகர் சங்க விழாவில் சந்தித்தேன். "என்னம்மா, எப்படியிருக்கே" என்று விசாரித்தார். சிறிய படங்களில் சிறு சிறு வேடங்களிலும், நடனக்காட்சிகளிலும் நடிப்பதாக சொன்ன நான் "அண்ணே.. 'எங்கிருந்தோ வந்தாள்' படத்துக்குப்பிறகு உங்களோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கலியேண்ணே" என்றேன்.
    அதற்கு அவர் "அம்மாடி நீ இப்ப சொன்னதை (அவர் நெஞ்சைத் தொட்டுக்காட்டி) இங்கே வச்சிருக்கேம்மா. கூடிய சீக்கிரமே உனக்கு வாய்ப்பு வரும்" என்றார். அந்த நேரத்தில் #சகுந்தலா அக்காதான் (சி.ஐ.டி.சகுந்தலா) அவருடைய படங்களில் அதிகம் நடித்து வந்தார்.
    ஒரு மூன்று நான்கு நாள் கழித்து சுந்தரம் அண்ணன் (#வியட்நாம் #வீடு #சுந்தரம்) போன் செய்து அவருடைய ஆஃபீஸுக்கு வரச்சொன்னார்.போனேன்.
    என்னைக்கணடதும் சுந்தரம் அண்ணன் "வாம்மா, உனக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. சிவாஜி சாருடைய புதுப்படம் '#கௌரவம்' படத்துல நடிக்க சான்ஸ் வந்திருக்கு. உனக்கு சம்மதம்தானே" என்றார். எனக்கு சந்தோஷத்தில் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.
    "என்னண்ணே இப்படி கேட்கிறீங்க?. எப்போ எப்போன்னு காத்துக்கிட்டு இருக்கேன்" என்றதும் அவர் சொன்னார் "நேத்து சாயந்திரம் அவருடன் 'கௌரவம்' கதை பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தபோது "அந்த காக்கா வலிப்பு டான்ஸ்காரி ரோலுக்கு யாரைப் போட்டிக்கே"ன்னு கேட்டார். நான் "நம்ம சகுந்தலாவைத்தான் போட்டிருக்கேன்"னு சொன்னேன். "வேண்டாம். அவளை மாத்திட்டு ஜெய்குமாரியைப்போடு" என்றார். "ஏண்ணே?" என்று கேட்டேன் "சகுந்தலாவுக்கு நிறைய படம் இருக்கு. பாவம் இந்த பொண்ணுக்கு படமே இல்லையாம். நான் சொல்றேன் போடுறா" என்று அதட்டினார். நானும் போட்டுட்டேன். அது மட்டுமல்ல உனக்கு சம்பளத்தையும் சொல்லிட்டார்" என்று சொல்லி ஒரு தொகையைச் சொன்னார். நான் அசந்துட்டேன். நான் நடிக்க வந்து இதுவரை வாங்காத தொகை அது.
    உடனே சிவாஜி அண்ணா வீட்டுக்கு போன் செய்து அண்ணன் இருக்கிறாரா என்று கேட்டேன். ஸ்டுடியோ பெயரைச்சொல்லி ஷூட்டிங் போயிருப்பதாக சொன்னார்கள்.
    டாக்ஸி பிடித்துக்கொண்டு ஸ்டுடியோவுக்கு ஓடினேன் (அப்போது என்னிடம் காரெல்லாம் கிடையாது). அங்கே 'ராஜபார்ட் ரங்கதுரை' ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஓடிப்போய் அண்ணன் காலில் 'பொத்தென்று' விழுந்தேன். பதறிப்போன அவர் "அடடே எழுந்திரும்மா, இந்தாம்மா அவளைத்தூக்கிவிடு" என்று சொல்ல #நடிகை #ஜெயா என்னைத் தூக்கி விட்டாங்க. எனக்குப் பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.
    அதில் என்னுடைய ரோல் வெறுமனே 'காபரே' ஆடுவது மட்டுமல்ல, அந்த காக்காவலிப்பு ரோல் மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. கதையில் முக்கிய திருப்பமான ரோலாகவும், கதையின் பின்பகுதி என்னுடைய கொலையைச் சுற்றியே வருவதாகவும் அமைந்திருந்தது.
    நான் சொன்ன ஒரு வார்த்தையை மனதில் வைத்து உடனடியாக வாய்ப்பு தந்த சிவாஜி அண்ணனை நான் எப்போதும் மறக்க முடியாது".
    இணையத்தில் இருந்து தொகுத்து உங்கள் இதயத்திற்கு நான் ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்
    *இது சில வருடங்களுக்கு முன்பு மய்யம்"
    இணையத்திலும் வெளியிடப்பட்டது.
    நன்றி 🙏

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +11

    உலக அளவில் புகழ் பெற்றவர் திலீப்குமார்.சிவாஜி பற்றிய அவரது கணிப்பு,
    தமிழர்களுக்குப் பெருமை செர்க்ககூடியது.பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் ஒரு பட விழாவின் போது அன்றைய ஆளுநர் பிர காசத்தை அழைக்கிறார்.கவர்னரும் வருகிறார்.ஹிந்தி நடிகர் திலீப் குமாரும் வந்திருந்தார்.சிவாஜியுடன் நானும் போயிருந்தேன் விழாவில் கலந்து கொண்ட சிவாஜியை ஆளுநரிடம் இவர் ஒரு பெரிய நடிகர் என்று திலீப் குமார் அறிமுக படுத்துகிறார்.
    உடனே ஆளுநர் உங்க மாதிரிதானே என்கிறார்.ஒரு வித அச்ச உணர்வோடு அஞ்சிய முகத்தோடும் தனது இரண்டு காதுகளிலும் கைகளை வைத்து கண்களை மேலாகப் பார்த்து என மாதிரி இல்லை,இவர் அதுக்கெ ல்லாம்மேலே ...மேலே...என்கிறார்.இப்படி நடிப்பில் சாதனை சாதனை செய்தவர்கள் கூட மிர ட்சியுடன் கூடிய ஒரு மரியாதை கொடுக்கும் நிலையைத்தான் தமிழ் திரை உலகிற்க்கு சிவாஜி விட்டு சென்றிருக்கும் நிரந்திர இடம்
    சிவாஜி இமாலயப் புகழை அத்தனை எளிதில் எட்டிவிடவில்லை.எல்லா சந்தர்ப்பங்களிலும் மிகக் கடுமையான வேடங்களையே அவர் தேர்ந்தெடுத்தார்.
    தலைவனாக இருப்பது சிறப்பு.
    தலைவர்கள் போற்றும் தலைவனாக இருக்கிற சிறப்பு சிலருக்கு அரிதாகவே அமைகிறது.அப்படிப்பட்டவர் சிவாஜி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +5

    சிவாஜியின் கொடைத்திறமையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1959 ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான "குயில்" ஏட்டில் புகழ்ந்து பாடிய கவிதை இதோ....
    "பள்ளியில் மாணவர்கள்
    பகலுண வுண்ணும் வண்ணம்
    அன்று ஓர் இலக்கம் ஈந்த
    அண்ணல் கணேசர் இந்நாள்
    புள்ளினம் பாடும் சோலை
    மதுரையின் போடி தன்னில்
    உள்ளதோர் தொழிற்பயிற்சி
    பள்ளிக்கும் ஈந்து வந்தார்
    இன்றீந்த வெண்பொற் காசுகளோ
    இரண்டரை இலக்கமாகும்
    நன்றிந்த உலகு மெச்சும்
    நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற
    குன்றொத்த பெருஞ் செல்வத்தை
    குவித்தீந்த கணேசனார் போல்
    எந்தெந்த நடிகர் செய்தார் ?
    இப்புகழ் யாவர் பெற்றார்?"
    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +8

    'தூக்குதூக்கி' பாடல்கள் பதிவானவும் சிவாஜி வீட்டுக்கு போன் பறந்தது. ! இரவு பகலாக படப்பிடிப்பில் இருந்த சிவாஜி பாடலைக் கேட்க பறக்கிறார்! காரை விட்டு இறங்கிய சிவாஜியை அப்போது தான் முதன் முறையாக பார்க்கிறார் T.M. செளந்தரராஜன். √
    தான் பாடி, இவர் எப்படி எல்லாம் நடிப்பார் ! என செளந்தரராஜன் மனதில் கற்பனை ! `சுந்தரி செளந்தர் நிறந்தரியே ‘ பாடலை நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்கிறர் சிவாஜி! √
    `கண்டால் சொல்லும் விஷமாம்’ என்று அடுத்த பாடல் ஒலிக்கிறது.... அடுத்து `ஏறாத மலை மீது பாடல் ஒலிக்கிறது.... சாய்ந்து உட்கார்ந்திருந்த சிவாஜி நிமிர்ந்து உட்காருகிறார். பாட்டுக் கள் முடிந்தது. √
    நிமிர்ந்து உட்கார்ந்து இருந்த சிவாஜி ஒரு புன்னகையுடன் எழந்து நிற்கவும் சரியாக இருந்தது. சிவாஜி : - 'இந்தப் பாட்டுக்களை யார் பாடியது ?’.
    ராமநாதன்: `இதோ இந்த மதுரைப் பையன். செளந்தரராஜன்னு பேரு ..’’ அறிமுகம் செய்கிறார்!. √
    `வாங்கய்யா ‘ என்று செளந்தரராஜனை அருகில் அழைத்தார் சிவாஜி. `நல்லா பாடி இருக்கீங்க.. எல்லாப் பாட்டுக்களையும் நீங்களே பாடுங்க’ என் அன்பாக செளந்தர ராஜனை முதுகில் தட்டிகொடுக்கிறார் சிவாஜி. √
    ஒரு நடிப்புக் கலைஞன் ஒரு பாட்டுக் கலைஞ னுக்கு கொடுத்த முதல் பாராட்டு! `தூக்குக் தூக்கி படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்! பட்டித் தொட்டி எங்கும் அதே பாடல்கள் தான் ` படம் வசூலை வாரிக் கொட்டியது.
    1954ம் வருடம் வந்த படம் தூக்குத் தூக்கி. மற்ற எல்லாத் தயாரிப்பாளர் களையும் திகைப்பில் ஆழ்த்திய படம் தூக்குத் தூக்கி. ஒரு நாடோடிக் கதைக்கு மக்களிடம் இத்தனை வரவேற்பா? படத்தின் அத்தனை பாடல்களும் பிரமாதம் மட்டுமல்ல. அதற்கு தகுந்த போல நடித்து மக்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட சிவாஜியின் நடிப்பும். √
    அதுவே மக்களை கொட்டகைக்கு வர வழைத்து விட்டது.
    1954ஆம் வருடம் வெளி யான படங்களில் ஜன ரஞ்சகமாக ஒடி வெற்றியை கண்ட படம்
    " தூக்குத் தூக்கி " தான்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +2

    ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.நன்றி ராமானுஜம் சமுத்திர பாண்டி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +2

    செப்டம்பர் 24/ 1983 ம் வருடம் இந்த படம் வந்தது .குமுதம் பத்திரிகை சிவாஜி மிருதங்கம் வாசிப்பது தவறு என்று எழுதியது இதை கேட்ட சிவாஜி குமுதம் பத்திரிகைக்கு பகிரங்க சவால் விட்டார் .அதாவது குமுதம் பத்திரிகை மிருதங்க வித்வான்களை கொண்டு இந்த வாசிப்பு தவறு என்று சொன்னால் அன்றோடு தான் நடிப்பதை விட்டுவிடுகிறேன் என்று அறிவித்தார் .குமுதம் நிறுவனம் தங்களுடைய விமர்சனம் தவறு தவறு என்று அவர்கள் கூறினால் சினிமா விமர்சனம் எழுதுவதை ஒரு வருடம் நிறுத்துவதாக அறிவித்தது .இதன்படி மிருதங்க தெரிவு செய்து சிறப்பு காட்சி போடப்பட்டது.காட்சி முடிந்தவுடன் அனைவரும் சிவாஜி வாசிப்பது போல நடித்திருப்பதில் துளி கூட தவறில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது .குமுதம் சவாலில் தோற்று ஒரு வருடம் சினிமா விமர்சனம் எழுதவே இல்லை .கலை வென்றது

    • @kalyanaraman9233
      @kalyanaraman9233 4 роки тому

      இதுவரை தெரியாத செய்தி. இது உண்மையான நடிகனின் வெற்றி.

  • @ALEX44084
    @ALEX44084 5 років тому +13

    please upload Superstar Rajinikanth's Speech in this function, that was said to be the highlight

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +3

    இன்றும் தி.மு.க.வில் உள்ள முக்கியமான தலைவர்கள் சிவாஜியிடம் உள்ளன்பு கொண்டவர்கள். சிவாஜியும் அவர்களிடம் மிக அன்பாக நடந்து கொள்வார். ஆனால் கொள்கை அளவில் சிவாஜியைப் போல் உறுதியுள்ளவர்கள் அரிது. துளியும் விட்டுக் கொடுக்கமாட்டார். குடும்பத்தில் உள்ளவர்கள் வளைத்தாலும் வளையமாட்டார். நெ௫ங்கிப் பழகும் நண்பர்கள் எவ்வளவு தான் கரடியாகக் கத்தினாலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார். பலர் வந்து இந்திரா காங்கிரஸில் சேர வேண்டுமென்று அவரை வற்புறுத்தி வ௫கிறார்கள்.
    அதற்கு அவர் சொல்லும் பதில் எல்லாம், "தலைவர் காமராசரிடம் போய் பேசுங்கள். அவர்,'சரி' என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை. தலைவரை விட்டு விட்டு நான் மட்டும் இணைய சம்மதிப்பேன் என்று யா௫ம் கனவு காண வேண்டாம்" என்று கூறிவிடுவார். அவ்வளவு கொள்கைப் பிடிப்பும், உறுதியும் கொண்டவர் சிவாஜி. சிவாஜி அவர்களும் நானும் பொதுத்தேர்தலின் போது 39 பார்லிமெண்ட் தொகுதிக்கும் போனோம். சிவாஜிக்கு ஏகப்பட்ட செலவு. தேர்தலுக்காக ரொம்ப செலவு செய்யும்படி ஆகிவிட்டது. ஆனால் மன்னன் மனம் கோணாமல் வாரி வாரி வழங்கினார்.
    நான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் நோக்கத்தில் இந்த பிரம்மாண்டமான தேர்தல் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தேன். ஒன்று காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்பது. மற்றொன்று இதை சாக்காக வைத்து,பட்டி தொட்டிகளிலுமுள்ள ஏழை எளிய மக்கள் சிவாஜியை கண் குளிரக் காண வைப்பது.
    சிவாஜியை படத்தில் மட்டும் பார்த்து விட்டு, நேரில் பார்க்க வசதியில்லாத லட்சோப லட்சம் மக்கள் அச்சமயத்தில் அகங்குளிர, முகம் மலர கண்ட காட்சி இன்றும் என் மனதில் பசுமையாக இ௫க்கிறது. இந்த மாதிரி உலகத்தில் வேறு எந்த நடிக௫ம் மக்களுக்கு மத்தியில் இப்படி ஒ௫ சுற்றுப்பயணம் செய்ததில்லை.
    சிவாஜியைப்போல் மக்களை நேசிக்கும் நடிகரைக் காண்பது அரிது. மக்களிடமும் நடிக்கும் பேர்வழிகளைத்தான் காணலாம். தேர்தல் சுற்றுப்பயணத்தில் எதிரிகளின் தொல்லை ஏராளமாக இ௫ந்தது. சிவாஜியை கத்தியால் குத்த வந்தனர். செ௫ப்பை அவர் மீது வீசி எறிந்தனர். சாணத்தை வாரி அடித்தனர். மண்ணை வாரித் தூற்றினர். இவற்றிற்கெல்லாம் சிவாஜி அசைந்து கொடுக்கவில்லை. மனம் கலங்கவில்லை. வெயிலைக்கண்டு அவர் வெகுளவில்லை. மழையைக்கண்டு ம௫ளவும்ம இல்லை. தூக்கமில்லை.சரியான சாப்பாடு இல்லை. இத்தனை துன்பத்தை எப்படித்தான் தாங்கினாரோ!. ஆனால் முகத்தில் கடுகளவு சோர்வில்லை. கூடவந்த பலர் சோர்ந்து விழுந்தனர். உடல்நலமற்றுப் போயினர்.
    சிவாஜிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஊரிலும் நெ௫ங்கிய நண்பர்கள் இ௫க்கிறார்கள். அவர்கள் அனைவரையும் எப்படித்தான் ஞாபகம் வைத்தி௫ப்பாரோ!. அவர் எந்த ஊர் சென்றாலும், ஒ௫வரின் பெயரைச் சொல்லி,"அவர் இந்த ஊ௫ தான்.அவர் எங்கே நிற்கிறார் பா௫ங்கள்" என்பார். குறிப்பிட்ட நண்பரைக் கண்டதும் பேரைச் சொல்லி அழைத்து குடும்ப நலனைப் பற்றி விசாரிப்பார். வந்த நண்பர் ஆனந்தக் கண்ணீர் விட்டு கையில் கொண்டு வந்த பழத்தைக் கொடுப்பார். சிவாஜி சாப்பிட்டால் தான் விடுவார். இப்படி பல நிகழ்ச்சிகள்.
    தி௫நெல்வேலி மாவட்டத்தில் ஒ௫ சிற்றூ௫க்குச் சென்றோம். ஒ௫ 'படுகிழவி' கூட்டத்தில் நின்று தடுமாறிக் கொண்டு இ௫ந்தார். நான் டிரைவர் சிவாவை வேனை நிறுத்தச் சொல்லி அந்த அம்மையாரை அ௫கில் கொண்டு வ௫ம்படி நமது சிவாஜி ரசிகர்களிடம் சொன்னேன். அதன்படி அந்த அம்மையாரை சிவாஜி அ௫கில் கொண்டு வந்தார்கள். கிழவி சிவாஜியைக் கண்குளிரப் பார்த்துவிட்டு,"மகனே, இனி நான் செத்தாலும் கவலை இல்லை.உன்னைப் பார்க்கணும்னுதான் உயிரை வெச்சுகிட்டு இ௫ந்தேன்.நீ மகராசனா இ௫. இப்படி கறுத்துப் போனியே அப்பா" என்று அழ ஆரம்பித்து விட்டார். சிவாஜி,"பாட்டி இந்த நூறு ௹பாய். சந்தோஷமா வீட்டுக்குப் போ. கடவுள் உனக்கு எல்லாம் நல்லது செய்வா௫" என்று கூறினார். இதைப் பார்த்துக் கொண்டி௫ந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் உகுத்தனர்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +3

    சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது.
    சிவாஜியின் முதல் படமான பராசக்தி, திரைப்படமாக எடுப்பதற்கு முன், நாடகமாக பலமுறை மேடையில் நடிக்கப்பட்டது. பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும் நாடகமாக நடித்தோம். திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனி நடித்த, சகோதரி பாத்திரத்தில் நானும், பண்டரிபாய் நடித்த பாத்திரத்தில், பிரபல பாடகி ரத்னமாலாவும் நடித்தோம்.
    அன்று ஏகப்பட்ட கூட்டம். சுமார் ஆறாயிரம் பேர், அந்த நாடகத்தை கண்டு ரசித்தனர்.
    அதில் நீதிமன்றம் காட்சி தான், மிக முக்கியமானதும், சுவாரசியமானதுமான காட்சி. மேடையில், சிவாஜி, வசனம் பேச ஆரம்பித்தவுடன், நாடகம் பார்க்க வந்தவர்களில் பலர், ஏற்ற இறக்கத்தோடு, அவர் கூடவே வசனத்தை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆச்சரியம். இது வரை, தமிழ் மேடை நாடக வரலாற்றிலேயே நடந்திராத நிகழ்ச்சி இது. சிறிது நேரம் பொறுமை காத்த சிவாஜி, பின், இரு கை கூப்பியபடி, ரசிகர்களிடம், 'இந்த நாடகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று, எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் தான், தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியும். தயவு செய்து, என்னுடன் சேர்ந்து வசனம் பேசாமல், அமைதியாக இருங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். அதன்பின், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள், மீண்டும் சிவாஜி பேச ஆரம்பித்ததும், பழையபடி கூடவே பேச ஆரம்பித்தனர். இப்படியே, பல முறை நடந்தது. அதனால், அன்று அந்த ஒரு சீனை முடிக்கவே, 45 நிமிடங்கள் ஆனது.
    அடுத்த நாளும், இக்கண்காட்சியில் இந்நாடகத்தை நடத்தினர்.
    முன்னெச்சரிக்கையாக சேலம் நகரின் பல பகுதிகளில், மாட்டு வண்டியில், ஆட்கள் தண்டோரா போட்டு, மக்களை கூட்டி, 'இன்றைக்கு மாலை, நாடகத்தில் சிவாஜியோடு, சேர்ந்து வசனம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்...' என்று அறிவிப்பு செய்தனர்.
    அன்றும், ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. பராசக்தி அவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய விசிறி படை, அவருக்கு உருவாகியிருப்பது மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும்.
    அந்த நாடகத்தில், நடந்த மற்றொரு சுவையான நிகழ்ச்சி... சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி, 'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...' என்ற பாடலில், 'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...' என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில், ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி.
    நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி, கைதட்டினர்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +7

    கர்ணன் - THE ORIGINAL
    அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
    அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
    அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
    அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
    முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
    இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
    பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
    *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +2

    1960ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.
    இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்த் திரைப்படமாகவும், முதல் இந்தியப் திரைப்படமாகவும், முதல ஆசியத் திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது.
    எகிப்து அதிபர் நாசருடன் ஜவஹர்லால் நேரு
    கெய்ரோவில் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று நடிகர் திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப்பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும்.
    தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 5 років тому +3

    Super நடிகர் Shivaji ganeasan Vazthukkal

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +5

    "அவன் தான் மனிதன்" பாடல் காட்சி ஒன்று 'சிங்கப்பூரில்' படமாக்க படவேண்டும். படப் பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் திலகம் உட்பட அனைத்து கலைஞர்கள் காத்திருக்கின்றனர்.
    திடீரென பரபரப்பு.. இயக்குநர் ஏசிடியிடம் ஓடி வந்து உதவியாளர் ஏதோ சொல்கிறார். இதைக் கேட்ட A.C.T. செய்வது அறியாது திகைத்து நிற்கிறார். படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வது என தடுமாறுகின்றனர்
    கடல் கடந்து வந்தவர்கள், ஒரு நிமிடம் கூட வீணாக கூடாது என இயக்குநர், தயாரிப்பாளர், பீதி கொள்கின்றனர். அந்த(?) விஷயம் ஐயனை அடைய, அவரே 'என்ன திருலோக்' தடுமாறுகின் றாய். ஷூட்டிங் ஆரம்பி.! எல்லோரும் அவங்க அவங்க வேலை - தொடருங்கள் என நம்பிக்கை ஊட்டுகிறார்.
    ஆனால் படகுழுவிற்க்கு தடுமாற்றம் ஏற்படக் காரணம் - என்ன?
    மீதமிருக்கும் ஒரு பாடல்அன்று படமாக்க வேண்டும். ஆனால் ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டிய பாடலின் ஒலி நாடா... வரவில்லை.
    இந்த சூழலையை எப்படி சமாளித்தார் நடிகர் திலகம்...சென்னையில் பாடல் பதிவு நடைபெற்ற போது படத்தின் எல்லா பாடல்களையும் நடிகர் திலகம் கேட்டிருந்தார்.அதன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களும் அவருக்கு மனப்பாடம் ஆகி விட்டிருந்தன.
    அவருடைய அபாரமான நினைவாற்றல் எப்போது மே அவருக்குமட்டுமின்றி எல்லா படப்பிடிப்பு குழுவினருக்கும் நிறைய சமயங்களில் பயன்பட்டு வந்துள்ளன.
    இந்த ஆற்றலின் துணையோடு அன்றும் படப்பிடிப்பிற்கு தயாரானார் நடிகர் திலகம். ஒலி நாடாவின் துணையின்றி, தன் இசை ஞானத்தாலும், நினைவாற்றலாலும், பாடல் வரிகளை மனதில், தானே அந்த வரிகளுக்கு ஏற்றவாறு முணுமுணுத்த படியே ஒரு மாத்திரை, ஒரு இம்மி அளவு கூட பிறவாமல் த்த்ரூபமாக நடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம்.
    அந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அந்தப் பாடல் காட்சி, 'அவன் தான் மனிதன்' படத்தில் இடம் பெற்ற Hit Song 'மனிதன் நினைப்பதுண்டு' பாடல். ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடு சிங்கப்பூர்.

    • @anithiru152
      @anithiru152 4 роки тому +1

      அருமை அருமை நன்றி சிவாஜி புகழ் ஓங்குக.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +9

    எந்த ஒரு நடிகனும் நடிப்பில் வெற்றி பெறுவது மிக அரிது, அதிலும் ஒரு நடிகனின் கைகளோ கை விரல்களோ நடித்ததாக சரித்திரம் இல்லை, "சிவாஜி நடிப்பில் சிறந்தவராக இருக்கலாம், மிருதங்க வாசிப்பிற்கு சரியாக நடிப்பதற்கு
    அவர் என்ன மிருதங்க வித்வானா ?" என்று கிண்டல் விடுத்த அரை வேக்காடுகளுக்கு தலைவர் நடிகர்திலகம் விட்ட சவால்
    மிருதங்க இசையின் வாசிப்புக்கு தகுந்த மாதிரி என் கைகளும் விரல்களும் நடிக்கவில்லை என்றால் நான் என் விரல்களை மட்டுமல்ல என் கைகளயும் வெட்டிக் கொள்கிறேன் என்று சூளுரைத்தார், படம் வெளியானது சொன்னவர்கள் வாயடைத்து நின்றார்கள், மிருதங்க இசை சிவாஜியிடம் தோற்றது, சிவாஜி உலகின் எட்டாவது அதிசயம் மட்டுமல்ல, யாருக்கும் எட்டாத யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத அதிசயம் இந்த தெய்வமகனை நடிப்பில் வெல்ல ஆண்டவனாலும் முடியாது, என நிரூபித்த படம்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +3

    கல்கத்தாவில் உள்ள அகில இந்திய விமர்சகர்கள் சங்கம் சிவாஜியின் கலைப் பணியை பாராட்டி 1992ம் ஆண்டில் காந்தர்வ விருது வழங்கி சிறப்பித்தது
    1995ம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பஸ் மாநகருக்கு சென்றபோது முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து சிவாஜியை வரவேற்றனர்.அந்த நகரின் மேயர் 'கிரேக்லஷீட்கா'சிவாஜியை கொலம்பஸ் மாநகரத்தின் கவ்ரவ குடிமகனாக அறிவித்து சிறப்பித்தார்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +3

    கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...
    * சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
    * நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
    * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
    * சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
    * வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
    * தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
    * திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
    * தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
    * சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
    * தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
    * சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்
    * விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்
    * 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
    * படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
    * சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
    * விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
    * தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
    * 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன
    * அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
    * பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
    * கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!
    நன்றி!
    - மானா பாஸ்கரன்
    ஆனந்த விகடன்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +9

    பராசக்தி காலத்திலேயே ♥இலங்கைத் தமிழர்களுக்கு ♦ உதவுவதற்காக சக நாடகக் கலைஞர்களுக்கும் ♥தனது சொந்த பணத்தை ♦செலவுசெய்து இலங்கையில் நடத்திய♥கலைநிகழ்ச்சியில் கிடைத்த ♦வருமானத்தொகை ♥25ஆயிர ரூபாயை நன்கொடையாக ♥வழங்கமுடிந்த சிவாஜியினால் ♦ஒரு போட்டோ கிராபரை அழைத்துச்சென்று ♥ஊடகங்களில் ஒன்றுக்குப்பத்தாக♦திரித்து எழுத எந்த ஒரு ஊடகக்காரனையும் ♥அழைத்து செல்லமுடியாத கருமி ♦

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +3

    தனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த பொன்னுச்சாமி பிள்ளை அவர்களை தன் குருவாக ஏற்றுக் கொண்ட நடிகர் திலகத்திற்கு இரண்டாவதாக கிடைத்த குரு நேஷனல் பிக்சர்ஸ் அய்யா பி.ஏ.பெருமாள் முதலியார் அவர்கள்......
    எவ்வளவோ எதிர்ப்பு வந்த போதிலும் நான் பராசக்தி படத்தை தயாரித்தால் கணேசனை வைத்துத்தான் தயாரிப்பேன்......
    இல்லையேல் இந்தக் கதையை படமாக தயாரிக்க மாட்டேன் என்று கே.ஆர்.ராமசாமி அவர்களுக்காக வாதாடியவர்களிடமும், படத்தை தயாரிக்க பண உதவி செய்ய முன் வந்த ஏ.வி.எம்.மெய்யப்பச் செட்டியார் அவர்களிடமும் தைரியமாக சொன்னதோடு மட்டுமல்லாமல், மிகவும் ஒல்லியாக இருந்த நடிகர் திலகத்தை ஆறு மாதங்கள் சத்தான உணவுகளை அளித்து அவரை உருமாற்றி தன் படத்தின் கதாநாயகனாக நடிக்க வைத்தார்...........
    படமும் தமிழ் திரையுலகில் மாபெரும் சுனாமியை உருவாக்கி வெற்றி பெற்றது.........
    இப்படி தனக்காக வாதாடி தன் வாழ்வில் விளக்கேற்றி வைத்த தன் இரண்டாம் குருவுக்கு ஆண்டு தோறும் பொங்கலன்று குடும்பத்தோடு அவருடைய இல்லம் சென்று காலில் விழுந்து வணங்கி சீர் வழங்கி தன் நன்றிக் கடனை செலுத்தினார் நடிகர் திலகம் அவர்கள்....பெருமாள் முதலியார் அவர்களின் மறைவுக்கு பிறகும் இது தொடர்ந்தது......நடிகர் திலகத்தின் மறைவுக்கு பிறகும் இன்று வரை இது தொடர்கிறது..............
    பெருமாள் முதலியார் அவர்கள் தன் கடன் வகைகளை அடைப்பதற்காக நடிகர் திலகத்திடம் சில லட்சங்கள் கடன் வாங்கியிருந்தார்.......
    இதற்காக நடிகர் திலகம் எவ்வளவோ மறுத்தும் தன் நேஷனல் தியேட்டரின் பத்திரத்தை கொடுத்தார்........... காலங்கள் மாறின....
    பெருமாள் முதலியார் அவர்களும் நடிகர் திலகமும் இவ்வுலகை விட்டு மறைந்தனர்.....................
    பெருமாள் முதலியார் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு நாள் அன்னை இல்லம் வருகிறார்கள்........
    அன்னை இல்லமே ஒன்று கூடி அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்கள்..........
    உபசரிப்பில் தங்களை மறந்தவர்கள் வந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தயங்குகிறார்கள்...........
    நிலைமையை புரிந்து கொண்ட ராம்குமார் அவர்களும் பிரபு அவர்களும் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று விஷயத்தை கேட்கிறார்கள்........
    தங்களுக்கு உள்ள கடன்களை அடைக்க பணம் தேவைப்படுவதாகவும், ஏற்கனவே அய்யாவிடம் வாங்கிய கடனையே இது வரை கொடுக்க முடியவில்லை......
    அதனால் எங்கள் தியேட்டரை ஒரு விலை போட்டு ,பழைய கடனை எடுத்துக் கொண்டு ஏதாவது ஒரு தொகையை தாருங்கள் என்றார்கள்......
    அன்னை இல்ல இளவல்கள் அவர்களை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு, தீவிர ஆலோசனைக்கு பிறகு காரில் வெளியே சென்று திரும்புகிறார்கள்.................
    நம்மை ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு இரண்டு பேரும் எங்கே சென்றார்கள் என்ற பதைபதைப்புடன் பெருமாள் முதலியார் அவர்களின் குடும்பத்தார் காத்திருக்க............
    அன்னை இல்ல உறுப்பினர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் படம் முன்பு கூடி நிற்க அவர்களை அழைத்து ராம்குமார் அவர்கள் இந்தாங்க உங்களுக்கு இருக்கும் கடனை அடைப்பதற்கான பணம்.........என்று கொடுக்க பிரபு அவர்கள் நேஷனல் தியேட்டரின் பத்திரத்தை அவர்களிடம் கொடுக்கிறார்....அவர்களோ பத்திரத்தை வாங்க மறுக்க, எங்க அப்பா எங்களிடம் எப்ப வந்து முதலியார் ஐயா குடும்பத்தினர் கேட்டாலும் பணம் எதுவும் வாங்காமல் இதனை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது உங்க பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார்.....
    இதனை நீங்கள் பெற்றுக் கொண்டால் அப்பா ரொம்ப மகிழ்ச்சியடைவார் என்று சொல்ல கண்களில் நீர் தழும்ப அதனை பெற்றுக் கொள்கிறார்கள்.............
    .
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
    உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவரின் குறள் வழி வாழ்ந்த அன்னை இல்ல ஆண்டவனின் புகழ் வாழ்க.....வாழ்க.......அவர் கற்றுத் தந்த வழி வாழும் அன்னை இல்லத்தின் அன்புள்ளங்கள் அனைவரும் வாழ்க

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 років тому +19

    Please upload many videos of sivaji

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +25

    Madhu, mamooty,mohanlal, are sivaji fans.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +6

    குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
    காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.
    அது
    சிவாஜியாக
    இருந்ததால் சாத்தியமாயிற்று
    சொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்
    27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
    "நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.
    தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.
    அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில்
    அவர்களுடைய வாழ்க்கையில்,
    முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.
    நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை
    வளரவிட அஞ்சுவார்கள்.
    ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாது
    சிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அரரைப்போல் தன் நண்பர்களிடம்
    பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.
    யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்
    காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.
    இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.
    கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாக
    அவரிடம் அடிக்கடி கூறுவேன்.
    "இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாது
    இல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரது
    உதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி
    அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்.
    "அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.
    அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .
    குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகு
    அவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிர
    அதை தனக்கு தெரிந்ததாகவே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
    அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியை
    வேறு யாரிடமும் நான் கண்டதில்லை
    ( திரு பீம்சிங்)
    அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,
    நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)
    பயன்படுத்திக்கொள்ளச்சொன்னார்.
    வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.
    இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.
    பாசமலர் மோகன்...
    திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிவார்.
    விமான நிலையங்களில் அவர் நடந்து வரும் தோரணையைப் பார்த்து ஊழியர்கள் அவரை சோதனை செய்ய மாட்டார்கள்.அவ்வளவு கம்பீரமாக இருக்கும் அவர் நடந்து வருவது.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +2

    'பாபு' படம் முடிந்ததும் ஏவிஎம் ஸ்டுடியோவில் முதன் முதலில் போட்டுப் பார்த்தோம். சிவாஜி அவர்களின் அ௫கில் உட்கார்ந்தி௫ந்தேன். மூன்று நான்கு இடங்களில் என்னையறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது. யா௫ம் அறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு ஓரக்கண்ணால் சிவாஜியைப் பார்த்தேன். சிவாஜியும் அவரது கண்ணீரைத் துடைத்துக் கொண்டி௫ந்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இ௫ந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும்,"உங்கள் நடிப்பைப் பார்த்து நீங்களே கண்ணீர் விட்டீர்களே. அது எப்படி?" என்றேன் பேச்சோடு பேச்சாக. அதற்கு சிவாஜி,"நான் நடிக்கும் போது நடிகன். படம் பார்க்கும் போது நானும் உங்களைப்போல ஒ௫ ரசிகனே" என்றார்.
    உண்மைதான். சிவாஜி அவர்கள் சிறுவயதிலி௫ந்தே சிறந்த ரசிகர். சின்ன வயதில் அவர் "காஸ்லைட்" என்ற ஆங்கிலப்படத்தை பதினோரு முறைப் பார்த்தி௫க்கிறார். இன்றைக்கு அவர் நடித்த படங்களை அவ௫டைய ரசிகர்கள் பதினோரு முறைக்குமேல் பார்த்துக் கொண்டு இ௫க்கிறார்கள்.
    சிவாஜி அவர்கள் நடிப்பினால் உயர்ந்தது மட்டும் பெரிதல்ல. அந்த நடிப்பினால் நாட்டு மக்களை உயர்த்தி இ௫க்கிறார். உலகம் முழுவதிலும் உள்ள சினிமா துறையினர் அனைவரும் சிவாஜியின் நடிப்புத் திறமையினால் தமிழ்நாட்டின் கலைத்துறைக்கு சிறந்த மரியாதை கொடுத்து வ௫கிறார்கள். ஹாலிவுட்டில் சிவாஜிக்கு நல்ல மதிப்பு உண்டு. இந்தியாவில் உள்ள பெரிய பெரிய நடிகர்களெல்லாம் சிவாஜியைப்போல் தங்களால் நடிக்க முடியாது என்று ஒத்துக் கொண்டு விட்டனர்.
    சமீபத்தில் பம்பாயில் நடைபெற்ற சிவாஜியின் நாடகவிழாவிற்கு வடநாட்டு நட்சத்திரங்கள் அனைவ௫ம் வந்தி௫ந்தனர். நாடகம் முழுவதையும் பார்த்தார்கள். அவர்களில் தி௫.ராஜ்கபூர் மேடையேறி பேசும்போது"நானும் என் குடும்பத்தின௫ம் நாடக மேடையிலேயே வாழ்பவர்கள். என் தந்தை நடிக்காத நாடகங்களே இல்லை.அதில் நாங்களும் பங்குபெற்று புகழ் பெற்றி௫க்கிறோம். ஆகவே நாடகம் என்றால் என்ன என்ற விஷயம் எங்களுக்கு அத்துப்படி. ஆனால் சிவாஜியின் நாடகம் என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. இது அபாரம். இதுபோல எங்களால் முடியவே முடியாது. இந்தியாவில் எல்லா கலைஞர்களையும் சிவாஜி வென்று விட்டார்" என்று மனமு௫கிப் பேசினார். அப்படி அவர் புகழ் அடைவது தமிழ் மக்களை பலபடி உயர்த்தியி௫க்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் சிவாஜியின் தேசபக்திக்கு எடுத்துக்காட்டு. இந்தப் படங்கள் தமிழ்நாட்டை உயர்த்தியது.
    வடநாட்டில் மாபெரும் டைரக்டராகவும், சிறந்த நடிகராகவும் இ௫ந்த 'கு௫தத்' அவர்கள் எனது இனிய நண்பர். சிலப்பதிகாரத்தை இந்தியில் எடுப்பதற்காக அதன் பண்புகளைக் கண்டறிய நானும் அவ௫ம் தஞ்சை மாவட்டம், செட்டிநாடு முதலிய பகுதிகளிலும் பலமுறை சுற்றுப் பயணம் செய்தி௫க்கின்றோம். அவரை ஒ௫நாள் 'தில்லானா மோகனாம்பாள்' படம் பார்க்க கூட்டிக்கொண்டு போனேன். படம் முடிந்ததும் கு௫தத் சொன்னார்,"பேச்சு சில இடங்களில் எனக்குப் புரியவில்லை.ஆனால் சிவாஜியின் கண்கள் பேசுவதிலி௫ந்து அனைத்தையும் புரிந்து கொண்டேன். ரயிலில் சிவாஜியும் பத்மினியும் போகும்போது கண்களால் எல்லாவற்றையும் பேசிக் கொண்டு விட்டார்கள். சிவாஜியின் கண் பேசுவதை என் கண்ணால் கேட்டேன்" என்று வியந்து கூறினார்.
    சிவாஜி நடித்த பாத்திரங்கள் பல மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுபோன்ற அதிசயம் உலகில் எங்கும் இல்லை எனலாம். பராசக்தி படம் வந்து இ௫பதாண்டுகள் ஆகிவிட்டன. அதில் சிவாஜி நடித்த 'குணசேகரன்' பாத்திரம் நம் நினைவில் இன்னும் பசுமையாக இ௫க்கிறது. அதேபோல் இப்போது வெளிவந்தி௫க்கும் 'ஞான ஒளி' படத்தின் அந்தோனி என்ற பாத்திரமும் மக்கள் மனதில் நின்று நிலைக்குமென்பதில் ஐயமில்லை.
    தி௫வ௫ட்செல்வரில் அப்பராகத் தோன்றி நம் மனதில் ஒ௫ பக்திப் புயலையே உண்டாக்கி விட்டாரல்லவா?.
    சம்பூர்ண ராமாயணத்தில் பரதனாக வந்து கை அசைவினாலேயே பெற்ற தாய் புரிந்த சதியை தாங்க முடியாமல் பொங்கி, அண்ணன் ராமன் பிரிந்ததை பொறுக்க முடியாமல் வெளிப்படுத்தும் கணநேர நடிப்பு ஒ௫ இலக்கியம் என்று கூறினால் மிகையாகாது. ஆகவேதான் அப்படத்தை திரையில் பார்த்த ராஜாஜி அவர்கள்,"நான் சிவாஜியைப் பார்க்கவில்லை. பரதனைத் தான் பார்க்கிறேன் " என்றார்.இந்தப் பாராட்டுரைக்காக ஒ௫ நடிகன் எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் எடுக்கலாமல்லவா?.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha  5 років тому

      "நடிகர் திலகம் சிவாஜி"
      இது சராசரி கவிதையன்று
      இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
      அன்றைய பிரதமர் நேருவிடம்
      பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
      போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
      கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
      நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
      அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
      கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
      போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
      அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
      தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
      சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
      யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
      நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
      வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
      திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
      நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
      நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
      மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
      நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
      துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
      கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
      கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
      கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
      மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
      சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
      நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
      தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
      அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
      தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
      காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
      ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
      திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
      உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
      நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
      தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
      திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
      இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
      சிங்கை ஜெகன்

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 4 роки тому

      Sriee Nila Diksha, please mention who explained this story/experience about Babu movie.(may be an actor or director?)

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +2

    இந்தி நடிகர் மெஹ்மூத் கூறினார்:
    "நான் ரஷ்யா சுற்றுப்பயணம் சென்றபோது அங்குள்ள திரைப்படக் கல்லூரிக்கு சென்றேன். அங்குள்ள பிரதான ஆடிட்டோரியத்தில் இரண்டு நடிகர்களின் பெரிய படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதன் கீழே 'முகத்தில் 14 பாவங்களையும் காட்டக் கூடிய உலகின் இரு நடிகர்கள்' என்று ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. ஒருவர் ரஷ்ய நடிகர்.இன்னொருவர் யார் என்று பார்த்த போது சந்தோஷ அதிர்ச்சியில் உறைந்து போனேன். அது நம் தென்னிந்திய நடிகர் திரு சிவாஜி கணேசன். அதைப் பார்த்தது முதல் அங்கிருந்தவர்களிடம் "நான் இவருடைய நாட்டிலிருந்துதான் வந்திருக்கிறேன்" என்று பெருமையுடன் கூறிக்கொண்டேன்".

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +3

    படித்ததில் வியந்தது. ¶
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில்,
    1962-ல் இரண்டு மாத சுற்றுப் பயணம் சிவாஜி, கிளம்பும் போது - மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் பம்பாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்ற அவரை வழியனுப்ப வந்தவர்களின் எண்ணிக்கையும் உற்சாகமும் சென்னை மாநகரம் அதுவரை கண்டிராதது. ¶
    இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகரை அமெரிக்க அரசு கெளரவித்திருப்பது அதுவே முதல் முறை. ¶
    திறந்த ஜீப்பில் சென்னை விமான நிலையத்தைச் சுற்றிவந்த சிவாஜி, தன்னுடைய ரசிகர்களின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் அன்போடு தலைவணங்கி ஏற்றார்.¶
    அமெரிக்க பயணத்தில்,
    சிவாஜி எளிமையாக வந்திருப்பதை வியப்போடு பார்த்தனர்.
    " எனக்கு நானே விளம்பரத் தூதர் " என்று சிரித்துக்கொண்டே சிவாஜி சொன்னபோது ஆடிப்போனார்கள். ¶
    சிவாஜி போன இடங்களிலெல்லாம் அனைவரும் கேட்ட கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதில் தந்தார் சிவாஜி. ¶
    ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள்எல்லோருடனும் உற்சாகமாகவும் கண்ணியமாகவும் பேசியிருக்கிறார் சிவாஜி. ¶
    நன்றி: இணையதள தகவல். ¶

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +6

    ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி

  • @adithyab7716
    @adithyab7716 5 років тому +14

    Upload the video of rajini speech in this event

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +3

    இளம் வயதில் வயோதிக கதா பாத்திரங்களை அதிக அளவில் மிகுந்த துணிச்சலுடன் ஏற்று வாழ்ந்து காட்டியவர், நமது தைரியத்திலகம். ¶
    ----------------------------------------------------------. ¶
    தனது 27வது வயதில், ஓர் நடுத்தரவகுப்புக் குடும்பத் தலைவராக "முதல் தேதி(1955)"யில் அசத்தியிருப்பார். ¶
    தனது 28வது வயதில், "நான் பெற்ற செல்வம் (1956)" திரைக் காவியத் தில் இடம்பெற்ற 'புலவர்-தருமி-நக்கீரர்' ஓரங்க நாடகத்தில், புலவர் சிவபெருமானாக நடித்ததோடு முதுபெரும் புலவர் நக்கீரராகவும் வெளுத்து வாங்குவார். ¶
    "தெனாலிராமன்(1956)" திரைக்காவியத்தில்,
    'ஒரு வயதான முஸ்லீம் பெரியவர் தோற்றத்தில் [மாறுவேடம் தான்!] பிரமாதபடுத்தி இருப்பார்
    தனது 29வது வயதில், "தங்கமலை ரகசியம் (1957)" திரைக்காவி யத்தில், ஒரு கட்டத்தில் தனது இளமையையும் அழகையும் முழுவதுமாக இழந்து முதியவனாக அதுவும் குரூபியாகக் காட்சியளிப்பார். ¶
    தனது 32 வயதில், "தெய்வப்பிறவி(1960)"
    யில் கம்பீரமிக்க குடும்பத்தலைவராக, ¶
    தனது 38 வயதில் கோடி கொடுத்தாலும் கிடைக்காத "மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)" எனும் அன்புத்தந்தை யாக. ¶
    தனது 39 வயதில் "திருவருட்செல்வர்(1967)" திரைக்காவியத்தில் 80 வயது அப்பராக, இப்படி எத்தனை எத்தனையோ பாத்திரங்களை பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +5

    யாருக்குதெரியும்இந்தமகாகர்ணனின்
    அருமை.திருச்சிஅருகே
    திருவானைக்காவல்கோவிலில்உள்ள
    யானைநடிகர்திலகம்சிவாஜியால்
    வழங்கப்பட்டது.
    அந்தயானையைபராமரிக்கமுடியாத
    நிலையில்கோவில்நிர்வாகம்
    திரு.சிவாஜியிடம்எங்கள்கோவில்
    வருமானத்தில்யானைக்குதீனிபோட
    முடியவில்லை.வேறுகோவிலுக்கு
    யானையைகொடுத்துவிடுங்கள்
    என்றுகூறினார்களாம்.
    அதற்குநடிகர்திலகம்நாளைவாருங்கள்பதில்சொல்கிறேன்.என்றுகூறினாராம்.
    ஒருவாரம்வரைபதில்வராதகாரணத்தால்
    கோவில்நிர்வாகம்மீண்டும்
    நடிகர்திலகத்தைகாணசென்றபோது!
    அவர்சொன்னவார்த்தைநிர்வாகத்திற்கு
    அதிர்ச்சிஅழித்தது.என்னவென்றால்
    கோவிலுக்குஅருகேஇரண்டுஏக்கர்
    நிலம்வாங்கியுள்ளதாகவும்.
    அந்தவிளைநிலத்தில்பயிர்செய்து
    வரும்வருமானத்தில்கோவிலுக்கும்
    யானைக்கும்.யானைபாகனுக்கும்.
    விவசாயிக்கும்கொடுக்கஏற்பாடு
    செய்துள்ளதாகவும்.யானைபாகனுக்கும்.
    விவவசாயிக்கும்.வீடுஒன்றுஅமைத்து
    ததருவதாகவும்கூறிஅதிர்ச்சிஅளித்தார்.நடிகர்திலகம்.
    இன்றுவரைநடந்துகொண்டிருக்கிறது.
    அந்தயானைஇறந்தபிறகுமீண்டும்
    ஒருயானையைவாங்கி
    கொடுத்துள்ளார்.கலைவாரிசு
    இளையதிலகம்பிரபுஅவர்கள்என்று
    கோவிலுக்குசமீபத்தில்சென்றபோது
    சொன்னார்யானைபாகன்.
    சொல்லாமல்செய்யும்கலியுககர்ணன்
    குடும்பம்.
    கஜதானம்(யானைதானம்)செய்வது
    நாடுசெழிப்புடன்எந்தவிதபஞ்சம்
    இல்லாமல்மக்கள்வாழசெய்யும்
    தானம்.இதுபோல்கோவில்களுக்கு
    ஆறுயானைவாங்கிகொடுத்துள்ளார்.
    நடிகர்திலகம் என்பதுகுறிப்பிடதக்கது.
    தனக்கெனவாழாமல்நாடும்.ஊரும்
    வாழவழிவகுத்தஇந்தமாபெரும்
    தலைவனைஎன்றென்றும்போற்றி
    வணங்குவோம்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +5

    இந்தியாவின் ஒரு மாநில முதல்வர் அவருடைய கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார்....
    அவருடைய வாகனம் அன்னை இல்லம் இருக்கும் சாலையில் செல்கிறது..........
    அன்னை இல்ல வாசலில் ரசிகர்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள். வாகனத்தில் செல்லும் முதல்வர் பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் இது யார் வீடு என கேட்கிறார்......
    இந்தியாவின் தலை சிறந்த நடிகரான சிவாஜிகணேசனின் இல்லம் என்று பதில் வருகிறது.......
    உடனே முதல்வர் வண்டியை நிறுத்தும் படி சைகை செய்கிறார்.......
    பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் நான் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்கிறார்.....
    அதற்குள் முன்னாலும் பின்னாலும் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு காவல்துறை அதிகாரிகள் பதற்றத்துடன் ஓடி வருகிறார்கள்......
    விஷயத்தை கேள்விபட்ட அதிகாரிகள் ஐயா, புரோட்டா காலில் இல்லாத நிகழ்ச்சிக்கு எப்படி போக முடியும் என்று வினவ, அதெல்லாம் எனக்குத் தெரியாது எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார் முதல்வர்.....
    முதல்வரின் பிடிவாதத்தை கண்ட அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்ல அன்னை இல்ல சாலையே அல்லோகலப்பட்டது.........
    அடுத்து முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய அதிகாரிகள் அன்னை இல்லம் விரைகிறார்கள்......
    நடிகர் திலகம் அன்று இல்லத்தில் இருந்தார்......
    விஷயத்தை கேள்விபட்டவுடன் அன்னை இல்லம் பரபரப்பானது......
    நடிகர் திலகம் உடையை மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் அன்னை இல்ல வாசலுக்கு விரைகிறார்........
    அதற்குள் முதல்வரின் கார் அன்னை இல்லத்திற்குள் நுழைகிறது.........
    .வாசலில் நடிகர் திலகம் நிற்பதைக் கண்ட முதல்வர் காரை அங்கேயே நிறுத்தி இறங்கி நடந்து சென்று நடிகர் திலகத்தின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு அன்னை இல்லம் சென்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடிகர் திலகத்தோடும் குடும்பத்தாரிடமும் அளவளாவுகிறார் முதல்வர்......
    அப்போது முதல்வருக்கு அவருடைய கட்சிக்காரர்களால் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.....
    தாங்கள் திறந்து வைப்பதற்காக
    வந்துள்ள ஜீவா மன்றத்தின் கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் திலகத்தால் ஒரு பெரும் நிதி தரப்பட்டதாக சொல்லப்படுகிறது......
    இதைக் கேட்ட முதல்வர் நெகிழ்ந்து நன்றி தெரிவித்து தன்னோடு கட்டிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். அழைப்பை ஏற்று அந்த விழாவிலே நடிகர் திலகம் கலந்து கொள்கிறார்........
    இப்படி நடிகர் திலகத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக விருப்பட்ட முதல்வர் யார்?...........
    அவர் தான் மேற்குவங்கத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த திரு.ஜோதிபாசு அவர்கள்..
    எல்லோராலும் மதிக்கபட்டவர்...
    நம் நடிகர் திலகம்......

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +3

    Here it is. The BO record of Sivandha MaN.
    I.Centres where it ran for 100 days and More
    1. Chennai -
    Globe - 145 Days
    Agasthiya - 117 Days
    Mekala - 103 Days
    Noorjehan - 103 Days
    2. Madurai - Central - 117 Days
    3. Kovai - Royal - 103 Days
    4. Salem - Oriental - 110 Days
    5. Tiruchi - Raja - 103 days.
    6. Tuticorin - Balakrishna - 101 Days.
    II. Centres where the first 100 shows and above were continious House Full
    1. Chennai -
    Globe - 125 shows (40 days all shows full)
    Agasthiya -117 shows (39 days all shows Full)
    2. Madurai - Central - 101 Shows (31 days all shows full)
    3. Kovai - Royal - 103 Shows (32 days all shows full)
    4. Tiruchi - Raja - 104 Shows (32 Days all shows full)
    III. Centres where it ran for 50 days and more
    1. Tirunelveli
    2. Vellore
    3.Thanjai
    4.Nagerkoil (75 days)
    5. Pondicherry
    6.Kumbakonam
    7. Dindigul
    8.Karaikudi
    9.Virudhunagar
    10. Pazhani
    11.Ooty
    12. Erode
    13. Pollachi
    14.Athhur
    15. Dharmapuri
    16. Kanchipuram
    17. Kadaloor
    18. Karaikkal
    19. Thiruvannamalai
    20. Pattukottai
    21. Mayavaram
    22. Thambaram
    IV . Collection figures
    1. Chennai -
    Globe - Rs 3,78,135.50
    Mekala - Rs 2,99,908.45
    Agasthiya - Rs 3,27,356.71
    Noorjehan - Rs 2,27,569.55
    --------------------
    Total = Rs 12,32,970. 21
    2. Madurai - Central - Rs 3,37,134.95
    3. Tiruchi - Raja - Rs 2,47,620.20
    4. Salem - Oriental - Rs 2,28,740.60
    5. Kovai - Royal - Rs 3,56,453.59
    6. Tuticorin - Balakrishna - Rs 1,07,531.96
    7.Vellore - Rs 1,70,898.45
    8. Nellai - Rs 1,37,480.25
    9. Thanjai - Rs 1,30,542.60
    Nagerkoil - Pioneer Palace - 50 days collection - Rs 77,571. 64.
    Here it has actually ran 75 days. But collection figure is not available.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +2

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் விசாரணைக்குப்பின் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை சுமார் 47 சென்ட் தனது சொந்த செலவில் வாங்கி அதில் கட்டிடம் கட்டி கட்டபொம்மனுக்கு 1970ஆம் ஆண்டு ஒரு குடிமகனின் கடமையாக வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தார் நடிகர்திலகம் ...........
    கயத்தாறில் எங்கே இருந்து பார்த்தாலும் கட்டபொம்மனின் சிலை தெரியும் அளவுக்கு மிக உயரமான நிலையில் அமைத்து தந்தார் நடிகர் திலகம்.....
    .(இன்று கட்டபொம்மன் சிலை அருகில் பாலத்தைக் கட்டி கட்டபொம்மன் சிலை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட்டார்கள்... பாலம் கட்டுவதற்கு முன்பு கட்டபொம்மன் சிலையின் பீடத்தின் உயரத்தை அதிகரித்து பாலத்தை கட்ட வேண்டும் என்று மக்கள் வைத்த கோரிக்கையை அரசு காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு வேதனையான விஷயம்) ........
    கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவுக்கு ஆந்திர காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த சஞ்சீவி ரெட்டி அவர்கள் தலைமை ஏற்க. ....
    சிலையை சிவாஜியின் அன்புக்குரிய தலைவர் காமராசர் அவர்கள் திறந்து வைத்தார்.....
    சிவாஜி சிலை அமைத்து தந்ததோடு கட்டபொம்மன் சிலையை பராமரிப்பதற்கு பஞ்சாயத்து யூனியனுக்கு 10,000 ரூபாய் நன்கொடை அளித்தார் ........
    கட்டபொம்மன் வாரிசுதாரர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாடை போர்த்தினார் ..சிலையை செய்த சுப்பையா ஆசாரி அவர்களுக்கு பட்டாடை போர்த்தி தங்க மோதிரம் பரிசளித்தார் ....
    .சிவாஜி நடத்திய பெருவிழாவில் ஜெமினி கணேசன் சாவித்திரி பத்மினி ஆகியோரோடு கலை உலகைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் ..........
    பின்னர் இந்த இடத்தை அரசிடமே ஒப்படைத்து விட்டார் நடிகர் திலகம்....
    அது மட்டுமல்ல இந்த விழாவுக்கான முழுச் செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டார்..................
    வீரபாண்டிய கட்டபொம்மனால் தான் தனக்கு உலக அளவில் பெரும் புகழும் கிடைப்பதாக தன்னடக்கத்தோடு நடிகர் திலகம் சொல்லிக் கொண்டாலும்........
    நாட்டு மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் பக்தியையும் அன்பையும் மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து உணர்த்தியவர் நடிகர் திலகம் தான்......
    நடிகர் திலகத்தின் வடிவிலேயே நாங்கள் கட்டபொம்மனை கண்டார்கள் மக்கள்.....

  • @Cyril_0909
    @Cyril_0909 5 років тому +14

    Please upload Rajini sir's full speech __/\__

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +6

    நடிகர்திலகம்நடித்த100நாள்படங்கள்
    136
    150முதல்200நாட்கள்படங்கள்.
    12
    201முதல்300நாட்கள்படங்கள்
    11
    20வாரங்களுக்குமேல்ஓடிவசூல்
    சாதனைபடைத்தபடங்கள்
    9
    ஒரேமாதத்தில்ரீலீஸ்செய்த
    9படங்களில்5படங்கள்
    100நாட்களுக்குமேலும்.
    1இந்திபடம்வெள்ளிவிழாவும்.
    அந்தவருடத்தில்ஒரேநாளில்ரீலீஸ்
    செய்தஇரண்டுபடங்கள்100நாட்களும்
    சாதனைபடைத்துள்ளதுசாதனைபடைத்துள்ளது.இன்னும்சொல்லிகொண்டே
    போகலாம்.மீதியைநீங்கள்பதிவிடுங்கள்.
    யாரும்நெருங்கமுடியாதகலை
    சக்கரவர்த்திசாதனையை!

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +4

    நடிகர் பக்கோடா காதர்.
    சினிமா ஆசையில் என் மாமாவுடன் சென்னை வந்தேன். ஆனால் வந்த இடத்தில் மாமா வடையையும் சுண்டலையும் கொடுத்து விற்று வர சொல்லி விட்டார்.
    ஆள் எடுப்பதாக கூறினார்கள். என் போன்ற பையன்கள் வேண்டும் என்று கேள்விப்பட்டேன்."பட்டாளத்திற்கா" என்றேன். பாசமலருக்கு என்றார்கள் அதுதான் எனது முதல் படம்.
    திருமணத்திற்காக உண்ணாவிரதம் இருக்கும் தங்கவேலுக்கு அஸிஸ்டென்டாக இருந்து இட்லிகளை திருட்டுத்தனமாக கொடுக்க வேண்டியது என் வேலை, அதில் தங்கவேலுவை பார்த்து அய்யோ...அய்யோ என்று என் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் என்று டைரக்டர் பீம்சிங் கூறினார்.
    டேக்கின் போது என்னவோ என் வாயில் ஹய்யோ...ஹய்யோ என்று வந்து விட்டது. மற்றவர்களுக்கோ ஒரே சிரிப்பு, எனக்கோ ஒரே திகில், ஆனால் அப்படியே இருக்கட்டும் என்று பீம்சிங் கூறிவிட்டார்.
    பாசமலர் தயாராகி கொண்டிருக்கும் போது எடுத்தவரை சிவாஜி பார்த்திருக்கிறார். அதில் ஹய்யோ... ஹய்யோ அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.செட்டில் தங்கவேலு தான் சிவாஜியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
    பொங்கல், தீபாவளிக்கு மட்டுமல்ல "துட்டுக்கு தட்டுபாடு வரும் போதலெல்லாம் அன்னை இல்லம் நோக்கி ஓடுவேன். கமலாம்மா என்னைக் கண்டால் பலகாரங்கள் கொடுப்பார்கள். சிவாஜியும், கமலாம்மாவும் என்னை காதர் என்று அழைப்பார்கள்.பிள்ளைகள் எல்லோருக்கும் ஹய்யோ...ஹய்யோ தான் ராஜாமணி அம்மையார் என்னை கரீம் பாய் என்றுதான் கூப்பிடுவார்.
    என் தாயாக, தந்தையாக இருக்கும் அப்படிப்பட்ட சிவாஜி கணேசருக்கு கணேசனாக நடிப்பதை நினைத்து உண்மையிலே பூரித்து போகிறேன்.திருவிளையாடல் படத்தில் சிவனாக நடிக்கும் சிவாஜி கணேசனாருக்கு மகன் கணேசனாக நான் தானே நடிக்கிறேன்
    நடிகர் "பக்கோடா காதர் ஒரு பத்திரிக்கை பேட்டியிலிருந்து...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +2

    நினைவில் நின்றவை...
    மறக்க முடியாத காட்சிகளில் இதுவும் ஒன்று....சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் வந்த முக்கிய காட்சி...அதுவும் climax காட்சியே சாரதா ஸ்டுடியோவில் அதிகாலை முதல் நடந்து கொண்டிருந்தது...வீட்டிலோ பல முறை டெலிபோன் அலறிய வண்ணம் இருந்தது...எனது அன்னை முதல் அனைவரும் மிகவும் படபடப்பாகவே இருந்தார்கள். ஷுட்டிங்குக்கு சென்ற கார்களோ வீட்டிற்கு வந்ததுமாகவும் பின் சென்றதுமாகவும் தென்பட்டது. ஆம் அன்று காட்சியில் நடிகர் திலகம் அவர்களை படுத்தபடி சங்கிலியால் கைகளையும் கால்களையும் கட்டியபடி நீண்ட வசனத்தை பலத்த குரலில் கூறிக்கொண்டே இருக்க எதிரே யானை அவரை நோக்கி வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்தது....அந்த யானையின் உண்மையான பெயர் சீதா. ஒருமாதம் மேலாகவே அதே காட்சியை ரிஹர்சல் செய்த வண்ணம் இருந்தார்கள்.இருந்தும் காட்சியில் யானை அவரது அருகில் நேராக வந்து நின்று தனது ஒற்றைகாலை தூக்கி நின்றவுடன்...அவரது கம்பீரமான கணீர்குரலில் நில் என்றதும் அசையாமல் நின்று பின் வந்த வழியே பின்நோக்கிச் செல் எனறதும் அந்த யானை அவரது ஆணைக்கு கட்டுபட்டு பின்னே சென்றவிடும்...இந்த காட்சியை படமாக்கியவுடன் அங்கே கூடியிருந்த அனைவரும் ஆரவாரத்தோடு மகிழ்ந்ததை இன்றும் நினைக்கும் பொழுது மனம் படபடப்பைதான் கூட்டுகிறது...அப்பாவின் வசனம் அங்கேவிளையாடும்.கம்பீரதிற்கே குத்தகை கொண்ட யானையுடன் நடிகர் திலகத்தின் கம்பீரகுரலும் மேலும் அக்காட்சியியை மெய்சிலிர்க்க வைத்தது என்றே கூறவேண்டும்...ஷூட்டிங் நல்லபடியாக முடிந்தது என்றது டெலிபோனில் செய்தி...அவ்வளவு தான் எங்களது இல்லத்தில் உடைந்தது 1001சூரத்தேங்காய்....முடிந்தது ஷாட் ...தீர்ந்தது பயம்...அப்பாடா என்றது என் அப்பா வீடு மட்டுமல்ல நடிகர் திலகம் வீட்டிலும் உடைந்தது 1001 சூரத்தேங்காய் என்றால் பாருங்களேன்....வாழ்க தமிழ் வாழ்க நம்மக்கள்..இப்படத்தின் பாடல்களிலும் அகரமுதல எழுத்தெல்லாம் பாடல் எனக்கு என்றும் மிகவும் பிடித்த பாடலே ஆகும்....அந்த காட்சி தான் இது.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +4

    மோட்டார் சுந்தரம் பிள்ளை. 1966ல் எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவாஜிக்கு பணக்காரர் வேடம். அப்போது, சிவாஜிக்கு வயது, 37 தான். அப்படத்தில், பதிமூன்று குழந்தைகளுக்கு, அப்பாவாக நடித்திருப்பார். 37 வயதில், பெரிய கமர்ஷியல் கதாநாயகன் என்ற அந்தஸ்து உள்ள, வேறு எந்த ஹீரோவிற்கு, 13 குழந்தைகளுக்கு, அப்பாவாக நடிக்கும் தைரியம் வரும்!
    மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தை பற்றி, மற்றொரு சுவையான செய்தி: இந்தப் படத்தில். முற்றிலும் மாறுபட்ட, சிவாஜியை, காண்பிக்க வேண்டும் என்பதில், எஸ்.எஸ்.வாசன் தெளிவாக இருந்தார். எனவே, சிவாஜி தவிர மற்ற நடிகர், நடிகையரை அழைத்து, அவர்கள் வசனங்கள் பேசி, நடித்து பழக ஒத்திகைகளுக்கு ஏற்பாடு செய்தார். '
    நீங்கள் எல்லாரும் உங்கள் பாத்திரங்களை சரியாக செய்யுங்கள். படப்பிடிப்பின் போது, நான் உங்களை கவனிக்க முடியாது; அதற்கு நேரம் இருக்காது. ஷூட்டிங் சமயத்தில், என்னுடைய முழு கவனமும் சிவாஜியிடம் மட்டும் தான் இருக்கும். சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு வருவது தான், என்னுடைய முயற்சியாக இருக்கும்...' என்று விளக்கினார். அவர் கள் அனைவரும், முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
    எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டது போல, படப்பிடிப்பின் போது, சிவாஜி மீது மட்டும் அவர் கவனம் செலுத்தினார். இந்த சுவையான செய்தியை, என்னிடம் சொன்னது படத்தில் அவருடைய, சம்பந்தியாக நடித்த, மேஜர் சுந்தர்ராஜன். படம் நூறு நாட்கள் ஓடி, வசூலை வாரி குவித்தது.
    நன்றி
    திரு.Y.g மகேந்திராவின்
    நான் சுவாசிக்கும் சிவாஜி...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +4

    C
    சிவாஜி நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நற்காரியங்களில் சில உதாரணங்கள்.
    ( வெளிச்சத்திற்கு வராத மறந்து விட்ட , மறைக்கப்பட்ட உண்மைகள். இதை உலகமும் இன்றைய தலைமுறையினரும் அறியவே இப்பதிவு )
    காமராஜரின் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்தை அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கினார்.மதுரை போடி தொழிற்பயிற்சி பள்ளிக்கு ரூபாய் இரண்டரை லட்சமும் சிவாஜி நன்கொடையாக வழங்கினார். அத்தொகையின் தற்போதைய பணமதிப்பு நகர்புற நில மனை மதிப்புப்படி ரூபாய் 25 கோடிக்கும் மேலாகும்.
    சிவாஜியின் கொடைத்திறமையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1959 ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான "குயில்" ஏட்டில் புகழ்ந்து பாடிய கவிதை இதோ....
    "பள்ளியில் மாணவர்கள்
    பகலுண வுண்ணும் வண்ணம்
    அன்று ஓர் இலக்கம் ஈந்த
    அண்ணல் கணேசர் இந்நாள்
    புள்ளினம் பாடும் சோலை
    மதுரையின் போடி தன்னில்
    உள்ளதோர் தொழிற்பயிற்சி
    பள்ளிக்கும் ஈந்து வந்தார்
    இன்றீந்த வெண்பொற் காசுகளோ
    இரண்டரை இலக்கமாகும்
    நன்றிந்த உலகு மெச்சும்
    நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற
    குன்றொத்த பெருஞ் செல்வத்தை
    குவித்தீந்த கணேசனார் போல்
    எந்தெந்த நடிகர் செய்தார் ?
    இப்புகழ் யாவர் பெற்றார்?"
    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
    தவிர அவரது மனைவி கமலா அம்மாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் பாகிஸ்தான் யுத்த நிதியாக 400 சவரன் தங்க நகைகளையும் வழங்கினார். சிவாஜி 100 சவரன் தங்க பேனாவை நன்கொடையாக வழங்கினார். ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்ட ua-cam.com/video/zojOvJiL7EU/v-deo.html பதிவில் 7.10 முதல் 9 நிமிடம் 30 நொடி வரை காண்க.
    வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை நடத்தி பல லட்ச ரூபாய்களை வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார. வயலூர் மருகன் கோயிலுக்கு திருமுருக கிருபானந்த வாரியாரிடம் நிதி வழங்கியது, தாம்பரம் மருத்துவ மனைக்கு நிதி உதவியது என பட்டியல் நீளும்
    கொய்னா ( மகாராஷ்டிரா) பூகம்ப நிதியாக ரூ25 ஆயிரம் (இன்றைய பணமதிப்பு ரூ1.78 கோடி) வழங்கினார். பூனாவில் வீரசிவாஜிக்கு சிலையும், உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தபோது மெரீனா கடற்கரையில் திருவள்ளுவருக்கு சிலையும் நிறுவினார். தவிர கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கே கட்டபொம்மன் சிலையை சிவாஜி நிறுவினார். அச்சிலையை 16-07-1970 அன்று திரு. நீலம் சஞ்சீவரெட்டி எம்.பி தலைமையில் காங்கிரஸ் தலைவர் காமராஜர் எம்.பி திறந்து வைத்தார். ( ua-cam.com/video/-LaiDo51R3o/v-deo.html பதிவில் 1.06 முதல் 1.27 வரை காண்க )சிவாஜி இந்நினைவிடத்தை சில வருடங்கள் பராமரித்து பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைத்தார். (இந்நினைவிடத்திலேயே தமிழக அரசும் மணிமண்டபம் கட்டியது. அதை 18-05- 2015அன்று முதல்வர் திறந்து வைத்தார்) இந்நினைவிடத்தின் மதிப்பு தற்போது பல கோடிகள் பெறும். சிவாஜி என்ன செய்தார் என்போருக்கு மேற்கண்ட சிலைகளின் பீடங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களே பதில் கூறும். இதை மறுக்கவோ , மறைக்கவோ முடியாது. தமிழகத்தில் புயல்,மழை வெள்ளம் வந்த போது உணவு பொட்டலங்கள் வழங்கியதுடன் நாடகம் நடத்தி நிவாரண நிதி வழங்கியுள்ளார். இது தவிர நிறைய நிதி உதவிகளை விளம்பரம் இன்றி செய்துள்ளார். மேலும் முழு விவரமறிய anonymouse.org/cgi-bin/anon-www.cgi/www.mayyam.com/talk/showthread.php?11869-&&PHPSESSID=b7e629fd9299efdcfaec7cc2dd9d295d#2965;லியுக-கர்ணன்-வள்ளல்-கணேசன்&s=85796290147138b54e46b126c632537f பதிவு காண்க.
    தேசபக்தி, தெய்வபக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் இவற்றை திரைபடங்கள் மூலகமாக மட்டுமின்றி தானே முன்னுதாரணமாக இருந்து மக்களிடம் , குறிப்பாக இளைஞர்களிடம் சேர்த்துள்ளார்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +1

    சிவாஜியை உயிராக கருதுகின்ற ரசிகர்களுக்கு நடிப்பில் அவர் செய்த சாதனைகள் தெரிந்த அளவுக்குஅவர் செய்த உதவிகள் தெரியாது .உதவிகள் செய்யும் போது பத்திரிகைகாரர்கள் ,புகைப்படகாரர்கள் இவர்களை வைத்துகொண்டு உதவி செய்யும் பழக்கம்என்றுமே என்றுமே இல்லை .பராசக்தி வெளியான அடுத்த ஆண்டிலேயே இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக தனது சொந்த செலவில் கலை நிகழ்சிகள் நடத்தி தந்தவர் சிவாஜி .ராயபேட்டை சண்முகம் சாலையில் குடியிருந்த பொது இலங்கை தமிழர்கள் சந்திக்கவந்தபோது ,எங்கள் பகுதியில் மருத்துவமனை இல்லாமல் நாங்கள் முகவும் அல்லல் படுகிறோம் ,நீங்கள் மனது வைத்து எங்களுக்கு மருத்துவமனை அமைத்து தரவேண்டும் என்று கேட்டபோது நான் உதவ தயாராக இருக்கிறேன் ,என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் ,பராசக்தி படத்திற்கு பிறகு இலங்கை முழுதும் உங்கள் புகழ் பரவி இருக்கிறது அதனால் கலை நிகழ்சிகள் நடத்திதரவேண்டும் என்று ம் அதில் வசொல்லாகும் பணத்தை வைத்து மருத்துவமனை கட்டிகொள்கிறோம் என்று சொன்னவுடன் அடுத்த நிமிடம் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நான் என்று இலங்கைக்கு வரவேண்டும் தேதியை கூறுங்கள் என்றும் என் குழுவினரோடு வந்து கலை நிகழ்ச்சி நடத்தி கொடுக்கிறேன் என்று சொன்னாராம் .அந்த நிகழ்ச்சிக்கான பயண செலவு முழுதும் சிவாஜியே ஏற்றுக்கொண்டாராம் .சிவாஜி கலந்து கொள்கிறார் என்று விளம்பரம் செய்தவுடன் ஒரே வாரத்தில் டிக்கெட் முழுதும் விற்றுவிட்டதாம் .கலை நிகழ்ச்சி நடந்த அன்று மொத்த இலங்கையும் அங்கேதான் திரண்டு இருக்கிறதோ என்று என்னும் அளவுக்கு சிவாஜியை பார்க்க மக்கள் பெரும் கூட்டமாக கூடினார்கள் .எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அப்படி ஒரு கூட்டம் கூடியது இல்லையாம் என்று பத்திரிகை செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிட்டதாம் .பெரும் கைதட்டல்களுக்கு மத்தியில் சிவாஜி புரபடபோகும் போது ,பராசக்தி படத்தில் இடம்பெற்ற நீதி மன்ற கட்சியை அவர்கள் வேண்டுகோளுக்கு இடிமுழக்கம் போல பேசி முடித்தவுடன் ,ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் ஓசை அடங்க பல நிமிடங்கள் ஆனதாம் .வசூலான 28 ஆயிரம் ரூபாயை விழா மேடையிலேயே அமைப்பாளரிடம் கொடுத்தார் .எப்படி பட்ட பெரியமனது

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +3

    சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பைக் கற்றுக் கொண்ட அனுபவம் குறித்து தேவிகா உங்களுடன் -
    ‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!
    பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.
    உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.
    சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.
    சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது.
    ‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும் சுய நினைவோடு நடிக்கணும்.
    அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,
    கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும் கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.
    அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல நடித்தேன்.
    அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடிச்சிக் காட்டறேன்.
    நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?
    நீ அவளுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.
    டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவனுக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.
    போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன்.
    ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.
    அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா ‘நீல வானம்’ படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’
    அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.
    நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.
    நன்றி!
    தேவிகாவின் நினைவலைகள்
    இணையத்திலிருந்து....

  • @jaseemjasi8466
    @jaseemjasi8466 4 роки тому +2

    Wooh ikka
    Vere level

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +5

    தைபூச திருநாளில் முருகன் அடிமை திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிக ளின்நினைவாக .......
    அண்ணன் சிவாஜி அவர்களின் மணி விழாவில் மேடை ஏறிய வாரியார் சுவாமிகள் மணி விழா தம்பதிகளை வாழ்த்தி விட்டு பேசும் போது ....
    சிவாஜி ஒரு கஞ்சன்
    சிவாஜி மஹா கஞ்சன்
    என்றெல்லாம் பேசுகிறார்கள்
    இந்த கணேசன்
    வள்ளல் கணேசன்
    வாழும் கர்ணன் சிவாஜி கணேசன்
    ஆன்மீகத்திற்காக எவ்வளவு அள்ளி அள்ளி கொடுத்து இருக்கிறார் என்று எவனுக்காவது தெரியுமா
    நான் அவரிடம் வாங்கியே பழக்க பட்டவன் ஆனால் இன்று நான் வாழ்த்துக்களை வழங்க வந்துள்ளேன் என்று கூறி என்அப்பன் முருகன் அருள் இவருக்கு என்றும் உண்டு என்று வாழ்தினார்

  • @rameshsp7970
    @rameshsp7970 5 років тому +6

    Want Rajini speech and jayalalitha speech

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +2

    தி௫.குக்ஸ் அவர்கள் தமிழ்ப் படித்தவர். தமிழ்நாட்டில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த காரணத்தால் நமது பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்தி௫ந்தார். எனவே தமிழ் பேசத் தெரிந்த அந்த அமெரிக்க நண்பர் என்னுடன் வரப்போகிறார் என்று தெரிந்து கொண்ட போது, தமிழ்நாடே அவரது உ௫வில் என்னுடன் தொட௫வதைப் போன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தவிர அமெரிக்க மக்களுக்கு நான் தமிழில் சொல்வதை எல்லாம் தி௫.குக்ஸ் அவர்கள் வாய்மூலம் அமெரிக்க மக்கள், அவர்களது மொழியிலே - அவர்களது பாணியிலே கேட்கப் போகிறார்கள், கேட்கவும் முடியும் என்பதை அறிந்த போது, எனது பணியின் கடமை ஓரளவு குறைந்தது போலத் தோன்றியது.
    அமெரிக்காவுக்குப் போகும் அழைப்பை என்று நான் ஏற்றுக் கொண்டேனோ, அன்று முதல் என் வேலையின் அளவும் அதிகரித்து விட்டது. சாதாரணமாகவே கடுமையாக உழைத்து வ௫ம் நான், ஓய்வு ஒழிச்சலின்றி நாளொன்றுக்கு இ௫பது மணி நேரம் உழைக்க ஆரம்பித்தேன்.
    இப்படி நான் உழைக்க ஆரம்பித்த போது, சில பழைய படங்கள் முடிவடைந்தன. சில பழைய படங்கள் முடிவடையாமற் போய் விட்டன. ஆனால் இதற்கிடையில் புதுப் படமொன்றை முடித்துக் கொடுக்கும்படியான நிலையில் நான் இ௫ந்தேன்.
    "பழைய படங்களை முடிக்காமல் புதிய படத்தை இவன் முடிக்கிறானே" என்று சிலர் என்மீது வ௫த்தப்பட்டார்கள். ஆனால் நான் ஏன் அப்படிச் செய்தேன்? அத்தகைய நிர்பந்த நிலை என்ன வந்து விட்டது?.
    நாட்டுக்காகப் பாடுபட்ட பல தலைவர்களின் படத்தை எடுத்தவர், தயாரிப்பாள௫ம் எனது நண்ப௫மான தி௫.B.R.பந்துலு "கப்பலோட்டிய தமிழன்" படத்தை எனது பலவந்தத்தினால் அவர் படமாக எடுத்தார்.
    மக்களுக்காகப் பாடுபட்டு, வாழ்க்கையிலே ரொம்பவும் கஷ்டப்பட்ட தேசத் தலைவர்களை மக்கள் மறந்து விட்டார்களோ, அல்லது நாட்டிலே தேசபக்தி உணர்ச்சி குன்றி விட்டதோ தெரியவில்லை. "கப்பலோட்டிய தமிழன்" படம் வெற்றியடையவில்லை. இதனால் கிட்டத்தட்ட ஆறு லக்ஷம் ௹பாய் பந்துலுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது.
    என்னை நம்பி, ஒ௫ மாபெ௫ம் தேசத் தலைவரின் படத்தை எடுத்த பந்துலு அவர்கள் நஷ்டமடைவதை எனது மனம் வி௫ம்பவில்லை. தேசபக்தரின் படத்தை எடுத்தாலே இந்த கதிதான் வ௫மோ, என்று மற்றவர்களும் நினைக்கக் கூடாது. எனவே அவர் சிரமப்படக்கூடாது என்பதற்காக, நானாகவே முன்வந்து அவ௫க்கு ஒ௫ புதிய படத்தை முடித்துக் கொடுத்து விட்டுப் போனேன். என் வாழ்நாளில் அவ்வளவு குறைந்த நாட்களில் நான் ஒ௫ படத்தை முடித்தது கிடையாது. மூன்று வேஷங்களை ஏற்று அதற்கு முன்பு நடித்ததும் இல்லை.
    இடையிடையே எனது பிரயாணத்திற்குத் தேவையான பொ௫ள்களையும் சேகரிக்க ஆரம்பித்தேன். எனது வெளிநாட்டுப் பயணத்திற்காக "ஊறுகாய்" தயாராயிற்று. இஞ்சி முரப்பான் செய்யப் பட்டது. இவைகளுடன் எனது நண்பர் தி௫.ஆர்னால்ட் அவர்களுக்குக் கொடுப்பதற்காக,"அப்பளம்", "ப௫ப்புப்பொடி", " குங்குமப்பூ ", " ஏலம்", "சாம்பார் பொடி" இவற்றையும் மூட்டை கட்டச் சொன்னேன்.
    நான் சந்திக்கும் பெரியவர்களுக்கு கொடுப்பதற்காக கைத்தறியினால் செய்யப்பட்ட கழுத்துச் சு௫க்கு (டை), பெண்களுக்கு சேலை, சிறு மணிக்குள் அடைக்கப்பட்ட யானை பொம்மைகள் முதலியவற்றை எடுத்துக் கொண்டேன்.
    எல்லாவற்றுக்கும் மேலாக குங்குமமும், விபூதியையும் நான் மறக்காமல் எடுத்துக் கொண்டேன். அண்ணன் அவர்கள் சாயிபாபாவின் படத்தைக் கூடவே எடுத்து வந்தார்கள்.
    தொட௫ம்.
    நன்றி: ஐயா.C.நடராஜன்.B.Sc.,B.L.
    வழக்கறிஞர். தூத்துக்குடி.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +2

    நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 125-வது படமான ஏவி.எம்.புரொடக்ஷன் ‘‘உயர்ந்த மனிதன்’’ படத்தில் சிவாஜியின் மகனாக நடித்தார். இந்தப்படத்தில் சிவகுமார் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி:-
    சிவகுமார் தனது சொந்த மகன் என்ற உண்மை தெரியாத சூழ்நிலையில் அவன் தங்கச் சங்கிலியைத் திருடிவிட்டதாக சந்தேகப்பட்ட சிவாஜி பிரம்பினால் அவனைத் தன் பலம் கொண்ட மட்டும் அடித்து நையப்புடைத்து விடுகிறார்.
    சிவாஜி அரக்கத்தனமாக அடித்த அவ்வளவு அடிகளையும் சிவகுமார் எப்படித் தாங்கிக்கொண்டு இயக்குனர் ‘கட்’ சொல்லி அந்தக் காட்சி முடிந்த பிறகும் வெகு இயல்பாக இருக்கிறார் என்று எல்லோருமே ஆச்சரியப்பட்டு அவரைக் கேட்டதற்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா?
    சிவாஜி ஆக்ரோஷமாக ஓங்கி ஓங்கித் தன் பலம் கொண்ட மட்டும் அடித்த அத்தனை அடிகளில் ஒரு அடிகூட தன் உடம்பின் மீது படவில்லை என்று சிவகுமார் கூறினார். அதிலிருந்து சிவாஜி அந்தக் காட்சியில் எவ்வளவு தத்ரூபமாக நடித்திருக் கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவர்தான் சிவாஜிகணேசன். அதனால்தான் அவர் ‘நடிகர்களின் திலகம்’ ஆனார்.
    நன்றி!
    சினிமாவின் மறுபக்கம்
    சிவகுமார் தொடரில்...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +3

    1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார்
    கதர் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார்
    1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்சிங்கப்பூர் சிறுநீரக மருத்க்குவ மனைக்கு 16/12/1974ல் ரூ 45ஆயிரம் கொடுத்தார்
    1975லிருந்து 1961வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவிற்க்கு ரூ 5லட்சம் கொடுத்தார்
    1953ம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதி யாக தெரு தெருவாக பராசக்தி பட வசனங்களை பேசி ரூ 12,000/_கொடுத்தார்
    1966ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது ரூ 10ஆயிரம் கொடுத்தார்

  • @ramvignesh3565
    @ramvignesh3565 Рік тому +1

    Rajinikanth speech upload pannunga please

  • @blackloveb2448
    @blackloveb2448 4 роки тому +2

    Ikka ♥️

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +4

    அப்பராக நடித்ததைப்பற்றி திலகம் கூறுகிறார்
    திருவருட்செல்வர்’ படத்தில் , நீங்கள் அப்பராக வேடம் தாங்கி, வந்த காட்சிகள் இன்றும் மனதை விட்டு அகலாமல் இருப்பவை. அந்த வேடம் போடுவதற்கு உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் (INSPIRATION ) காஞ்சி சங்கராச்சாரியாரான ‘பரமாச்சார்யாள்தான் என்று ஒரு முறை
    குறிப்பிட்டிருந்தீர்கள். அது பற்றி ..?
    சிவாஜி கணேசன்: நான் முன்பே சொல்லி இருக்கிறேன். ஒரு நடிகனுக்கு நிறைய கவனிக்கிற தன்மை (observation ) வேண்டும் என்று. நான் என்னை சுற்றியுள்ள சூழ்நிலை, மனிதர்கள் எல்லோரையும் நன்றாக கவனிப்பவன். நான் அப்பராக வேடம் போடும்போது, ஒரு வயதான சிவனடியாருக்குரிய தோற்றம் நடை உடை பாவனை போன்றவற்றை என் நடிப்பில் காட்ட வெண்டும் அல்லவா?
    எனக்கு காஞ்சி பரமாச்சார்யாள் மீது மதிப்பும் பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம்.
    ஒரு நாள் காஞ்சி முனிவர் பரமாச்சார்யாள் அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பியதாக சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்த மடம் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்திற்கு பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
    நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி, நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள்.நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்தோம். காஞ்சி முனிவர் மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்து விட்டது.
    அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்லக் கீழே உட்கார்ந்து, கையை புருவதின்மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.
    “நீதானே சிவாஜி கணேசன்?” என்றார்.
    “ஆமாங்கையா! நான்தான்”, என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். என் மனைவியும் பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.
    “உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷம் .
    திருப்பதி, திருவானைக்கா , தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், இங்கெல்லாம் போனபோது யானையை விட்டு மாலை போட்டார்கள்.
    யானை யாருடையது? என்றேன்.
    “சிவாஜி கணேசன் கொடுத்தது”, என்றார்கள்.
    “நாட்டில் பல பேர் பணக்காரர்கள் பல பேர் இருக்கிரார்கள். அவர்கள் பப்ளிசிட்டிக்காக சில சமயம், கோவில்களுக்கு பணம்தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள். ஆனால் யானை கொடுப்பதற்கு பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது.
    ஆகையால் உன்னை பெற்றவர்கள் பாக்கிய லிகள். அவர்களுக்காக நான் பகவானை பிரார்த்தனை செய்கிறேன்”, என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.
    அப்போது என் மனம் எப்படி இருந்திருக்கும்? எத்தனை அநுக்கிரஹம் ! எண்ணிப் பாருங்கள்.
    பொதுவாக எனக்கு வாழ்க்கையில் பயமே கிடையாது.காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற முனிவர்களுடைய ஆசீர்வாதம் இருக்கும்போது, நான் எதற்காக பயப்பட வேண்டும்? ஒரு வேளை இந்த சம்பவம் என் மனதில் ஆழமாக பதிந்து இருக்கலாம். பரமாச்சார்யாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம்.
    இது போல என் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு மகான்களையும், ஆன்மீக புருஷர்களையும் சந்தித்து அருளாசி பெற்று இருக்கிறேன்.

  • @selvaraja8285
    @selvaraja8285 3 місяці тому

    சிவாஜியின் புகழ் உலகம் உள்ளவரை உலகம் முழுவதும் நிலைத்து நிற்கும். நடிப்பு உலகில் சிவாஜிக்கு நிகர் யாருமில்லை.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +2

    "கொடுத்து" வைத்து, வாழவும் வைத்தவர்கள்.சிங்கப்பூர் சிறுநீரக மருத்க்குவ மனைக்கு 16/12/1974ல் ரூ 45ஆயிரம் கொடுத்தார்
    1975லிருந்து 1961வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவிற்க்கு ரூ 5லட்சம் கொடுத்தார்
    1953ம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதி யாக தெரு தெருவாக பராசக்தி பட வசனங்களை பேசி ரூ 12,000/_கொடுத்தார்
    1966ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது ரூ 10ஆயிரம் கொடுத்தார்1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார்
    கதர் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார்
    1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்நடிகர் திலகம் செய்த உதவிகள் மறைக்கப்பட்ட ஒன்றா எல்லோரும் நலம் வாழ அவர்உதவுவார்
    மேலவீதியில் செயல்பட்ட மாணவர் தங்கும் விடுதி கட்டிடம் வாங்க 'நீதியின் நிழல்'
    'தேன் கூடு' எனும் இரு நாடகங்கள் நடத்தி
    நிதி திரட்டி கொடுத்தார்!!சீனி.செல்வநாதன் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் தியாகி இல்லம் மற்றும் தஞ்சை கள்ளர் மகா சங்கம் இது போன்று எத்தனையோ நிகழ்வுகளுக்கு நிதி வழங்கியவர்#சிவாஜி .. #ஓர் #சொக்கத்தங்கம்
    எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
    தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர் திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்தது.
    நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார்.
    அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.
    நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது.
    நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார்.
    அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.
    நன்றி தெரிவித்துப்பேசிய #கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் #சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
    எண்ணங்கள் எழுத்துக்கள் - இணையத்தில் இருந்து உங்கள் இதயத்திற்கு 😍👍

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому

    இமயம் படத்திற்காக, நேபாளம் காட்மண்டு நகரில், படப்பிடிப்பு நடத்தினார் முக்தா ஸ்ரீனிவாசன். அங்கு, 'மாயாலு' என்ற ஓட்டலில், நாங்கள் அனைவரும் தங்கினோம். சிவாஜியும், கமலாம்மாவும் மட்டும், சற்று தள்ளி இருந்த, 'சோல்டி ஓபராய்' என்ற நட்சத்திர ஓட்டலில், தங்க வைக்கப்பட்டனர்.
    அங்கு தங்கிய, இரண்டாவது நாளே, சிவாஜி, 'நீங்கள் எல்லாம் ஜாலியாக ஒன்றாக தங்கியிருக்கீங்க. நான் மட்டும் அங்கு தனியாக கஷ்டப்படணுமா...' என்று கேட்டார். முக்தா தவித்தார்.
    'சிவாஜி தங்குகிற மாதிரி பெரிய அறை எங்கள் ஓட்டலில் இல்லை...' என்று கூறிய ஓட்டல் முதலாளியே, அதற்கு ஒரு தீர்வும் கண்டுபிடித்தார். இரு அறைகளுக்கு நடுவே இருந்த சுவரை உடைத்து, அறையை பெரிதாக்கினார்.
    இரண்டாவது நாளே சிவாஜியும், கமலாம்மாவும் எங்கள் ஓட்டலிலேயே தங்கினர். ஓட்டல் அறையிலேயே கமலாம்மா, சிவாஜிக்கு உணவு சமைத்தார். சில நாட்கள் எங்களுக்கும் அவரின் தயவால், சுவையான வீட்டு சாப்பாடு கிடைத்தது.
    காட்மண்டு நகரம், சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் பெற்றது. சிவாஜிக்கு தெரியாமல், நாங்கள் பயந்து பயந்து, அங்கு செல்வோம்.
    ஒரு நாள், சூதாட்ட விடுதியொன்றில் ஷூட்டிங் நடந்தது. தேங்காய் சீனிவாசன் பெண் வேடத்திலும், மனோரமா ஆண் வேடத்திலும், நானும் நடித்த காமெடி சீனை பார்க்க வந்திருந்த சிவாஜி, அங்கு இருந்த இயந்திரத்தில், ஒரு நாணயத்தை போட்டு, கைப்பிடியை இழுத்தார். நாணயங்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பக்கத்திலிருந்த நடிகர் ஒருவரிடம், அதை அப்படியே கொடுத்துவிட்டு, வெளியே சென்று விட்டார்.
    இதைப் பார்த்த தேங்காய் சீனிவாசன், 'நாமும் தான் இழுத்தோம்... வேர்வை தான் கொட்டிச்சு. அவர் இழுத்தால், உடனே, 'சடக்கு சடக்கு'ன்னு பணம் கொட்டுதேப்பா. அந்த சமயம் பார்த்து, அவர் பக்கத்தில் நான் இல்லாமல் போயிட்டேனே...' என்று, அவரது பாணியில் அங்கலாய்த்ததை நினைத்தால், இன்றும் சிரிப்பு வரும்.
    நன்றி!
    Y.G.மகேந்திராவின்
    நான் சுவாசிக்கும் சிவாஜி

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 років тому +3

    Good speech

  • @suryakumar54
    @suryakumar54 4 роки тому +2

    Very very nice thank you very much please make me to see often & often with affection Suryakumar banglooru!!¡!!!!!!!!!!

  • @ajayanand8509
    @ajayanand8509 4 роки тому +2

    Thank u so much for the video

  • @amar7869
    @amar7869 6 років тому +18

    Pls upload Rajinikanth Speech too a big request

  • @felixjames7436
    @felixjames7436 Рік тому

    0:21 I think Mammotty lifted Prabu for few seconds...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому

    வள்ளல் சிவாஜி
    சென்னை தாம்பரத்தில் உள்ள
    வள்ளுவர் குருகுலம்
    என்ற கல்வி நிறுவனத்திற்க்கு 1966ல் ரூ 30,000
    நிதி அளித்துள்ளார்
    சென்னை மாநகராட்சி பள்ளிக்கு 1966ல்
    வேங்கையின் மைந்தன் நாடகம் நடத்தி வசூலான
    தொகையில் ரூ 1லட்சம் நன்கொடையை
    கொடுத்துள்ளார்
    அன்றைய மேயர் திரு
    கமலக்கண்ணன் அவர்களிடம் கொடுத்துள்ளார்

  • @vignesh1417
    @vignesh1417 4 роки тому +2

    இந்த விழாவில் ரஜினி பேசிய வீடியோ உள்ளதா???

  • @amarantirupur
    @amarantirupur 6 років тому +5

    THE FIRST MEGASTAR OF INDIAN CINEMA SIR MAMMOOTTY,DEAR TELUGU FANS DON'T MISTAKE AFTER MR MAMMOOTTY ONLY TITLED MR CHIRANJEEVI CALLED BY MEGASTAR.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 4 роки тому +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் sivaji ganesan did 100s of different characters. Kamal Hasan started doing variety of roles after his 100th movie. Kamal is a great fan of Sivaji Ganesan and always talked about sivaji in his interviews in north and south India. Kamal Hasan is very good. But he always did a lot of rehearsal and did his best to avoid any influence of Sivaji Ganesan in his acting. However, he has not done as many old age characters or historic characters, or freedom fighter characters or movies without a pair or as many anti-hero or villain roles. Most importantly, in Sivaji ganesan movies, there were many many actors taking up sometimes half the screen time and Sivaji Ganesan will still shine through. He towered above all. Most of the top actors"s best TOP 3 movies will be with Sivaji Ganesan (for SSR, Gemini Ganesan, Savithri, Sarojadevi, Padmini, Jayalalaitha, Nagesh, Manorama, SV Rangarao, SV Subbaiah, Kannamba and many others. But, in Kamal movies, he will have 75% of screen time and NOT many actors will get enough scope to act in his movies (there are exceptions such as Nasser, Revathi, Nedumudi Venu, Jayapradah etc., Also,, Sivaji Ganesan did 3 shifts of 6 hours each from 1952 to 1974 in movies and also acted in stage dramas to keep his drama troupe survive with their families and also for ther passion of the stage. No other top actor acted in stage for 2 decades even after becoming popular in movies. Sivaji Ganesan also changed the trend of Tamil cinema which was mostly song oriented and mild mannered dialogues and brahmin influenced dialogues with mediocre diction and never bothered about image. Kalam removed moustache after 100 movies. Sivaji Ganesan has done all kinds of get-ups and ages and rich/poor/middle class etc., Even in psychologically affected characters, Sivaji Ganesan did many many as compared to Kamal Hasan. Cheers my friend.

  • @Mr3mvy
    @Mr3mvy 6 років тому +6

    Yes rajini speech pls

  • @Silambu_Arasan-989
    @Silambu_Arasan-989 3 роки тому +1

    Please upload super star rajinikanth speech

  • @vijay-hx8pc
    @vijay-hx8pc 3 роки тому +1

    Please upload Rajini speech video.....

  • @rajmohan2476
    @rajmohan2476 3 місяці тому

    Please add superstar Rajinikanth speech also

  • @adarshmajith1838
    @adarshmajith1838 5 років тому +3

    Mammukka...

  • @karthiraja6306
    @karthiraja6306 3 роки тому

    En thalaiver rajini sir pesunathu podala antha video iruntha podunga upload panuga please

  • @hihahahihi5923
    @hihahahihi5923 5 років тому +6

    4:18 superstar

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +3

    21-12-19ன் தொடர்ச்சி....
    2018 தமிழ் இந்து நாளிதழ்....
    ஏழரை மணிக்கு ஷூட்டிங் என்றால், சிவாஜி ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷூட்டிங்குக்குச் சென்றது இல்லை!
    கருணாநிதியை 'மூனா கானா' என்றுதான் அழைப்பார். எம்.ஜி.ஆரை 'அண்ணன்'என்றுதான் கூப்பிடுவார். நெருங்கியவர்கள் அழைப்பது போல, ஜெயலலிதாவை 'அம்மு' என்று கூப்பிடுவார். இப்படித்தான், ஒவ்வொருவருக்கும் அழகாய் பெயர் வைத்துக் கூப்பிடுவது அவர் ஸ்டைல். அப்போது ஸ்டில் போட்டோகிராபராக இருந்த திருச்சி அருணாசலத்தை ஆனாரூனா என்று அழைத்தார். அப்படியே எல்லோரும் கூப்பிடத் தொடங்கினார்கள்.
    வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் முதலான சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி.
    தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி.
    இன்னொரு பக்கம் பக்தியிலும் முழு ஈடுபாடு காட்டிவந்தார்.
    திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
    வீட்டு வாசலில் பிள்ளையார் கோயில் கட்டியிருக்கிறார். அந்தப் பிள்ளையாருக்கு தினமும் பூஜைகள் செம்மையாக நடக்கின்றன.
    நடிகை மனோரமாவின் வீடு, சிவாஜி வீட்டுக்கு அருகில்தான் இருக்கிறது. மனோரமா வீட்டில் இருந்து எந்தப் பக்கம் சென்றாலும் முதலில் சிவாஜி வீட்டு வாசலில் உள்ள பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அந்தப் பிள்ளையார் மீதும் சிவாஜி கணேசன் மீதும் அப்படியொரு பிணைப்பு; பந்தம்.
    அதற்கொரு முக்கியமான காரணமும் உண்டு. மனோரமாவின் அம்மா இறந்தபோது, உடனிருந்து ஆறுதல் சொல்லி, எல்லா ஏற்பாடுகளையும் செய்ததுடன், மனோரமாவின் சகோதர ஸ்தானத்தில் நின்று, ஈமக்காரியங்கள் உட்பட அனைத்தையும் செய்தார் சிவாஜி.
    தொடரும்...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +5

    உங்களுக்குத் தெரியுமா?
    " KARNAN" - THE ORIGINAL....
    1965 செப்டம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில், வேலூரில் நடிகர்திலகத்தின் " நீதியின் நிழல்", "களம் கண்ட கவிஞன் " ஆகிய இரு நாடகங்கள் நடைபெற்றன.
    அந்த இரு நாடகங்களின் மூலம் வசூலான தொகை 1,38,000 ரூபாயாகும்.அதில், ஒரு லட்ச ரூபாயினை இந்திய யுத்த நிதிக்காக அன்றைய முதல்மந்திரி திரு. பக்தவச்சலம்
    அவர்ளிடம் மாவட்ட கலெக்டர் திரு. வெங்கட்ராமன் மூலம் கொடுத்தார் நடிகர்திலகம்.
    பிறகு, வேலூரில் இருந்த 'ஆர்ட் அகாடமி' யினர் நடிகர்திலகத்துக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தினர். நடிகர்திலகம் யுத்த நிதிக்கு மேலும் நிதி கொடுப்பதற்காக அந்த மாலையையும் பொன்னாடையினையும் ஏலம்விட, மாலை 112 ரூபாயும், பொன்னாடை 501 ரூபாய்க்கும் ஏலம் போனது. அதையும் யுத்தநிதிக்குக் கொடுத்தார்.
    ஆக, அன்றைய நாள்வரை வேலூரில் மட்டும் நடிகர்திலகம் கொடுத்திருந்த மொத்த யுத்தநிதி ரூ 1,61,300 ஆகும்.

  • @vivekmad2010
    @vivekmad2010 4 роки тому

    Can you please upload the full video...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  5 років тому +3

    அமெரிக்கா அரசால் கௌரவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய நடிகர் திலகத்தை மக்கள் திலகம் வாழ்த்தி எழுதிய பெரிய கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இவை
    ''நல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம்.
    ஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும்.
    ‘திரும்பிப் பார்’ என்னும் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார். பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார்.
    இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள்.
    நடிப்பு என்பது என்ன? கற்பனை தானே! ஏதோ ஒன்றிலி ருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை. நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பன வற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாத வற்றைத் தோற்றுவிக்கும் செயல் திறனும் பெற்றி ருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.
    அமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.
    இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் “சிவாஜி கணேசன் யார்?” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு!” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு!''
    (1962ல்நடிகன் குரல்’ வெளியிட்ட சிறப்பு மலரிலிருந்து. இக்கட்டுரையை நடிகர் திலகத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுநாளில்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha  4 роки тому +2

    தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM

  • @Joker-mi6qt
    @Joker-mi6qt 5 місяців тому

    Rajini sir speech video podunga ji

  • @murugann5880
    @murugann5880 4 роки тому +1

    RAJINI sir PESum video po dung a please

  • @vasanthabcd
    @vasanthabcd 4 роки тому +1

    Rajini speech pls

  • @alexalex3947
    @alexalex3947 2 роки тому

    Super movie

  • @vijayabuji2172
    @vijayabuji2172 3 роки тому

    Pl upload more videos