ஸ்ரீ சத்ய சாயிநாத அஷ்டகம் (தமிழ்) | with Eng. Subtitles | ஸ்ரீ சத்ய சாயி தமிழ் துதிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 19

  • @SriSathyaSaiYugam
    @SriSathyaSaiYugam  Рік тому +8

    Lyrics: ஸ்ரீ சத்ய சாயிநாத அஷ்டகம் (தமிழ்)
    1) பெருந் தவப்பொருளே ஷிர்டி சாயி அகமே
    கருணைப் பொக்கிஷமே காருண்ய முகமே
    பக்தருக் கனுகூலம் செய்யும் செழிப்பே
    யோகியர் தலைவரே சிவ விஷ்ணு வடிவமே
    தஞ்சம் தஞ்சமுன் திருவடி பணிந்தோம்
    ஸ்ரீ சத்ய சாயி நாதரே சரணம்
    2) நல்லோர் கதியே சித்தர்கள் துதியே
    மாபெரும் அறிவோனே வாயு ருத்ர வடிவனே
    ஏழை எளியவர்க் கிரங்கிடும் இறையே
    தீயோர்க்கு எமனாய் நடமிடும் சிம்மமே
    தஞ்சம் தஞ்சமுன் திருவடி பணிந்தோம்
    ஸ்ரீ சத்ய சாயி நாதரே சரணம்
    3) கலைகளின் கருவூலனே செறுக்காசை அழிப்பவனே
    திருப்பதியில் திகழும் ஸ்ரீ வெங்கடேஷ்வரனே
    சனாதனனே நுண்ணிய பரம்பொருளே
    திருவேங்கடனாய் சுக அறிவு அருள்வோனே
    தஞ்சம் தஞ்சமுன் திருவடி பணிந்தோம்
    ஸ்ரீ சத்ய சாயி நாதரே சரணம்
    4) மேன்மைக் கெல்லாம் மேலான இறைவனே
    முழுமுதலே சம்சார பந்தம் நசிப்பவனே
    முதன்மை ஒளியே வெளிச்ச வடிவினனே
    நிலையே நிலையான உயர்நிலை தருபவனே
    தஞ்சம் தஞ்சமுன் திருவடி பணிந்தோம்
    ஸ்ரீ சத்ய சாயி நாதரே சரணம்
    5) நாதி அற்றோரை அணைத்திடும் அன்னையே
    பாசம் எனும் எமனை வதம் செய்யும் வலிமையே
    தவசிகள் வழிபடும் திருவடி உடையோனே
    ஸ்ரீ லஷ்மி மனம் மகிழ் மகாவிஷ்ணு வடிவனே
    தஞ்சம் தஞ்சமுன் திருவடி பணிந்தோம்
    ஸ்ரீ சத்ய சாயி நாதரே சரணம்
    6) பேரான்மாவிலே லயிக்கும் உயர் லயமே
    சத்குருவே பெரும் வள்ளல் தன்மையனே
    மகிமையே உத்தம குணம் கொண்டவனே
    சொல்லில் அழகோனே தீமைக்கு கனலோனே
    தஞ்சம் தஞ்சமுன் திருவடி பணிந்தோம்
    ஸ்ரீ சத்ய சாயி நாதரே சரணம்
    7) பழமையின் பொருளே பரிபூர்ண அருளே
    பேரவதாரனே நிர்மல இதயமே
    புலன் நோய் கர்ம வினை தீர்க்கும் மருந்தே
    தூய்மை அகம் அதில் அமரும் அதிர்வே
    தஞ்சம் தஞ்சமுன் திருவடி பணிந்தோம்
    ஸ்ரீ சத்ய சாயி நாதரே சரணம்
    8) எல்லா மதத்தினர்க்கும் அருள் செய்பவரே
    ஜனங்களின் அடைக்கலம் நீ சாயீஷ்வரனே
    சத்வ குணமுடைய சண்முகக் கடவுள் நீ
    மங்களமே நரனை யோகியாக்கும் இறையே
    தஞ்சம் தஞ்சமுன் திருவடி பணிந்தோம்
    ஸ்ரீ சத்ய சாயி நாதரே சரணம்
    பக்தியுடன்
    *வைரபாரதி*

  • @bhuvaneshwarikrishnamoorth3944

    ஓம் ஸ்ரீ ஸாயிராம் . தஞ்சம் தஞ்சமுன் திருவடி பணிந்தோம்
    சாயி நாதனே சரணம் சரணம்

  • @syamalavs7559
    @syamalavs7559 Рік тому +1

    🙏❤️🌹🕉🙏ஓம் ஸ்ரீசாய்ராம்🙏

  • @geeta1152
    @geeta1152 Рік тому +1

    ஓம் சாய் நாதனே சரணம்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Sonicesong❤❤om sai ram❤❤

  • @knsaaimaheswaran5400
    @knsaaimaheswaran5400 Рік тому

    அருமை அருமை அற்புதம் ஜி 🙏❤️

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +2

    Om Sri Sai Ram Thankyou Sai Ram Thankyou Sai Ram

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 Рік тому +2

    பகவான் பாபாவின் அஷ்டகத்தை எழுத்து வடிவில்தந்தமைக்கு ரொம்ப நன்றி🙏🏻om sri sairam namaste 🙏🏻

  • @sundaresangs4018
    @sundaresangs4018 Рік тому +1

    Koti Pranams at the Lotus feet of Bhagwan Sri Sathya SaiBaBA

  • @pushpasivananthan3938
    @pushpasivananthan3938 10 місяців тому

    Om Sai Ram Om Sai Ram Om Sai Ram

  • @priyaramkumar8448
    @priyaramkumar8448 Рік тому +1

    Om sairam

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 Рік тому +2

    Om sri sairam namaste 🙏🏻

    • @muthuhariharan5415
      @muthuhariharan5415 Рік тому +1

      ஶ்ரீ சத்ய சாயீநாத அஷ்டகம் செவிமடுத்து ஜென்ம லாபம் அடைந்தேன். ஶ்ரீ சத்ய சாயி யுகத்துக்கு பெரும் நன்றி. எளிமைவடிவில் தமிழாக்கம். அதற்கு ஈடான ஆங்கில மொழிபெயா்ப்பு. அழகான கானம், காணொளி, இசைஅமைப்பு யாவும் நன்று

  • @kanthiahuthayan9742
    @kanthiahuthayan9742 Рік тому +1

    🙏🙏🙏🌹🌹🌹

  • @Munishkumarp
    @Munishkumarp Рік тому +1

    அருமை சாயிராம் 🙏🌸

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Рік тому +2

    Om shri sai ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Місяць тому

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +2

    Om Sri Sai Ram Thankyou Sai Ram Thankyou Sai Ram

  • @kanthiahuthayan9742
    @kanthiahuthayan9742 Рік тому +1

    🙏🙏🙏🌹🌹🌹