ஸ்பெஷல் இயந்திரம் மூலம் இளநீர் வெட்டி விற்கும் வியாபாரி | Coconut water machine

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2021
  • மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் வியாபாரி ஒருவர் இளநீர் வெட்டுவதற்கென்றே பிரத்யேகமான இயந்திரம் வைத்திருக்கிறார். தனது இரு கைகளிலும் பிளாஸ்டிக் கவர் அணிந்திருக்கும் அவர், ஒரு இளநீரை எடுத்து இயந்திரம் மூலம் துளையிட்டு அதனை இயந்திரத்தில் உள்ள மற்றொரு டேங்கில் ஊற்றுகிறார். பின்னர் அந்த டேங்க்குடன் இணைந்திருக்கும் குழாயை திறந்து, அதில் இருந்து வரும் இளநீரை பிளாஸ்டிக் கிளாஸில் பிடித்து ஸ்டிரா போட்டு வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்.
    பின்னர் இளநீர் குடுவையை அதே மிஷினை கொண்டு நறுக்கி உள்ளே இருக்கும் தேங்காயை எடுத்து வாடிக்கையாளருக்கு வழங்குகிறார். இதில் எதுவும் கைபடாமல் இருப்பதால் தூய்மையானதாக கருதப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் இதுவரை 43 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
    தற்போது கோடை காலம் என்பதால் இளநீர் என்பது அத்தியாவசியமான பானமாக இருக்கிறது. வெயிலை சமாளிக்கவும், அல்சர் உள்ளிட்ட வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இளநீர் பருகுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் இளநீர் பருகுவதில் மக்களிடையே தயக்கம் இருந்தது. விற்பனையாளர் இளநீரை தன் கைகளால் வெட்டி தருவார். இதனால் வைரஸ் எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதால் ஒரு சிலர் இளநீர் பருகுவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் இந்தூர் வியாபாரியின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் கிடைத்தது. நாடு முழுவதும் இளநீர் வியாபாரிகள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
    இருப்பினும் மற்றொரு புறம் இதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளது. இளநீர் பிடித்து வழங்கும் கப் மற்றும் ஸ்டிரா ஆகியவை பிளாஸ்டிக் என்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக அமைந்து விடும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    மேலும் இளநீர் ஊற்றி குடுக்கும் அந்த டேங்க் கிளீனாக இருக்கிறது என்பது நமக்கு தெரியும். விற்பனையாளர் தன் கைகளில் கையுறை அணிந்து கொண்டு வழக்கம் போல் இளநீரை அதன் குடுவையிலேயே குடுத்தால் அதுவே நல்லது. மேலும் பிளாஸ்டிக் கிளாஸில் கொடுப்பதால் நமக்கு குறைவான அளவிலேயே இளநீர் கிடைக்கும். என்றும் விமர்சித்து வருகின்றனர். அதனையும் நாம் மறுப்பதற்கில்லை.
    இந்தியாவில் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் இருப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு உருவாகியுள்ளது. எல்லோரும் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் குறித்து கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர்.
    Entertainment,News,Tamil,Sri Lanka,Jaffna,Eelam,Peoples,Pasanga FM,Sri Lanka Radio,World News,Karaveddy,Cinema,Tamil Cinema,Sri Lankan Tamil Radio,Short Films,Album Song,Rap Songs,Tamil Rap,இளநீர் வெட்டும் இயந்திரம்,tender coconut cutting machine,tender coconut cutter,tender coconut opener,coconut water,green coconut cutting machine,anyone can start business,tender coconut cutting knife,tender coconut business,tender coconut cutting machine in india
    A dealer who cuts and sells young water with a special machine
  • Розваги

КОМЕНТАРІ • 4

  • @pananga9967
    @pananga9967 3 роки тому

    Unka channel teamla nanum joint pannalamo salary ellam venam summa part timea