இந்தோ நேபாள் சர்வதேச சிலம்பாட்டம் 10-பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • சர்வதேச சிலம்பாட்டம் விளையாட்டு போட்டி
    ஐந்து தங்கப் பதக்கம் உட்பட பத்து பதக்கங்களை வென்று
    சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
    நேபாளத்தில் நடைபெற்ற
    இந்தோ - நேபால் சர்வதேச சிலம்பாட்ட விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த தேவராஜ் ஆசான் சிலம்பாட்ட அணியினர் 5-தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளி பதக்கம், இரண்டு வெண்கல பதக்கங்கள் என பத்து பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
    நேபாளில் உள்ள பொக்ஹாரா கால்பந்து விளையாட்டு மைதானத்தில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் ஜீலை-29ஆம் தேதி வரை
    நடைபெற்ற இந்தோ - நேபால் சர்வதேச சிலம்பாட்ட விளையாட்டு போட்டியில்
    இந்தியா, நேபாளம், தீபெக், சீனா, நாடுகளை சேர்ந்த சிலம்பாட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
    தனித்திறன், தொடும்முறை, வேல்கொம்பு, இரட்டை கொம்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில்
    இந்தியா சார்பில் தமிழகத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட அணியினர் கலந்து கொண்டனர்.
    அதில் சென்னை, பெசன்ட் நகர்,
    தேவராஜ் ஆசான் சிலம்பாட்ட கூடம் அணி சார்பில் பயிற்சியாளர் மல்லிகாதேவராஜ் தலைமையில் கலந்து கொண்ட வீரர்கள் ஐந்து தங்கப் பதக்கம், மூன்று வெள்ளி பதக்கம் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
    பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடிய மித்ரேஷ் இரண்டு வெள்ளி பதக்கங்களையும்,
    சப் ஜூனியர் பிரிவில் விளையாடிய லித்திகாஸ்ரீ, இரண்டு வெண்கல பதக்கங்களையும்,
    சப் ஜூனியர் பிரிவில் விளையாடிய ஹரிஷ், இரண்டு தங்கப் பதக்கங்களையும்,
    ஜூனியர் பிரிவில் விளையாடிய ஸ்ரீஜா, இரண்டு தங்கப் பதக்கங்களையும்,
    19 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவில் விளையாடிய மாதவன், தனித்திறன் சுற்றில் ஒரு வெள்ளிப் பதக்கமும், வேல்கம்பு பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்தனர்.
    சர்வதேச விளையாட்டு போட்டிகளில் 10-பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய வீரர்களை சென்னை விமான நிலையத்தில் சிலம்பாட்ட சங்கத்தினர், அவரது பெற்றோர்கள் பூங்கொத்து கொடுத்து,
    பொன்னாடை,
    மலர் மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர்.
    மகத்தான வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை விமான நிலையத்தில் தங்களது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினர்,
    வெற்றிவாகை சூடிய வீரர்கள்.

КОМЕНТАРІ • 2

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 2 місяці тому

    வென்ற வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @saradhadevi2222
    @saradhadevi2222 2 місяці тому

    🎉💐💐💐💐💐