Tpm tamil song 490 இயேசுவே உம்மைப்‌ போல்‌ ஆக வாஞ்சிக்குதே என்னுள்ளம்‌ | tamil lyrics | samuel sam

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #tpmtamilsong
    பல்லவி
    இயேசுவே உம்மைப்‌ போல்‌ ஆக வாஞ்சிக்குதே என்னுள்ளம்‌
    அனுபல்லவி
    என்‌ ஆவி ஆத்துமா சரீரம்‌ முற்றும்‌ படைத்து விட்டேன்‌
    என்னை ஏற்றுக்கொள்ளும்‌ ஐயனே
    சரணங்கள்‌
    1. பாவம்‌ அறியாது பாவமே செய்யாதிப்‌
    பாரிதில்‌ ஜீவித்தீரே
    பரிசுத்தர்‌ உம்மைப்‌ போல்‌ ஜீவிக்கவே
    பெலமதைத்‌ தாருமையா - உந்தன்‌ -- இயேசுவே
    2. உபத்திரவம்‌ உண்டு உலகினிலே என்றீர்‌
    உலகத்தை வென்றேன்‌ என்றீர்‌
    உம்மைப்‌ போல்‌ உலகினை ஜெயித்திடவே
    பெலமதைத்‌ தாருமையா - உந்தன்‌ -- இயேசுவே
    3. தலைசாய்க்கத்‌ தலமில்லை தரணியில்‌ உறவில்லை
    நிலையில்லா பூவில்‌ என்றீர்‌
    நானும்‌ உம்மைப்‌ போல தியாகம்‌ செய்ய
    பெலமதைத்‌ தாருமையா - உந்தன்‌ . இயேசுவே
    4. சிலுவை சுமந்தென்றும்‌ என்பின்‌ வராதவன்‌
    அல்ல என்‌ சீஷன்‌ என்றீர்‌
    உம்‌ சித்தப்படி உந்தன்‌ சேவை செய்ய
    பெலமதைத்‌ தாருமையா - உந்தன்‌ -- இயேசுவே
    5. சீயோன்‌ மலையதில்‌ சிறந்தே இலங்கிடும்‌
    தேவாட்டுக்குட்டி நீரே
    சீயோனில்‌ உம்முடன்‌ நானிருக்க
    உம்மைப்‌ போல்‌ மாற்றும்‌ ஐயா - என்னை -- இயேசுவே

КОМЕНТАРІ • 1