Tpm tamil song 519 அல்பா ஓமெகாவும்‌ நீர்‌ ஆதியந்தமும்‌ நீர்‌

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #tpmtamilsong
    பல்லவி
    அல்பா ஓமெகாவும்‌ நீர்‌ ஆதியந்தமும்‌ நீர்‌
    அரும்‌ பெரும்‌ ஜோதியும்‌ நீர்‌
    சர்வ வல்லவர்‌ நீர்‌ சர்வ ஞானியும்‌ நீர்‌
    சந்ததமாய்‌ உம்மைத்‌ துதிப்பேன்‌
    சரணங்கள்‌
    1. உம்மையே நம்பினோர்க்‌ கெதிராய்‌ வந்ததாம்‌
    வல்லமைகள்‌ அழித்தே
    அதிசயமானவராய்‌ செயல்தனில்‌ வல்லவராய்‌
    அதிசய கிருபையுமாய்‌ ஜெயத்துடன்‌ நடத்தினீரே -- அல்பா
    2. உலகும்‌ மாம்சமும்‌ மாயையின்‌ இன்பமும்‌
    சபைதனில்‌ தோன்றிடுதே
    பரிசுத்தமாகுதலைப்‌ பயத்துடன்‌ காத்துக்கொண்டு
    ஆவியினால்‌ நடக்க அன்பரே கிருபை செய்வீர்‌ -- அல்பா
    3. “பலத்தால்‌ பராக்கிரமத்தாலும்‌ அல்ல - என்‌
    ஆவியால்‌ ஆகு” மென்றீர்‌
    நிறைவான தேவனே நீர்‌ குறையதை அகற்றிடுமே
    உந்தனின்‌ சாயலதை உருவாக்கிடும்‌ என்னிலே - அல்பா
    4. நெருக்கத்தின்‌ நாளில்‌ உம்‌ கிருபையைப்‌ புகழ
    தஞ்சம்‌ என்‌ அடைக்கலம்‌ நீர்‌
    அதிசீக்கிரம்‌ நீங்கிடும்‌ இலேசான உபத்திரவம்‌
    அளித்திடும்‌ அதிகமான நித்திய கன மகிமையை -- அல்பா
    5. எமக்காய்‌ விசேஷித்த நன்மையானதொன்றை
    முன்‌ நியமித்தீரன்றோ
    மகிமையாய்‌ இலங்கும்‌ சீயோன்‌ புது சாலேம்‌ நகரமதில்‌
    மகிபனாம்‌ இயேசுவுடன்‌ ஆளுவோம்‌ என்றென்றுமாய்‌ -- அல்பா

КОМЕНТАРІ •