TPM Tamil Song 491Visuvaasippeer Dheiva janamay indray

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • பல்லவி
    விசுவாசிப்பீர்‌ தேவஜனமே - இன்றே
    தேவனின்‌ மகிமையைக்‌ காண்போம்‌
    அனுபல்லவி
    ஆதியும்‌ அந்தமும்‌ இயேசுவின்‌ நாமமே
    ஆசீர்வதித்திடும்‌ அற்புத நாமமே
    சரணங்கள்‌
    1. ஆள்கின்ற பாவத்தின்‌ கறை திரைகளும்‌
    காணாமல்‌ மாய்ந்திடுமே இயேசுவின்‌ இரத்தத்தால்‌
    வானிலும்‌ பூவிலும்‌ உயர்ந்த நாமமே
    மாவல்ல இரட்சிப்பையே நல்கிடுமே -- ஆதியும்‌
    2. மாறாத நோய்களும்‌ தீராத வியாதியும்‌
    மாறிடும்‌ இக்ஷணமே கல்வாரி ஜீவனால்‌
    மரித்தும்‌ ஜீவிக்கும்‌ இயேசுவின்‌ நாமமே
    மாண்டோரை உயிர்ப்பிக்கும்‌ நிச்சயமே -- ஆதியும்‌
    3. சீறும்‌ கடலையும்‌ முற்றும்‌ அமர்த்தியே
    தேற்றினார்‌ சீஷரையே ஜீவனின்‌ வார்த்தையால்‌
    சர்வமும்‌ ஜெயித்த வல்லவர்‌ நாமமே
    மாற்றிடும்‌ சோதனைகள்‌ யாவையுமே -- ஆதியும்‌
    4. மண்ணோரை விண்ணோராய்‌ மாற்றிட இயேசுவே
    மண்ணிலே மரித்துமே ஜீவனாய்‌ உயிர்த்தார்‌
    சாவினை ஆவியால்‌ வென்றதோர்‌ நாமமே
    சாவாமை அளித்திடும்‌ அற்புதமாய்‌ -- ஆதியும்‌
    5. தேகத்தைக்‌ கிழித்தும்‌ இரத்தத்தைச்‌ சிந்தியும்‌
    திறந்தார்‌ புதியதோர்‌ ஜீவனின்‌ மார்க்கமே
    மகா பரிசுத்தர்‌ மாறாத நாமமே
    சாலேமில்‌ சீயோனிலே சேர்த்திடுமே -- ஆதியும்‌
    Visuvaasippeer Dheiva janamay - indray
    Dheivanin magimaiyai kaanboam
    Aadhiyum andhamum Yeisuvin naamamay
    Aaseervadhithidum arpudha naamamay
    1. Aalgindra paavathin karai thiraigalum
    Kaanaamal maaindhidumay Yeisuvin rathathaal
    Vaanilum poovilum uyarndha naamamay
    Maavalla rathchippaiyay nalgidumay
    2. Maaraadha noigalum theeraadha vyaadhiyum
    Maaridum ikshanamay Kalvaari jeevanaal
    Marithum jeevikkum Yeisuvin naamamay
    Maandoarai uyirppikkum nichayamay
    3. Seerum kadalaiyum muttrum amarthiyay
    Theittrinaar seesharaiyay jeevanin vaarthaiyaal
    Sarvamum jeyitha Vallavar naamamay
    Maattridum soadhanaigal yaavaiyumay
    4. Mannoarai vinnoaraai maattrida Yeisuvay
    Mannilay marithumay jeevanaai uyirthaar
    Saavinai Aaviyaal vendradhoar naamamay
    Saavaamai alithidum arpudhamaai
    5. Dheigathai kilithum rathathai sindhiyum
    Thirandhaar pudhiyadhoar jeevanin maargamay
    Magaa Parisuthar maaraadha naamamay
    Saaleimil Seeyoanilay seirthidumay

КОМЕНТАРІ • 3