கேட்டது கிடைக்க, நினைத்தது நடக்க சுந்தர காண்டம் படிக்கும் முறை| How to recite Sundara Kandam at home

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • சுந்தரகாண்ட பாராயணம் செய்வதன் பலன்கள்:
    சுந்தரகாண்டத்தை படிக்கப் படிக்க வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.மேலும் வாழ்வு வளம் பெறும்.
    திருமண தடைகள் நீங்கி திருமணம் விரைவில் கை கூடும்.
    சுந்தரகாண்டம் பாராயணம் செய்து கொண்டு அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் அடையலாம்.
    ஆஞ்சநேயருக்கு வடை, வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.
    ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சனியின் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
    சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஜெய பஞ்சக ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
    ராமாயணத்தில் உள்ள 24 ஆயிரம் சுலோகங்களில், 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறன. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.
    சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
    சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு நிச்சயம் கூடாது.
    ஆத்ம ஞான மையம்
    #சுந்தரகாண்டம்
    #Sundarakandam
    சுந்தர காண்டம் படிக்கும் முறை
    சுந்தர காண்டம் பாராயணம் செய்யும் முறை
    வீட்டில் சுந்தர காண்டம் படிக்கும் முறை

КОМЕНТАРІ • 1 тис.