ஒரு நாளிலே உறவானதே - Oru naalilE

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • நடிகர் திலகத்தின் -சிவந்த மண்
    காஞ்சனா
    TMS -P சுஷீலா
    MSV இசையில்- கண்ணதாசன் பாடல்
    ஒரு நாளிலே உறவானதே -audio version
    =
    தலைவனைப் பிரிந்து வாழும் தலைவி,
    தலைவன் சென்ற நாட்களைக் கணக்கிடுவதற்குச்
    சுவரில் கோடுகளைக் கிழித்து எண்ணி எண்ணி
    வரவை எதிர்பார்க்கும் நிலையை
    சொல்லும் சங்க கால பாடல்கள் பல , அவற்றில் சில
    குறுந்தொகை - ஆய்கோ டிட்டுச், சுவர்வாய் பற்றுநின் படர்
    குறுந்தொகை -கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந் தனலே
    அகநானூறு - நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந் தாழல் வாழி தோழி
    அகநானூறு -சேணுறை புலம்பின் நாண்முறை இழைத்த
    திண்சுவர் நோக்கி நினைந்து
    நாலடி-மெல்விரலின் நாள் வைத்து நம் குற்றம் எண்ணும்கொல்
    =
    --கொற்றனார் இயற்றிய.-: முல்லை பாடல் ஒன்று
    'வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே
    எறிகண் பேதுற லாய்கோ டிட்டுச்
    சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க
    வருவேம் என்ற பருவம் உதுக்காண்
    தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப்
    பல்லான் கோவலர் கண்ணிச்
    சொல்லுப அன்ன முல்லைமென் முகையே
    பொருள் : சுவற்றில் கோடிட்டு வருந்தும் தலைவியை
    ஆற்றுவிக்க தோழி சொல்வது போல அமைகிறது
    தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறி பிரிந்து சென்றான்.
    முல்லைக் கொடிகள் அரும்பி கார்காலம் வந்துவிட்டது.
    உன் துன்பம் தீர .உன் தலைவன் விரைவில் திரும்பி வந்து விடுவான்”
    =
    திருக்குறளில் 1261 -திருவள்ளுவரும் சொல்கிறார்
    வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்.
    பொருள் :
    அவர் வருவாரென வழி பார்த்துக் கண்களில் ஒளியும் கெட;
    பிரிந்த நாட்களை தொட்டு தொட்டுக் குறித்து
    விரல்களும் தேய்ந்து போயின
    =
    கண்ணதாசன் இந்தப் பாடளில்
    நாளை வரும் நாளை என நானும்
    எதிர்பார்த்தேன் ' என்று சொல்லி விட்டு
    கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு
    என்கிறார் :
    ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு கொண்டு செல்லும் வரிகள்
    விரலாலே கீறாமல் இதழால் சிந்தியதாக ,
    ஒன்றிலிருந்து ஒன்றுக்கு ,
    ஒன்றை வேறொன்றாக மாற்றுவது இரசவாதம் ,
    பொன்னாக்கும் வித்தை
    கதாநாயகனின் நெஞ்சிலே கோடாக சிந்தியது
    முத்த இதழா ? இதளா ?
    தமிழிலே இதள் என்றால் பாதரசம் . mercury
    சிந்தியது மாற்று வித்தை ரசம்
    =
    ஒரு நாளில் உறவாகி கனவாயிரம் நனவாகலாம்
    பல நாள் நனவு ஒரே நாளில் கனவாகலாம்
    கனவு இன்றியே நனவாகலாம்
    நனவே இன்றி வெறும் கனவேயாகலாம்
    நனவு கனவாக -கனவு நனவாக
    நடந்த நனவு கனவாக இருக்கக் கூடாதா
    என்று எண்ணுபவர்களும் உண்டு
    கனவுக்குள் நனவு , நனவுக்குள் கனவு
    கனவுக்குள் கனவு
    தொட்டு ,உணர்ந்து அனுபவித்தது எல்லாம்
    நிலையாமல் கடந்து போக
    கனவு மட்டும் நிலைக்கிறதென்றால்
    கனவு தானே நனவு ?
    வரும் நாளெல்லாம் இது போதுமே!

КОМЕНТАРІ •