மெதுபக்கோடா செய்முறை /Medhu pakoda recipe in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • மெது பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்
    கடலை மாவு 250 கிராம்
    அரிசி மாவு 100 கிராம்
    டால்டா 100 கிராம்
    ஆயில் பொரிக்கத் தேவையான அளவு
    ஆப்ப சோடா சிறிதளவு
    முந்திரி பருப்பு 25 கிராம்
    உப்பு தேவையான அளவு
    வெங்காயம் பெரியதாக 1
    இஞ்சி சிறிதளவு
    பச்சை மிளகாய் 6 காரம் உங்களின் தேவைக்கு ஏற்ப
    கறிவேப்பிலை சிறிதளவு
    மெது பக்கோடா செய்முறை
    வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள் இஞ்சியையும் சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும் அதேபோல் பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்
    பிறகு ஒரு பாத்திரத்தில் டால்டாவை போட்டு அதோடு ஆப்ப சோடா +உப்பு இவைகளை சேர்த்து நன்றாக பீட் பண்ண வேண்டும் மேலே படத்தில் காட்டியவாறு செய்ய வேண்டும் நன்றாக வெண்ணைப் போல் வரும் பொழுதுசிறிது தண்ணீர் சேர்த்து மறுபடியும் பீட் பண்ண வேண்டும் பிறகு இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை கடலைமாவு இவைகளைப் போட்டு மாவை பிசைய வேண்டும் நன்றாக பிசைந்த பிறகு தண்ணீர் தெளிக்க வேண்டும் இவ்வாறு தெளிக்கும் பொழுது மாவு சிறிது லூசாக இருக்க வேண்டும் பிறகு அதில் அரிசி மாவு +முந்திரிசேர்த்து பிசைய வேண்டும் இந்த மாவின் பதமானது எடுக்கும் பொழுது வடை மாவை விட சிறிது டைட்டாக இருக்க வேண்டும் பிறகு கடாயில் ஆயில் வைத்து சிறிது சூடானதும் ஒரு சிறிய பீசை போட வேண்டும் இவ்வாறு போடும் பொழுது அந்தப் பீசீல் இருந்துசிறிது சிறிதாக கொப்பளம் போல் வர வேண்டும் இதுதான் ஆயிலின் பதம் அதாவது ஒரு பக்கோடா போடும் பொழுது அடுத்த பக்கோடா போட்டால் முதல் பக்கோடா நகர வேண்டும் இவ்வாறு போடும் பொழுது சிறிது நேரத்தில் அனைத்து பக்கோடாக்களும் மேலே வந்த பிறகு ஆயிலின் சூட்டை சிறிது அதிகப்படுத்த வேண்டும் இவ்வாறு வரும் பொழுதுதான் மெதுபக்கோடா ஒரே கலரோடு வருவது இல்லாமல் உள்ளே வெந்து இருக்கும் இப்பொழுது சுவையான மெது பக்கோடா ரெடி
    குறிப்பு
    இந்த மெது பகோடா போண்டா போன்று அல்லது வடை போன்று ஒரே ஷேப்பாக வராது கரடுமுரடாக தான் இருக்கும் அதாவது மாவை கிள்ளிப் போட்டால் எப்படி வருமோ அது போல் தான் வரவேண்டும் இதையும் படத்தில் காட்டியுள்ளேன்
    இந்த மெதுபக்கோடா வில் தண்ணீர் அதிகமானால் சரியாக இருக்காது இந்த மெது பக்கோடாவில் டால்டாவுக்கு பதில் வெண்ணெயோ அல்லது நெய்யோ அல்லது ஆயிலோ போட்டு செய்யக்கூடாது
    மெது பக்கோடா எப்படி செய்வது
    மெது பக்கோடா செய்முறை
    ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல் மெது பக்கோடா செய்முறை
    மெது பக்கோடா ரெசிபி
    Medhu pakoda recipe
    How to prepare medhu pakoda
    How to make medhu pakoda
    How to make star hotel style medu pakoda
    Medhu pakoda preparation
    #CHEFMADRASMURALI /#MEDHUPAKODARECIPEINTAMIL/#HOWTOPREPAREMEDHUPAKODARECIPEINTAMIL
    play.google.co...

КОМЕНТАРІ • 68