மாதா சுப்ரபாதம் யாழினி குரலில் முதல் முறையாக | Super Singer Yazhini | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #yazhini #supersingeryazhini #yazhchristiansongs #christiansongs
    Singer : Super Singer Yazhini
    music : Sam
    camera : Pazhani
    editing : Bella
    காலங்கள் யாவுமே காத்திடும் தாயே அன்னையே ஆரோக்கிய மாதாவே
    உன்னடி பணிந்து உன்னையே வணங்கும் எங்களை காத்திட வந்துவிடு
    பொன்னிற மேனியில் புன்னகைத் தவழ இன்முகம் காட்டிடும் மாதாவே
    அனுதினம் உன்னையே வேண்டிடும் எம்மையே இனிதுடன் காத்திட வந்துவிடு
    சத்திய மைந்தனை கருவினில் சுமந்து உலகினுக்கீந்த மாதாவே
    உன் துணையன்றி வேறெமக்கில்லை அன்புடன் காத்திட வந்துவிடு
    அலை கடலோரம் ஆலயம் கொண்ட அன்னையே புண்ணிய மாதாவே
    அடைக்கலம் என்றே அடி பணிகின்றோம் அன்புடன் காத்திட வந்துவிடு
    உலகின் உதயமே தயைமிகு தாயே கருணையின் வடிவே மாதாவே
    கலங்கிடும் எங்கள் துயரினை நீக்க கனிவுடன் காத்திட வந்துவிடு
    வேளை நகர் வாழ் அன்னையே மரியே சுடர்கின்ற ஒளியே மாதாவே
    சோதனை தீர்ந்திட வேதனை நீங்கிட வேண்டினோம் உன்னையே வந்துவிடு
    கன்னி மாமரியே கருணையின் வடிவே கற்கண்டு சுவையே மாதாவே
    கண்கள் இரண்டுமே தேடுது உன்னையே கனிவுடன் அன்னையே வந்துவிடு
    இன்முகம் காட்டியே துன்பங்கள் தீர்த்திடும் இறைவனின் தாயே மாதாவே
    பாவிகள் எம்மையும் பாசமாய் அணைத்து வாழ்வினை நல்கிட வந்துவிடு
    தரணியை என்றும் காத்திடும் தாயே தாய்மையின் வடிவே மாதாவே
    தவறுகள் பலவும் செய்தவர் எம்மை மன்னித்து காத்திட வந்துவிடு
    ஊழ்வினை நீக்கும் சத்திய வடிவே உண்மையின் சுடரே மாதாவே
    உன்மத்தர் எம்மையும் உலகினில் காக்க அன்புடன் தாயாய் வந்துவிடு
    ஈடில்லா தெய்வமே இயேசுவின் அன்னையே முடியா முதலே மாதாவே
    பாசமும் நேசமும் பூமியில் செழித்திட பரிவுடன் அன்னையே வந்துவிடு
    உத்தமர் இயேசுவை உதரத்தில் சுமந்த கன்னியே மரியே மாதாவே
    இவ்வுலகெல்லாம் இன்பத்தில் நிலைத்திட அன்புடன் அன்னையே வந்துவிடு
    அன்புடன் என்றும் ஜெபிப்பவர் நெஞ்சில் நிலைத்திடும் தாயே மாதாவே
    நித்தியம் உலகில் சத்தியம் வாழவே சத்திய ஜோதியே வந்துவிடு
    அன்பினுக் கென்றும் அடிமையாய் இருக்கும் அன்னையின் வடிவே மாதாவே
    உன் துணையன்றி உலகமே இல்லை உண்மையின் வடிவே வந்துவிடு
    துன்பம் என்றவர் துயரினைத் தீர்க்கும் தாய்மையின் வடிவே மாதாவே
    பங்கம் தொலைந்திட பலர் நலம் பெற்றிட பரிவுடன் அன்னையே வந்துவிடு
    உலகங்கள் யாவுமே ஒரு புன்னகையால் ஒளிபெற செய்திடும் மாதாவே
    பொய் எனும் இருளில் மூழ்கிடும் உலகை கரை சேர்த்திடவே வந்துவிடு
    நீலக்கடலில் வன்புயல் காற்றில் வணிகரை காத்திட்ட மாதாவே
    வாடி நின்றவரை நின் அருளாலே உயர்வாய் செய்திட வந்துவிடு
    வாழும் வரைக்கும் உன் துணையன்றி துணை ஒன்றும் இல்லை மாதாவே
    கதி என்றவரை கரை சேர்த்திடவே தோணியாய் நீயும் வந்துவிடு
    கண்ணொளியாலே இருளினை நீக்கி கருணையை பொழியும் மாதாவே
    புன்னகையாலே புதியதோர் உலகம் செய்திட வேண்டும் வந்துவிடு
    நன்மை தீமை இருவகை அறிந்து எங்களை காக்கும் மாதாவே
    அன்னையே என்றவர் அருகினில் இருந்து துன்பங்கள் நீக்கிட வந்துவிடு
    எங்கும் எதிலும் நிறைந்திடும் தாயே வேளாங்கண்ணி மாதாவே
    ஆயுதம் இல்லா புதியதோர் உலகம் இங்கே வேண்டும் தந்துவிடு
    வைக்கோல் புதரில் வைரத்தை ஈன்ற புண்ணிய வடிவே மாதாவே
    மதங்கள் இல்லா மனித மனத்தை உலகினில் மீண்டும் தந்துவிடு
    விண்மீன் நடுவே மதியாய் தோன்றும் மாணிக்க வடிவே மாதாவே
    எல்லா உயிரும் தன்னுயிர் என்றே எண்ணும் கருணையை தந்துவிடு
    எல்லா உயிருக்கும் ஓர் உயிரான அன்னையே மரியே மாதாவே
    இருதயம் எங்கிலும் ஈரம் கசிந்திட புதிதாய் இருதயம் தந்துவிடு
    தேவனின் தூதனை மகனாய் பெற்ற புண்ணிய வடிவே மாதாவே
    பண்ணிய பாவங்கள் யாவுமே தீர்த்து பூமியை புதிதாய் மாற்றிவிடு
    மழையாய் கருணை சிந்தும் வடிவே எங்களைக் காக்கும் மாதாவே
    மாநிலம் எங்கும் மக்களின் பஞ்சம் இனிதாய் இன்றே தீர்த்துவிடு
    திருவடி நிழலில் உலகினை காக்கும் சத்திய வடிவ மாதாவே
    நித்தமும் இங்கே நல்லருள் ஓங்க அன்னையே மரியே காட்சி கொடு
    தீமைகள் யாவுமே விழிகொண்டு எரிக்கும் வேளாங்கண்ணி மாதாவே
    மனம் கொண்ட கவலைகள் சடுதியில் நீக்கி கனிவுடன் எமக்காய் காட்சி கொடு
    மரணத்தை வெல்லும் அமுதத்தை பொழியும் பரமனின் தாயே மாதாவே காய்ந்திடும் மனதில் கருணை உண்டாக்கி மாநிலம் காக்க காட்சி கொடு
    சினம் கொண்ட பேயின் சிரசினை மிதித்திட்ட உண்மையின் வடிவே மாதாவே மனம் கொண்ட துயரங்கள் சீக்கிரம் ஆறவே கனிவுடன் எமக்காய் காட்சி கொடு
    16 புலன்களுள் பரிசிலாய் பிறந்த மங்கைய மலரே மாதாவே
    ஆதரவின்றியே அலைந்திடும் எங்கள் துன்பங்கள் தீர்ந்திட காட்சி கொடு வின்னவர் மன்னவர் வியந்தே போற்றிடும் வித்தகத் தாயே மாதாவே
    கதியின்றி அலையும் எங்களின் வேண்டுதல் கனிவுடன் கேட்டு காட்சி கொடு
    நித்தமும் உலகம் வணங்கிடும் வடிவே சத்திய பொருளே மாதாவே
    புனிதத்தின் பாதையில் நாங்களும் தொடர்ந்திட பரிவுடன் எமக்கு காட்சி கொடு கடவுளின் கருணையை கரத்தினில் சுமக்கும் கனிவுள்ளம் கொண்ட மாதாவே இரந்திடும் அடியவர் எம் குலம் செழித்திட கனிவுடன் எமக்கு காட்சி கொடு
    அபயம் என்றவர் இரு கரம் பிடித்து கரை சேர்த்தருளும் மாதாவே
    பாவக்கடலில் மூழ்கிடும் எங்களை பரிவுடனே கரை சேர்த்துவிடு
    நம்பினோர் நலம் பெற நலமுடன் கைத் தரும் நம்பிக்கை ஒளியே மாதாவே
    வம்பும் வழக்கும் இல்லை என்றொழிய பரிவுடன் எமக்காய் காட்சி கொடு
    விண்ணக அமுதென விளங்கிடும் புனிதமே விந்தைகள் புரிந்திடும் மாதாவே இதயங்கள் எல்லாம் புன்னகை பூக்க கனிவுடன் எமக்காய் காட்சி கொடு
    குழந்தை இயேசுவை கைகளில் சுமந்த கருணைக்கடலே மாதாவே
    பாவங்கள் போக்கி நல்லருள் தந்து பூமியில் புதிதாய் வாழ்வு கொடு
    வேளாங்கண்ணியில் வலமாய் வந்து வணங்கியே நின்றோம் மாதாவே
    இகபரம் இரண்டும் சுகமாய் கழியும் வழியினை இங்கே கண்டுவிட்டோம் வேளாங்கண்ணியை ஒரு முறை வணங்க தவம் என்ன செய்தோம் மாதாவே பிறவியின் பயனை என்னவென்று இங்கே உன்னால் தெரிந்தோம் மாதாவே என்றும் உன்னை வணங்குவதல்லால் பணி ஒன்றும் இல்லை மாதாவே
    வருவோம் வருவோம் தினமும் வருவோம் என்றும் உன்னை வணங்கிடுவோம் என்றும் உன்னை வணங்குவதல்லால் பணி ஒன்றும் இல்லை மாதாவே

КОМЕНТАРІ • 582

  • @poornajeyam4089
    @poornajeyam4089 5 місяців тому +8

    மாதா சுப்ரபாதம் கேட்கும் போது மனதிற்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கிறது

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 Рік тому +143

    இப்பாடலை எழுதியவர் இப்பாடலை பாடிய வர்கள் இப்பாடலை கேட்டவர்கள் அணைவருக்கும் அருள்புரிய வேண்டும் அண்ணையே தாயே மாதாவே நன்றி ❤❤❤❤❤

    • @albertantonyantony2614
      @albertantonyantony2614 Рік тому +4

      Amen.........tq sister

    • @selvaraj3687
      @selvaraj3687 10 місяців тому +6

      Amma,Asaikka mudiyathaNambikkai,Tharum.Amma,Amma,Amma,Amma,Amma,Amma

    • @savarimuthuxavier2631
      @savarimuthuxavier2631 9 місяців тому +3

      Lovely song. Explains the love of Mother Mary in a new format. Very useful for meditation. Nice singing by Yazhini. Love you Mother. Mary. S. Xavier

    • @samidosspaulraj5897
      @samidosspaulraj5897 3 місяці тому +1

      Madha cannot grant arul. Only GOD can grant graces /arul !!!

    • @carolinenataraj1370
      @carolinenataraj1370 3 місяці тому +3

      😮😮❤🎉🎉❤😮😮

  • @ullatharasus9761
    @ullatharasus9761 10 місяців тому +39

    இந்த பாடல் கேட்கும் அனைவரும் நல்ல மனமாற்றம் அடைய வேண்டுமாறு வேண்டுகிறேன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 місяців тому +4

    என் வெண்ணிலவே பகலில் சூரியாவும் இரவில் நிலவாகவும் உங்களை பார்க்கிறேன் அருள் நிறைந்த வாக்கு மனிதர் ஆவார் அவரை சரியாக அடையாளம் கண்டு கொண்டாய் மரியே

  • @MarySunitha-lx1tu
    @MarySunitha-lx1tu 6 місяців тому +11

    எங்களுடைய மனக்கவலையை நீக்கி எங்களுடைய தேவையை அறிந்து ஆசீர் வழங்குவீராக ஆமென் ❤

  • @ஆரூர்இராசா-ப6ர
    @ஆரூர்இராசா-ப6ர 8 місяців тому +4

    அருமையான..
    மாதா சுப்ரபாதம்.
    அழகாகப் பாடிய..
    யாழினிக்கு,
    வாழ்த்துக்கள்.

  • @prabakaranjeyaraj1833
    @prabakaranjeyaraj1833 Рік тому +6

    போற்றுதலுக்குரியது....
    தன்னம்பிக்கையைத்
    தரக்கூடியது....
    நல்ல முயற்சி... மனமார்ந்த
    பாராட்டுக்கள்....

  • @ranzymilfar-yb1vn
    @ranzymilfar-yb1vn 9 місяців тому +29

    அம்மா இந்த பாடலை கேட்டதர்க்கு நன்றி❤❤❤❤❤

  • @xaviamal6872
    @xaviamal6872 Рік тому +22

    யாழினி உன் பெற்றோர் இசைக்கருவியின் தமிழ் பெயரை இறைஅருளின் தூண்டுதலால் தான் வைத்திருக்கிறார்கள். அதைவிட உன்இனிய குரலில் பாடல்கள் வழியாக நற்செய்தி பணிசெய் மரியின் மகளே ஆசீர்கள் பல

  • @balasundaram6800
    @balasundaram6800 Місяць тому +3

    யேசுவுக்கே புகழ்மாமரியே மாமரியே வாழ்கவாழ்க ஆமென் பாடல் மிகமிக பக்தி

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 Рік тому +40

    மரியே வாழ்க!துன்பத்தில் வாழ்வோரையும் தனிமையில் இருப்பவரையும்பாதுகாத்தருளும் அம்மா.

  • @josephvarkis
    @josephvarkis 10 місяців тому +4

    Maadhaavin supra batham paadiya intha yazhai pillaikalukkum avrkalin kudumbathaarkalaium engalayum aaseervathingamma aamen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maryambika1698
    @maryambika1698 Рік тому +9

    அம்மா என்னுடைய மன்றாட்டையும் வேண்டுதலையும் கேளுங்கள் அம்மா ஆமென்

  • @samsanthi2326
    @samsanthi2326 9 місяців тому +5

    யாழினி நீ மாதாவின் குழந்தை.நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

  • @mstellarani9672
    @mstellarani9672 Рік тому +18

    நீங்கள் பாடிய தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் பாடலை அடிக்கடி கேட்ககறேன்

  • @jayadavid293
    @jayadavid293 10 місяців тому +4

    மாதாவே என் கணவரை ஏன் தாயே எடுத்துக் கொண்டாய். திரும்ப எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கொடுத்து விடுமா . கெஞ்சிக் கேட்கிறேன் தாயே.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +10

    வேளாங்கண்ணி வருகிறேன் அங்கே உங்களை நேரில் பார்க்க விரும்புகிறேன் ஆரோக்கிய மாதாவே🎉

    • @sheltonkennedy9735
      @sheltonkennedy9735 6 місяців тому

      நம்பிக்கையுடன் செல்லுங்கள் அம்மாவை நேரில் பார்ப்பீர்கள்

    • @lalithajaya1766
      @lalithajaya1766 3 місяці тому +1

      Me too awaiting to visit this Holy Shrine with my life partner mother Annai Vellangani Our Lady of Good Health please help me show me a miracle 🙏♥

  • @amalraj7605
    @amalraj7605 Рік тому +19

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களுக்கு

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Рік тому +36

    பரிசுத்த அன்னை மரியாவின் மாசற்ற இதயத்துக்கு இந்த சுப்ரபாதம் பாடல்களை கேட்கின்ற எல்லோரையும், இனிய குரலில் பாடிய சகோதரியை சிறப்பாக இசை, ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட குழு உழைப்பையும் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன்! எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக! மரியே வாழ்க!❤🙏💕💐👍

  • @TCeline-z8x
    @TCeline-z8x 11 місяців тому +11

    அம்மாவேளங்கண்ணி ஆரோக்கிய மாதவே எங்கள் அனைவரையும்காப்பாற்றும் தாயே

    • @samidosspaulraj5897
      @samidosspaulraj5897 3 місяці тому

      Only GOD can save us/ all. JESUS is the SAVIOUR of the world !!!

  • @mariaseelanganasegran4670
    @mariaseelanganasegran4670 Рік тому +19

    யேசுவுக்கே பகழ் மாியே வாழ்க மகளே யேசுவின் ௮௫ளோடு நலமுடன் வாழ வாழ்த்துகள்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +16

    என்மாதாவும் நீங்கள் தான் உன் குழந்தை இமேசுவிற்கு இணையான துனையும் நீதான் அன்பே மேரியே❤️ எனக்கானவளே அன்பே❤️

  • @jeyarajs6995
    @jeyarajs6995 Рік тому +9

    இறைமகன் இயேசு அன்னை மரியாள் உடன் இணைந்து உமக்கு கொடுத்த அற்புதக் கொடை இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Рік тому +8

    அம்மா வேளாங்கன்னி மாதாவே💖 🙏🙏வாழ்க. இயேசுவின் தாயே சதா சகாய மாதாவே💖 🙏🙏🙏🙏உமக்கு புகழ் உண்டாவதாக. மாசில்லாக்கன்னிகையே💖🙏🙏🙏🙏 🙏🙏எனக்காக உம் இறைவனிடம் பரிந்து பேசி அற்புதம் செய்திடுங்க. மரியே வாழ்க 💖🙏🙏🙏.ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @arokiamaryjacob6814
    @arokiamaryjacob6814 Рік тому +11

    அனைவருக்கும். அனைத்தும் தர வேண்டும் ஆரோக்கிய தாயே.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +16

    உன் குழந்தை யேசுவிற்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் தாருங்கள் எனக்கான கண்ணீர் வடிக்கும் இதயம் கொண்ட மேரியே நீங்கள் என்றும் என்னுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன் இல்லற வாழ்வை துறந்து கன்னியாஸ்திரி யாக என் வாழ்க்கையில் வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் எந்த உருவத்தில் வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் 🎉

  • @rajendranpalani2656
    @rajendranpalani2656 Рік тому +43

    ❤ எழுதியவர்க்கும் பாடிய மகள் யாழினிக்கும் மணம் மகிழ்ந்தும் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் மகளே அம்மா தீர்க்கா சமாய் இருப்பாய் மகளே அம்மா

  • @ammachellam7726
    @ammachellam7726 Рік тому +10

    Amma எல்லாரும் நல்லா இருக்கட்டும் அதுபோல என்னையும் என் அம்மா, பிள்ளைகள் அனைவரையும் காத்தருளும் அம்மா

  • @jesudossissac3744
    @jesudossissac3744 Рік тому +14

    இப்பாடலை பாடிய செல்வங்களுக்கு இறை ஆசிர்வாதமும் மகிழ்ச்சி நிலைத்திட என்றென்றும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏💐💐💐

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +9

    நீங்களும் உங்கள் மகள்கள் இருவரும் என் வாழ்க்கையில் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் ஆரோக்கிய மாதாவே உங்களிகளின் உள்ளே இருப்பது யார் என்று எனக்கு மட்டுமே தெரியும்🎉

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 7 місяців тому +2

    அன்னையின் மன்றாட்டை மிகவும் இனிமையாக பாடிய மகள் யாழினிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @dhivyaalex9063
    @dhivyaalex9063 Рік тому +7

    ஆரோக்கிய மாதாவே எங்களுக்குகாக வேண்டி கொள்ளும்

  • @manoharan7725
    @manoharan7725 Рік тому +25

    மேகத்தை திறந்து Yaazhini Fr.Salate Nathan Holy Spirit ( அம்மா உங்கள் இந்த தூய ஆவியானவர் பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன் இன்னும் அதிகமான கிறிஸ்தவ பாடல்களை பாட இயேசு கிறிஸ்துவின் அருள் கிடைக்குமாறு அவரை பிரார்த்திக்கிறேன் நன்றி)

  • @ThomasGnanathickam
    @ThomasGnanathickam Рік тому +10

    மனதை மயக்கும் மரியின் பாடல்.மரியே வாழ்க

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +8

    என் யசோதை யாக நீங்கள் தெரிகீர்கள் ஆரோக்கிய மாதாவே 🎉

  • @secretaryarockya8586
    @secretaryarockya8586 8 місяців тому +3

    I have been praying to mother mary to do something in my family. Nothing received. I thank to everyone who have more faith in Mother Mary. God bless you. Please pray for my family members

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil6984 Рік тому +35

    அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் ❤✝️❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 11 місяців тому +3

    எனக்கு தேவையில்லாதவர்களை என் னை நெருங்க விடாமல் செய்து விடுங்கள் என் வாழ்க்கை யை கெடுக்க வேண்டும் என நினைக்கும் நபர்களை என் வாழ்க்கையில் இருந்து விலக்கிக் விடுங்கள் ஆரோக்கிய அண்ணையே என் அப்பா இயேசுவே என்னை உங்களிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டார்கள்

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Рік тому +7

    ஆமென் ஜீசஸ் ✝️✝️✝️👑👑👑👑👑✨️✨️✨️✨️🌹🌹🌹🌹🌹🕯️🕯️🕯️🕯️🕯️🕯️♥️♥️♥️♥️🎂🎂🎂🎂🌾🌾🌾🌾🌾🎈🎈🎈🎈🎈🕊️🕊️🕊️🕊️🕊️👏👏👏👏👏👏

  • @SanthiSuriya-hj5on
    @SanthiSuriya-hj5on Рік тому +4

    Amma thayae en makaneke oru nalla jeevitham kitta ummidam vendukuraen

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Рік тому +38

    உங்களுடைய கிறிஸ்துவ பாடல்களை அதிகம் கேட்பேன், கேட்டதில் மிகவும் பிடித்த பாடல் (எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியாணவரே)
    ஆக மகிழ்ச்சி, ஆண்டவர் நிறைவாக ஆசீர்வதித்து காத்து வழிநடத்துவராக.... ஆமென்......

    • @Hesavee
      @Hesavee Місяць тому

      ஏன் சைவ பட்டா copy அடிச்சான்னு வெக்க மா இல்லை 🤣🤣🤣🤣

  • @susidass9518
    @susidass9518 Рік тому +31

    அன்னையைப் பற்றி அருமையான வரிகளுடன், நல்ல இசை நயத்துடன் வளமான குரல் வளத்துடன், மனதிற்கு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட பாடல். அருமை👍. வாழ்த்துக்கள்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 місяців тому +5

    என் வேளாங்கண்ணி மாதா ஜெஃப் மாலை அண்ணையாக என் அருகில் வந்து விட்டார்கள் மரியே என் உலகம் ❤️ மிகவும் சந்தோஷமாக உள்ளேன் இன்று என் மாதாவிற்கு மிகவும் உகந்த நாள் மரியே வாழ்க ❤️

  • @ஆரூர்இராசா-ப6ர
    @ஆரூர்இராசா-ப6ர 8 місяців тому +3

    08.01.2024 - திங்கள் இன்று எனது 70 வது பிறந்த நாள்.
    என் அன்பும், ஆசீரும்
    யாழினிக்கு உண்டு.

  • @sowmiyarex
    @sowmiyarex Рік тому +8

    ஆவே மரியா 🙏🙏🙏

  • @anparasuanparasu4337
    @anparasuanparasu4337 7 місяців тому +4

    இந்த பாடல்🎵🎵🎤🎶 பாடுகிறபிள்ளைகளைவல்லமையாக்எடுத்துபிறையேசனபடுத்துக்க. 👴👴👴👴👴👴👴👴இயேசுக்கேபுகழ் மரியேவாழ்க ௧ர்த்தர்நல்லவர்🙏🙏🙏✝✝✝✝✝

  • @vprvpr2100
    @vprvpr2100 Рік тому +318

    ஆண்டவரே இந்த பாடலை கேட்கின்ற அனைவருக்கும் நல்ல உடல் நலம் தாருங்கள் இயேசுவே ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் காட்டும் இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 11 місяців тому +13

    இன்று உங்களிகளின் திருத்தலத்தில் உங்களை பார்த்தவுடன் என் கண்களில் இருந்து நீர் ஆறாய் பெருக்கெடுத்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் கண்ணீரால் உள்ளத்தை பறிமாரிகொண்டோம் என்பது தான் உண்மை உன் கைகளில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன் ❤️

  • @usharani27
    @usharani27 Рік тому +5

    Mama Mary heal my mom n take control of my situation. Let me fulfill all the vows I have taken. Make a way where there seems no. I worship the living God Jesus who is possible God n u can solve all my problems in a blink of an eye if its ur will. My petition is at ur feet n I surrender everything at your feet Amen 🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 місяців тому +3

    நான் கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும். உங்களின் முகத்தை பார்த்தால் மட்டுமே மன நிம்மதி தருகிறது நான் இருக்கும் இடத்தில் உள்ள ஜெப மாலை அண்ணையாக இருந்து என்னை பாதுகாத்து வருகீர்கள் வேளாங்கண்ணி மாதாவும் இங்கே தான் உள்ளார்கள் அவரின் உருவம் தான் முகப்பில் உள்ளது தினந்தோறும் என் மேரி மாதாவின் அண்பிற்காக தேவாலயம் சென்று வருகிறேன் மரியே 🎉

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Рік тому +2

    Amma Maria arogiya thya anuthnamum kathduvaya amen jesus ❤ 👧 ❤ ❤ ❤

  • @VivoYs-ck5ex
    @VivoYs-ck5ex Рік тому +9

    Nalla padal sister god bless you 💞

  • @navamaninavamani4447
    @navamaninavamani4447 Рік тому +2

    வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +6

    என் உண்மை யான யசோதை நீங்கள் தான் என்று முடிவு செய்து விட்டேன் ஆரோக்கிய மாதாவே🎉 இந்த குழந்தை யேசு வை உங்களால் மட்டுமே. பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும் கடேசி வரை கைகளில் இருந்து இறங்கவே மாட்டீர்கள் ஆரோக்கிய மாதாவே🎉

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 Рік тому

      என் விருப்பத்தை ஏற்றுக் கொண்டதற்கு மிகவும் நன்றி ❤️

  • @Annan6539
    @Annan6539 Рік тому +13

    🪔🌹🙏✝️🙏🌹🧎 நன்றி இறைவா ஆண்டவரே இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அம்மா தாயே ஆமென் 🪔⛪🧎

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Рік тому +8

    21.6.2023 🎶🎷🥁🎻🎺📢
    Happy World Music day dear ❤💐🙋‍♀️ God Bless You 🤝🤚

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +3

    என் குடும்பத்தில் நீங்கள் இணையும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்🎉

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +3

    வேளாங்கண்ணி கண்டிப்பாக வருவேன் ❤️ என் மேரியை பார்க்க விரும்புகிறேன் என்அன்பே அலமேலு ❤️

  • @sagayaraj3957
    @sagayaraj3957 Рік тому +6

    அருமை நன்றி

  • @JosaphIrudayaraj
    @JosaphIrudayaraj Рік тому +5

    ✝️
    போற்றுதலுக்குறிய மிக அழகான முயற்சி.
    உழைத்த அத்தனை பேருக்கும் தேவ அன்னையின் மன்றாட்டுகளும், ஆசீர்வாதமும் நிறைவாக கிடைப்பதாக. ஆமேன்.

  • @akilanakil2610
    @akilanakil2610 Рік тому +15

    மிகவும் அற்புதம்மான பாடல் 🙏🙏🙏🙏🙏வேளாங்கண்ணி மாதாவே துணை 🙏🙏🙏🙏🙏

  • @saravanamuthurajacon2756
    @saravanamuthurajacon2756 Рік тому +9

    அற்புதம். மிக்க நன்றி யாழினி. வாழ்க மகிழ்வுடன்.

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 Рік тому +8

    யாழ் இனிது. நல்ல பாடல்.

  • @walkermohanraj3859
    @walkermohanraj3859 Рік тому +8

    கடைசி வரியை மூன்று முறை
    பாடுவது பரவசமூட்டுவதாக
    அமைந்துள்ளது..
    இசை எளிமை
    இனிமை.
    மரியே வாழ்க.

  • @jesuraju.m8708
    @jesuraju.m8708 Рік тому +3

    அருமையான வரிகள்
    இனிமையான
    இசை
    தொடரட்டும்
    புதுமை....

  • @virginiapv2717
    @virginiapv2717 Рік тому +5

    ஆமென் ஸ்தோத்திரம் அப்பா இயேசுவே உமக்கு புகழ் நன்றி

  • @mjohnson3457
    @mjohnson3457 Рік тому +3

    மேரி மாதா புகழ் வாழ்க

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +3

    இந்த குழந்தை இயேசுவின் நிலைமையை பார்த்து இரத்த கண்ணீர் வடித்தவரே மாதாவே எனக்கு மட்டும் அல்ல அகிலத்திற்தை அமைதி வழியில் திரும்ப செய்ய உங்களால் மட்டுமே முடியும் உலகம் முழுவதும் நிறைந்து வாழும் கிருஷ்த்துவ சமுகத்தின் ரே ஆரோக்கிய மாதா அகிலத்தை மே அமைதி வழியில் திரும்ப செய்வார் மதங்களை கடந்தது மனித நேயத்தை காப்போம் உங்களிகளின் சேவை உணைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் மதங்களை பார்க்காமல் மனித உள்ளங்களை நேசிப்போம்🎉

  • @jayakanthi9442
    @jayakanthi9442 Рік тому +12

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் யாழினி உன் குரலுக்கு நான் அடிமை மா ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @franklinmaster5122
    @franklinmaster5122 Рік тому +6

    MARIYA..VAZGa .

  • @t.jayarajreddy9553
    @t.jayarajreddy9553 11 місяців тому +4

    Excellent singing.Ave Maria.Praise the Lord.👌💐🙏💯

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal Рік тому +10

    அருமையான சுப்ரபாதம் மீண்டும மீண்டும் கேட்க தோனுது👌👌lyrics super👌👌

  • @anbarasuanitha
    @anbarasuanitha Рік тому +3

    மரியே வாழ்க

  • @charlesbalan9511
    @charlesbalan9511 Рік тому +6

    நல்ல குரல் இறைவன் ஆசீர்வதிப்பார் மரியே வாழ்க

  • @Albinjoe74
    @Albinjoe74 Рік тому +3

    Hi god those who there are listening the song plz give u r bleesing and for u r kindness

  • @stephensakthivel6248
    @stephensakthivel6248 Рік тому +3

    jesus and maria amma bless you thank you your song very nice super song .

  • @pravinv367
    @pravinv367 10 місяців тому +6

    அம்மா மரியே என் வாழ்வில் சரியான வருமானம் இல்லாத வேலையில் இருக்கிறேன் இதைமாற்றி நல்ல வருமானம் தரும் அரசு வேலை தந்து உதவுங்கள்...அம்மா மரியே மாதவே 🌹🌹🌹அற்புத மாதவே என் வாழ்வில் அற்புதம் நடத்துங்கள் அம்மா மரியே மாதவே ❤💖💖💖💖

  • @stellamurugesan7857
    @stellamurugesan7857 Рік тому +3

    மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ்

  • @ajpetero4150
    @ajpetero4150 Рік тому +6

    யாழினி குரலில் அருமையான மாதா பாடல் ❣️ எனக்கு யாழினி குரலில் பிடித்த பாடல் தேன் இனிமையிலும் song forever✨️❤

  • @moundyraj4401
    @moundyraj4401 Рік тому +7

    மிகவும் அழகான பாடல் வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது மிகுந்த நன்றிகள் ❤❤❤❤

    • @mariyalawrence3804
      @mariyalawrence3804 9 місяців тому

      இப்பாடல்எழிதிபாடிய அனைவர்க்கும் நன்றி ஆண்டவரே.என்மகள்இருவருக்கும்.நிரந்தரவேலையும்திருமணம்அன்னையின்அருளாள்நடைபெர ஆன்டவரேஉம்மைவேன்டுகிரேன்ஆமென்.

  • @LawrancerLawrancer
    @LawrancerLawrancer Рік тому +5

    Amen amen thing's so sweet arumi arumi amen thing's so sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @marialoovi8863
    @marialoovi8863 Рік тому +2

    மிக மிக அருமையான | பாடல். மனதுக்கு நிம்மதி தருகின்ற பாடல்.....இனிமையான குரல்......

  • @JulBapou-bh8bf
    @JulBapou-bh8bf Рік тому +3

    Avé Maria Avé Maria Avé Maria Avé Maria ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Рік тому +1

    Super good 👍🎉🎉

  • @pricimeenu4861
    @pricimeenu4861 Рік тому +7

    அருமை அருமை கேட்க கேட்க இனிமையாக உள்ளது❤❤❤❤❤மிகவும் நன்றி🙏💕

  • @dmamudaiamu1020
    @dmamudaiamu1020 Місяць тому +1

    ❤🙏🙏🙏🙏 ஆண்டவரே எங்கள் எல்லோருடைய நோய் நொடிகலை காப்பாத்தும்

  • @subramanianiyer6772
    @subramanianiyer6772 Рік тому +1

    Amen 🙏

  • @lills450
    @lills450 Рік тому +1

    Super singer vunadhu kuralai sariyaga payanpaduthavillai. Magale maadhavin karunai yenrum vunnodu erukkum. Andavarin aaseervadippar. Menmelum valara vaazhthukkal. Vaazhga magale vaazhi.

    • @lills450
      @lills450 Рік тому +1

      Ne super singer pugazh ellai, madha tv yudaya Pillai. Angae varuvadharku mun vunnai maadha tv til nirayamurai parthu erukkirom.

  • @prasadg7439
    @prasadg7439 Рік тому +4

    God bless you my child 🎉🎉🎉🙏🙏🙏

  • @lavanyalavanya9023
    @lavanyalavanya9023 10 місяців тому +2

    Praise the lord Ave Maria

  • @vijaybrandon870
    @vijaybrandon870 Рік тому +2

    Super amen

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 6 днів тому

    என் வாழ்க்கை மாற்றியவர் இயேசு ராஜா அன்பே உருவானவர் கோடா கோடி நன்றி யாழினி நீ மாதாவின் பிள்ளை நன்றயாய் இருப்பாய் வாழ்க

  • @sheelajames6762
    @sheelajames6762 Рік тому +1

    SUPERB......❤❤❤🎉🎉🎉

  • @francisxavier317
    @francisxavier317 11 місяців тому +1

    Praise the lord 🙏

  • @ASIAINTERNATIONAL-u6x
    @ASIAINTERNATIONAL-u6x Рік тому +3

    Beautiful Yazhini, your voice is divine. I love you

  • @augustim.a1515
    @augustim.a1515 Рік тому +1

    May God bless you

  • @authriyanathan3623
    @authriyanathan3623 Рік тому +3

    Beautiful song and may god bless you yazhini

  • @nishadeni5953
    @nishadeni5953 Рік тому +1

    Amma❤

  • @vanathiyanvanathiyan7608
    @vanathiyanvanathiyan7608 Рік тому +2

    Amen amen amen Ave Maria

  • @rskishanthi5670
    @rskishanthi5670 Рік тому +5

    Super very nice song.
    God Bless you yalini.