கோவையிலிருந்து அபுதாபிக்கு இனி நேரடியாக பறக்கலாம் | Coimbatore | Abu Dhabi

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • கோவை சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து பெற்றிருந்தாலும், இங்கிருந்து இரண்டே இரண்டு விமானங்கள் மட்டுமே, வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகின்றன. கோவையிலிருந்து ஆண்டுக்கு பல லட்சம் பேர், வெளிநாடுகளுக்குச் சென்று வரும் நிலையில், இங்கிருந்து நேரடி விமான சேவை இல்லாத காரணத்தால், வேறு நகரங்களுக்குச் சென்று, விமானங்கள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்தைக் காரணம் காட்டி, பல்வேறு
    விமான நிறுவனங்கள், இங்கிருந்து விமான சேவையைத் துவக்க மறுத்து வருகின்றன.
    மேற்கு மாவட்டங்களில் உள்ள தொழில் அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்த கோரிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது பலனும் கிடைத்துள்ளது. இதுவரை கோவையிலிருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கு மட்டுமே, விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது மூன்றாவது சர்வதேச விமான சேவையாக, கோவையிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை 'இண்டிகோ' நிறுவனம் துவக்கவுள்ளது.
    வரும் ஆகஸ்ட் 10லிருந்து, செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.
    இந்த விமானம், அபுதாபியில் நள்ளிரவு 1:40 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு காலை 6:25 மணிக்கு வந்தடையும். இங்கிருந்து காலை 7:40 மணிக்குப் புறப்பட்டு, அங்கு அபுதாபி நேரப்படி காலை 10:00 மணிக்குச் சென்றடையும்.
    அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகள், இந்த விமானத்தில் சென்று, அங்கிருந்து அந்நாட்டின் விமானம் மூலமாக, பல நாடுகளுக்குச் செல்ல முடியும். நீண்ட கால முயற்சிக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #coimbatoretoabuthabiflight
    #coimbatoretoabuthabi
    #flight
    #indigoflight
    #indigo
    #intermationalflight
    #nationalflight
    #coimbatore
    #abuthabi
    #kovai
    #cbe
    #dinamalarkovai

КОМЕНТАРІ • 3

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 Місяць тому

    சிறப்பு தகவல், நன்றி

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 Місяць тому

    கோவை திருச்சி அவிநாசி பால பணிகள் ஒரு வீடியோ பதிவு போடுங்கள்

  • @user-rd6ey9vn7q
    @user-rd6ey9vn7q Місяць тому

    Super