Full Moon Tamil Tarot Oracle Reading | தேய்பிறை - புலப்படுவதும் விடுபடுவதும் | Aug 4th 2020

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • This reading presents the Full Moon Tamil Tarot Oracle Reading for the full moon of Aug 3rd-4th 2020.
    ஆகஸ்ட் 4, 2020 முழு நிலவுக்கான (தேய்பிறை - புலப்படுவதும் விடுபடுவதும்) டாரட் ஆரக்கிள் வாசிப்பை நீங்கள் பார்க்கலாம்.
    Option 1 - 01:49
    Option 2 - 19:40
    Option 3 - 33:59
    ==================
    Tamil Tarot is a channel offering Tamil Tarot Card readings / Tamil Tarot Card Predictions. If you are interested to learn tarot card readings in Tamil, watch Weekly Tamil Oracle Tarot reading, Monthly Tamil Oracle Tarot reading, Tamil Tarot card love readings, New Moon Tamil Tarot Oracle Card Reading, Full Moon Tamil Tarot Oracle Card Reading, or generally interested in spirituality and spiritual ascension, then Tamil Tarot is the place to be. I post at least two videos every week.
    தமிழ் டாரோ சேனல் என்பது தமிழ் டாரோ கார்டு ஆரூடம் / தமிழ் டாரோ கார்டு கணிப்புகளை வழங்கும் ஒரு சேனலாகும்.
    என்னைப் பற்றி
    =============
    நான் சிறு வயதிலிருந்தே ஆன்மீக ரீதியில் ஆர்வமாக இருந்தபோதிலும், 2011 முதல் இந்த பயணத்தில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். இந்த பயணத்தில் டாரோ மற்றும் ஆரக்கிள் கார்டுகள் மிக முக்கியமான கருவிகளாக இருந்தன. நான் 2013 முதல் இவர்களைப் பற்றி அறிந்திருக்கிறேன், 2015 முதல் நானே டாரோ மற்றும் ஆரக்கிள் கார்டுகளைப் படித்து வருகிறேன்.
    இந்த நேரத்தில் நான் தனிப்பட்ட வாசிப்புகளை எடுக்கவில்லை என்றாலும், நான் தொடங்கியவுடன் எனது பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துவேன்.
    Disclaimer
    ===========
    இங்கு சொல்லப்படும் தகல்வல்களை ஒரு பொழுதுபோக்காகவும், கண்ணோட்டமாக மற்றும் எடுத்துக்கொள்ளவும். உங்கள் வாழ்க்கை சூழ்நிலை சந்தர்ப்பதை பொறுத்து, உங்கள் சுய முயற்சியும் சிந்தனையும் கொண்டு முடிவுகள் எடுக்கவும். தேவைப்பட்டால் தேர்ந்த, பயிற்சி பெற்ற வல்லுநர்களின் உதவியை அணுகவும்.
    I am not a licensed physician. Anything expressed in this video should be viewed for entertainment purposes only. These readings are general readings for everyone . Please use your discernment and personal judgement while confronted with difficult situations in life and approach a trained, licensed experts to help you should you need external help.

КОМЕНТАРІ • 17

  • @tamiltarotbyvidhya1913
    @tamiltarotbyvidhya1913  4 роки тому

    Option 1 - 01:49
    Option 2 - 19:40
    Option 3 - 33:59

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 4 роки тому

    Thanks medam your readings advanced astro guides good god gift gold tips sidther mahan rishigal blessings

  • @trivenisatish5819
    @trivenisatish5819 4 роки тому

    Thanks for your reading pile 2 is resonates me

  • @saranyavardhan985
    @saranyavardhan985 4 роки тому

    Pile 3 resonates for me thank u mam🙏

  • @gnanasikamani1763
    @gnanasikamani1763 4 роки тому

    Thanks madam. Pile no 2

  • @kalpanaj1437
    @kalpanaj1437 4 роки тому

    இது தமிழ் டாரோட்.. ஆனால் ஆங்கிலத்தில் தான் உங்களது பேச்சு வார்த்தை உள்ளது..

    • @tamiltarotbyvidhya1913
      @tamiltarotbyvidhya1913  4 роки тому +1

      வருகைக்கு நன்றி. 🙂
      மன்னிக்கவும். இல்லை. ஆங்கிலத்தில் "தான்" என்று தாங்கள் கூறுவதை நான் ஏற்கவில்லை. 90-95 சதவிகிதம் நான் தமிழில் தான் பேசுகிறேன். சில சமயங்களில் எண்ண ஓட்டத்தை தடைப் படுத்த விருப்பமில்லாமல் நான் ஆங்கிலத்தில் என் எண்ணங்களை வெளிப்படுத்துகிறேன். அதில் தவறில்லை என்பது எனது தாழ்ந்த கருத்து. அவ்வாறு பேசும் ஆங்கில வாக்கியங்களை நான் தமிழிலும் தவறாமல் விளக்குகிறேன்.
      டாரோ மற்றும் ஆரக்கிள் என்பது பெரும்பாலும் மேற்கத்திய படைப்புகள் மற்றும் கருத்துகள். அவற்றின் விளக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் உள்ளன. நானும் அவற்றை ஆங்கிலத்திலேயே படித்து புரிந்துள்ளேன். அவற்றை முடிந்தவரை தமிழில் விளக்க முயற்சி செய்து வருகிறேன்.
      தமிழில் கவியரசு வைரமுத்து எழுதிய ஒரு வரியை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
      "விழியில் விழுந்து இதயம் நுழைத்து உயிரில் கலந்த உறவே"
      இந்த வரியினை எவ்வளவு முயற்சித்தாலும் ஆங்கிலத்திலோ அல்லது வேறு எந்த மொழியிலோ இதே உயிரோட்டத்துடன், இதே அழகுடன், இதே அர்த்தத்துடன் இத்தனை குறைந்த வார்த்தைகளைக் கொண்டு விளக்க இயலவே இயலாது. (இதை போன்று தமிழ் இலக்கியத்தில், மற்ற மொழிகளிலும் எத்தனை எத்தனையோ). அதே போல்தான் நமது சில எண்ணங்களும். நான் ஆங்கிலத்தில் பேசும் ஒரு சில வாக்கியங்களை நான் அவ்வாறே தமிழிலோ வேறு எந்த மொழியிலோ விளக்கினால் அந்த வரியின் உயிரோட்டம் குறைக்கப்படும். அதனாலேயே நான் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசுகிறேன்.
      இருந்த போதிலும், நான் தொடர்ந்து தமிழிலேயே இன்னும் நிறைய விளக்க முயற்சி செய்வேன் என்பதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் எனது எனது சேனலைப் பார்வையிட்டு தங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி.

    • @tamiltarotbyvidhya1913
      @tamiltarotbyvidhya1913  4 роки тому +2

      @Keep Smiling தங்கள் ஊக்குவிப்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. இந்த ஆங்கிலக் கலப்பு காரணத்தினாலேயே இந்த சேனல் தொடங்குவதை நான் மிகவும் தயங்கித் தாமதப்படுத்தினேன், ஏறக்குறைய 10 மாதங்கள். கடைசியில் முயற்சி செய்வதில் தவறில்லை என்றெண்ணியே தொடங்கினேன். 🙂

    • @kalpanaj1437
      @kalpanaj1437 4 роки тому +1

      @@tamiltarotbyvidhya1913 மிகவும் கடினமான சவால் தான்... நான் சொன்ன விதம் உங்களை சங்கடம் ஏற்படுத்தியுள்ளது.. மன்னித்து விடுங்கள்...

    • @tamiltarotbyvidhya1913
      @tamiltarotbyvidhya1913  4 роки тому +1

      @@kalpanaj1437 தங்கள் வார்த்தைகள் தங்களது உயர்ந்த மனப்பக்குவத்தைக் காட்டுகின்றன. மிக்க நன்றி :)

  • @happyshop777
    @happyshop777 4 роки тому

    Is it possible to do love readings for each zodiac sign? Especially for cancer.

    • @tamiltarotbyvidhya1913
      @tamiltarotbyvidhya1913  4 роки тому

      Yes. I have planned for zodiac readings from the coming month. Just organising myself before beginning to post more videos on the channel. Thank you for asking. 🙂