மங்கள சனீஸ்வரர் திருக்கோயில்|| திருக்கொடியலூர்|| Mangala Saneeswarar Temple|| Thirukodiyalur|| சனி||

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • அனைவருக்கும் வணக்கம். ஒருவருக்கு ஏழரை, அஷ்டம சனி நடக்கும் காலங்கள் மற்றும் ஜாதகத்தில் சனி தோஷம் உடையவர்கள் பல துயரங்களை சந்திக்கின்றனர். அவர்கள் ஏதேனும் ஒரு சனி பரிகார தலத்திற்கு சென்று சனி பகவானை வேண்டி பரிகார பூஜைகள் செய்தால், அவர்களின் துன்பங்கள் விலகி, வாழ்க்கையில் நல்ல பலன்களை அடையலாம் என்பது ஜோதிடர்களின் கருத்து. அதே போல ஜாதகத்தில் ஆயுள் கண்டம், எமபயம் கொண்டவர்கள் எமதர்ம ராஜனுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
    இத்தகைய சனி தோஷம் மற்றும் எமபயம் உள்ளவர்கள் ஒருசேர வழிபட, தமிழ்நாட்டில் ஒரு பரிகார கோயில் உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா? மேலும் இந்த இடத்தில் தான் சனியும் எமனும் பிறந்தார்கள் என்பது தெரியுமா? இன்றைய பதிவில் நாம் தரிசிக்க இருப்பது இத்தகைய சிறப்புகளை கொண்ட திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள திருக்கொடியலூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்.
    இவை அனைத்தும், திருமீயச்சூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்ததாக கூறுகிறார்கள். இங்கு சூரியன் மற்றும் அவரது இரு பத்தினிகள் ஒன்று கூடிய காரணத்தினால், இந்த கிராமம் திருக்கூடியலூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த பெயர் மருவி தற்போது திருகொடியலூர் என்றானது. அகத்திய மகரிஷி, இங்கு சிவபெருமானை வழிபட்ட காரணத்தினால், இறைவன் ‘அகத்தீஸ்வரர்’ என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இங்கு குடி கொண்டிருக்கும் சனி பகவானை “மங்கள சனீஸ்வரர்” என்று அழைக்கிறார்கள்.
    பிரார்த்தனைச் சிறப்பு: இங்கு சனிக்கிழமைகளில் மங்கள சனீஸ்வரரை வழிபட்டால், சனி தோஷம், ஏழரை சனி போன்ற அனைத்து தோஷங்களும் நீங்கி சனீஸ்வரரின் அருளால் வாழ்வு வளம்பெறும் என்பது ஐதீகம். ஞாயிற்று கிழமைகளில், எமனை வழிபட எமபயம் நீங்கி, நீண்ட ஆயுள் கிடைக்கும். இத்தலத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஞாயிற்று கிழமை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை வழிபடுவது சிறப்பு. இங்கிருக்கும் விஜயலக்ஷ்மி சன்னதியில் வேண்டி வழிப்பட்டால் வெளி நாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை வரும் சனி பெயர்ச்சியன்று இங்கு சனீஸ்வரருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
    ஆலய நடை திறப்பு நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை.
    தொலைபேசி: 94882 66372
    திருவாரூர் - மயிலாடுதுறை சாலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் பேரளம் உள்ளது. பேரளத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும், திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், இந்த கோயில் அமைந்துள்ளது.

КОМЕНТАРІ • 22

  • @AalayaOm
    @AalayaOm  Рік тому +1

    சனி கோயில்களின் வீடியோ லிங்க் கீழே கொடுத்துள்ளோம்.
    மங்கள சனீஸ்வரர் கோயில், திருகொடியலூர்
    ua-cam.com/video/MdyPCqYey9Q/v-deo.html
    பொங்கு சனீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு
    ua-cam.com/video/eDo-dMLpnDQ/v-deo.html
    யந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம்
    ua-cam.com/video/cjEASJ9JZig/v-deo.html
    சனீஸ்வரர் கோயில், திருநள்ளாறு
    ua-cam.com/video/VeOp9o76f8w/v-deo.html
    சனி பகவானுக்கு உரிய எளிய பரிகாரங்கள்
    ua-cam.com/video/Bw8MyeWRi1c/v-deo.html
    தமிழ்நாட்டின் 8 சனி கோயில்கள்
    ua-cam.com/video/eyDkDZMGReg/v-deo.html

    • @athibalu887
      @athibalu887 Рік тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayaOm
      @AalayaOm  Рік тому

      @@athibalu887 மிக்க நன்றி! இப்போது சனி பெயர்ச்சி பலன்கள் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு வருகிறோம். பார்த்து பயன் பெறுங்கள்.

    • @rajendirangeetha9801
      @rajendirangeetha9801 Рік тому +1

      ❤😊

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 4 місяці тому +2

    ஸ்ரீ மங்கள சனீஸ்வரர் போற்றி🙏

    • @AalayaOm
      @AalayaOm  4 місяці тому

      Om Sanaicharaya Pottri!

  • @saiprem6497
    @saiprem6497 Рік тому +1

    Valzgu valamudan

  • @rajendirangeetha9801
    @rajendirangeetha9801 Рік тому +1

    Nandre kodi Argesha nallur awargal z tamil avruke perumi nandrri

    • @AalayaOm
      @AalayaOm  Рік тому +1

      Nandri. We have covered good no of Sani and Navagraga temples in our channel.

    • @rajendirangeetha9801
      @rajendirangeetha9801 Рік тому +1

      @@AalayaOm thank you

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 10 місяців тому +1

    Om namasivaya

  • @v.sathishkumar1979
    @v.sathishkumar1979 Рік тому +1

    Super

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj Рік тому +1

    Please tell us exactly location of this temple.madam

    • @AalayaOm
      @AalayaOm  Рік тому +1

      திருவாரூர் - மயிலாடுதுறை சாலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் பேரளம் உள்ளது. பேரளத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும், திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், இந்த கோயில் அமைந்துள்ளது. From Tirumeeyachur Lalithambika temple towards west direction, exactly half a kilometer distance on the same road. You can ask people in this temple also and they will guide you. We have given the temple priest contact no in the video. While he has left this temple, still will help you. Good person.

    • @SURESHKUMAR-ml9fj
      @SURESHKUMAR-ml9fj Рік тому +1

      Thanks for the response sister'.

  • @kannank3847
    @kannank3847 Рік тому

    Er

  • @kannank3847
    @kannank3847 Рік тому +1

    Supper