குறை தீர்க்கும் குன்றக்குடிப் பதிகம் - Kurai Theerkum Kundrakudi Padhigam (Lyrics in Comments)

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 19

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 Рік тому +1

    எல்லாப் புகழும் முருகனுக்கே....❤❤❤

  • @kannatha548
    @kannatha548 2 роки тому +1

    ஓம் சரவணபவ முருகா சமயபுரத்தம்மா

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 Рік тому +1

    மிக மிக அருமை❤❤❤❤❤❤

  • @isankar7748
    @isankar7748 Рік тому

    ❤Super, kummi padal podunka ❤

  • @chellamkrishna5482
    @chellamkrishna5482 2 роки тому +4

    Lyrics post pannunga madam romba super ha iruku. Nangalum ungoloda sernthu padalam pola thank u so much

  • @mayuragiri
    @mayuragiri 2 роки тому +1

    Thank team... Nirai isai kudam...🙏🙏🙏🥰🥰🥰🥰
    Really happy to hear it...❣️🥰

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  2 роки тому +1

    விண்டலத்தினின் மேவு முப்பத்து முக்கோடி
    விண்ணவரும் முனிவோர்களும்
    வெள்ளை வாரண மீதில் ஏறுபுலி சாயுதனும்
    விஞ்சையரும் அள கேசனும்
    மண்டலத்தவரும் நீள்பாதலத்தவரும் முடி
    மன்னரும் விளங்க நன்னாள் மறையுமறை யோனுமம் புலியும் ஆதித்தனொடு
    மதனனும் பேய் முலைப்பால்
    உண்டவச் சுதனுமலர் தூவித்தினம் பணியும்
    உபய சரணார விந்தா
    உன்னையே நம்பினேன் என்றனுக்குச் சிறுவர்
    உதவியே அருள் புரிகுவாய்
    கொண்டல் ஒத்திடு கருங்குழல் நூல் இடையும் உள
    குறவள்ளி மண வாளனே
    கொன்றை சூடியகோல மன்றுளாடுவர் பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​​​ (6)



    முடியாறு டைக்குமர குருபரா சதுர்வேத
    முதல்வனே கருணா நிதி
    மும்மதம் பொழிவேழ முகவன் தனக்கிளைய
    முருகேசனே பரவை சூள்
    படியார் வணங்குபொற் பாதார விந்தனே
    படஅரவின் மேல் படுக்கும்
    பச்சைமால் மருகனே நெக்கு நெக்குருகியே
    பக்தியுடனே துதி செயும்
    அடியார் உளத்தினில் குடிகொண்டிருக்கும் என
    அப்பனே ஒப்பிலாத
    ஐயனே துய்யனே அறிவுடைய சிறுவர் தந்து
    அருள் புரிகுவாய் சேவலம்
    கொடியா கடப்பமலர் மாலையணி மார்பனே
    குறவள்ளி மண வாளனே
    கொன்றை சூடியகோல மன்றுளாடுவர் பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​​​​​​(7)

    சுந்தர நிறைந்திலகு கந்தவேளே பால
    சுப்ரமண்யக் கடவுளே
    துரியவடிவே அரிய பெரிய பொருளே
    பரஞ்சோதியே கோதிலாத
    மந்திரகிரிக்கு நிகர் பன்னிரு புயத்தனே
    மாயூரகிரி வாசனே
    மாசிலாமணியே மிகு கருணை வெள்ளமே
    வளர் சேவலங் கொடியனே
    அந்தரத் துறையா யிறங்குமால் மருகனே
    அகிலமுழுதும் துதிக்கும்
    ஆதியே சோதியே அறிவுடைய சிறுவர் தந்து
    அருள் புரிகுவாய் மஞ்செனும்
    கொந்தளக மும்பவள வாயும்வேல் விழியுமுள
    குறவள்ளி மண வாளனே
    கொன்றை சூடியகோல மன்றுளாடுவர் பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​​​​​​(8)

    வம்பனாகிய சூரபத்மனொடு சிங்கமுகன்
    வலியபுய பானு கோபன்
    வஞ்சக்ரவுஞ்சன் முதலாவசுரர் தமையெலாம்
    வடிவேலினால் மடித்து
    உம்பரானவர்கள் சிறை மீட்டும் இந்திரனுக்கு
    உயர்ந்தமணி முடி தரித்து
    ஓதரிய வானாடு குடியேற்றி வைத்தஜய
    உல்லாச மிகு வாசனே
    செம்பவள வாயனே அன்பர்கள் சகாயனே
    தேடுதற்கு அரிய பொருளே
    தேவாதி தேவனே என்றனுக்கு அறிவுடைய
    சிறுவர் தந்து அருள் புரிகுவாய்
    கும்ப முனிவர்க்கு அருள் புரிந்த குமரேசனே
    குறவள்ளி மண வாளனே
    கொன்றை சூடிய கோல மன்றுளாடுவர் பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​​​​​​(9)


    திருவே உயர்ந்நவ ரசமிகுந் தேனே
    தெவிட்டாத தெள் அமுதமே
    தித்திக்கும் மதுர முக்கனியே கரும்பே
    சிறந்த முத்தே ரத்னமே
    அருவே விளங்கிவள அரிய உருவே நல்ல
    அகண்ட வடிவே அப்பனே
    ஆதிநடு முடிவாகி எங்கும்நிறை சோதியே
    அன்பர் வேண்டியது அளிக்கும்
    தருவே சிகண்டிமலை தனில் வீற்றிருக்கின்ற
    சாமியே முத்தி வித்தே
    சண்முகா சரவணபவா கடம்பாசிறுவர்
    தந்து அருளுவாய் சிவாய
    குருவே மயூரவா கனஅகில நாயகா
    குறவள்ளி மண வாளனே
    கொன்றை சூடியகோல மன்றுளாடுவர் பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​​​​​​ (10)

  • @viswal7802
    @viswal7802 2 роки тому

    Vetri Vel Muruganuku Aroharaaa....

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  2 роки тому

    குன்றக்குடிப் பதிகம்
    பூரணி பராசக்தி தேவியம்மை தரும்
    புதல்வனே பொதிகைமலை வாழ்
    புகலரிய குருமுனிக்கு முத்தமிழ் உரைத்திடும்
    புலவனே புலவர் கோனே
    காரணி கரைகண்ட ருக்கு உபதேசமது
    கருது மெய்ஞான குருவே
    கண்கள் ஈராறுடைய கர்த்தனே சுத்தனே
    கரியவண் டார் கடப்பம்
    தாரணியு மார்பனே தமிழ்கொண்டு நக்கீரர்
    தன்துயர் தவிர்த்து அருள் செய்
    சக்திவடி வேல்கரத்து அணியுமுரு கையனே
    தணையர்தந்து அருள் புரிகுவாய்
    கோரமிகு சூரச ம் காரசிங் காரனே
    குறவள்ளி மண வாளனே
    கொன்றை சூடியகோல மன்றுளா டுவர்பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​(1)

    கந்தா சிலம்பா கரங்கள் ஈராறுடைய
    காங்கேயா கார்த்தி கேயா
    கருணைதரு முருகா குகா சண்முகா விசாகா
    வேலணிந்த குழகா
    மந்தாகினிக்கு இனிய மைந்தா மயூரகிரி
    வாசா உயர்ந்த தோகை
    மயிலேறு சேவகா அயில்போலு இருநயன
    மாது தெய்வானை கணவா
    செந்தாமரைத் தெரிவை கேள்வனயன் உன்துதிசெய்
    திவ்ய சரணார விந்தா
    சீலா மெய் அன்பர் அனுகூலா எனக்கு நற்
    சிறுவர் தந்து அருள் புரிகுவாய்
    கொந்தார் கடப்பமலர் மாலை அணி மார்பனே
    குறவள்ளி மண வாளனே
    கொன்றை சூடியகோல மன்றுளாடுவர் பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​​​​​(2)

    அமராவதித் தலைவன் ஆன முருகையனே
    ஆதி பன்னிரு கையனே
    ஆறுமுகனே உமாதேவி மகனே
    அரவணைச் செல்வனார் மருகனே
    சமராடிய சூரர் பத்மமுதல் அசுரரைச்
    சம்காரமே செய்த வா
    தாரணி வணங்கு பரிபூரணா காரணா
    சரவண பவா கடம்பா
    எமராஜனுக்கும் அஞ்சாமல் எதிர் வார்த்தைகள்
    இயம்ப வாய் அது தந்திடும்
    எந்தையே சந்ததிகள் தந்து உனது தாளினை
    ஏவல் கொண்டு அருள் புரிகுவாய்
    குமரா குறிஞ்சிக்கும் இறைவனே குறவனே
    குறவள்ளி மண வாளனே
    கொன்றை சூடியகோல மன்றுளாடுவர் பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​​​​​​ (3)


    பாகனைய கிளிமொழித் தெய்வ குஞ்சரி மாது
    பாகனே வாகனே பொன்
    பங்கயத் தயனை முன் சிறைவைத்த
    குமரகுருபரனே பரஞ்சோதியே
    நாகரிகமான நவவீரர்க்கு முன்னவா
    நாகமுகவன் பின்னவா
    நலமான அருணகிரியானை ஆட்கொண்ட
    குருநாதனே வேதமுதலே
    மாகனக வரை முதற் குன்றுதோர் ஆடல்புரி
    மயில் வாகனக் கடவுளே
    வரதனே குகனே சண்முகனே எனக்குநல்
    மைந்தர்தந்து அருள் புரிகுவாய்
    கோகனக மாது மணவாளன் மகிழ் மருகனே
    குறவள்ளி மண வாளனே
    கொன்றை சூடியகோல மன்றுளாடுவர் பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​​​​​​(4)

    தஞ்சமென அன்பினுடன் வந்தடையும் மெய் அன்பர்
    தமையா தரித்தருள் செய்
    சண்முகா சதகோடி சூர்யப்ர காசனே
    சந்த்ர வதனச் சுந்தரா
    கஞ்சமலர் வாழுமுகம் ஒருநாலும் இருநாலும்
    கண்ணுமுள வேத னுக்குங்
    காமமிகு காமன் தனக்கும் உயர் மைத்துனா
    கலச முனிவன் கும்பிடும்
    செஞ்சரண பங்கேரு கர்த்தனே சுத்தனே
    செல்வச் சிகண்டி மலைவாழ்
    தேவாதி தேவனே என்றனுக்கு அறிவுடைய
    சிறுவர்தந் தருள் புரிகுவாய்
    குஞ்சர முகற்கிணைய பச்சைமயில் வாகனா
    குறவள்ளி மண வாளனே
    கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
    குன்றை மாநகர் வேலனே ​​​​​​​​​(5)

  • @meenakshichockalingam604
    @meenakshichockalingam604 2 роки тому

    அருமையான குரல் வாழ்க வளமுடன் 🙏

  • @sivagaminaggapan2464
    @sivagaminaggapan2464 2 роки тому

    🙏🙏🙏🙏🙏 super 👌

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 2 роки тому

    சொல்லவும் கேட்கவும் முருகன் அருள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshichockalingam604
    @meenakshichockalingam604 2 роки тому

    👌🙏👏

  • @mayuragiri
    @mayuragiri 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @hemalatha-fq4lu
    @hemalatha-fq4lu 2 роки тому

    By visiting this kundrakudi temple. Marriage n home we can get it

  • @kannatha548
    @kannatha548 2 роки тому

    என்ன ராகம் நீங்க பாடுவது

  • @ramukl7053
    @ramukl7053 2 роки тому

    P