திருப்புகழ் Thiruppugazh திமிர உததி (பழநி) thimiraudhadhi (pazhani)

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • ......... சொல் விளக்கம் .........
    திமிர வுததி யனைய ... இருண்ட கடல் போன்றதும்,
    நரகசெனன மதனில் ... நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு
    என்பதில்
    விடுவாயேல் ... நீ என்னை விழும்படியாகச் செய்தால்,
    செவிடு குருடு வடிவு குறைவு ... செவிடு, குருடு, அங்கஹீனம்,
    சிறிது மிடியும் அணுகாதே ... சிறிதேனும் வறுமை என்பவை ஏதும்
    இல்லாது,
    அமரர் வடிவும் அ திக குலமும் ... தேவ லக்ஷணமும், உயர்
    குடிப்பிறப்பும்,
    அறிவு நிறையும் வரவே ... அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு
    வருமாறு
    நின் அருள தருளி ... உனது திருவருளைத் தந்தருளி,
    எனையு மனதோடு ... என்னையும் நீ மனம்வைத்து
    அடிமை கொளவும் வரவேணும் ... உன் அடிமையாக ஆட்கொள்ள
    வரவேண்டும்.
    சமர முகவெல் அசுரா தமது ... போர்க்களத்தில் வெல்லப்பட்ட
    அசுரர்களின்
    தலைக ளுருள ... தலைகள் உருளும்படியாக,
    மிகவேநீள் சலதி யலற ... மிகப் பெரிய கடல் அலறும்படியாக,
    நெடிய பதலை தகர ... நீண்டுயர்ந்த கிரெளஞ்சமலை பொடியாக,
    அயிலை விடுவோனே ... வேலினைச் செலுத்தியவனே,
    வெமர வணையி லினிது துயிலும் ... பாம்புப் படுக்கையில் இனிதே
    துயிலும்
    விழிகள் நளினன் மருகோனே ... தாமரைக்கண்ணன் திருமால்
    மருகனே,
    மிடறு கரியர் குமர ... கண்டம் கறுத்த (நீலகண்ட) சிவனின்
    குமரனே,
    பழநி விரவு மமரர் பெருமாளே. ... பழனியில் வந்து தொழும்
    தேவர்களின் பெருமாளே.
    ......... Meaning .........
    thimira udhathi yanaiya: Like the dark sea
    naraka jenana mathanil: and the hell is the concept of "birth".
    viduvAyEl: If You push me into this "birth",
    sevidu kurudu vadivu kuRaivu: (please ensure that) I am not deaf, blind or afflicted in any limb,
    siRidhu midiyum aNugAdhE: or affected by poverty even slightly.
    amarar vadivu madhiga kulamum: Divine figure, higher class by birth,
    aRivu niRaiyum varavE: intelligence and righteous character should all be with me
    nin aruLa dharuLi: by Your grace; and
    enaiyu manadhodu adimai koLavum varavENum: You must come and accept me wholeheartedly as Your slave.
    samara mugavel asurar thamadhu: In the battlefield, the demons (asuras) were conquered by You
    thalaigaL uruLa: and their heads rolled;
    migavEneeL saladhi alaRa: the huge ocean roared;
    nediya padhalai thagara: the long and tall mount Krouncha was smashed into powder;
    ayilai viduvOnE: when You wielded Your vEl (spear).
    vemara vaNaiyil inidhu thuyilum: Sleeping peacefully on a serpent-bed
    vizhigaL naLinan marugOnE: is the lotus-eyed Vishnu; You are His nephew!
    midaRu kariyar kumara: You are the son of SivA with a black-stained throat!
    pazhani viravum amarar perumALE.: You reside in Pazhani where DEvAs converge to worship You, Oh Great One!

КОМЕНТАРІ •