அமெரிக்க தெருவில் சந்தித்த வேதனைகள் | Prameela | Interview | Part - 3 | @News mix tv |

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • #Prameela #Intetview #ThirdPart #ArangetramPrameela #Thangapathakkam
    #Pramila #DirectInterview #America #PoliceAcadamy #PokiceOfficer #Heroine
    #AntiHeroine #Villi #CharacterArtist #VaazhayadiVaazhai #MGR #Jaishankar #Sivajiganesan #Ravichandran #Rajinikanth #Kamalhasan #Sivakumar #Part3
    #அரங்கேற்றம்பிரமீளா #பிரமீளா #நியூஸ்மிக்ஸ்டிவி #நேரடிபேட்டி #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
    Arangetram Prameela Direct Interview Third Part Video Watch this Page! thanks!
    Please Subscribe like Comment and Share Yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 787

  • @premela_schlacta
    @premela_schlacta 18 днів тому +97

    என்னோட ரசிக உறவுகள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்!
    நான் உங்க பிரமீளா!
    என்னோட பேட்டி ஒளிபரப்பான நியூஸ் மிக்ஸ் டிவியில, நீங்க எல்லாரும் பதிவிட்ட கமென்டஸ் எல்லாத்தையும் பார்த்தேன்!
    ஆண்டவனே, நான் என்ன பண்றது - உங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல!
    ஏன்னா, கமென்ட்ஸ் எல்லாத்தையும் அவ்வளவு அழகழாக போட்டிருக்கீங்க!
    என் மேல எப்படி - எதனால இவ்வளவு அன்பு வச்சுருக்கீங்க! அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?
    இத்தன வருஷம் கழிச்சு என் மேல இவ்வளவு அன்பு வச்சுருக்கிற அன்பு உள்ளங்களாகிய உங்க எல்லாரையும் நெனச்சு, என் மனம் மகிழ்ச்சி கடல்ல மூழ்கி போயிடுச்சு!
    எமோஷனாலா பேச தெரிஞ்ச எனக்கு, உங்க அளவுக்கு அழகழாக எழுத தெரியலைங்க!
    நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு சிலருக்கு பதில் போட்டுருக்கேன்!
    ஆனால், இவ்வளவு பேருக்கும் அதுபோல பதில் போடுறதுன்னா அது எப்படின்னு எனக்கு தெரியல!
    உங்க எல்லோரையும் நேரில் பார்க்கனும், கை கொடுக்கனும், ஒரு தாயாக - சகோதரியாக - மகளாக ஆரத்தழுவி நன்றி சொல்லனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு!
    இத எழுதும்போதே என் கண்கள் தண்ணீர் குளமாகிவிட்டது!
    கண்ணீருடன் நன்றியையும் சேர்த்தேதான் நான் எழுதுறேன்!
    என் நடிப்ப மட்டும் பார்த்த நீங்க, உங்க வீட்டு பெண்ணா நெனச்சு அன்போட வரவேற்பையும் கொடுத்து கமென்ட்ஸ் பண்ணியிருக்கீங்க!
    அத பார்த்து மெழுகுவர்த்தியவிட வேகமா நான் உருகி போனதோடு மட்டுமில்லாம, அழுகைதான் என் பதிலாவும் வந்துச்சு!
    ஆரம்பத்துல நானும் ஒரு நடிகையா சினிமாவுல வந்துருக்கலாம்!
    ஆனால், இப்ப நான் மிக சராசரியான சாதாரண பெண்தான்!
    கணவர் - குடும்பம் - உறவுகள்னு வாழ்ந்துகிட்ட வந்தவதான்!
    ஆனால், உங்க எல்லாருடைய அன்பு கமென்ட்ஸ் ஆனது, இத எல்லாம் அப்படியே திருப்பி போட்டுடுச்சு! எனக்குன்னு ஒரு மிகப் பெரிய ரசிக உறவுகள் உலகம் பூராவும் இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சோர்ந்து போயிருந்த என் மனதுக்கு ஒரு பெரிய உற்சாகமே கிடைச்சுருக்கு!
    தமிழகம் வந்தப்ப சிலர் மீண்டும் நடிக்கிறீங்களான்னு என்கிட்டே கேட்டாங்க! 45 வருஷமா குடும்பம் - அரசு வேலைன்னு என் காலத்த கழிச்சுட்டேன்! அதனால இப்ப நடிக்க முடியுமான்னு எனக்கு தெரியல?
    மத்தவங்க கேட்கும்போதுதான், நான் ஒரு நடிகையா இருந்துருக்கேன் என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டு போகுது!
    மிகப் பெரிய இயக்குநர்கள் பலரும் சொல்லி கொடுத்ததை கிளிப்பிள்ளை மாதிரி நடிச்சுட்டுபோன எனக்கு, இப்ப அதுபோல நடிக்க முடியுமாங்றது சந்தேகம்தான்!
    இப்ப நடிக்கிற பலரும் நேச்சுரலா நடிக்கிறாங்க - அவங்க அளவுக்கு நான் நடிக்க முடியுமாங்றது எனக்கு சுத்தமா தெரியலைங்க!
    கவனம் எங்கேயோ போயிடுச்சு போல!
    சரிங்க, உங்க பாசமிகு அரவணைப்புக்குள் மீண்டும் வர்றேன்!
    தமிழகத்தவிட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி அமெரிக்காவுல, என் குடும்பம் - உறவுகள்னு நான் வாழ்ந்துகிட்டு வர்ற நிலையில, எனக்குன்னு அன்பு செலுத்துற - பாசத்த அள்ளி வீசுற ஒரு மாபெரும் ரசிக உறவு உள்ளங்கள் இருக்குறாங்கன்னு தெரிஞ்ச உடனேயே, என் சந்தேஷத்துக்கு அளவே இல்லைங்க! இமயத்தோட உச்சிய தொட்டது போல ஒரு பிரமிப்புதான் எனக்கு!
    உங்க அனைவரோட பாசம் - அன்பு - வாழ்த்து மழையில நனஞ்சுபோன எனக்கு, ஒரு பெரிய தெம்பும் - தைரியமும் உருவாகி இருக்கு!
    உங்க அன்புக்கு ஈடாக நான் என்ன சொல்றது - என்ன பண்றதுன்னே தெரியலைங்க! இருந்தாலும் உங்க எல்லார்கிட்டேயும், என்னோட இரு கரம் கூப்பி என் நன்றிய இதன் மூலம் தெரிவிச்சுக்கிறேன்!
    நீங்களும் என்னோட நன்றிய கனிவோட ஏற்று கொள்வீங்கன்னு முழுமையா நம்புறேன்!
    மீண்டும் ஒரு வாய்ப்ப இறைவன் எனக்கு கொடுத்தால் உங்க எல்லாரையும் நேரில் சந்திக்கிறேன்னு கூறி இப்போதைக்கு விடை பெறுகிறேன்!
    இப்படிக்கு ,
    என்றென்றும் உங்கள் அனைவருடைய பாச நினைவுகளில்!
    உங்கள் பிரமீளா!
    நன்றி!...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  18 днів тому +4

      தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....

    • @hemavathivenkatesan1212
      @hemavathivenkatesan1212 18 днів тому +3

      இறைவன் உங்களுக்கு நல்ல மனசு குடுத்து இ௫க்கா௫மா. அவ்வளவு நன்றாக நடித்து பெயர் பெற்றும் இப்ப இ௫க்கறவங்க நல்லா நடிக்கறாங்கன்னு சொல்றீங்க

    • @premalathasuresh7623
      @premalathasuresh7623 18 днів тому +3

      I love you so much. No more words to say. ❤❤❤❤❤❤❤

    • @user-tt8gs2pi5r
      @user-tt8gs2pi5r 17 днів тому +2

      I'm sure you can act again 👍 💯% mam ❤️ very sweet of you with lots of love from sujitha

    • @puppyraj3606
      @puppyraj3606 15 днів тому +2

      Super pramila.....very very genuine reply .....respectable woman you are....god bless you with good health and prosperity.....luv u a lot... I like you very much....

  • @nagasubramaniamarumugam6437
    @nagasubramaniamarumugam6437 24 дні тому +182

    என்னவென்று சொல்லத் தெரியவில்லை,இது பொய்யே இல்லாத அப்படியொரு உண்மையான அழகான நேர்காணல் மேடம்.நன்றி மேடம்

    • @vijayaselladurai3799
      @vijayaselladurai3799 11 днів тому +1

      எந்தவித அலட்டலும் பந்தாவும் இல்லாத யதார்த்தமான பேட்டி... தங்களின் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ❤

  • @user-nb9ux6pt4y
    @user-nb9ux6pt4y 24 дні тому +235

    யூடியூப் சேனலில் சமீபத்திய காலத்தில் நான் பார்த்த மிகச் சிறந்த கானொலி.நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 24 дні тому +4

      Yes

    • @asplatha3738
      @asplatha3738 24 дні тому +1

      Yes.

    • @krithikarajgopal1302
      @krithikarajgopal1302 24 дні тому +4

      Agree. Definitely one of the best. The interviewer was great with sensible questions and patiently listening.

    • @kousalyas9988
      @kousalyas9988 24 дні тому +1

      Yes😊

  • @sakthivelb741
    @sakthivelb741 24 дні тому +142

    உண்மையைப் பேசுகிறார்.ஒளிவு மறைவு இல்லை.வாழ்க

  • @manohara8974
    @manohara8974 24 дні тому +116

    பிரமிளா அவர்கள் நம்மை பிரமிக்க வைக்கிறார். எளிமையும் பண்பும் கவர்ந்தது. அவரை நடிகையாக வைத்திருந்த மதிப்பீட்டை விட பல மடங்கு அதிகமாக உயர்ந்திருக்கிறார். எல்லோரையுமே உயர்வாக பேசும் நல்ல பண்புடையவராக இருக்கிறார். வாழ்க.

  • @Subramaniammaheswary
    @Subramaniammaheswary 24 дні тому +92

    நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியதுடனும் வாழ இறைவன் அருள் புரியட்டும் 🙏

  • @monkupinku4141
    @monkupinku4141 24 дні тому +99

    இவர் இவ்வளவு நல்ல மனுஷியா !!!!

  • @kumarukv2750
    @kumarukv2750 24 дні тому +113

    அருமையான நேர்காணல்,பிரமிளாவின் இந்த சந்தோஷம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்❤

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @nm5734
    @nm5734 24 дні тому +231

    இவ்வளவு மரியாதையாக இந்த legendடை நேர்காணல் செய்ததற்கு ஓரு பெரிய நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +3

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @nm5734
      @nm5734 24 дні тому +8

      @@Newsmixtv தங்கள் சேவை தொடரட்டும், உங்கள் நேர்காணல் மற்ற நிருபர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக ஒரு பாடமாக இருக்கட்டும்.

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +7

      @nm5734 தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @Karpagamramasamy
      @Karpagamramasamy 24 дні тому +3

      உங்களுடைய பேச்சு தன்னம்பிக்கை இல்லாதவர்களை கூட எதிர் நீச்சல் போட வைக்கும் மிகவும் நன்றி

    • @comewelcome
      @comewelcome 24 дні тому +2

      Super Sir

  • @Nithila142
    @Nithila142 24 дні тому +77

    இவ்வளவு மனம் திறந்து பேசிய பெரிய மனிதர்களை நான் கண்டதில்லை. இறைவன் என்றும் இவரை மகிழ்வுடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.🎉

    • @trranjini4157
      @trranjini4157 15 днів тому +3

      👌👍🙏💐💯❤️❤️❤️

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 24 дні тому +51

    பிரமிளா அம்மையாரே, கள்ளங்கபடமற்ற, பட பட எனப்பேசும் பேச்சு அனைத்தும் மனம் திறந்து பேசும் உண்மைப் பேச்சு. நீங்கள் நீண்ட நெடிய ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழவேண்டும் என கடவுளை வேண்டுகிறேன்.

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 24 дні тому +27

    பிரமீளா அம்மா வை மனதார பாராட்ட வேண்டும். அமெரிக்காவில் தான் பட்ட கஷ்டங்களை வெளிப்படையாக சொல்லி, அதேசமயத்தில் எப்படி யாவது முன்னேற வேண்டும் என்று படித்து வேலைக்கு சென்ற உங்களுக்கு பாராட்டுகள் மா.. ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @annalakshmiannal5280
    @annalakshmiannal5280 24 дні тому +52

    உங்கள் இரண்டு பேட்டிகளை பார்த்த பிறகு நீங்கள் நடித்த அரங்கேற்றம் படம் பார்த்தேன்.உங்கள் நடிப்பை பார்த்து கண் கலங்கிடுச்சு மணம் கணக்கிறது ❤

    • @MarySantha-he9vq
      @MarySantha-he9vq 24 дні тому

      Tq anna and Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Srimathi__
    @Srimathi__ 24 дні тому +48

    அடுத்தடுத்த வீடியோ எப்போ வரும் nu காத்திருந்து பர்த்தவங்கள் ல நானும் ஒருத்தி. உங்க படங்கள பார்த்தபோது நீங்க நடிசீங்கனு நினதேன், ஆனா நீங்க ஒவ்வொரு கேரக்டர்களில் ம் வாழ்ந்து இருகீங்கனு உங்க பேட்டிய பார்த்த பின்னாடி தான் புரிஞ்சுது.இயல்பிலேயே நீங்க அழகான, அற்புதமான, துறு துறு பெண்மணியாக இருக்கீங்க. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 😊

  • @kannan575
    @kannan575 24 дні тому +34

    இதுவரை நான் பார்த்த நேர்காணளில் one of the best very practical & natural interview... God bless you madam

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 23 дні тому +16

    சந்தோஷமாக இருக்கிறேன் என்று பிரமீளா அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கே சந்தோஷமாக உள்ளது. வாழ்க வளமுடன்!

  • @pravi8700
    @pravi8700 24 дні тому +77

    இப்பதான் அரங்கேற்றம் படம் பார்தேன் உங்கள் பேட்டி பார்த்த பிறகு.... என்ன ஒரு அற்புதமான நடிப்பு...👌👌👌

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 24 дні тому +33

    பிரமீளா நல்ல நடிகை.
    தப்புத்தாளங்களில் விலை மாதுவாக அறிமுகபடுத்திய சரிதாவுக்கு பின்னாளில் பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் வாய்ப்பளித்தார். அது போலதான்
    சுஜாதாவிற்க்கும்
    இவர்கள் இருவரை போல பிரமீளாவிற்கு அரங்கேற்றத்திற்கு பிறகு வேறு நல்லவிதமான கதாபாத்திரததில் வாய்ப்பு வழங்கி இருந்தால் அவரது அரங்கேற்றம் இமேஜ் தகர்க்கபட்டிருக்கும்.
    அரங்கேற்றத்திற்க்கு பிறகு தாய்பாசம், மல்லிகைப்பூ, சொந்தம், தங்கபதக்கம், கோமாதா என் குலமாதா, வீட்டு மாப்பிள்ளை என பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து இருந்தாலும் பிரமிளாவை அரங்கேற்ற பட நாயகி இமேஜ்யுடன் அணுகி நடிக்க வைத்தார்கள். அந்த வகையில் வெளியானதுதான் நடிகர் திலகத்துடன் நடித்த கவரிமான்.
    இயக்குனர்கள் அவரை சரியான கதாபாத்திரத்தில் பயன்படுத்தி இருந்தால் இன்னும் பல ஆண்டு காலம் தமிழ் திரையுலகில் பவனி வந்து இருப்பார்.
    திரையுலகில் M.G.R, S.S.R தவிர சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், நாகேஷ, சிவக்குமார், ரஜனிகாந்த், கமலஹாசன் என அனைவருடனும் நடித்து உள்ளார். பின்னாளில், பிரபு, சத்யராஜ், கார்த்திக், விசு இவர்களுடன் நடித்து உள்ளார்.
    கள்ளங்கபடமில்லாமல் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை வெளிபடுத்தி உள்ளார்.
    பழையவற்றை மறக்காமல் தனது நண்பர்கள், நண்பிகளை காண இந்தியா வருகை தந்தது சிறப்பு.
    அடுத்து ஒரு பிரபலத்தின் பேட்டியினை காண ஆவலோடு இருக்கிறேன்.
    News mix TV க்கு வாழ்த்துக்கள்.

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +3

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @mahatailors4624
    @mahatailors4624 24 дні тому +43

    மிகவும் வெகுளியானவர் உங்களை எங்கள் கண்முன் கான்பித்ததர்க்கு நன்றி

  • @sugan0167
    @sugan0167 24 дні тому +19

    நான் திரை பிரபலங்களின் பேட்டியை அவ்வளவாக பார்க்க மாட்டேன். ஆனால் பிரமிளா அவர்களின் மூன்று பேட்டிகளையும் கண்டு மகிழ்ந்தேன். நியூஸ் மிக்ஸ் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. அவர்களின் பணிவு, உறவுகளை தேடும் பாங்கு, இப்படி பட்டவர்களை பார்க்கும் போது மனம் நிறைகிறது. அவர்களின் பெற்றோருக்கு வணக்கம்.

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 24 дні тому +66

    மேடம் உங்களை எனக்கு பிடிக்கும் அரங்கேற்றம் பார்த்து அழுகை அழுது அழுது உங்களை நேரில் வந்து பார்க்கவேண்டும் என்று ஆசை முடியல இந்த நேர்காணல் பார்த்தவுடன் என் சகோதரியை பார்த்த உணர்வு நீங்கள் நடிப்பின் இமயம் வாழ்க பல்லாண்டு

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 24 дні тому

      Me too

    • @amuthasunthur7024
      @amuthasunthur7024 18 днів тому

      வெகுளியான பேச்சு. யாரையுமே குறை சொல்லாமல் நிறைகளை மட்டுமே பேசும் உயர்ந்த பண்பு. நிறைய படங்களில் வில்லியாக நடித்த இவர் இவ்வளவு நல்லுள்ளம் கொண்டவராக இருக்கிறார். தங்களின் ஆசைப்படி கணவருடன் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். நன்றிம்மா.🎉🎉🎉🎉❤❤

  • @swarnalatha7767
    @swarnalatha7767 24 дні тому +50

    நல்ல பெண்மணி பிரமீளா அம்மா❤❤❤❤❤❤

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 24 дні тому +58

    இதுவரை ஐயாவின்
    குரல் மட்டும் தான் கேட்டு இருக்கிறேன்
    இப்போது திருமதி
    பிரமிளா அவர்களின் பேடடியின் போது அவரையும் பார்த்த தில் மிகவும் மகிழ்ச்சி
    அடைத்தேன் நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @user-wc6vx1cz9x
      @user-wc6vx1cz9x 24 дні тому

      Yes

    • @saraswati3476
      @saraswati3476 24 дні тому +1

      Super God bless you and your family

  • @minklynn1925
    @minklynn1925 24 дні тому +47

    என்ன தான் சினிமா நட்சத்திரமாக இருந்தாலும்கூட கல்வியே தன்னை இந்த அளவிற்கு உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 22 дні тому +9

    உண்மையில் மெய் சிலிக்குது. இந்த காலத்தில் நடிகை என்ற நிலையிலும் உறவுகள் என்ற நிலையிலும் நண்பர்கள் என்ற நிலையிலும் மூத்தோரை
    மதிக்கும் குணத்திலும்
    மிகவும் உயர்ந்த நிலையில் உடன் பிறவா
    சகோதரியாகவே என்ற
    உணர்வே. மேலோங்கி
    நிற்கிறது. அருமையான
    பேட்டி. இருவரும் பேசியது மிகவும் நாகரிகம். பாராட்டுக்கள்.
    பிரமிளா அவர்களுக்கு
    மிகவும் வெள்ளை மனம்.
    குணம். 🌹🌹🌹🌹

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 24 дні тому +41

    உங்களை எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு உங்களை எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் கடவுள் இப்போது போல் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று கடவுளே வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🌹🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 24 дні тому +22

    நிதர்சனமான நேர் காணல் ! என்ன சொல்ல....ம்ம்ம் ஆமாம் -- "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து." -- வள்ளுவம் ! பிரமிக்க வைக்கும் பிரமிளா👍 ! நீங்கா நினைவலைகளில் பண்பு, பாசம், அன்பு, அடக்கம்..... அருமை சகோதரி வாழ்க வளமாக நீடூழி💥! கடல் கடந்தும் கண்ணியம் காக்கும் தமிழின் சுவாசம்🤔 ! நன்றி News mix tv அவர்களே🙏.

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +3

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @prabhuamaldas
    @prabhuamaldas 24 дні тому +24

    ஆண்டனி சார், இந்த எபிசோடில் எல்லா முக்கியமான கேள்விகளையும் கேட்டு எல்லா ஏரியாக்களையும் கவர்ந்திருக்கீங்க சூப்பர். நீங்கள் உண்மையிலேயே மிகவும் பெரியவர்

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +1

      தங்களின் பேரன்புமிக்க ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @smahadevan2008
      @smahadevan2008 23 дні тому

      I totally agree with you.

    • @satishkumar-jf2tp
      @satishkumar-jf2tp День тому

      😂 Pramila Amoda peti Roman Andhra Pradesh

  • @schitra340
    @schitra340 24 дні тому +30

    நான் பார்த்த நேர்காணலிலேயே மிகச்சிறந்த நேர்காணல் இதை நினைக்கிறேன்... அம்மாவின் பேச்சில் உள்ள உண்மையும் நேர்மையும் என்னை மிகக் கவர்ந்தது... அதுமட்டுமின்றி 40 ஆண்டுகள் அமெரிக்க வாசத்திற்கு பின்பும் இவ்வளவு அழகிய உச்சரிப்புடன் தமிழ் பேசும் அம்மையாரை சிரம் தாழ்ந்து பாதம் தொட்டு வணங்கி நமஸ்காரம் செய்கிறேன்.. நிகழ்ச்சி தொகுப்பாளரின் குரலை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தோம் இப்பொழுது உங்கள் திருமுகத்தை பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது மிக்க மகிழ்வு மிக அருமையான ஒரு காணொளியை எங்களுக்கு பதிவிட்டமைக்கு உங்களுக்கும் நன்றி சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

  • @rksekar4948
    @rksekar4948 24 дні тому +34

    தங்களின் இந்த நேர்காணல் புதுமையானது. எங்களை போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. தங்களின் வாழ்க்கை பயணம் தொடர்கள் மிகவும் சிறப்பானவை. அதைவிட இந்த முய்ற்சி ஒரு படி மேல். தொடரட்டும். ப்ரமீளா ஒரு சிறந்த நடிகை. அவர் குறிப்பிட்டதுபோல் அவர் நடித்த ராதா படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிறந்த நடிகை மட்டும் அல்ல. இந்த பேட்டியின் மூலம் அவர் மிகவும் மனிதநேயம் உள்ளவர் என்பது தெரிகிறது. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் தொழிலால் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் அடிப்படை தேவையானது மனித நேயம். இதை அவரிடம் கண்டு நான் வியக்கிறேன். பிறந்த எல்லோரும் ஓர் நாளில் இறக்கத்தான் போகிறார்கள். ஆனால் இதை போன்ற சிலர் இறவாமல் பலர் நினைவில் இருப்பார்கள் என்பது சிறப்பு. ஒரு மாதம் அமெரிக்கா சென்று வந்தாலேயே தமிழில் பேசாமல் அதிகப் படியாக ஆங்கில வார்த்தைகளை பேசுகிறார்கள். பல வருடங்கள் அமெரிக்காவில் இருந்தாலும் ஆங்கிலம் அதிகம் பேசாமல் தமிழில் அட்சர சுத்தமாக பேசிய சகோதரி பிரமீளாவுக்கு தனி பாராட்டுக்கள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அவர் இருக்கும் காலம் வரை உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன். அவர் விருப்பப்பட்டால் அவருடைய கைபேசி எண்னை தந்தால் அவருக்கு நேராக பேசி பாராட்ட விருப்பப் படுகிறேன். பெரியவர்களை மதித்து வாழும் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

    • @vaseer453
      @vaseer453 12 днів тому

      உண்மை உண்மை முற்றிலும் உண்மை.

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 24 дні тому +41

    திரைலகில் அவருக்கு கிடைக்கதா ஒரு பெருமை தன் நேசிக்கும் ஒரு வேலையில் அவரும் சேர்ந்து அதில் வெற்றி பெற்று ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார் மிகவும் சந்தோஷம் அவரை பேட்டி எடுத்தற்க்கு உங்கள் நியுஸ் மிக்ஸ் டிவிக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @user-pn7md1du5v
      @user-pn7md1du5v 24 дні тому +3

      ஒரு மிகச்சிறந்த நடிகை மற்றும் சிறந்த மனித நேயம் கொண்ட திருமதி பிரமிளா அவர்களை திரும்ப நினைவில் கொண்டுவந்து அவரை மீண்டும் சந்திக்க வைத்து அவரது திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டிய NewsMix Tv க்கு நன்றிகள் பல.

    • @eosathiyanarayanan8113
      @eosathiyanarayanan8113 22 дні тому

      😅😅😅​@@user-pn7md1du5v

  • @BaskarBaskar-yn2to
    @BaskarBaskar-yn2to 24 дні тому +21

    உண்மையான நடிகை அம்மா உங்க மனசுல இருந்து இவ்ளோ அழகான வார்த்தைகள் சொல்றீங்க நான் இப்படி வாழ்ந்தேன் அப்படி வாழ்ந்த நில்லாமல் உண்மையாக வாழ்ந்தேன் என்று சொல்லி அம்மா

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 24 дні тому +27

    இந்த கால நடிகைகள் இவரை பார்த்து திருந்த வேண்டும் நேர்மையான பேச்சு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும மேடம் 😍😍

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 24 дні тому +22

    யார் மனமும் புண் படாதவாறு பேட்டிமனம்திறந்துமகி ழ்ச்சியுடன்கூறுகிறார்தன்னம்பிக்கைவாழ்த்துக்கள்

  • @anandham_vlogs
    @anandham_vlogs 24 дні тому +20

    நேற்று உங்கள் இன்டர்வியூ பார்த்த பிறகு தான் அரங்கேற்றம் திரைப்படம் பார்த்தேன்.

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 24 дні тому +19

    நல்ல நெறியுடன் பேட்டி எடுத்தார் நேர் காண்பவர். வாழ்த்துக்கள்👍.

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

  • @nisithmanika4702
    @nisithmanika4702 24 дні тому +23

    I loved the frank interview of actress Prameela mam.
    No egos,no headweight .such a simple human being.
    Kudos to your efforts newsmix tv for your wonderful interview.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 24 дні тому +18

    மிகவும் நெகிழ்வான பதிவு இவரின் நேர்காணலை பார்க்கும் போது கண்களில் நீர் வந்து விட்டது‌ . பிரமீளா அம்மா அவரின் வாழ்க்கையில் எவ்வளவு சோகங்கள் இருந்தாலும் அம்மா சிரித்தவாறே பேசியது மனதுக்கு நெகிழ்ச்சியாக இவரின் நேர்காணலை பார்த்தது அம்மாவை நேரில்பார்த்த திருப்தி கொடுத்தது பிரமிளா அம்மாவும் அவரின் கணவரும் வாழ்க பல்லாண்டு என்று இறைவனிடம் வேண்டி க்கொள்கிறேன் இந்த நேர்காணலை திறம் பட நிகழ்த்திய தங்களுக்கும் மிக்க நன்றி ஐயா 🎉 18:18

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @minnolielanjezhian1808
    @minnolielanjezhian1808 24 дні тому +14

    சிறப்பான பேட்டி. பிரமிளா அம்மா தங்களுடையது நேர்மையான, உண்மையான
    பேட்டியாக இருந்தது.வாழ்த்துகள்🎉🎉🎉

  • @prabayuvan
    @prabayuvan 24 дні тому +9

    பிரமிளா அம்மா எல்லோரையும் அன்பாகவும் மதிப்பாகவும் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் பேசுவதை கேக்கும் போது எனக்கு உற்சாகமாக உள்ளது தமிழில் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது பிரமிளா அம்மா நீங்கள் நீண்டகாலம் நலமோடு வாழவேண்டும் 🙏🏻🙏🏻

  • @user-rr6lj9xs8c
    @user-rr6lj9xs8c 24 дні тому +22

    நான் என் சிறு வயது முதற்கொண்டு பழைய படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளவன். இதில் பிரமிளா அம்மா நடித்த அநேக படங்களின் பார்த்து ரசித்திருக்கிறேன்.முத்துராமன் பிரமிளா அம்மா ஜோடி மிகவும் அருமையாக இருக்கும். இப்பொழுது தொடர்ந்து அவருடைய பேட்டியை பார்க்கும் பொழுது அவர் எவ்வளவு சிறப்பானவர் எவ்வளவு அன்பானவர் எவ்வளவு மரியாதை என்று பார்க்க பார்க்க மிகவும் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.இந்த பேட்டி முடியும் பொழுது ஏதோ இவர்களை விட்டு பிரிய போவதைப் போல மனதிற்கு ஒரு வழி ஏற்படுகிறது. மீண்டும் இவர்களை பார்க்க முடியாதோ என்ற கவலையுமாக உள்ளது. பிரமிளா அம்மாவை நேரில் சந்திக்க ஆசையாக உள்ளது. அனைவர் மீதும் அன்பும் பாசமும் மரியாதையும் எளிமையும் கொண்ட ஒரு நல்ல மனம் பிரமிளா அம்மா.I love you ma.. உங்களை மீண்டும் திறையில் காணவும் அல்லது தொலைக்காட்சி காணவும் ஆர்வமாக உள்ளது. Miss u ma ஏனோ என்னை அறியாமல் கண்கள் குளம் ஆகிறது.அந்த சிரிப்பு என்றும் மாறாமல் இருக்கணும்அந்த சிரிப்பு என்றும் மாறாமல் இருக்கணும் நீங்க நல்லா இருக்கணும்.

    • @lathasuriya5225
      @lathasuriya5225 24 дні тому +3

      Sir please change திரையில் not சிறையில்(prison)
      May be spelling mistake

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +4

      சிறையில் அல்ல - திரையில் என்பதே சரி! அவ்வாறு மற்றவர்கள் படிக்கவும்!

    • @rajboy9818
      @rajboy9818 23 дні тому +2

      I agree here .I wish News Mixcould arrange a meet with fans event .Pramila do visit Malaysia too.My family can be your tour guide

    • @user-rr6lj9xs8c
      @user-rr6lj9xs8c 23 дні тому

      @@lathasuriya5225 s மாத்திட்டே.. நன்றி

    • @premela_schlacta
      @premela_schlacta 9 днів тому

      That's okay no problem dear😂 thank you for your kind words❤

  • @meeriakamal4085
    @meeriakamal4085 24 дні тому +11

    Romba interestinga irundhuchu ...
    Vazhayadi vaazhai,Arangetram, Sondham...innum neraya padangal solli konde pohalam..
    Happy to know that she is living a very happy life.
    MaashaAllah!

  • @rajaindran1729
    @rajaindran1729 24 дні тому +20

    Arumai. Pramlla. Madam. Valthgul❤❤❤ congratulations👏👏👏👏

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 24 дні тому +8

    பிரமிளா அம்மா எனக்கு வயது 25 ஆனா உங்க அரங்கேற்றம் படம் என் மனதில் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது, என்ன அருமையான நடிப்பு....எத்தனை சுத்தமான உச்சரிப்பு....அப்பப்பா லலிதா என்ற அந்த கதாபத்திரமாகவே வாழ்ந்துள்ளீர்கள், உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் உடல் நிலை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும், நீங்கள் நல்ல ஆரோகியத்துடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக. வணக்கம் 🙏🏻🙏🏻

  • @vaseer453
    @vaseer453 12 днів тому +4

    ஒரு நடிகை எப்படி பேட்டி அளிக்க வேண்டும் என்பதை நடிகை பிரமிளாவை பார்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். என்ன இயல்பான பேட்டி. பிரமிளாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அற்புதம்.

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 24 дні тому +31

    தன்நம்பிக்கையின் உச்சம்... பெர்மிளா மேடம்

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 24 дні тому +14

    உங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் தங்களுடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி,பெரியவர்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் மரியாதை,கடவுள் பற்று உண்மையை உள்ளபடி பேசும் உங்கள் மனசு இவைகளால் பிரமிளா இன்னும் என்னை பிரமிக்க வைக்கிறார்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 24 дні тому +14

    சார் உங்களையும் prameela அம்மாவையும் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் 🙏🏿🙏🏿🙏🏿

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @user-wc6vx1cz9x
      @user-wc6vx1cz9x 24 дні тому

      Yes

  • @user-fo7xz6wv4k
    @user-fo7xz6wv4k 24 дні тому +10

    உண்மைக்கு அழிவு இல்லை நீங்க. நல்ல ஆயிளுடன் இருக்கனும் வாழ்க வளமுடன் 🙏💐💐💐❣️

  • @GaneshGanesh-fs1qg
    @GaneshGanesh-fs1qg 24 дні тому +10

    உங்கள் நேர்காணல் பார்த்து இப்படி நல்லவர்களும் இருப்பதை பார்க்க மிகிழ்ச்சி உங்கள் தாழ்மை உங்களை இன்னும் உயர்த்தும் வாழ்த்துகள் பிரமீளா அம்மா🌹

  • @user-tt8gs2pi5r
    @user-tt8gs2pi5r 24 дні тому +13

    Very good interview. Hat's off to pramila mam

  • @mypridemynation2211
    @mypridemynation2211 24 дні тому +8

    இதேபோல் நிறைய பழம்பெரும் நடிகை மற்றும் நடிகர்களை பேட்டி எடுங்கள் ஐயா....🎉🎉🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @kalyanib1757
    @kalyanib1757 24 дні тому +8

    இவ்வளவு உண்மையாக மனம் திறந்து பேட்டி அளித்த அன்பு பிரமீளா இதே போல் என்றும் சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். இப்படி மனம் திறந்து எந்த நடிகையும் பேட்டி கொடுத்து நான் பார்க்கவில்லை.இந்த மனம் பூரிப்படையும் பேட்டி எடுத்த ஆண்டனி ஐயா என்றும் வாழ்க வளமுடன்

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @Preethi1529
    @Preethi1529 24 дні тому +6

    அழகான நேர்காணல் ❤️
    எனக்கு பிடித்த நடிகை.. எனக்கு பிடித்த Dr Ashvin vijay பற்றி பேசியது ஆச்சிரியம்..thankyou for this beautiful interview ❤❤❤

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 24 дні тому +13

    தன்னம்பிக்கை தன்னடக்கம் அதுதான் பிரமிளா மேடம்🙏

  • @sasikalaelangovan3540
    @sasikalaelangovan3540 24 дні тому +6

    அருமையான நேர்காணல், கள்ளமில்லா உள்ளம், வாழ்த்துக்கள்.🙏🙏🙏❤️

  • @malarkodi845
    @malarkodi845 24 дні тому +14

    அம்மா நான் உங்கள் தீவிர ரசிகைகொஞ்ச காலத்துக்கு முன்னாடி உங்கள் நினைவு எனக்கு வந்ததுகரெக்டா உங்கள் பேட்டி பார்த்தேன்நன்றி மிக்க மகிழ்ச்சி🙏💐♥️

  • @bernadettemel2053
    @bernadettemel2053 24 дні тому +14

    A very good lady very rare in cini field. Gratitude is the best quality in a person.

  • @rlakshmay
    @rlakshmay 24 дні тому +14

    Lots of respect for Pramila and her intresting journey.

  • @saposu
    @saposu 24 дні тому +20

    Preemila Amna very bold lady👍❤

  • @anandharajasai
    @anandharajasai 24 дні тому +7

    அருமையான பேச்சு. எதார்த்தமா பேசுறாங்க இவங்க பேச்சில எந்த ஒரு சூதும் கள்ளம் கபடமும் இல்லாமல் இருக்குது

  • @kirishnamurti1528
    @kirishnamurti1528 24 дні тому +6

    அன்பு சகோதரி பிரமிளா அவர்கள் அனைத்து வளங்களும் பெற்று நீடூடி வாழ வேண்டும்
    தங்களின் பேட்டி மனதை நெகிழச் செய்து விட்டது.நன்றி

  • @anbarasiramesh3553
    @anbarasiramesh3553 24 дні тому +10

    NallaVunmaiyana Velipadaiyana Vuraiyadal. Pramila Akka Avangaluku🙏 Ippadi Parppathu Aridhu 👏👌👍💐💐💐💐💐💐

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 24 дні тому +5

    பிரமிளா அவர்களின் பேட்டியில் அனைவருக்கும் தன்னம்பிக்கை பெறுவதுடன் வாழ்வில் அனைவரையும் நேசம் கொள்வது நிச்சயம். வாழ்த்துக்கள் பிரமிளா அம்மா.

  • @arjunantm1187
    @arjunantm1187 14 днів тому +3

    அருமையான பேட்டி.மிகவும் அடக்கமாகவும் அழகாகவும் பேட்டி கொடுத்த பிரமிளாவுக்கு பாராட்டுக்கள்.

  • @dr.a.edwardprofessoredu-cd3295
    @dr.a.edwardprofessoredu-cd3295 24 дні тому +14

    Great interview, madam..pramila God bless you

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 24 дні тому +10

    சந்தோஷம் சந்தோஷம் பிரமிளா அவர்களே... 🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌹👍🙏

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 22 дні тому +2

    உண்மை அன்பு ஆசை நல்ல உள்ளம் இப்படி ஒரு நடிகை. வாழ்த்துக்கள்.

  • @mythilipitti4000
    @mythilipitti4000 24 дні тому +8

    Very honest speech. I like the way she spoke. Very nice interview. 😊

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 22 дні тому +3

    தன்னம்பிக்கையாக வாழ்வதுஎப்படிஎன்பதற்குஇதைவிடஆகசிறந்தபதிவுஇருக்கமுடியாதுநன்றிங்க அண்ணா

    • @Newsmixtv
      @Newsmixtv  22 дні тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 24 дні тому +11

    Glad to come across such a polite lady.Sad the interview ended very fast

  • @revathishankar946
    @revathishankar946 24 дні тому +11

    Good hearted lady pramila madam Very nice to know all information about her Tears filled my eyes after seeing her interview

  • @revathishankar946
    @revathishankar946 24 дні тому +8

    Very truthful and open hearted lady she is !! So only God blessed her Very good couple

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c 24 дні тому +13

    வாழையடி வாழை படத்தில் அவங்க hair style make up supera இருக்கும் நடிப்பும் A 1. இவங்களுக்கு அப்புறம் தான் மற்றவங்க நடிப்பே இருக்கும் பிரமாதம் அவங்களுடைய இயற்கையான GUNAM போலவே இருக்கும்

  • @user-dm7xv4cj2c
    @user-dm7xv4cj2c 24 дні тому +8

    BRAVE,, BEAUTIFUL, DARING,, ADVENTURES AND A ACHIEVER,, it's really motivating to see and hear such Ladies speak

  • @sctexcellentcreation63
    @sctexcellentcreation63 24 дні тому +8

    மனம் போல் வாழ்வு மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 24 дні тому +12

    அருமை👏👌🙏❤

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 24 дні тому +3

    இந்த நேர்காணல் பார்த்த பிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவம்.பிரமிப்பு இப்படி கூட ஒருவரால் சாதிக்க முடியுமா என்று.நடுவில் அவர் பட்ட கஷ்டங்களை கேட்க்கும்போது மனது வலித்தது பின் திரும்பவும் அவர் சாதித்தைகேட்டு மனதில் சந்தோஷம் இப்பொழுது அவரின் நிறைவான வாழ்க்கை பற்றி அவர் சொல்லும் போது அவர் நாம் எப்படி வாழ்கையில் வாழ வேண்டும் என்று கற்று கொடுக்கும் குருவாக தெரிகிறார். அம்மா மிக்க நன்றி அம்மா

  • @1006prem
    @1006prem 24 дні тому +11

    அம்மா உங்கள் நல்ல எண்ணம் ஈடேற எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்❤❤🙏🙏🙏

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 24 дні тому +5

    She is so practical and open hearted

  • @506070805
    @506070805 4 дні тому

    ரொம்ப அழகான நேர்காணல். என்றும் இறைவன் அருளுடன் நலமாக வாழ ப்ரார்த்திக்கிறேன்.

  • @santhathanappan4799
    @santhathanappan4799 24 дні тому +4

    சூப்பர் செம்ம நல்ல பதிவு வாழ்த்துகள் மிக்க நன்றி
    கிரேட் பிரமிளா

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @somuumapathyu5781
    @somuumapathyu5781 23 дні тому +2

    News mix tv channel hatsoff ❤❤love u prameela mam

    • @Newsmixtv
      @Newsmixtv  23 дні тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vimaladeviarumugam8158
    @vimaladeviarumugam8158 24 дні тому +10

    Super super super mam

  • @smahadevan2008
    @smahadevan2008 23 дні тому +2

    Dear Antony, I have heard your beautiful Tamil in your measured and mesmerizing voice. But through these 3 episodes with Pramila, I was able to see your wonderful self as well. Keep up your good work.

    • @Newsmixtv
      @Newsmixtv  23 дні тому

      Thanks for your support and kind wishes!...

  • @revathishankar946
    @revathishankar946 24 дні тому +4

    Very much thanksto News Mix Tv for this heart touching wonderful interview with pramila madam

    • @Newsmixtv
      @Newsmixtv  24 дні тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @preethammk6831
    @preethammk6831 22 дні тому +2

    She is speaking from the heart. Very humble. Nice interview

  • @radhikarajyasri2311
    @radhikarajyasri2311 22 дні тому +1

    A very honest straight forward outspoken intellectual interview by Madam Prameela. THIS IS THE BEST UA-cam INTERVIEW THAT I HAVE EVER SEEN

  • @Bursi3513
    @Bursi3513 22 дні тому +1

    ரொம்ப சாந்தோஷம் .☺️😊💯 only positive 👍👌👏🙏

  • @agnessamson1605
    @agnessamson1605 24 дні тому +2

    Glad to watch the interview with the legendary heroine. Good questions and genuine reply.
    Meaningful message to the viewers.

  • @subashini9155
    @subashini9155 24 дні тому +4

    One of the best interviews u have seen . Kudos to the anchor for letting her to speak profoundly. I have been googling to find pramila's infos ever since i saw the movie arangetram few years back . Am so happy to see her in this interview and she's spontaneous and genuine while talking about the past life. She's down to earth and appreciate her integrity which couldnt be seen nowadays.. Much love and God bless❤❤❤❤❤

  • @jeyakumar6714
    @jeyakumar6714 19 днів тому +2

    வணக்கம், சிறந்த பேட்டி,
    என் நினைவில் என்றும் தங்கப்பதக்கம் படத்தில், உங்கள் நடிப்பு தான் பிரமாதம்,
    வாழ்க.... உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்
    M.ஜெயக்குமார்,
    நைஜீரியா, ஆப்ரிக்கா
    (திருச்சி 14,)

  • @gayathiri202
    @gayathiri202 24 дні тому +3

    Wonderful got to learn a lot. Superb lady God bless her with health and peace

  • @sarveswaran2009
    @sarveswaran2009 24 дні тому +2

    Wow, great interview. Got energized. What a positive energy.

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 21 день тому

    உங்களை இந்த காணொளி மூலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா news mix TV kum மனமார்ந்த வாழ்த்துக்கள் பல 🙏

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 17 днів тому +1

    சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகர்கன் நான் தங்கப்பதக்கம் இரத்த பாசம் கோமாதா குலமாதா இன்னும் நிறைய படங்களில் உங்கள் துருதுருப்பான நடிப்பில் ரசிகர் ஆனவர்களில் ஒருவன் மேடம்.இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த பேட்டியின் மூலம் உங்களை பார்ப்பது இன்னும் குழந்தைத்தனமான கள்ளம் கபடம் இல்லாமல் ஒளிவு மறைவு ஏதும் இன்றி கலகலப்பான இந்த பேட்டி மற்ற எத்தனையோ கலைஞர்கள் காலத்தின் மாற்றத்தால் காணாமல் போயிருந்தாலும் பூவோடு சேர்ந்த நார் மணக்கும் என்பதுபோல எங்களது நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்ததால் அவ்வப்போது திரைபடங்களில் பார்ப்பதால் உங்கள் இடைவெளி பெரிதாக தெரியவில்லை.இதில் 40/ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது உங்கள் பேட்டியின் மூலமே அறியமுடிகிறது.நீங்கள் பல்லாண்டு கடவுள் ஆசியோடு வாழவேண்டும் மேடம்.மீண்டும் ஏதாவது படங்களில் தாய் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிங்க மேடம்.உங்கள் ரசிகர்கள் நிறைய இருக்கிறோம்.மிக்க மகிழ்ச்சி நியூஸ் மிக்ஸி சேனலுக்கு.எங்கள் பிரமிளாவை பேட்டி எடுத்து நினைபடுத்தியதற்கு நன்றிகள் சார்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  17 днів тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @jeyagurusamymjjs.7806
      @jeyagurusamymjjs.7806 17 днів тому +1

      @@Newsmixtv 🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumagaljames1064
    @thirumagaljames1064 19 днів тому +1

    Really wonderful interview such true n love person madam you are ,very happy to see your face n voice

  • @creativevlogger7902
    @creativevlogger7902 24 дні тому +9

    In vaazhaiyadi vaazhai tamil movie your role simply superb

  • @balasun5812
    @balasun5812 24 дні тому +3

    I have seen so many actress on screen. You are the best in my time. You are interview is inspiring. Your tamil is excellent. Your interview is decent and truthful. Person interviews is classic with good questions and with impeccable tamil

  • @anandanmg9151
    @anandanmg9151 24 дні тому +4

    Thank my dear sister yours